அகதிகள் முகாம்- கவிதை - அனாமிகா
அகதிகள் முகாம்
****************
இவர்கள்-
வெளிநாட்டினின்று விரட்டப்பட்ட
விரக்தி அடைந்த அகதிகள் அல்ல;
அண்டை மாநிலத்தினின்று
அனுப்பப்பட்டவர்களும் அல்ல;
பாசம் எனும் தேசத்தில்
உள்நாட்டுப் போர் நடக்க,
குத்துவிளக்கு ஏற்ற வந்தவள்
குடும்பத்தையே கொளுத்த முயன்றாள்.
இங்கு -
அடிதடி இல்லைதான்; மனதில்
அடி விழுந்ததைத் தவிர!
வன்முறை இல்லைதான்;
வார்த்தைகள் முறைதவறியதைத் தவிர!
அமைதியோடு,
அண்டை வீட்டா¡¢ன் அனுதாபப் பார்வையோடு
அன்போடு வளர்த்தவர்கள்
அகதிகள் ஆனார்கள்!
அணுகினர் முதியோர் இல்லத்தை!!
********************************
அகதிகள் முகாம்
****************
இவர்கள்-
வெளிநாட்டினின்று விரட்டப்பட்ட
விரக்தி அடைந்த அகதிகள் அல்ல;
அண்டை மாநிலத்தினின்று
அனுப்பப்பட்டவர்களும் அல்ல;
பாசம் எனும் தேசத்தில்
உள்நாட்டுப் போர் நடக்க,
குத்துவிளக்கு ஏற்ற வந்தவள்
குடும்பத்தையே கொளுத்த முயன்றாள்.
இங்கு -
அடிதடி இல்லைதான்; மனதில்
அடி விழுந்ததைத் தவிர!
வன்முறை இல்லைதான்;
வார்த்தைகள் முறைதவறியதைத் தவிர!
அமைதியோடு,
அண்டை வீட்டா¡¢ன் அனுதாபப் பார்வையோடு
அன்போடு வளர்த்தவர்கள்
அகதிகள் ஆனார்கள்!
அணுகினர் முதியோர் இல்லத்தை!!
********************************