அத்திவரதர் கையில் இருக்கும் `மாசுச’ எழுத்துகளுக்கு என்ன பொருள்?

2012-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8 -ம் தேதி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் என்பவரால் இந்தத் தங்கக் கவசம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது. தங்கக் கவசம் மட்டுமன்றி தங்கச் சங்கு, சக்கரம் ஆகியவற்றையும் அவர் கொடையாக வழங்கினார். மூலவருக்குச் சாத்தப்பட்ட தங்கக் கை கவசம்தான் தற்போது அத்தி வரதருக்கும் சாத்தப்பட்டுள்ளது.

இந்தத் தங்கக் கவசத்தில் `மாசுச’ என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் என்ன என்று அனந்த பத்மனாச்சார்யார் சுவாமிகளிடம் கேட்டோம்.

“`மாசுச' என்பது வடமொழிச் சொல்லாகும்.`மாசுச' என்றால் ‘கவலைப்படாதே’ என்று அர்த்தம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனிடம் கடைசியில் சொன்ன வார்த்தை இது. ‘மாசுசஹா’ என்று சொல்லியிருப்பார். `மாசுசஹா' என்பதைத்தான் `மாசுச’ என்று சுருக்கி அத்திரவரதரின் கையில் உள்ள கவசத்தில் பொறித்திருக்கிறார்கள். `மாசுசஹா' என்றால் ’எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன்’ என்று பொருள்'' என்றார்.
 
'மாசுசஹா' என்றால் எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன் என்று அர்த்தம்.

ப்ரஹ்மண்யன்
பெங்களூர்
 
hi

सर्व धर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज .....अहं त्व सर्व पापेभ्यो मोक्ष इष्यामि मा शुचः /////

from bhagavad gita anthima charana slokam..
 
From https://www.holy-bhagavad-gita.org/chapter/18/verse/66
Bhagavad Gita: Chapter 18, Verse 66
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज |
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: || 66||

sarva-dharmān parityajya mām ekaṁ śharaṇaṁ vraja
ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣhayiṣhyāmi mā śhuchaḥ

sarva-dharmān—all varieties of dharmas; parityajya—abandoning; mām—unto me; ekam—only; śharaṇam—take refuge; vraja—take; aham—I; tvām—you; sarva—all; pāpebhyaḥ—from sinful reactions; mokṣhayiṣhyāmi—shall liberate; mā—do not; śhuchaḥ—fear

BG 18.66: Abandon all varieties of dharmas and simply surrender unto me alone. I shall liberate you from all sinful reactions; do not fear.
 
Back
Top