• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kindly let me know the significance of THANGA POONAL AND VELLI POONAL in Upanayanam

Status
Not open for further replies.
தங்க பூணல் வெள்ளி பூணல், பூணல் போட்டு கொள்பவனுக்கும், அவனது தாய் தந்தைக்கும்,வேஷ்டிகள், புடவை , வெள்ளி தாம்பாளம், வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, மோதிரம், பக்‌ஷணங்கள் .வெற்றிலை பாக்கு பழம், புஷ்பம்
பருப்பு தேங்காய், முதலியன பாட்டனார்,/மாமன் செய்யும் சீர் வரிசை.

நூல் பூணலுடன் தங்க, வெள்ளி பூணலை அலங்காரமாக தரிப்பது ஸம்ப்ரதாயத்தில் வந்த வழக்கம். வெள்ளி, தங்க பூணல் தானம்செய்தால் செய்பவர் வீட்டில் குழந்தைகள் மறிக்க மாட்டார்கள். என கர்ம விபாகம் கூறுகிறது.

தனது பித்ரு வர்க்கத்தை போலவே மாதா மஹ வர்கத்திர்க்கும் பிற் காலத்தில் தர்பணாதிகளால் ஸந்தோஷ படுத்துகிறான்.

முன்னோர் ஸம்ப்ரதாயம் அர்த்த புஷ்டி உள்ளது.
 

Sri. Gopalan Sir,

Are the golden and silver poonools to be given away as dhAnam?

If so, to whom? This question arises to me because I have seen these poonools kept in safely!
 
I have given the gold and silver poonal to my daughter"s son as charity. then it is their property. they can keep it in their house or do any thing as they like. As i have given as charity, in my house there will be no child death as per the book "karma vibhakam". My mind will not allow me to give this as charity to any unknown person.

Secondly My grand son will also happily do maathaa maha varga tharpanam when that time comes to him.
 
Dear Friend,

I agree with the comments of Sri SANGOM in this respect. To tell you honestly, I do not believe in THANGAPOONAL AND VELLI POONAL WEARING during BRAHMOPADESHA CEREMONY. These constitute extravaganza by rich people in our society.

Regards and Namaskarams,

P.R.RADHAKRISHNAN
 
Dear Sri SANGAM,

Brahmins are SAMAVEDIS, YAJURVEDIS,DWIVEDIS, THRIVEDIS, CHATHURVEDIS etc.While DWIVEDIS learn 2 VEDAS THRIVEDIS. LEARN 3 VEDAS & CHATHUR VEDIS, all 4 Vedas. WHILE GHANA PAATIGALS in tamil Nadu and KERALA learn GHANAM SHASTRIS learn SHASTRAMS.
I am not an expert in this line. With my limited knowledge I think what I have written might be correct.

Regards & Namaskaram,
P.R.RADHAKRISHNAN
 
Dear Sri SANGAM,

Brahmins are SAMAVEDIS, YAJURVEDIS,DWIVEDIS, THRIVEDIS, CHATHURVEDIS etc.While DWIVEDIS learn 2 VEDAS THRIVEDIS. LEARN 3 VEDAS & CHATHUR VEDIS, all 4 Vedas. WHILE GHANA PAATIGALS in tamil Nadu and KERALA learn GHANAM SHASTRIS learn SHASTRAMS.
I am not an expert in this line. With my limited knowledge I think what I have written might be correct.

Regards & Namaskaram,
P.R.RADHAKRISHNAN

Dear Shri Radhakrishnan sir,

Since you have addressed this post to me by name, I feel I ought to say my view. According to the system followed for nearly 3000 years and more in our country among the brahmins, learning vedas was a "must" for every brahmin. His own line - rik, sAma, yajus and atharva - was compulsorily to be learned completely under the gurukula system; in addition to abiding by the discipline prescribed for the student under gurukula system, the student had to complete also various self-disciplines called "vratas" to be performed during the gurukula period.

People who completed their "vEdAdhyayana" had to undergo a samskara called "samAvartana" or "snAna" in which a ceremonial bathing was the important part; the people who underwent this, were known as "snAtakas". (Those who simply memorized the vedas without understanding the meaning thereof, were ineligible for samAvartana.)

There were three types of snAtakas — vidyAsnAtakas (those students who had studied the veda/s completely but had not completed the full term of stay in the gurukula), vratasnAtakas (those who had completed the full term of stay in the gurukulam and had observed all the "vratas", and ubhayasnAtakas (those who had finished the full course of stay and had observed all the vratas and also completely studied their veda/s.

Only ubhayasnAtaka brahmins were considered eligible to teach veda/s to further students. I am not sure whether we get such ubhayasnAtakas from our vedapAThaSAlas today.

In the milieu of the olden days described above, there were brahmin students who were very intelligent and could successfully master one, two or three vedas in addition to their own (abhivAdaye) veda; such people were given the honorifics dwivedi, trivedi and chaturvedi respectively. These were held in such high respect by the brahmins that these have stuck as family surnames even today, even though the people sporting these surnames may not know even a word of any veda!!;) Colloquially, these surnames have become dubey, tiwari and chaubey, in the Hindi speaking areas.

"ghanam" is one of the "vikrutis" or kinds of analysis of the vedic samhita text. Those who used to complete all these vikrutis including ghanam (the most difficult) were called "GhanapAThin" which became 'ghanapAthi' or 'ghanapAThikaL' in our day-to-day speech. "sAstri" is a degree or title and at times it is given in appreciation of expertise in areas like Harikatha, etc., also; it does not mean that the person is well-versed in the Dharmasastras. Some institutes/colleges also give the "sastri" degree for those who complete the prescribed course of study in sanskrit etc.
 
Santhyaa vanthanam/upanayam details
அன்றன்று மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் செய்த பாபங்களை அகற்றுகிற்து இந்த கர்மா .பாபம் அகன்ற பிறகு தான் கர்மாக்ளை செய்தால்


அது பூர்ண பலன் தரும்.பாபங்களை அகற்றி புண்யத்தை தரும் புண்ய கர்மா சந்த்யா.நாம் அடைந்த உயர்ந்த ஜன்மாவிலிருந்து தாழ்ந்த ஜன்மாவை அடையாத படி


நம்மை ரக்‌ஷிக்கிரது ஸந்த்யை. எனும் இந்த நித்ய கர்மா.


இதன் கருத்தையும் மந்த்ர அர்த்தத்தையும் உணர்ந்து அநுஷ்டாணம் செய்தால் சித்த சுத்தி, ஞானம்.ஷாந்தி மோக்ஷம் முதலிய சிற்ந்த பலன்களை பெறலாம்.
காயத்ரியும் அர்க்கியம் விட்ட பின் விதிக்கபட்டுள்ள அஸெள ஆதித்யோ ப்ரும்மா என்ற உபாஸனமும் மோக்‌ஷ பலன் தருகிறது.


""அக்னிஸ்ச"" ""ஆபஹ"" ""ஸூர்யஸ்ச"" என்பவைகளில் கடைசியில் ஸ்வாஹா என்கிறோம். அது கர்ம ஆசாரத்திற்கு வழிக்காட்டியாம். ப்ராணாயாமம்


யோகத்திற்கு வழி காட்டி. அர்க்யமளித்தல் பக்தியின் ஒரம்சம். ""அஸோ ஆதித்ய:"" என்ற த்யானம் க்ஞானத்திற்கு வித்து .பிறவி கடலை தாண்ட வைப்பவை.


பேரின்பத்திற்கு ஸாதநமாக ஸந்த்யை அமைந்துள்ள்து.


குமார ஸம்பவத்தில் பரமசிவனும் ஸந்த்யை செய்ததாக வர்ணிக்கிறார். ராமர். க்ருஷ்ணர். முனிவர்கள். யுத்த ஸமத்திலும் கெளரவர் சந்த்யா காலத்தில் யுத்தத்தை


நிருத்தி விட்டு சந்த்யை செய்துவிட்டு பிறகு இரவிலும் யுத்தம் தொடர்ந்தனர். தீட்டு வந்த போது கூட செய்ய வேண்டிய கர்மா ஸந்த்யை. சுத்த்னோ அசுத்தனோ


காலத்தில் ஸந்த்யை செய்ய வேண்டும்.


காலம் கடந்து விட்டது.இனி செய்து பயனில்லையே என் விட்டுவிடக் கூடாது. அடுத்த வேளை செய்ய வேண்டிய சந்தியா கர்மா வரை விட்டு போனதை செய்ய


வேண்டும். நோய் வாய் பட்டு படுக்கையில் படுத்திருந்தால் அவனுக்காக அவனது நெருங்கியவர் அந்தந்த காலத்தில் சந்த்யை செய்து நோயாளி கையில் சிறிது


ஜலம் விட வேண்டும்.


ஒருவனை ஊருக்கு வழி கேட்கிறோம். அவன் வழியை கூறியவுடன் அவனுக்கு நன்றி கூறுவது நாகரீகம்.. உலகிலும் நம் உடலிலும் உள்ள அசுத்தங்களை


அகற்றுகிறார் சூரியன். ஜீவ கலையை ஊட்டுகிறார். மழையை அளிக்கிறார் .இருளை நீக்கி ஒளியை அளிக்கிறார்.. அத்தகைய சூரியனுக்கு நன்றி செலுத்துவதே


ஸந்த்யை.


நமக்கு சந்த்யா காலத்தில் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும் என்பது பகவானது ஆக்ஞை. அதை விட்டு விட்டு மற்றதை செய்தால் அவர் கோபத்திற்கு


ஆளாகிறோம். ஏற்ற காலத்தில் விதை விதைத்தால் ந்ற்பலன் உண்டு.ஒரு ராகம் பாட ஒரு காலம் உண்டு. நீதி ஸ்தலத்தில் குறித்த காலத்தில் நாம் இல்லை


என்றால் வழ்க்கு தள்ளி போட படும். அல்லது எதிரிக்கு ஸாதகமாக தீர்ப்பு சொல்லப்படும். வங்கியில் குறிப்பிட்ட காலத்தில் தான் செல்ல முடியும். வண்டியில்


தெருவில் செல்லும் போது சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துகிறோம் .


இங்ஙனம் மனிதர் இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு வேலை செய்கிறோம். நமது இஹபர நன்மைக்காக பரமாத்மா இட்ட கட்டளையான ஸந்த்யையை விடலாமா/
போதாயன ரிஷி கூறுகிறார்: : பராசக்தியான ஸந்த்யை உலகை படைத்தது. மாயையை கடந்தது .நிஷ்கலமானது ஈஸ்வரியானது. கேவல சக்தியானது.


மும்மூர்த்திகளிடமிருந்து உண்டானது.


மூன்று காலத்திலும் வெவ்வேறு ரூபமாக (அந்த்ந்த காலத்தில் அந்தந்த ரூபிணியாக)த்யானம் செய்து ஒவ்வொரு வேளையிலும் ஏக ரூபமாய் இருப்பதாகவும்


த்யானம் செய்ய வேண்டும். இதற்கு தான் ஸந்த்யை என்று பெயர். சிறிய மனதால் த்யாநம் செய்ய முடியாது. ஆதலால் முதலில் ஸூர்யனையும். ஸூர்ய


மன்டலத்தில் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி, சமஷ்டி காயத்ரி என்றும் பல வாறாக த்யானம் செய்ய வேண்டும்.


ஒன்றையே மூண்று வேளையிலும் நித்யம் த்யானம் செய்தால் அதே மனதில் தங்கிவிடும் ஒன்று ஒன்றாக த்யானம் செய்தால் ஒன்றில் நிலைக்காமல் த்யான


சக்தி வ்ருத்தியாகும் .நாள் ஆக ஆக இந்த உருவங்ளையும் விட்டு விட்டால் மனம் ஒன்றையும் நினையாமல் அசைவற்று நிற்கும்.மநோ வ்ருத்திகள் ஒழிந்தால்


தான் க்ஞானம் நிலைத்து நிற்கும்..முக்தி உண்டாகும்.படி படி யாக மோக்ஷ ஸாதநமே.


ஸந்த்யா வந்தனத்திற்கு பாஹ்ய அங்கம்: ஸ்நாநம்; பஞ்சகச்சம் அணிதல்; புண்ட்ரம் தரித்தல்; சுத்தமான பூணல். குடுமி; ; பூர்வாங்கம்: ஆசமனம், சங்கல்பம்,


மார்ஜனம், ப்ராசனம்;ப்ரோக்‌ஷனம், ஜப ஸங்கல்பம் ;ப்ராணாயாமம்; உத்திர அங்கம்+ நவகிரஹாதி தர்பணம்;ப்ரானாயாமம். திக் வந்தனம்.ஸந்த்யா கர்மாவின் ஜீவ


நாடி=அர்க்ய ப்ரதானம், அஸாவாதித்யோ என்று செய்யும் த்யானம்; காயத்ரீ ஜபம், உபஸ்தானம்.


எதையும் " இதை எதற்காக செய்கிறோம்; என்ன பயன் பூஜிக்கபடும் தெய்வம் எது அது எத்தகைய குணமுள்ளது." என்பவைகளை நன்கறிந்து செய்ய வேண்டும்.


ஆசமனம்: மூன்று முறை ஜலத்தை ப்ரும்ம தீர்த்தத்தால் உட்கொண்டு இரு முறை உதட்டை துடைத்து கேசவாதி நாமாக்களை கூறி குறிப்பிட்ட அவயவங்களை


தொடுவது ஆசமனம். எனப்படும். கை விரல்களின் நுனியால் ஜலம் விடுவது தேவ தீர்த்தம். கட்டை விரல் பக்கமாக விடுவது பித்ரு தீர்த்தம்.அடிப்ப்ரத்தால்


விடுவது ப்ரும்ம தீர்த்தம். சுண்டு விரல் பக்கமாக விடுவது ரிஷி தீர்த்தம்.


ஒவ்வொரு கர்மாவின் ஆரம்பத்தி லும் முடிவிலும் ஆசமனம் அவஸ்யம் செய்ய வேண்டும். ஆசமனத்தில் பல வகை உண்டு. அவரவர் முனோர்கள் செய்து வந்த


படியே செய்யவும். புதிதாக ஒன்றை ஆரம்பிக்கக் கூடாது. ஜலத்தில் நின்று க்கொண்டு ஆசமனம் செய்தால் முழங்கால் மறையும் அளவிற்கு ஜலத்தில் நிற்க


வேண்டும். இடது கையால் ஜலத்தை தொட வேண்டும். வலது கையால் ஆசமனம் செய்யவும்.


குளம் நதிகளில் உட்கார்ந்து செய்வதானால் வலது காலை கரையில் வைத்து கொண்டு உட்கார்ந்து இடது காலை ஜலத்தில் வைத்துகொண்டு இடது கையால்


ஜலத்தை தொட்டுக்கொண்டே வலது கையால் ஆசமனம் செய்ய வேண்டும். வீட்டில் செய்வதானால் இரு கால்களையும் குத்திட்டுகொண்டு இரு


முழங்கைகளையும் அதற்குள் வைத்துகொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.


சுண்டு விரலையும் மோதிர விரலையும் நீட்டி விட்டு மற்ற மூண்று விரல்களையும் சிறிது வளைத்தால் உள்ளங்கை குழிவாக இருக்கும்.அதில் ஜலத்தை


எடுத்துக்கொண்டு அந்த ஜலம் இருதயம் வரை போகும் அளவு உட் கொள்ள வேண்டும்.முதலில் அருந்தியது உட்சென்ற பிறகே மற்றுமிருமுறை உட் கொள்ள


வேண்டும் மூன்றையும் சேர்த்துக் குடிக்கலாகாது.. அந்த ஜலம் ஒரு உளுந்து முழுகும் அளவு இருக்க வேன்டும்.


அந்த ஜலம் உஷ்ணமாகவோ நுரை உள்ளதாகவோ உப்பு அல்லது வேறு எந்த ரசம் கலந்ததாகவோ இருக்ககூடாது. குழாயில் அல்லது மேலிருந்து விழும் நீரால்


ஆசமனம் செய்ய கூடாது. ஸமுத்திர ஜலத்தால் ஆசமனம் செய்ய கூடாது தர்பணம் செய்யலம்.வைதீக ஸத் கர்மாக்களை ஆரம்பிக்கும் போது ஆசமனம்


செய்தால் அது இந்திரியங்களை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் அதை செய்ய யோக்யதையை உண்டு பண்ணுகிறது. பிறர் ஆசமனம் செய்த மிகுதி ஜலத்தால்


ஆசமனம் செய்ய கூடாது.


து இடது மூக்கையும், த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதரா ஹ்ருஷீகேச


என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா என்று கூறி எல்லா விரல்களாலும் சிரசிலும்


தொட வேண்டும்.
 
இந்த ஆசமனம் தைத்ரீய ஷாகையில் ப்ரும்ம யக்ஞத்திற்காக வேதங் கூறியதை பின் பற்றி மஹரிஷிகளால் விதிக்கப்பட்டது.

கேசவ நாராயண என்று கட்ட விரலால் வலது,இடது கன்னங்களையும் ,மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும், விஷ்ணோ


மதுஸூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்கையும், த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதரா ஹ்ருஷீகேச


என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா என்று கூறி எல்லா விரல்களாலும் சிரசிலும்


தொட வேண்டும்.


எந்த கர்மாவையும் ஸங்கல்பம் செய்து கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். விநாயகரை நாடி தலையில் குட்டி கொள்ளுதல். ப்ராணாயாமம் செய்தல்


பின்னர் வலது துடை மீது ,இடது கை கீழும் வலது கை மேலும் வைத்துக்கொண்டு கால தேஸங்களை கூறி இப்பயனுக்காக இந்த கர்மாவை செய்கிறேன் என்பதே


சங்கல்பத்தின் கருத்து.
ப்ராணாயாமம்.
நமது சரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவை அடக்குவது ப்ராணாயாமம் என்ப்படும்.ப்ரதி தினம் நம் முயற்சி இல்லாமல் 21700 மூச்சு விட்டு கொண்டு


இருக்கிறோம்.தங்கத்திலிருக்கும் தோஷம் தீயில் வைத்து ஊத ஊத செல்கிறது. ப்ராணா யாமம் செய்ய செய்ய நம் பாபம் அகலுகிறது.கல்ப ஸூத்ரமும்


கர்மாகளிடையே "ப்ராயஸ்சித்தம் ப்ராணாயாமம்" என்று இதை ப்ராயஸ்சித்தமாக வர்ணிக்கிறது தர்ம ஸாஸ்த்ரமும் தினமும்16 முறை ப்ராணாயாமம் முறையாக


செய்பவர் ஸகல பாபமும் அகன்று சுத்தமாவர் என்கிறது.


ஆதலால் சந்த்யா வந்தனத்திலும் ஜபத்திலும் இது விதிக்கபட்டுள்ளது.அதற்குறிய மந்த்ர ஜபத்துடன் மூச்சை அடக்குவது ஸகர்ப்ப ப்ராணாயாமம். ஜபம்
தியானம் இல்லாமல் மூச்சை மாத்ரம் அடக்குவது அகர்ப்ப ப்ராணாயாமம்.கர்ம அங்கமாக செய்யும் போது சகர்பமாகவும், மனதை அடக்க அகர்பமும்


செய்யலாம்.வலது மூக்கை கட்டை விரலால் பிடித்துக்கொண்டு இடது மூக்கால் உள்ளே வாயுவை இழுப்பது பூரக ப்ராணாயாமம்.


இரு மூக்கையும் அடைத்து மூச்சே விடாமலிருப்பது கும்பகம்.இடது மூக்கை மோதிர விரலால் பிடித்துக்கொண்டு வலது மூக்கால் காற்றை வெளியே விடுவது


ரேசகம் எனபடும். இந்த பூரகம். கும்பகம், ரேசகம் மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் எனப்படும். பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக ஸப்தம் கேளாமல்வாயுவை இழுத்து விட வேண்டும்.


பூரக ப்ராணாயாமத்தில் நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும் கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும் ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்ய


வேண்டும்.ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் மடக்கிகொண்டு கட்டை விரலாலும் , மோதிர,சுண்டு விரல்களால் மூக்கை


பிடித்துகொண்டு ப்ராணாயாமம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ப்ராணாயாமம் முடிந்த பின் வலது காதை தொட வேண்டும். வலது காதில் கங்கை இருப்பதால்


கையை சுத்தம் செய்து கொள்கிறோம்.


ப்ராணாயாமத்தில் முதலில் ப்ரணவம்.பிறகு ஏழு வ்யாஹ்ருதிகள். பிரகு காயத்ரி. அதன் பிறகு காயத்ரி ஸிரஸ். என்ற நான்கு மந்த்ரங்கள்


கூறுகிறோம்.ப்ரணவம் சுத்த ப்ருஹ்மத்தையும், ஏழு வ்யாஹ்ருதீகள் ப்ரணவத்துடன் கூறப்படுவதால் பரமனால் படைக்கப்பட்டு பரமணாகவே உள்ள ஏழு


லோகங்களையும், தலையை இழுத்தால் வாலும் வருவது போல் கீழே உள்ள பாதாளாதி ஏழு லோகங்களும் ஆக 14 லோகங்களையும்


காயத்ரியை கூறுவதன் மூலமாக நமது புத்திக்கு, ஷக்தி அளித்து தூண்டுபவரான பரமாத்மாவையும் காயத்ரீ ஸிரஸ் மூலம் ஜலமாகவும், ஜ்யோதிஸாகவும்,


ரஸமாகவும்,முவ்வுலகமாயுள்ள பரப்ருஹ்மத்தையே த்யானம் செய்கிறோம்.
மார்ஜனம்:
 
aachamanam.
ஆசமனம்:. பொதுவான விதிகள்.
ஆசமனம் செய்யும் தீர்தத்தில் நுரை குமிழிகள் இருத்தல் கூடாது. உப்பு கரிக்க கூடாது. கலங்கியது, துர்நாற்றமுடயது சரகு போல் மிதப்பது கெட்ட இடத்திலுருந்து பெருகி வரும் தண்ணீர் கூடாது.

வெந்நீரால் ஆசமனம் செய்ய கூடாது. வாஸனாதி திரவியம் ஏலக்காய், பச்சை கற்புரம் கலந்த தண்ணீரிலும் ஆசமனம் செய்ய கூடாது. பரிஷேசநம் செய்து மிகுந்த நீரில் ஆசமனம் செய்ய கூடாது.

வேறு வழி இல்லை என்றால் அந்த பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது பூமியில் கொட்டி விட்டு , மீதமுள்ள நீரினால் ஆசமனம் செய்யலாம்.
கை கால் முகத்தை அலம்பி கொண்டு கவனத்துடன் உபவீதியாக கிழக்கு, வட கிழக்கு, வடக்கு நோக்கி இரண்டு கைகளையும் முழங்கால் நடுவில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

முழங்காள்களுக்கு வெளியே கைகளை வைத்து கொண்டும் , ஆஸனத்தில் அமர்ந்த வாறும் , தெற்கு, மேற்கு நோக்கியும் ஆசமனம் செய்ய கூடாது. போஜநத்திற்கு பிறகு மட்டும் அமர்ந்தவாறு ஆசமனம் செய்யலாம்..

நின்று கொண்டு ஆசமனம் செய்ய கூடாது. நதியில், குளத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு ,இடது கையால் தண்ணீ. ரை தொட்டுக்கொண்டு ஆசமனம் செய்யலாம். இடக்கையில் 12 ஆதித்யர், வருணன் இருக்கிறார்கள்.

வெண்கலம், தாமிரம், வெள்ளி ஆகியவற்றாலான பாத்திரங்களில் நீர் எப்போதும் சுத்த மாகவே இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த ஜலத்தை அப்படியே எடுத்து ஆசமனம் செய்துவிட்டு மீதம் உள்ள நீரை மீண்டும் உபயோகித்தல் கூடாது.
உத்திரிணியால் நீரை எடுத்து ஆசமனம் செய்தால் பிறகு மீதமுள்ள நீரை மீண்டும் பயன் படுத்தலாம்.

ஸ்நானம் செய்த பிறகும், சாப்பிட்ட பிறகும், திரவ பதார்தங்கள் பருஹிய பிறகும், தும்மிய பிறகும், தூக்கத்திற்கு பிறகும் முறைப்படி ஆசமநம் செய்ய வெண்டும்.

கட்டை விரலின் அடி பாகத்தில் உள்ளது .ப்ரஹ்ம தீர்த்தம், சுண்டு விரல் அடியில் உள்ளது ரிஷி தீர்த்தம் அல்லது ப்ராஜாபத்யம் ,நான்கு விரல்களின் நுனி பாகத்தில் உள்ளது தேவ தீர்த்தம்.

உள்ளங்கையில் ஆர்ஷம், ஆக்னேயம், செளம்யகம் என்ற தீர்த்தங்கள் உள்ளன. கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுப்பாகத்தில் உள்ளது .பித்ரு தீர்த்தம். நடுவிலுள்ள மூன்று விரல்கலின் அடியில் உள்ளது காய தீர்த்தம்.

ஆசமனம் ப்ருஹ்ம தீர்தத்தால் செய்ய வேண்டும். நிர்வாபணம்.ஸம்ஷ்ரவனம், லாஜ ஹோமம் ஆகியவற்றை காய தீர்தத்தால் செய்ய வெண்டும்.

பூஜை,பலி போடுதல்,ப்ரோக்‌ஷ்னம் செய்தல், சாப்பிடுதல்,துடைத்தல் நித்ய ஹோமம் இவற்றை தேவ தீர்தத்தால் செய்ய வேன்டும். தயிர் சாப்பிடும் போதும், புதியதை சாப்பிடும் போதும் செளம்யகத்தாலும்,
தானம் பெற்றுக்கொள்ளும் போது ஆக்னேய தீர்தத்தாலும் செய்ய வேண்டும்.

வலது கையின் எல்லா விரல்களையும் சேர்த்து பசுவின் காது போல் செய்து ஜலம் விட்டுக்கொண்டு பிறகு சுண்டு விரலையும் கட்டை விரலையும் நீக்கி
பாக்கி விரல்களுக்கு கீழே உள்ள உளுந்து மூழ்கும் அளவுள்ள ஜலத்தை மும்முறை சாப்பிடுவதே ஆசமனம்.எனப்படும்.

தர்ப்ப பவித்ரம் தரித்து இருக்கையில் ஆசமனம் செய்ய கூடாது. பவித்ரம் கையிலிருந்து கழட்டி வலது காதில் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு மறுபடியும் வலது கை மோதிர விரலில் போட்டு கொள்ளவும்

.விஷ்வேதேவர், பித்ரூவுக்கும் காலலம்போதும் பவித்ரம் கையில் இருக்க்கூடாது. காதில் இருக்க வேன்டும். கை விரலில் பவித்ரத்துடன் காபி,, தண்ணீர் அருந்த கூடாது.

ப்ரபாஸாதி தீர்த்தங்கள் , கங்காதி நதிகள், ஆதித்யன், சந்த்ரன், வருணன், அக்னி வாயு ஆகியோர் வலது காதில் உள்ளதாக ஐதீகம். ஆசமனம் செய்ய முடியாவிட்டல் ,

அல்லது ஆசமனம் செய்வதற்கு உகந்த ஜலம் கிடைக்காவிட்டால் , ஆசமனம் நிமித்தம் வலது காதை தொட வே4ண்டும்..அவ்வாறு செய்வது ஆசமனம் செய்வதற்கு ஒப்பானது.

போஜனம்,, பக்‌ஷணம் தின்பது, ஹோமம் செய்வது, தாநம் கொடுப்பது, தாநம் வாங்குவது ஆகியவற்றுக்கு பிறகு இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

மாம்பழம், கரும்பு துண்டு. தாம்பூலம் ஆகியவை உட்கொணட பிறகு ஆசமனம் செய்ய தேவை இல்லை.

விஷ்ணு பாத தீர்த்தம், ஷிவோதகம் ஆகியவை உட்கொண்ட பிறகோ முன்போ ஆசமனம் செய்ய கூடாது.
 
ஸ்நானம்.: தர்ம சாஸ்த்ர விதி: ஸங்கல்பம் ஸுத்ர படநம், மார்ஜநம், சாகமர்ஷணம்,. தேவாதி தர்பணஞ்சைவ ஸ்நானம் பஞ்சாங்க முச்யதே.

முதலில் ஸங்கல்பம்., பிறகு வருண ஸூக்த ஜபம், ஸ்நானம், மார்ஜனம், ஸ்நானம்,அகமர்ஷன ஸூக்த ஜபம் ஸ்நானம். பிறகு தேவ தர்ப்பனம்.

பிறகு யக்ஷ்ம தர்பணம். ஷிகோதகம், வாஸோதகம் செய்து விட்டு தலையை துடைத்துக் கொள்ள வேண்டும்.

ஸங்கல்பம் ப்ர்ஹ்மசாரிக்கும் சந்யாஸிக்கும் கிடையாது. ப்ருஹ்மசாரி தினமும் காலை ஒரு வேளையும், கிரஹஸ்தன் தினமும் இரு வேளையும் ஸந்யாசி தினமும் மூண்று வேளையும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

வெந்நீரில் ஸ்நானம் செய்தால் அகமர்ஷண ஸூக்தமும் தேவ தர்பணமும் கிடையாது.

ஓடும் நதியில் , நீரின் ஓட்ட்த்தை எதிர் நோக்கியவாறு ஸ்நானம் செய்ய வேண்டும்.
குளம் , குட்டைகளில் ஸ்நானம் செய்யும் போதும் அர்க்யம் கொடுக்கும் போதும் காயத்ரி ஜபம் செய்யும் போதும் ஸூர்யனை நோக்கியவாறு செய்ய வெண்டும்.

ஸந்த்யா காலத்தில் ஸந்த்யைக்கு எதிர் முகமாகவும் இரவில் வட கிழக்கு முகமாகவும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.

தீட்டு க்ஷவரம் இவைகளின் பொருட்டு செய்யும் முதல் ஸ்நானத்திற்கு சங்கல்பம், தர்பணம் கிடையாது. இரண்டாவது ஸ்நானத்திற்கு ஸங்கல்பம் தர்ப்பணம் உண்டு.,

ஸ்நானத்திற்கு பின் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்யவும்.

தேவ தர்பணம், கிழக்கு நோக்கியும், உபவீதியாகவும். ரிஷி தர்பணத்தை நிவீதி யாகவும் வடக்கு நோக்கியும், பித்ரு தர்பணம் தெற்கு நோக்கி ப்ராசீணாவீதியாகவும் செய்யவும். இது நித்ய தர்பணம். எள் தேவையில்லை.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு கரைக்கு வந்து யக்‌ஷ்ம தர்ப்பணம் செய்ய வேண்டும். .யக்ஷ்ம தர்ப்பணத்திற்கு பிறகு ப்ராசீணாவிதீயாய்

கரையில் அஸையா வண்ணம் நின்று குடுமி தலை முடியை முன் பக்கம் இழுத்து விட்டு தலையில் சோர்ந்துள்ள நீரை பூமியில் விழச் செய்ய வேண்டும்..இதுவே சிகோதகம்..

பின்னர், பூணல் நிவீதி யாக இருக்க வஸ்த்திரத்தை நான்காக மடித்து பிழிந்து , அதில் சோர்ந்துள்ள நீரை தரையில் விழச் செய்ய வேண்டும். இதுவே வாஸோதகம்
.
காலையில் ஸந்த்யா வந்தனத்திற்கு முன்னும் மாத்யாநிஹத்தில் ஸந்தியா வந்தனத்திற்கு பின் ஆனால் ப்ருஹ்ம யஞ்ஞியத்திற்கு முன்னும் மாலையில் ப்ருஹ்ம யஞ்ஞியத்திற்கு பின்னும் வஸ்த்ரம் பிழிய வேண்டும். (சிராத்த நாட்களில்).

பிழிந்த வஸ்த்திரத்தை மடக்கிய இடது கையில் வடக்கு நுனி யாக போட்டுக்கொண்டு இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும். .

உலர்ந்த வஸ்த்திரத்தால் தான் தலையை துவட்டி கொள்ள வேண்டும்..

மற்ற நேரங்களில் ஷிகோதகமும் வாசோதகமும் பூமியில் விழுவது முறையல்ல.

இவைகள் பொதுவான விதிகள். ஸூத்ர விதி மாறுதல்கள். கர்மாக்கென
 
யஞ்ஞோபவீதம்:
பருத்திப் பஞ்சைக் கொண்டு நூற்ற நூலை மூண்று இழைகளாக ச்சேர்த்து கொண்டு , சுத்தமான இடத்தில் அமர்ந்து , வலது கையின் நான்கு விரல்களை சேர்த்துகொண்டு

( நான்கு அங்குல சுற்றளவு உள்ளதாக வைத்துக்கொண்டு அதில் அந்த நூலை 96 தடவை சுற்றினால் அது பூநூல் அல்லது ஷன்னவதி எனப்படும்.

அதை அப்லிங்கமான ஆபோஹிஷ்டா, ஹிரண்யவர்ணா, பவமான: என்ற மந்த்திரங்களால் ப்ரோக்‌ஷித்து சுத்தி செய்ய வேண்டும். பிறகு காயத்திரி மந்த்ரம் உச்சரித்த வண்ணம் த்ரிகுணிதம் செய்தல் வேண்டும்.

அதாவது மூன்றாக மடித்து முறுக்கி ,பிறகு உள்ளங்கையில் மூண்று முறை அடித்து பிறகு வலம்புரி முடிச்சு ((ஆத்தி முடிச்சு)) போடவேண்டும்.

இவ்வாறு செய்யப்பட்ட பூநூல் தொப்புள் வரையிலும் நீளமுள்ளதாக இருக்கவேண்டும். .குறைவாக இருந்ந்தால் ஆயுள் குறைவு. அதிகமாக இருந்தால் செய்யும் கர்மாக்களுக்கு பலன் குறைவு.

இவ்வாறு தயாரித்த பூநூலை சுத்தமான இடத்தில் வைத்து நவதந்து தேவதைகள்=ஓங்காரம், அக்னி; பக; சோமன்; பித:ர:: ப்ரஜாபதி::: விஷ்ணு: தர்ம: ஸகல தேவதா: கிரந்தி தேவதைகள். .

இவர்களைஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் உத்வயம் என்ற மந்திரத்தால் ஸூர்யனுக்கு காண்பித்து விட்டு, பவித்ரமான இடத்தில் எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.

உபவீதம் ப்ருஹ்மசாரிக்கு ஒன்று. த்ரிதண்டி ஸந்யாஸிகளுக்கு ஒன்று .க்ருஹஸ்தனுக்கு இரண்டு. உத்தரீயார்த்தம் தரித்து கொல்வது மூன்றாவது உபவீதம்..
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top