Tamil Brahmins
Page 2263 of 2263 FirstFirst ... 1263176321632213225322592260226122622263
Results 22,621 to 22,627 of 22627

Thread: Think or sink!

 1. #22621
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 177. Knowledge of BODY LANGUAGE.

  அவர்கள் வீட்டில் செய்வது அறியோம்.
  சொல்வது ஒன்று... செய்வது வேறொன்று.

  நம்மையும் அப்படியே நினைப்பார்கள்.
  என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்!

  கண்ணில் எண்ணையை ஊற்றிக்கொண்டு
  உன்னிப்பாக கவனிப்பார்கள் நம்மையே.

  போகாமல் இருக்கவும் முடியாதபடி
  மிகவும் வேண்டியவர்கள் அவர்கள்.

  வருடாந்தர விசிட் punishment ஆகும்!
  இருவருக்குமே என்று கூடத் தோன்றும்!

  வலுக்கட்டாயமாக ஓட்ட வைத்தது போல.
  எதாவது கொடுத்
  தால் வேண்டாம் என்பார்கள்.

  அதை உண்மை என்று நினைத்துக் கொடுக்காமல்
  விலகிச் சென்று விட்டால் சொல்லுவார்கள்

  வருபவர்கள் போபவர்களிடம் எல்லாம்,
  "அதை எனக்குத் தரவே இல்லை அவள்!"

  இன்னொருவர் இன்னமும் மோசம்!
  சரியான confusion மாஸ்டர்!

  வேண்டாம் என்பார் வாயால்!
  கையை நீட்டித் "தா!" என்பது போல வைத்துக்கொண்டு!

  குட்டிப் பயலுக்கு ஒரே confusion!

  "வேண்டாம் என்று கையையும் நீட்டினால்
  என்ன செய்யவேண்டும் மம்மி?"

  நான் சொன்னேன் அவனிடம்,

  "வாய்
  பொய் சொல்லும் - ஆனால்
  கண்களும், உடலும் உண்மை பேசும்!

  கையைத் "தா!" என்பது போல நீட்டினால்
  அதில் அதைக் கொடுத்து விடு".

  பிறகு அவனும் புரிந்து கொண்டான்
  அவர்களுடைய "life's philosophy!"

  அவர்களுக்கு ஒன்றுமே வேண்டாமாம்.
  நாமே பலவந்தமாகக்
  கொடுக்கின்றோமாம்.

  நல்ல pretension !!!
  நல்ல policy போங்கள்!!!
 2. #22622
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!


  The first thing I noticed after landing in Chennai is the growing popularity for the 'goatee' aka 'aattu dhaadi!'

  The wheelchair assistant sported one. His identical brother sported one. The list went on until I met the VIP of our colony who also sported a goatee.

  His giant structure and the goatee reminded me of Aladdin's genie aka "jeem boo baa"!
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #22623
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 178. THE ROPEWAY... IN TWO WAYS!

  மலம்புழா அணையை விசிட் செய்தோம்
  கணவரின் கல்லூரி Alumni நண்பர்களுடன்.
  நல்ல உச்சி வெயிலில் அங்கு போய் சேர்ந்தோம்
  எல்லோரும் சீனியர்/ சூப்பர் சீனியர் சிடிசன்ஸ்.

  ரோப்வேயில் ஒரு ரவுண்டு போனால் பார்க்
  மொத்தமும் பார்க்க முடியுமாம் ...சொன்னார்கள்.

  டிக்கெட் வாங்கிக் கொண்டு "Q" வில் நின்றோம்!

  அவர்கள் சிஸ்டம் கண்டவுடனேயே நான்
  பயந்து பின் வாங்கினேன். வேறு வழியில்லை.

  ரோப்வே தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது.

  chair car வரும் இடைவெளியில்,
  செல்லவேண்டிய அடுத்த இரண்டு நபர்களை,
  வட்டத்துக்குள் நிற்க வைத்தனர்.

  பிளாட்பாரத்தின் ஒரு நுனியில்
  unloading the passengers

  இன்னொரு நுனியில்
  loading the passengers

  இரண்டு hunks இரண்டு தோள்களையும்
  பற்றி வலித்து நம்மை இறக்கி விடுகின்றனர்.

  chair போகும் வழியில் நம்மையும்
  அதில் 'வழித்துக் கொண்டு' போகின்றது.

  என்னை எல்லாம் தோளைப் பற்றி வலித்தால்,
  dislocation ஆகிவிடும் shoulders நிச்சயமாக.

  ஒல்லிப் பிச்சான்களுக்குப் பரவாக இல்லை!
  ஆனால் என் போன்றோருக்கு...

  பின் வாங்கவும் விடவில்லை இவர்.
  முன் செல்லவும் மனம் இல்லை எனக்கு!

  கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு
  அந்த குட்டி வட்டத்தில் நின்றேன் நான்.

  சேர் வழித்து எடுத்துக் கொண்டு போயிற்று.
  இறங்கும் போது பயம் பிடித்துக் கொண்டது.

  இரண்டு ஆட்கள் என்னை இறக்குவதற்கு.

  ஆளுக்கு ஒரு கையைப் பிய்த்துக்
  கொடுத்து அனுப்பி விடுவார்களோ?

  சரியன அதிர்ச்சி வைத்தியம் தான்.

  பிறகு U.S.A. சென்ற
  போது அங்கும் ரோப்வே.
  ஆனால் என்ன வேறுபாடு நம்பவே முடியவில்லை.

  அவர்களால் அதன் போக்கை நிறுத்த முடியும்;
  If necessary EXTRA TIME கொடுக்க முடியும்.

  ஒரு family முழுவதும் அமரும்படி
  ஒவ்வொரு சீட்டும் நீண்டு இருந்தது.

  என்னையும், ஆறு மாதக் குழந்தை
  தேஜஸையும் பார்த்த உடனேயே போன்
  செய்தார்கள் extra time வேண்டும் என்று.

  இறங்கும் போது அவர்கள் அப்படியே.

  பிறகு மலையிலிருந்து ஏறும் போதும்
  கீழே வந்து இறங்கும் போதும் சரி

  நிறைய அவகாசம் கொடுத்து நம்மை
  மனிதர்கள் போட நடத்தினார்கள்..
  "இந்தியர்களுக்கு எதையும் தாங்கும் இதயம்
  உள்ளது உண்மையே!" என உணர்ந்து கொண்டேன்!
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #22624
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 179. கடைத் தேங்காய்.

  அந்த மாமி அதிகம் படித்ததில்லை.
  ஆனால் உடம்பு முழுக்க சாமர்த்தியம்!

  யாரிடமிருந்து எதை பெறமுடியும்;
  யாரிடம் அதைக் கொடுத்து தன்னுடைய
  வேலைகளைச் செய்துகொள்ள முடியும்
  என்று அத்தனையும் அத்துப்படி.

  சாது மருமகளிடமும், நல்ல மகனிடமும்
  கேட்டுக் கேட்டு மகளுக்கு வேண்டியவை
  அத்தனையும் வாங்கிக் கொள்வாள்.

  மகளுடன், மருமகன் வரும்போது
  அவற்றை தன் பரிசுகள் போல கொடுத்து
  மற்ற வேலைகளை வாங்கிக் கொள்வாள்.

  எனக்கு எப்படித் தெரியும் என்கின்றீர்களா?
  அந்த மருமகள், மகள் இருவருமே என் நண்பிகள்.

  கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு
  மாமி தரும் குட்டை நான் உடைக்கவில்லை!

  நம் படிப்புக்கும், நம் பிழைப்புக்கும்
  ஒரு தொடர்பும் இல்லை என்பதை

  நம்பத்தான் வேண்டியுள்ளது உலகில்
  நன்கு பிழைப்பவர்களைக் காணும்போது.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #22625
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 180. புதுப் பணக்காரன்.

  மழிக்கபடாத முகம்; காடுபோல தலைமுடி,
  சோப்பையும் நீரையும் கண்டறியாத சட்டை.

  எட்டுப் பக்கங்களையும் உபயோகிக்கப்பட்ட
  எட்டு முழ வேஷ்டி - சுருண்டு, வரி விழுந்தது!

  எட்டுப் பக்கங்கள் எப்படி என்கின்றீர்களா?
  நான்கு பக்கங்கள் x இரண்டு பார்டர்கள்!

  லொட லொடக்கும் ஒரு பழைய சைக்கிள்!
  பூட்டாமல் போகலாம் வெகு தைரியமாக!

  பேரிச்சம்பழக்காரன் கூட வாங்கமாட்டான்.
  கேஸில் இருந்த சொத்து கிடைத்து விட்டது!

  இன்று அவர் மக்கள்களுக்கு வைர நகைகள்
  வாங்கும் லிஸ்டைத் தயாரிக்கின்றார்!!!
  Last edited by Visalakshi Ramani; Yesterday at 01:42 PM.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #22626
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  கூட இருப்பவர்கள் அகமும் முகமும் மலர்ந்து வரவேற்கிறார்கள்.
  கூட இல்லாதவர்கள் "வந்தாயா? நலமா? " என்று கூட கேட்பதில்லை.

  சொந்தத்துக்கும், பந்தத்துக்கும் அதுவே வேறுபாடு!

  "அகண்ட சௌபாக்கியவாதியாக இரு!"
  என்று ஏன் வாழ்த்துகிறார்கள் சிலர்?


  கண்டதும் காணாதது போல ஏன்
  நகர்ந்து செல்கின்றார்கள் சிலர் ?


  கடவுளுக்கு ஒருவேளை தெரிந்து இருக்கலாம் !
  அல்லது கடவுளுக்கும் புரியாத புதிராக இருக்கலாம்!!
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #22627
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,546
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  Absence makes the heart grow fonder ... to most people - even if not for all!

  So there was pindrop silence when sang the songs requested by the listeners in the mahA sashti pooja.

  Singing has become a very pleasant experience - after I got corrected for one major mistake I was committing and which no one could point out before my music guru and fondest sibling did.

  She did it on the very first day.

  The overspeed in rendering the songs - which was not really necessary!

  So all my maanaseeka gurus taught me their lovely songs.
  But they could not correct my extra speed- since they hardly knew me!

  Well better late than never.

  "GurukEka etuvanti guNiki theliyaka pothu!" is true!
  There is no excelleling without the grace of a sadhguru.

  https://youtu.be/PDsOxy9Pd9A

  Attachments area

  Preview YouTube video Guruleka Yetuvanti || Saint Tyagaraja`s Sampradaaya Pancharatna Kritis


  Guruleka Yetuvanti || Saint Tyagaraja`s Sampradaaya Pancharatna Kritis

 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •