#12. தி3னமபி ரஜனி
# 12. காலத்தின் விளையாட்டு.தி3னமபி ரஜனி ஸாயம் ப்ராத:
சி’சி’ர வசந்தௌ புனராயாத: |
கால: கிரீட3தி க3ச்சத்யாயு:
தத3பி ந முஞ்சத் யாசா’வாயு: ||
காலம் விளையாடுகின்றது. பகலாகவும், இரவாகவும், மாலையாகவும், காலையாகவும், குளிர் காலமாகவும், வசந்த காலமாகவும் மாறி மாறிக் காட்சி அளிக்கின்றது. காலத்தின் விளையாட்டில் ஒருவனது ஆயுளும் முடிந்து போகின்றது. இது அத்தனையும் அறிந்திருந்த போதிலும் ஆசை அகல்வதில்லை. மூச்சுக் காற்று நீங்கினாலும் ஆசைக் காற்று நீங்குவதில்லை.