சண்டி மஹா யாக விதானம்:--
;--
ஒவ்வொரு அத்யாய தேவதைக்கும் ஆஹுதி யாகம் பன்ன வேண்டியவை.
அத்தியாயம் =(அ)- ;1—விளாம்பழம்;( அ) 2;-தேங்காய் பூ; (அ) 3- இலுப்பை பூ(அ) 4;-பாக்கு பழம்;
(அ) 5:-மாதுளம்பழம்;(அ) 6:- நாரத்தம்பழம்;(அ) 7;-பூசணி துண்டம்;(அ) 8;-கரும்பு துண்டம்; (அ) 9;- பூசணியும் கரும்பும்; (அ )10:-மாதுலிங்கம்; துருஞ்சி; நாரத்தை; (அ) 11:- மாதுளம்பழம்
(அ) 12- வில்வபழம்; (அ) 13:-- வாழைபழம்.
படைப்பு பொருட்கள்:-- அன்னம்; வடை; அதிரசம்; சால்யன்னம்; லட்டு; கொழுக்கட்டை ;வெல்ல அப்பம்; சாத்துகுடி; மாதுளை; விளாம்பழம்; மாம்பழம்;
வாழைபழம்; பன்னீர் த்ராக்ஷை; கற்கண்டு; தேங்காய் முதலியன.
சண்டி மஹா யாகத்திற்கு வேண்டிய முக்கிய பொருட்கள்;--
மஞ்சள் தூள்-100 கிராம்; மஞ்சள் குங்குமம் 100 கிராம்; கறுப்பு திராக்ஷை 100 கிராம்; தேன் 500 கிராம்; பச்சை கற்பூரம்- 10 கிராம்; குங்குமப்பூ 1 கிராம்; கட்டி கற்பூரம் -1 பாக்கட்; வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ஊதுவத்தி 1 பாக்கெட்;
வாழைப்பழம்- 60 ;ஆரஞ்சு 12 ஆப்பிள்;-6; மாதுளை-3-; கொய்யா-3; பேரிச்சை 200 கிராம்; வில்வ பழம்-2; நாட்டு சக்கரை 50 கிராம்; சந்தன பவுடர்- 10 கிராம்
புஷ்பங்கள்;- சிவப்பு அரளி 500 கிராம்; மரு 2 கட்டு; மருகொழுந்து 2 கட்டு; தொடுத்த புஷ்பம்- 20 முழம்; ரோஜா 108; தாழம்பூ 2 மடல்; மாலை-2.
கலசம்-3; டவல்-3; கோதுமை- 2 கிலோ; பச்சரிசி 2 கிலோ; மஞ்சள் பட்டு துண்டு -1;; கருப்பு உளுந்து-500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; வாழை இலை 12; புடவை--1 ரவிக்கை துண்டு-1; கொட்டை பாக்கு 100 கிராம்;
சுத்தமான நெய் 4 கிலோ; பொரச சமித்து 100; நவகிரஹ சமித்து- ஒவ்வொன்றும் 36 வீதம்; வில்வ ஸமித்து 300; சக்கரை பொங்கல்- 2 லிட்டர்;
பூர்ணாஹூதி சாமான்கள் 13+1=14 பொட்டலங்கள்; ஹவிஸ் -1 கிலோ.
மஹா பூர்ணாஹூதிக்கு:-
ஸமித்து- அன்னம்- ஆஜ்யம்.
வெள்ளை எள்; ( புரசு ) வெண் கடுகு;; வாழைபழத்தில் தேன் கலந்து கொள்ளவும்; புஷ்பம்-நெய் கலந்தது; பக்ஷணங்கள் மைசூர் பாகு; ஜிலேபி; லட்டு; தேன்குழல்;
வெற்றிலை பட்டி; தாமரை மணி; மரச்சீப்பு-2; ஸெளபாகிய திரவியங்கள்.
ஹோம ஸமித்துகளும் பலன்களும்:--
சாந்திக்கு:--உள்ளங்கை அளவுக்கு எள்ளாலோ, ஒரு கரண்டி நெய்யாலோ ஒரு பிடி அளவு அன்னத்தாலோ ஹோமம் செய்ய வேண்டும்.
ஜ்வரம் அடங்க:- நான்கு அங்குல அளவு மாந்தளிரால் ஹோமம் செய்யலாம்.
ஆயுள் வ்ருத்திக்கு:- மூன்று மூன்று அருகம்புல்லால் ஹோமம் செய்யவும்.
தனம் பெற:- க்ருதமாலா புஷ்பத்தால் ஹோமம் செய்யவும்;
போகத்திற்கு:- கருநெய்தல் பூவால் ஹோமம் செய்யவும்.
அரசாட்சி பெற:- வில்வ தளங்கலால் ஹோமம் செய்யவும்;
ஸாம்ராஜ்யம் பெற:- தாமரை மலர்களால் ஹோமம் செய்யவும்.
கன்னிக்காக:- பிடி அளவு பொரி கொண்டு ஹோமம் செய்யவும்.
கவித்வம் பெற:-நந்தியாவட்ட மலர்களால் ஹோமம் செய்யவும்.
அதிர்ஷ்டத்திற்கு :-மகிழம்; மல்லிகை; ஜாதி; புந்நாகம் ஆகிய மலர்களால்
ஹோமம் செய்யவும்.
செல்வம் பெற;--கிம்சுகம், மதூகம் என்னும் மலரால் ஹோமம் செய்யவும்
.வசியத்திற்கு;-கதம்ப மலரால் ஹோமம் செய்யவும்.
ஒருவரை கவர்ந்திழுக்க:- உப்பு சிப்பியளவு கொண்டு ஹோமம் செய்யவும்.
தான்யம் பெற;- பாதி கைப்பிடியளவு சாலி (நெல்) சம்பா அரிசி கொண்டு ஹோமம் செய்யவும்.
ஸெளபாக்கியத்திற்கு :-குன்றிமணி அளவு குங்குமப்பூ, கோரோசனை கொண்டு
ஹோமம் செய்யவும்.
சாந்தி=எழில்=தேஜஸ் பெற;- பொரச மலர்களாலும் , காராம்பசு நெய்யினாலும் ஹோமம் செயவும்.
சித்த பிரமைக்கு:- ஊமத்தம் பூக்களால் ஹோமம் செய்யவும்.
பகைவர் கெட:--விஷ மரம்; வேம்பு; விபீதகம் இவற்றின் குச்சிகளை பத்து அங்குல நீளமாக கொண்டு ஹோமம் செய்யவும்.
அழிவிற்கு;- வேப்பம் எண்ணெயில் போட்ட உப்பு கொண்டு ஹோமம் செய்யவும்.
வெறுப்பு உண்டாக;- காக்கை; ஆந்தை இவற்றின் ஒரு சிறகுகளால் ஹோமம் செய்யவும்.
காஸம்; மூச்சு திணரல், இருமல் தணிய;- நல்லெண்ணெயில் போட்ட மிளகு கொண்டு ஹோமம் செய்யவும்