• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vadivudai manikka malai

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
R

ramachandran girija

Guest
today i am starting this thread in order to share about vadivudai amman's (thiruvottriyur,chennai) . this vadivudai manikka malai is a very rare and precious sloga, written by vallalar (ramalinga adigal)
source :- www.thiruvarutpa.org
vadivu 5.jpg
 
Last edited by a moderator:
nava 1.jpg

வள்ளலார் அருளிய
திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை

(கட்டளைக் களித்துறை)

காப்பு
சீர்கொண்ட வொற்றிப் பதியுடை யானிடஞ் சேர்ந்தமணி
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல்லரு ளீயுங் குணாலய வேரம்பனே.
 
நூல்
கடலமு தேசெங்கரும்பெ அருட்கற் பசுக்கனியே
உடலுயி ரேயுயிர்க் குள்ளுணர் வேயுணர் வுள்ளெளியே
அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே. 1


nava 2.jpg
 
nava 3.jpg

அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
மணியேயென் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே. 2
 
nava 4.jpg

மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. 3
 
பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண்ணவர் புகழும்
தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே. 4

amba devi.jpg
 
kodiidai amman kirya thirumullaivoyil.jpg
kodiidai amman -kriya sakthi-thirumullaivoyil

திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம்
மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே. 5
 
thiruvudai amman meloor chennai.jpg
thiruvudai amman meloor

உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
அன்னேஎம் ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே. 6
 
கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 7


View attachment 6092

vadivudai amman - gnana sakthi- thiruvotriyur
 
View attachment 6093

மலையான் தவஞ்செய்து பெற்றமத்தேஒற்றி வாழ்கனகச்
சிலையோன் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
அலையான் மலிகடல் பள்ளிகொண்டான்தொழும் ஆரமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே. 8
 
paying a visit to all the three temples... meloor kodiidai amman, mullaivoyil thiruvudai amman and thiruvotriyur vadivudai amman on a pounami day will bless us with showers of blessings.
 
காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே. 9

View attachment 6094
 
கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே. 10

View attachment 6095
 
நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே. 11

nava 7.jpg
 
கங்கைகொண் டோ ன்ஒற்றி யூரண்ணல் வாமம் கலந்தருள்செய்
நங்கைஎல்லா உல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே. 12
 
சேலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே. 13
 
தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே. 14
 
பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவர் மொய்யசுரர்
கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 15
 
பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 16
 
இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத் தள்ளாய்
நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 17
 
கலைம களேநின்பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
அலைமகளே அன் பொடிபிடித் தாள்எற் கறைகண்டாய்
தலைமகளே அருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
மலைமகளே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 18
 
பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற் கல்வி
தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே. 19
 
காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைகற்றி
யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 20

nava 8.jpg
 
வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
ஏற்றார் திருவொற்றி யுரார் களக்கறுப் பேற்றவரே
மாற்றா இயல்கொண்மயிலே வடிவுடை மாணிக்கமே. 21
 
பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
நெருப்புறு கையும் கனல்மேனி யுங்கண்டு நெஞ்சம் அஞ்சாய்
மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே. 22
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top