அனத்யயன காலம்

நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து புறப்படும் நாள் முதல், அவர் திருவத்யயனம் முடிந்து ஆழ்வார் திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்களை அனத்யயன காலம் என்று சொல்வார்கள். அவ்வமயம் ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் கோவில்களிலும் வீடுகளிலும் திவ்யப் பிரபந்தங்களை சேவிக்க மாட்டார்கள். பெருமாள், ஆழ்வாருக்காகவே காத்திருந்து செவி சாய்ப்பதால், நாமும் காத்திருப்போம். பொதுவாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரம்) தொடங்கி தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திரு நட்சத்திரம்) வரை இந்த அனத்யயன காலம் இருக்கும். கோவில்களில் காலையில் திருப்பள்ளியெழுச்சி மட்டும் எல்லா நாட்களும் பாராயணம் செய்வார்கள். மார்கழி மாதத்தில் காலையில் விரதம் இருக்கும் போது மட்டும் திருப்பாவை அனுஷ்டிப்பார்கள். மற்ற எந்த நேரத்திலும் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை அனத்யயன காலத்தில் சேவிக்க மாட்டார்கள். அக்காலங்களில் வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி தேசிகப் பிரபந்தம் மற்றும் உபதேச இரத்தினமாலை ஆகியவை இல்லங்களில் பாராயணம் செய்யபடும்.
எனவே இன்று முதல் மார்கழி மாதத்தின் முதல் நாள் வரை தேசிக பிரபந்தமும், மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையும், மார்கழி முடிந்து தை மாத ஹஸ்த நடச்ததிரம் வரை மீண்டும் தேசிக பிரபந்தம் பதிவிடப்படும் என்று தெரிவித்தக் கொள்கிறேன். அதன்பின் நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்கள் வழக்கம்போல் பதிவிடப்படும் என்று தெரிவி்த்துக் கொள்கிறேன்.


என்னை ஆட்கொள்ளும் ஸ்ரீமந் நாராயணன் பாதங்களுக்கு சரணம்.
 
அனத்யயன காலம் என்றால் என்ன அந்த காலத்தில் இல்லங்களில் நாம் பெருமாள் திருவாராதனத்தில் என்ன செய்ய வேணும்

அத்யயன காலம் எப்போது அந்த காலத்தில் என்ன செய்ய வேணும் என பார்போம்

முன்பு நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து ஶ்ரீரங்கம் புறப்படும் நாள் முதல் அவர் ஶ்ரீரங்கத்தில் திருவத்யயனம் முடிந்து ஆழ்வார் திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்களை அனத்யயன காலம் என்று சொல்வார்கள்

அவ்வமயம் ஶ்ரீவைணவர்கள் ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் கோவில்களிலும் வீடுகளிலும் திவ்யப் பிரபந்தங்களை சேவிக்க மாட்டார்கள்

பொதுவாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரம்) தொடங்கி தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திரு நட்சத்திரம்) வரை இந்த அனத்யயன காலம் இருக்கும்

இந்த வைபவம் பல காரணங்களால் பல வருட காலங்கள் தொடராமல் நின்று போக

நாதமுனிகள் தன் காலத்தில் அந்த வைபவத்தை தொடங்கி பின்வரும் நியமனங்களைச செய்தார்

பொதுவாக க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திவ்ய ப்ரபந்த சேவாகால க்ரமம் திவ்ய தேசத்துக்கேற்ப மாறுபடுகிறது.

பல திவ்யதேசங்களில், க்ருஹங்களின் சேவாகாலம் கோயில் க்ரமத்தையே பின்பற்றுகிறது

அதாவது கோயில்களில் அநத்யயன காலம் தொடங்கிய பின் க்ருஹங்களில் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப்ப் படுவதில்லை

கோயில்களில் என்று திருப்பல்லாண்டு தொடக்கம் ஆகிறதோ அன்றிலிருந்து க்ருஹங்களிலும் மீண்டும் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப் படுகிறது

கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரமான தை ஹஸ்தத்துக்குப் பிறகே க்ருஹங்களில் திய்வ ப்ரபந்தம் சேவிக்கப் படவேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்

இதன் காரணம் முற்காலங்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் சென்று நம்பெருமாள் மற்றும் ஆழ்வாருடன் இருந்து அத்யயன உத்ஸவத்தைச் சேவித்து வருவர்

உத்ஸவம் முடிந்து அவர்கள் தங்கள் க்ருஹங்களுக்குத் திரும்ப பல நாட்கள் ஆகும்

இதன் நினைவாக க்ருஹங்களில் தை ஹஸ்தத்தன்று திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் தொடக்கம் என்ற ஏற்பாடு

அவரவர் தங்கள் தங்கள் பெரியோர்களிடம் கேட்டறிந்து தங்கள் திவ்ய தேசம் மற்றும் குடும்ப வழக்கத்தை நடைமுறைப் படுத்துதல் சாலச் சிறந்தது

க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின் போது 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை (மார்கழி மாதத்தில் கோயில்களில் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்)

கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது), ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்)

கௌஸல்யா ஸுப்ரஜா ராம ச்லோகம்

கூர்மாதீந் ச்லோகம் (இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும்

கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்

திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை சேவித்தபின்

வெண்ணெய் அளைந்த குணுங்கும்்பதிகமும் சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம்

ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக்கொள்ளவும்

பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது

சென்றால் குடையாம் பாசுரம் சேவிக்கப்படும்

அநத்யயன காலத்தில் எம்பெருமானார் தரிசனம் என்றே பாசுரம் சேவிக்கப்படும்

பொதுவாக சாற்றுமுறையில் சிற்றம் சிறுகாலே் வங்கக்கடல் மற்றும் பல்லாண்டு பல்லாண்டு பாசுரங்கள் சேவிக்கப்படும்

அநத்யயன காலத்தில்

உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும்

தொடர்ந்து ஸர்வ தேச தசா காலே என்று தொடங்கி வாழி திருநாமங்கள் ( அவரவர் ஆசாரியன் மற்றும் வர்த்தமான ஆசாரியர் வரை ) சேவிக்கவும்

இந்த க்ரஹ அந்த்யயன க்ரமங்களை அவரவர் சம்பிரதாயம் மற்றும் ஊர் வழக்கபடி கடைபிடிக்கவும்

அத்யயன காலம் எப்போது அந்த காலத்தில் என்ன செய்ய வேணும்

கோயில்களில் அத்யயன உற்சவம் ( நம்மாழ்வார் பரம்பதம் சென்றதை குறிக்கும் வகையில் முதல் பத்து நாள் இரண்டாம் பத்துநாள் ஆழ்வார் திரும்ப பூலோகம் வந்த நாள் என 21 நாள் கொண்டாடுவர்) ஆரம்பமாகும் போது

இதையே பகல் பத்து இராபத்து எனவும் கூறுவர்

முதல் பத்து நாள் என்பது பொதுவில் வைகுண்ட ஏகாதசிக்கு (நம்மாழ்வார் பரம பதம் ஏகிய ஏகாதசி) முந்தய அமாவாசை தொடங்கி ஏகாதசி ( வைகுண்ட ஏகாதசி) வரையான பத்துநாள்

அதாவது அத்யயன உத்ஸவத்தின் முதல் 10 நாட்கள் ( முன் பத்து) கோவில்களில் பிரபந்தத்தின்

முதலாயிரம் (திருப்பல்லாண்டு் பெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் திருமாலை திருப்பள்ளியெழுச்சி அமலனாதிபிரான் கண்ணுனுன்சிறுதாம்பு பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் ஆகியவை) சேவிக்கப்படும்

வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் திருவாய்மொழி தொடக்கம் செய்யப்படும்

அன்று தொடங்கி 10 நாட்களும் காலையில் வேத பாராயணமும் மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும்

கடைசி நாள் நம்மாழ்வார் திருவடி தொழல் உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப்படும்

21ஆம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி நான்முகன் திருவந்தாதி திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவெழு கூற்றுருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல்) பூர்த்தியாகச் சேவிக்கப்படும்

இராமானுச நூற்றந்தாதி 21ஆம் நாள் அன்று இரவு புறப்பாட்டில் சேவிக்கப்படும்

கோயில்களில் திருவாய்மொழி சேவிக்க ஆரம்பித்த பின்புதான் இல்லங்களில் பிரபந்தம் சேவிக்கலாம்

எனவே அன்பர்களே நாளை தொடங்கி தை ஹஸ்தம் வரை பிரபந்தங்களை சேவிக்கவோ சொல்லி கொடுக்கவோ கூடாது

அவரவர் இல்லத்து பெரியோர்களிடம் மேலும் விபரம் கேட்டு அதன்படி அனத்யயன காலத்தை கடைபிடிக்கவும்

தாஸன்

ஜெய் ஶ்ரீராம்
 
Back
Top