• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

16 questions and answers that Sri Valmiki Maharshi asked Naradamuni

को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।
- श्रीरामायणम्
கோநு அஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந்?
தர்மஜ்ஞஸ்ச க்ருதஜ்ஞஸ்ச
ஸத்யவாக்யோ த்ருடவ்ரத:

( -ஸ்ரீராமாயணம்)
என்று
நான்முகக் கடவுளின் நியமனத்தால் வால்மீகி மஹர்ஷியின் ஆச்ரமத்திற்கு வந்து சேர்ந்தஸ்ரீ நாரதமுனியை வணங்கி வழிபட்ட ஸ்ரீவால்மீகி முனிவர் ,
ஒரு பதினாறு திருக்குணங்களைச்சொல்லி, இத்திருக்குணங்கள் அமைந்த ஒரு மனிதன் இப்பூவுலகில் உளனாயின் எனக்குச் சொல்லவேணுமென
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனவரைப்பார்த்து
விண்ணப்பஞ்செய்த வினா...

நாரதமுனி மிகமகிழ்ந்து,
"இக்ஷ்வாகு வம்சத்திற்பிறந்து ஸ்ரீராமன் என்ற திருநாமம் பெற்றவனும்,உலகம் நிறைந்த புகழாளனும்,
அளவற்ற சக்தி வாய்ந்தவனுமான சக்ரவர்த்தித்திருமகனே என்று விடையளித்தார்.

முதல் வினா..

1. को गुणवान्

கோ குணவாந்?
சிறந்த குணங்களையுடையவன் என்பதோடல்லாமல்
குறிப்பிட்டவொரு குணத்தைப்பற்றியதே
ஆளவந்தார் தாமும்
"வசீ,வதாந்ய:..குணவாந் என்று முடிவில் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதோததி* என்று குணவாந் என்பது ஒரு விசேஷகுணத்தைத்பற்றியதே என்று கொள்ளலாம்.

இதற்குப்பூர்வாசார்யர்கள் சீலகுணம் என்றே திருவுள்ளம்.

தன்மேன்மை பாராமல் தாழ்ந்தவர்களோடும் புரையறக்கலந்து பரிமாறும் சீலகுணம்.
கூரத்தாழ்வானும் சீல:க ஏஷ தவ ஹந்த! என்கிறார்.
"அத்ராவதீர்ய நநு லோசந கோசரோபூ:" என்னும்படி
கட்கிலியானவெம்பெருமான் ஆஸுரப்ரக்ருதிகளிடையே வந்து அவர்களுடைய கட்புலனுக்கு இலக்காகித் திருவவதரித்தான் என்று...
"பிறந்தவாரும்" என்று ஆழ்வாரும் மோஹித்தபடி.
"நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாயயனாய்"தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்" என்று எல்லாப்பொருள்களுமாகவுளனானவன் இராமன் என்கிற ஒருபெயர்க்கு மாத்திரம் பொருளாகவிருந்தனன்.
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்மஸமஸ் ஸகா
ஏழைஏதலன்கீழ்மகன் என்னாதிரங்கி சீரணிந்த தோழமை என்னுமாபடியிறேயிருப்பது!
வேதாந்தாசாசார்யரும்
"பகவதி பரத்வாஜே புக்திஸ்ததா சபரீக்ருஹே"
என்று பவித்ரமான பரத்வாஜாஸ்ரமத்தில் அமுதுசெய்ததுபோலவே சபரி திருமாளிகையிலும் அமுதுசெய்தாரென்றபடி.
சசாலசாபஞ்ச முமோச வீர: என்கிறபடி நிலைகலங்கிநின்ற இராவணனை இன்றுபோய் நாளை வா
என்று விடைகொடுத்துனுப்பியது.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீ காஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
இரண்டாவது வினா

२. क: वीर्यवान्?
வீர்யவான் யாவன் ?

எதிரிகளைக்கண்டு அஞ்சாமை...
அவர்களை அநாயாஸமாய் முடிக்கும் வல்லமை...
அப்படிச்செய்யுமளவில் தனக்குச்சிறிதும் பங்கம் நேராமல் நிற்றல்
வீர்ய மென்கிற இதிலேயே மற்றையிரண்டும் உபலக்ஷணம்.
குணவாந் க: என்னுமிடத்தில் எளிமைக்குணத்தை
அநுபவித்து நீர்ப்பண்டமாய்இருந்து அனந்தரம்அவனுடைய வீர்யத்தை அநுஸந்தித்தாலல்லது தரிக்கயியலாதென்கை.

வேதாந்தாச்சார்யரும்
ஜய ஜய மஹாவீர
என்று ரகுவீரகத்யத்தில்..
பவபூதிமஹாகவி *மஹாவீரசரிதம்*என்றே பெயரிட்டு நூலியற்றினான்.
ஆழ்வார்களும்இராமனது செயலைச்சொல்லி வீர
னென்றே வெருவுவர்கள்.
சத்ருவான இராவணனும்
"சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:" என்று அந்த வீர்யத்தைத்தான்மிகநன்றாய் அனுபவித்தானென்றபடி.

ஓரிருவரோர்மூவரென நின்றதும் உருவுகரந்ததும்"
*செருக்கடுத்தன்று திகைத்த அரக்கரை உருக்கெடவாளி
பொழிந்த வொருவனே* என்று ரூபக்ரஹணம் அரிதாகி வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை.
இதனால் இராமனது வீரம் வாசாமகோசரமென்றதாயிற்று.
ஜனஸ்தாநத்தில் பதினாலாயிரம் சேனைகளையும் இராமன் அஸஹாயசூர என்றபடியே தனியொருவனாகவே எதிர்த்து கரன் தலையை அறுத்ததுவும் ப்ரஸித்தமிறே.
மரணாந்தாநி வைராணி என்கிற ஸ்லோகத்தில்
நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜனம் என்னுமிடத்தில் அவன்செய்யும் நன்மையை விலக்காமலிருக்கவேணுமென்பதே.(அப்ரதிஷேதம்).ஆதலால் இனி இராவணன் ப்ராதிகூல்யமொன்றும் செய்யகில்லான்.அதனால் அந்த்யக்ரியை பெரியோர்களுக்குச் செய்கிற க்ரமத்திலே செய்.இல்லையாகில் இதோ நான்செய்தே தீருவேன் என்றான்.

விச்வாமித்ரரும் ராமம் ஸத்யபராக்ரமம் என்றாரிறே..

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீ காஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
மூன்றாவது வினா...

३. क: धर्मज्ञ:
தர்மமறிந்தவன் யாவன்?

"தருமமறியாக்குறும்பனை"
என்று ஆண்டாள் கண்ணனைக்கூறினாலும்
இராமன் தர்மமறிந்தவனென்னப்படுகிறான்.
ஆந்ருசம்சயம் பரோதர்ம: த்வத்த ஏவ மயா ச்ருத: என்று பிராட்டி திருவடியிடம்....
வேதாந்தாச்சார்யரும் கருணா காகுத்ஸ்த என்று தசாவதாரஸ்தோத்ரத்தில்..
"வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித:"
(அயோ.2-40)
பிறர் துயருறக்கண்டால் தான் அபரிமிதமாகத் துயருறுபவன்

த்ரௌபதியின் துயரைத்தீர்த்திருக்கச்செய்தேயும்,அவள் பரிபவமே உண்டாகாதபடி ஜாகரூகனாயிராதிருந்ததும், அவள் கூவினபோது நேரில் சென்று உதவாதொழிந்து பெரியகடனாளியாய்விட்டேனே என்றுதிருவுள்ளம் வருந்தினபடியுண்டே..
ஆழ்வானும் பட்டரும் முதலையாலடர்ப்புண்ட கஜேந்த்ரனுக்கு "கெட்டேன்!கெட்டேன்! என்று நொந்துகொண்டே அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து இடர்தீர்த்ருளினானென்றதை எடுத்துரைத்து உருகினவர்கள்.
மேலும் வாலியின் மரணத்தினால் தாரைக்கும்
அங்கதனுக்கும் இருந்த சோகம் இராமனுக்குமிருந்ததபன்றும் ஸுக்ரீவன் சோகத்திற்கும் அதிகமாக சோகப்பட்டான் என்று வால்மீகியும்
ஸமாநசோக:காகுத்ஸ்த:
என்றார்..
சீதா விவாஹஸமயத்தில்
ஜனகன் இயம் ஸீதா மம ஸுதா ,ஸஹதர்மசரீதவ என்பதும் பின்பு
பிராட்டி இராவணனிடம்
*விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞச்
சரணாகத வத்ஸல:* என்று
அடைக்கலம் புகுந்தவர்களைக் காத்தருள்பவனே என்றதும் ப்ரஸித்தம்.
"ராமோ விக்ரஹவான் தர்ம:"
என்று இராவணனிடத்தில் மாரீசன் கூறியதும் இதுபறிறியே..

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
நான்காவது வினா...

४. क: कृतज्ञ: ?
க்ருதஜ்ஞன் யாவன்?

க்ருதஜ்ஞன் என்பவன்
செய்ந்நன்றி மறவாதவன்.
அங்ஙனன்றிக்கே "க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி" என்றிறே வடமொழிநூல்களும்.
செய்ந்நன்றி மறக்கைக்கு ப்ராயச்சித்தம் ஒரு சாஸ்த்ரத்திலும் காணக்கிடைக்காது.

ஸங்கல்பசூர்யோதயத்தில்
வேதாந்தாச்சார்யரும்
ப்ரதிதம் பாதகிவர்க்கம் க்ருதக்ந ஏகோ ஹி க்ருத்ஸ்நமதிசேதே தமிமம் க்ரியமாணக்ந: தமபி துராத்மா கரிஷ்யமாணக்ந: என்று.
பிறர்செய்த உபகாரங்களை மறப்பதோடல்லாமல் ,பதிலாக அவர்களுக்கு அபகாரங்களைச்செய்பவன் க்ருதக்நன் எனப்படுவான்.பாதகிகளில் மிக மேலானவன் பேருதவி செய்யப்போமவர்க்கு முந்தியே தீங்கிழைப்பவன்.
அசௌதனங்களிடையே க்ருதஜ்ஞதை காணவெளிது. நின்று தளரா வளர் தெங்கு தாளுண்டநீரைத் தலையாலே தான் தருதலால் என்பதோர்கூற்று.
அற்பமான நீர்களையிட்டாலும் தென்னை நமக்கு ப்ரதியாக மிக மதுரமான நீரைநல்கும்.
கதஞ்சிதுபகாரேணக்ருதே நைகேந துஷ்யதி,நஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா(அயோ.1-11)
எத்தனை தீங்கு விளைத்தாலும் மனதில் கொள்ளாது,ஏதேனுமொருவிதத்தில் யாரேனூம் ஒருதவி செய்தாலும் அதனால் எப்போதும் உள்ளம் பூரித்திருப்பவன்.
குரக்கரசனான சுக்ரீவனிடத்தும் அரக்கர்கோமானான விபீஷணனிடத்தும் இராமன் காட்டிய திருவருள்
நெஞ்சாலும் நினைப்பரிது.
விபீஷணனாவது சரணாகதி செய்தான்.
சுக்ரீவனிடத்தோ ஸுக்ரீவம்சரணம் கத: என்று தான்
சரணம் பற்றினன்.
பம்பாதீரே ஹநுமதா ஸங்கதோ வாநரேண ஹ
என்று பம்பைக்கரையில்
சுக்ரீவனது கட்டளையின் பேரில் அனுமன் வந்து சந்தித்தனன்.
ஸர்வலோகசரண்யாய ராகவாய மஹாத்மநே
என்று தன்னிருப்பிடம் தேடிவந்தவொரு செயலையே பேருதவியாகவெண்ணினன். ஆக்க்யாஹி மம தத்வேந ராக்ஷஸானாம் பலாபலம் என்று ராக்ஷஸரிடமிருந்து விபீஷணனை வேறுபடுத்தியதும்,
அதனைதிருமங்கையாழ்வார் செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை ..என்று..
மானிடவடிவனான ஸ்ரீராமனிடத்து க்ருதஜ்ஞதை ஒருபுறமிருக்க, பரந்தாமனான ஸ்ரீமந்நாராயணனிடத்து க்ருதஜ்ஞதாகுணம் ஆசார்யர்களால் வெகுவாகக்காட்டப்பட்டுள்ளது. க்ருதம் ஜாநாதி இதி க்ருதஜ்ஞ: என்றபடி நாம் செய்யும் கார்யங்களை நன்கு அறிபவன் ஸர்வேஸ்வரன்.நாமா செயூயும்
ஜ்ஞாத,அஜ்ஞாத ஸுக்ருதங்களை நன்கு அறிபவன்.
தெரிந்துசெய்யும் நற்செயல்ள் ஒருபுறமிருக்க,நம்மையறியாமலே செய்யப்படும் ஸுக்ருதங்களையும் அறிந்து கணக்கில் வைக்கிறான் எம்பெருமான். யாத்ருச்சிகமாகவும்
(யதேச்சையாய்)
ஆநுஷங்கிகமாயும்
(வாயுப்பேச்சுக்களில் திவ்யதேச திருநாமங்களைச்சொல்வது)
ப்ராஸங்கிகமாயும்
(திருநாமங்களைச்சொல்வது) அடியார்கள் விடாய் தீர்த்தல் ,ஒதுங்க நிழல் கொடுத்தல்,தீயசெயலிலும் கோயிலை வலம் வருதல் போன்றவற்றையும் ஸுக்ருதமாகவே கொள்கிறான்.விபீணனனை ஏற்றுக்கொள்கையிலும்
யதி வா ராவணஸ்வயம்
என்று இராவணனே வந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றானிறே...

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
ஐந்தாவது வினா...

५. क: सत्यवाख्य:
ஸத்யவாக்யன் யாவன்?
ஸ்ரீராமனுடைய திருவாக்கு..
வனவாஸம் புறப்படுவதற்கு முன் கைகேயியிடத்தில்
ராமோ த்விர் நாபிபாஸதே
ராமன் ஒன்றேயுரைப்பான்;ஒருசொல்லே சொல்லுவானென்கிற புகழ் இராமனுக்கேயுரியது* என்று..
மற்றோரிடத்தில் ஸுக்ரீவனிடத்தில் தானே
*அந்ருதம் நோக்தபூர்வம் மே ந ச வக்ஷ்யே கதாசன,
ஏதத் தே ப்ரதிஜானாமி ஸத்யேநைவச தே சபே||
இதுவரை நான் பொய் சொன்னதில்லை.இனிமேலும் ஒருகாலும் சொல்லப்போவதில்லை.ஸத்யத்தின்மேலாணையிட்டுச் சொல்லுகிறேனிதை..
என்கிறான்..
ஸத்யேன லோகாந் ஜயதி
*தீநாந் தாநேந ராகவ:
குரூன் சுச்ரூஷயா தீரோ தநுஷா யுதி சாத்ரவாந்*
என்பது தசரதன் வாக்கு.
இராமன் ஸத்யவாக்கின் பெருமையினால் ஸகல லோகங்களையும் தானிட்ட வழக்காகக்கொண்டிருக்கிறான்.இந்த ஸத்யவாக்கின் பெருமையே ஜடாயுவிற்கு முக்தியளித்தது.
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்சலோகாந் அநுத்தமாந்
என்றிறே ஜடாயுவுக்கு முக்தியளித்தது.
ராஜ்யாபிஷேகத்திற்காட்டிலும் வனவாசத்திலே இராமபிரானுக்கு மிக்க மகிழ்ச்சி என்பது அவன் வாக்கிலிருந்தே தெரிகின்றது..
ராஜ்யம் வா வனவாஸோ வா வனவாஸோ மஹோதய: என்று சொன்னதைக் கம்பரும்
இராமன் திருமுகச் செவ்விநோக்கின்...அப்போதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா என்று கூறுகிறார்..

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீ காஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
ஆறாவது வினா...
क: धृडव्रत:
திடமான விரதமுடையவன் யாவன்?
ஒரு காரியத்தைச்செய்துமுடிக்கவேணுமென்கிற சங்கல்பமும் அந்த சங்கல்பம் சிறிதும் தளராமல் திடமாக இருக்கப்பெறுவது ஒரு சிறந்தகுணம்.
சரணாகத பரித்ராணம் என்கிற த்ருடவிரதம் கொண்டவன்.
ஸீதையும் இராவணனை நோக்கி உபதேசம் செய்யுமிடத்து விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: என்கிறாள்.
அடைக்கலம் புகுந்தவர்களை அஞ்சலென்று கூறி அபயமளித்து அநிஷ்டநிவ்ருத்திகளையும் இஷ்டப்ராப்திகளையும் செய்வித்தருள்வதே இவ்வவதாரத்தில் மிகமுக்கியமான காரியமாயிருந்தது.
வேதாந்தாச்சார்யரும் அபயப்ரதானசார த்தில்
நமஸ்தஸ்மை கஸ்மைசந பவது நிஷ்கிஞ்சன ஜநஸ்வயம் ரக்ஷா தீக்ஷா ஸமதிக ஸமிந்தானயசஸே
என்றும் தசாவதாரஸ்தோத்ர த்தில்
ஸர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜநதா ஸம்ரக்ஷணைகவ்ரதீ
என்று அகிஞ்சனர்களான ப்ரபன்னர்களைத் தன்பேறாகக் காத்தருள்வதில் தீக்ஷை கொண்டு அதுவே பெரும்புகழாக விளங்குமவன் .

தண்டகாரண்யத்தில் ரிஷிகள் தங்கள் தேகங்கள் அரக்கர்களால் அடிபட்டிருப்பதைக்காண்பித்து இராமனைச் சரணடைந்தபோது அவர்கள் காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே தந்தை சொல்பேணுதலென்னும் வ்யாஜத்தினால் அரண்யம் வந்ததாகச்சொல்ல, ஸீதை அதை க்ஷத்ரியவ்ருத்தியைவிட்டு தாபஸவ்ருத்தியைக் கைப்பற்றியிருக்கும் உமக்கு இது தர்மமாகுமா என்று மறுப்புதெரிவிக்க,இராமனும் அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம்வா ஸீதே ஸலக்ஷ்மணாம், ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத: "ஸீதே! நான் என்னுயிரைவிட்டாலும் விடுவேன்,உன்னையும் இலக்குமணனையும் விட்டாலும் விடுவேன்! ஆனால் ஒருவருக்குச்செய்த(அதுவும் ப்ராஹ்மணர்கட்கு) ப்ரதிஜ்ஞையை எள்ளளவும் தவறமாட்டேன்* ...
*ஸத்ருசஞ் சாநுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மந:
ஸதர்மசாரிணீ மே த்வம் ப்ராணேப்யோபி கரீயஸீ* என்று ஸீதே! நான்செய்ய நினைக்கும் தர்மத்தையே நீயும் ஸங்கல்பிக்கவேண்டும்.வேறொன்றை நினைக்கலாகாது.இப்படிப்பட்ட தர்மத்தை அனுட்டிக்கத் துணைபுரிவதற்காகவேயன்றோ உன்னை நான் மணம்புரிந்துகொண்டேன்.ஆகவே என்வழியொழுகுவதே உற்றது என்று கூறுகிறான்.மேலும் கபோத உபாக்யானம்
வ்யாக்ர வானர ஸம்வாதம்
ஆகிய வ்ருத்தாந்தங்களைக்கூறி
தான் சரணாகதர்களைக் காப்பதில் த்ருடவ்ரதன் என்பதை நிரூபித்தான்.

இராமன் தன் வாக்காக

மித்ரபாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன|
தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம்||*
*ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே|
அபயம் ஸர்வபாபேப்யோ ததாமி ஏதத்வ்ரதம் மம||
என்கிற ஸ்ரீஸூக்திகள் மூலம் அடைக்கலம் புகுந்தவர்களைக் காத்தருள்வதில் திடவ்ரதன் என்பது தெளிவாகிறது.

- அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
ஏழாவது வினா...

७. चारित्रेण च को युक्त:

சாரித்ரமாவது நன்னடத்தை
நல்லொழுக்கம்..
அத்தோடு கூடியவன் யார்?

பெரியார்களைப்பணிதல்..
தந்தை தாய் பேணுதல்
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை வழுவறச்செய்தல் தெய்வபக்தியுடைமை
பிறரை நலியாமை
பிறர்பொருள் தாரம் என்றிவற்றைக் கவர நெஞ்சாலும் நினையாமை..
என்னொமிவ்வொழுக்கங்களுக்குப்பெயர் சாரித்ரமென்பது..
இவையெல்லாமே இராமன் பக்கலிலே குறையறக்குடிகொண்டுள்ளது.
ஒத்தார் மிக்கார் இலையாய ஸ்ரீமந்நூராயணனேயாயினும்
ஆத்மானம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்
என்று மாநிடவேடம்பூண்ட இவ்வவதாரத்தில் பெரியோரைப்பணிதல் என்கிற பரமதர்மத்தை அநுட்டித்துக்காட்டுதற்கே இராமாவதாரம் என்று தெரிகிறது..
இமௌ ஸ்ம முனிசார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ,ஆஜாஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்? என்று முனிவர் கோமானே நானும் என் தம்பி இலக்குவனும் தேவரீர் ஏவின பணிவிடைகளைச் செய்யக்காத்திருக்கின்றோம்.தாம் திருவுள்ளப்படி கட்டளையிட்டருளலாம் என்று விச்வாமித்ரமுனிவரிடம் வேண்டினான்.
முதன்முதலில் ஒரு பெண்ணான தாடகையை வதம் செய்ததும்,
பரத்வாஜஸ்ய சாஸநாத்
என்று அவர்கட்டளொக்கிணங்கி
அவராராதனையை ஏற்றுக்கொண்டதும்..
இன்னும் பல..
பிதுர்வசன நிர்தேசாத் என்றும் விஸ்வாமித்ர வசனாத் என்றும்அகஸ்த்ய வசனாத் சைவ என்றும் ப்ரமாணங்களினால் பெரியார்களின் நியமனப்படி செய்ததாய்த்தெரிகிறது.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
ஏழாவது வினா...

७. चारित्रेण च को युक्त:

சாரித்ரமாவது நன்னடத்தை
நல்லொழுக்கம்..

அத்தோடு கூடியவன் யார்?

பெரியார்களைப்பணிதல்..
தந்தை தாய் பேணுதல்
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை வழுவறச்செய்தல் தெய்வபக்தியுடைமை
பிறரை நலியாமை
பிறர்பொருள் தாரம் என்றிவற்றைக் கவர நெஞ்சாலும் நினையாமை..
என்னொமிவ்வொழுக்கங்களுக்குப்பெயர் சாரித்ரமென்பது..
இவையெல்லாமே இராமன் பக்கலிலே குறையறக்குடிகொண்டுள்ளது.

தொடர்ச்சி...

சித்திரகூடத்திற்கு வந்துஇராமனைத்திரும்பி வரும்படி பணித்த பெரியோர்சொல்(வசிஷ்டர்,ஜாபாலி முதலியோர்) கேளாமைக்குக்காரணம் பெரியார்களில் தலைவரான தந்தையார்கட்டளையாலேயேயன்றோ!....

தாய்தந்தைப்பேணுதல்:...

"மாத்ருதேவோபவ,பித்ருதேவோபவ" என்னுமிடத்து பித்ருபக்தியினும்மாத்ருபக்தி மிகுந்தவன்..எங்ஙனேயென்னில் பெற்றதாயினும் மாற்றுத்தாயான கைகேயியிடத்து அதிகபக்திவாய்ந்தவன்.
பரதாழ்வானுடைய ப்ரசம்சையை இராமன் செய்யுமளவில் "இப்படி மஹாகுணசாலியான பரதனுக்குக் கொடியபாதகியான கைகேயி எங்ஙனம் மாதாவாய் வாய்த்தாளோ" என்று பரத ப்ரசம்சையைக் கைகேயி நிந்தனையில் கொண்டுமுடிப்பது இலக்குமணனது வழக்கம்.அப்போது இராமன் ந தேம்பா மத்யமா தாத! கர்ஹிதவ்யா கதஞ்சந, தாமேவ இக்ஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு என்று "நீ ஒருவிதத்திலும் கைகேயியை நிந்திக்கலாகாது.இக்ஷ்வாகு குலதிலகனான நம் தம்பி பரதனுடைய கதையை எவ்வளவு சொன்னாலும் அவ்வமுதத்தையே செவியாரப்பருகுவேன்" என்றபடி.

சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை வழுவறசெய்தல்....

இராமனது வர்ணாஸ்ரமதர்ம ப்ராவண்யம்...
இக்ஷ்வாகு வம்சமானதுஆசாரப்ராப்தமான குடி.
விஸ்வாமித்ரமுனிவனின் பின்னே புறப்பட்டுச்சென்ற
இராமனைத்துயில் எழுப்புகையில்
*கௌசல்யா ஸுப்ரஜாராம
பூர்வாஸந்த்யா ப்ரவர்த்ததே,உத்திஷ்ட நரஸார்த்தூல கர்த்தவ்யம் தெய்வமாஹ்நிகம்||
என்று, நித்யகர்மாநுஷ்டானங்களைச் செய்வதில் இராமன் மிகுந்த மனவூக்கங்கொண்டிருந்ததுபற்றியே கர்த்தவ்யம் தெய்வமாஹ்நிகம் என்று சொல்லியெழுப்புகிறார்.
ஸ்நாந ஸந்த்யாவந்தன பஞ்சமஹாயஜ்ஞாதி அநுட்டானங்களுக்கு ஆஹ்நிகமென்று பெயர்.

பகவத்கீதையில் கீதாசார்யனும், ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம்.....வர்த்த ஏவ ச கர்மணி என்றும்
*யதி ஹ்யஹம் ந வர்த்தேய ஜாது கர்மணி அதந்த்ரித:
மம வர்த்மாநுவர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச:*என்றும் கர்மாநுஷ்டானத்தில் தான் சோம்பாது ஊன்றியிருத்தலைச்சொல்லியுள்ளான்.
ஜாதிக்கும் ஆச்ரமத்துக்கும் ஏற்ற கர்மங்களை அநுஷ்டித்துப் போருவதுதான் கர்மாநுஷ்டானமென்னப்படுவது. இராமன் பிராட்டியைப்பிரிந்து பரிதாபத்தோடு உழலுங்காலத்திலும்
ஆச்வாஸிதோ லக்ஷ்மணேன ராமஸ் ஸந்த்யாமுபாஸத,ஸ்மரந் கமலபத்ராக்ஷீம் ஸீதாம் சோகாகுலீக்ருத: என்று காலந்தவறாது அந்திதொழுதலை(ஸந்த்யாவந்தனத்தை)ச்செய்துவந்தனனாக வால்மீகிமுனிவர் தெரிவிக்கிறார்.
*அக்னிம் ஸம்சமயது ஆர்ய:*என்று பரதனுக்கு ஓமப்புகை மூலம் இராமன் இருக்குமிடம்தெரியவிடாதபடி அணைத்துவிடச்சொல்கிறான் இலக்குவன்.ஆக,
*ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:
அர்த்திதோ மானுஷேலோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந:* என்ற வான்மீகத்தின்படி விஷ்ணுவேயாயினும் மானிட அவதாரகாலத்தில் ஜாதி ஆச்ரம ஆசாரங்களை அநுஷ்டித்தேயாகவேணும் என்றபடி..

தெய்வபக்தி;-...

ஸ்ரீமந்நாராயணனான பரதெய்வமே இராமனாக அவதரித்தாலும்
ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத் என்று லோகஸங்க்ரஹத்தையுத்தேசித்து பட்டாபிஷேகத்திற்கு உறுப்பாக ஸ்ரீராமனும் ஸீதையும் த்யாயந் நாராயணம் தேவம் என்று தமக்கு ஆராத்யதேவதையான ஸ்ரீரங்கநாதனையேவணங்கியதாகச்சொல்லிற்று.

பிறரை நலியாமை:-..

விநாசாய ச துஷ்க்ருதாம்
மண்ணின்பாரம் நீக்குதற்கே என்று துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கென்றே திருவவதாரம் செய்தருளின பெருமாள் பிறரை நலிவது குற்றத்தின்பாற்படாது.காரணமின்றிப் பரஹிம்சை செய்வதே ப்ரபல தோஷமாகக்கருதப்படுகிறது. வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித: என்று அயோத்யாவாசிகள் ஓருமிடறாகக்கொண்டாடினபடி பிறர்துயருறக்கண்டு ஐயோவென்றிரங்குமியல்வினனான இராமபிரானுக்குபிறரைத்துயருறச்செய்வதாகிற குற்றம் வந்துபுக ப்ரஸக்தியேயில்லை.
இனி
பிறர் பொருள்,தாரம் என்றிவற்றை நெஞ்சாலும் நினையாமை இராமனிடத்து விவரிக்கவும் வேணுமோ??
உலகில் பொய்சொல்லுதல் பிறர் நலிகை,பிறர்பெண்டிரைக்காதலிக்கையென்னும் இம்மூன்று குற்றங்களுக்குத் தப்பிப்பிழைக்கை அரிதென்றும்,பொய்சொல்கையும்,பிறர்பெண்டிரைக்காதலிக்கையும் இராமனிடம் சிறிதும் கிடையாதென்பதை பிராட்டி தம்திருவாக்கினால்இராமனுடைய ஜிதேந்த்ரியத்வத்தை நாலைந்து ஸ்லோகங்களினால் தெரிவிக்கிறாள்.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
எட்டாவது வினா...

८. सर्वभूतेषु को हित:

ப்ரியம்,ஹிதம் என்னுமிவை இரண்டில்
தற்காலத்தில் இனிமையாயிருப்பது ப்ரியமென்றும்
தற்காலத்தில் இனிதாக அல்லாமல் வெறுக்கத்தக்தாயினும் பிற்காலத்தில் நன்மைபயக்கக்கூடியதாயிருப்பதெதுவோ அதுவே ஹிதமென்னப்படும்.
உலகில் தாயார் ப்ரியபரையாயும் தந்தை ஹிதபரராயும் இருப்பர்.மாதா பிதா ப்ராதா நிவாஸச்சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:
என்று உபநிடதங்களும்...
ஆக,எம்பெருமான் நமக்குத்
தாயாய் ப்ரியத்தையும் தந்தையாய் ஹிதத்தையும் செய்யக்கடவன்.
இவ்விடத்தில் ப்ரியங்களைச்செய்தல்பற்றி அல்லாமல் ஹிதங்களைச்செய்வதுபற்றியே ஸர்வபூதேஷு கோ ஹித: என்பது வினா...

குலசேகராழ்வாரும்
தான் நோக்காத் தெத்துயரஞ்செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கிவாழும் குடிபோன்றிருந்தேனே என்றும்
வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால் மாளாதகாதல் நோயாளன்போல் என்றும்
ஸ்ரீஸூக்திகள்.
அரசன் குற்றவாளர்களான குடிமக்களுக்குத் தண்டனைகள் புரிவது ஹிதபுத்தியினாலே.
மருத்துவன் நோய்ளிகளுக்குப் பலவகைக் கஷ்டங்களையிழைத்து சிகித்சை செய்வதும் ஹிதபுத்தியினாலேயே.இப்படி பகவானும் பக்தர்களுக்குக் கஷ்டங்களையும் துயரங்களையும் தருவது ஹிதபுத்தியினாலே யென்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
ஹரிர் துக்காதி பக்தேப்யோ ஹிதபுத்த்யா கரோதிவை, சஸ்த்ரக்ஷாராக்நி கர்மாணி ஹிதபுத்த்யாயதாபிஷக்
என்று ஸ்லோகம்.
மருத்துவன் போல் பகவானும் பக்தர்களுக்கு ஹிதபுத்தியினாலேயே துக்கங்களை விளைவிக்கிறான்.மழைக்காலம் கழிந்தவளவிலும் முன்புசொன்னபடி ஸுக்ரீவன் சேனைகளுடன் வந்திலனென்று திருவுள்ளத்தில் மிக்கசீற்றங்கொண்ட இராமபிரான் இளையோனையழைத்துக்கூறும் வார்த்தைகள்...
லக்ஷ்மணா! ஸுக்ரீவன் நம்மால் விரோதி தொலையப்பெற்றுத் தன்னுடைய வாக்குறுதியை அடியோடுமறந்து மன்மதவிகாரங்களினால் காலங்கழிக்கின்றனன்.நன்றிமறந்த காதகனான ஸுக்ரீவனிடம் " நன்றியறிவு கெட்டவன் மரணாந்தரம் அவன் சரீரத்தை மாம்சந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா.மேலும் மராமரங்களையெய்து வாலியைக்கொன்றதனால் என்பராக்ரமம் அறிந்தும் அஞ்சாதிருக்கின்றனன்.வாலிசென்றவழி அவனுக்குந்திறந்திருக்கிறதென்பதைக்கூறுவாய்.அவனைச்சுற்றத்தோடும் யமபுரமனுப்ப சித்தமாயிருத்தலைத்தெரிவிப்பாயாக" என்றுகூறுகிறான்.
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
ஒன்பதாவது வினா...

९. क: विद्वान् ?
எல்லாம் அறிந்தவன் யாவன்?

*வேத வேதாங்க தத்வஜ்ஞ: தநுர்வேதேச நிஷ்டித:,|
ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் ப்ரதிபாநவாந்||
என்று நாரதர், வேத வேதாந்தங்கள் முதலிய அனைத்து வித்யைகளையும் அறிந்தவன் இராமன் என்று கூறுகிறார்.
பகவதம்சமாகையாலே ஸர்வஜ்ஞானாயிருக்கச்செய்தேயும் வசிஷ்டர்பக்கலிலே சிஷ்யவ்ருத்தி செய்து இளமையிலேயே ஸகலசாஸ்த்ரங்களையறிந்தவனாகிறான்.
வேதவேத்யே பரே பும்ஸிஜாதே தசரதாத்மஜே என்று வேதவேத்யனாகவே சொல்லும் ஸ்ரீராமாயணத்தனியன்.

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்கிற புருஷஸூக்தத்தைக்கொண்டே
அஹம்வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம்,வசிஷ்டோபிமஹாதேஜாயேசேமே தபஸி ஸ்திதா:
என்று விச்வாமித்திரரும்......
இப்படி வேதமுதற்பொருளாயிருப்பவன் ஸகலசாஸ்த்ரங்களும் தானே கற்பனோ என்றால்

அயோத்யா காண்டத்தில் ஸஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்யவதார்த்திபி:,அர்த்திதோ மாநுஷேலோகே ஜஜ்ஞே விஷ்ணும் ஸநாதந: என்று தேவர்களிரக்க மானிடவுலகில் வந்து பிறந்தான் என்பதைத் தானும்
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ,ராமம் தசரதாத்மஜம் என்று மறுமொழி கூறினான்.
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப் பார்த்து வினவிய 16 வினாக்களில்
பத்தாவது வினா...

१०. क: समर्थ:

10.ஸமர்த்தனாயிருப்பவன் யாவன்?

இராமன் வித்வான் என்று சொல்லப்பட்டது.
அஸமர்த்தர்களாயிருப்பவர்கள் வித்வானாக இருக்கமுடியாது.
ஆனால் வித்வான்கள் யாவரும் ஸமர்த்தர்கள் என்று கூற இயலாது.
இராமனின் சிலசெயல்களை அஸமர்த்தனாக எண்ணக்கூடும்.
ஸுக்ரீவ மஹாராஜனோடு நட்புக்கொண்டு வாலியை வதைத்ததும், அவனை ராவணஸம்ஹாரத்திற்குத்துணையாகக்கொண்டதும்.
வாலியோ ராவணனைத்தன் வாலினால் சுற்றிக் கக்ஷத்தில் இறுக்கிக்கொண்டு கடலோதங்கள் திரிந்து கிட்கிந்தையில் வந்து உதறினவீரன். இவனைத்துணைகொண்டால் ராவணனை அவலீலையாக வெல்லலாம்.அதைவிடுத்து அவனிடம் அஞ்சியொளிந்திருந்த ஸுக்ரீவனைத் துணைகொண்டது அஸமர்த்தத்தனம் என்று எண்ணக்கூடும்.
உண்மையில் ராவணன் ஆயிரந்தோள்வீரனான கார்த்தவீர்யனிடத்தும் மூவெழுகால் அரசுகளைகட்ட என்னும்படியான பரசுராமனிடத்தும் பங்கப்பட்டவன். அப்பரசுராமனும் இராமனிடத்தே பங்கப்பட்டவனேயன்றோ!
மேலும் பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தானை யென்று ஆண்டாளும் சதுரமாமதிள்புடைசூழ் இலங்கலக்கிறைவன் தலைபத்துதிரவோட்டி ஓர்வெங்கணையுய்த்தவன் என்று திருப்பாணாழ்வாரும் பணித்தபடி அவலீலையாய்ச் செய்யவல்ல ராமன் ஸுக்ரீவனைத்துணைகொண்டானென்பது அஸம்பாவிதமே. தீனதயாளு தீனபந்து என்றெல்லாம் முறையிடப்படும் பெருங்குணத்தை வெளியிடவேயாம். பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே! என்று இளையவர்கள் (இளைத்தவர்கள்) வலிமையற்றவர்கட்கு அருள்புரிவதே இயல்பாய் என்றபடி.
வாலியை வதைத்ததும் விநாசாய ச துஷ்க்ருதாம்
என்றதற்கிணங்க...
அடுத்து.....
உலகில் சரணாகதி செய்வதென்பது அஸமர்த்தன் செய்கையேயன்றி ஸமர்த்தன் செய்கையன்று.
நிசாஸ் திஸ்ர: அதிசக்ரமு:
என்ற வால்மீகி கூற்றுப்படி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தபின்பும் கடலரசன் முகங்காட்டாதே யிருக்க
க்ரோதமாஹாரயத் தீவ்ரம் என்று சீற்றத்தை வரவழைத்துக்கொண்ட ராமன் இளையோனை வில்லையும் கொடிய அம்புகளையுங் கொண்டுவருமாறு கட்டளையிடுங்கால்
அஸமர்த்தம் விஜாநாதி மாமயம் மகராலய: இக்கடல் தன்னையொரு மீன்படுகுட்டமாக நினையாதே என்னை அஸமர்த்தனாக நினைத்துவிட்டது என்கிறார்.அஸமர்த்தனாகச் சரணாகதி செய்துவிட்டு இவ்வாறு சொல்வதென்!
பெருமாள் கடற்கரை வந்துசேர்ந்த அனந்தரம் கடலைக்கடப்பது பற்றிய யோஜனையில் விபீஷணபரிக்ரஹம் ஆனபின்பு அவ்விசாரத்தை விபீஷணனிடமே கேட்பதென்றுகேட்க,அவனும் ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி என்று பெருமாள் சரணம் புகவேண்டுமென்றான்.
ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே என்று இராமனை ஸர்வலோகசரண்யன் என்று அறிந்தபின்பும்
ஸமுத்ர சரணாகதி செய்யச்சொன்னது எங்ஙனேயென்னில் தனக்குச் சரணாகதியே பேறுபெறுவித்ததாகக்கொண்டு உலகில் எந்தபேற்றுக்கும் இதுதான் உயர்ந்த (மருந்து) உபாயம் என்று துணிந்து ஸர்வலோக சரண்யனான ராகவனுக்கு இது தகாது என்பதை மறந்து சரணாகதி செய்வதே நலமென்று கூறினன்.பெருமாளும் அதை மறுக்காமல் *அஸமர்த்தன் செய்யவேண்டிய சரணாகதியை ஸமர்த்தன் செய்தால் அதன்முடிவு என்னாகுமென்பதை உலகம் தெரிந்துகொள்ளட்டும் என்கிற திருவுள்ளத்தினாலேயே தாம் ஏற்றுக்கொண்டுசெய்து முடிவையுங்காட்டுகிறார்.
ஸ்ரீமந்நாராயணனின் ஸாமர்த்யம்:....
ஒருவன் நெடுங்காலம் நாஸ்திகனாயிருந்தான். கடவுளே கிடையாதென்றும் அவையவை இயல்வாகத் தோன்றுகின்றனவென்று உறுதிகொண்டிருந்தான். பின்பு பலசம்பவங்களையுற்று நோக்கி *இப்ரபஞ்சங்களுக்கெல்ஸாம் கர்த்தாவாக முழுமுதற்கடவுளென்று ஒருவனில்லாமலிருக்கமுடியாதுஎன்று துணிந்து ப்ரபஞ்ச ரீதிகளைக்காணப் புறப்பட்டான். வழியில் சிறியபூசணிக்கொடியில் தாங்கமுடியாத மிகப்பெரிய காய்கள் காய்ப்பதையும் மிகப்பெரிய ஆலமரத்தில் மிகமிகச் சிறுகாய்கள் காய்ப்பதையுங்கண்டு முன்பு நாம் நிச்சயித்த முழுமுதற்கடவுள் ஸமர்த்தனன்றிக்கே அஸமர்த்தன்போலும்! ஸமர்த்தனென்றால் சிறியகொடியில் பெரியகாய்களையும் பெரியமரத்தில் சிறியகாய்களையும் படைத்திருப்பனா? என்று நினைத்துக்கொண்டான். அப்போது மிகக்கொடிய வெய்யிலாக இருந்தபடியால் ஆலமரத்தின் நிழலில் நன்றாக உறங்கினான். உறங்கியெழுந்ததும் தன்மார்பிலும் தலையிலும் பல ஆலங்காய்கள் விழுந்திருப்பதைக்கண்டான். கண்டதும் அவனுக்குப் பகவானிடத்தில் அளவுகடந்தபக்தி விளைந்தது. ஐயோ! மிகப்பெரிய ஆலமரத்திற்கு மிகச்சிறிய காய்களைப்படைத்தானேயென்று அவனை அஸமர்த்தனாக நினைத்தோமே! இவை பெரியகாய்களாயிருந்தால் நம்தலையும் மார்பும் உடைந்துபோயிருக்குமே ! இம்மரத்தின் நிழலில் உலகமெல்லாம் ஒதுங்குமென்றும் ஒருவர்க்கும் துன்பம் உண்டாகலாகாதென்றும் திருவுள்ளங்கொண்டன்றோ அப்பெருமான் இப்பெருமரத்திற்குச் சிறுகாய்களைப்படைத்தான்! அப்பெருமானுடைய ஆலோசனையும் ஸாமர்த்யமும் யாருக்குண்டு... பூசணிக்கொடியில் பெரியகாய்களைப் படைத்ததும் குறையற்றதே!
ஸர்வம்ஸஹாஎன்னப்படுகிறபூமியே யன்றோ அக்காய்களைத் தாங்குகிறது.கொடிக்கு யாதும் சிரமமில்லையே.
ஆகவே கண்ணுக்குத் தெரியாத
அப்பகவான் மிகவுயர்ந்த ஸமர்த்தனென்பதில் என்ன தடை! என்று ஆனந்தமும் பக்தியும் நிறைந்து வீடு திரும்பினான்.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பதினோராவது வினா...

११. एकप्रियदर्शन: क:

எவ்வளவுகாலம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெகுட்டாமல் இனிமையே செல்லும்படியான பார்வையையுடையவன் யாவன்?
சிறந்த அழகுடையவன் யாவன்? என்றவாறு.
இராமபிரானின் வடிவழகு *எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழியூழிதொறும்
அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே* என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி ஊழிதோறூழியோவாது பார்த்துக்கொண்டிருந்தாலும் அபூர்வக்காட்சியாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட அழகு குடிகொண்டிருந்ததுகணாடே வஸிஷ்டபகவான் ராமன் என்று திருநாமம் சாத்தினன். ரமயதி இதி ராம: ரமயதி என்கிற வாயுதூபதாதியினால் தேறும் வடசொல். தன்னழகைக்காட்டி ஓவாது களிக்கச்செய்பவன்.
பும்சாம்த்ருஷ்டிசித்தெபஹாரிணம் இராமனுக்கு யுவராஜபட்டாபிஷேகம் நிச்சயித்தவளவிலே இராமனைத் தன்னிடம் வரவழைத்தான்.வந்துகொண்டிருகாகிற ராமனை மன்னவன் தூரத்திலிருந்து பார்க்கும்போது அவனுள்ளம் போரித்தபடியை வான்மீகி பேசுகிறார்.
*சர்த்ரகாந்தாநநம் ராமம் அதீவ ப்ரியதர்சனம்
ரூபௌதெரூயகுணை: பும்சாம் த்ருஷ்டிசித்தாபஹாணம்*
ந ததர்ப்ப ஸமாயாந்தம் பச்யமாநோ நராதிப:*
என்றுதண்டாபூபிகா ந்யாயத்தாலே ஆண்களையே சித்தமபகரிக்கச்செய்யுமென்றால் பெண்களைச்சொல்லவும் வேணுமோ!..என்று ராமனுடைய அழகில் ஈடுபடாதாரில்லை என்கிறார்.கம்பனும் கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந்தோளினாய் என்கிறார்.
தசரத மன்னவரிடம் ராமலக்ஷ்மணர்களைப் பெற்றுக்கொண்டு போகையில் சூர்யன் அஸ்தமித்தவாறே பிள்ளைகள் உறங்கிப்போயினர்.
பிறகு பின்மாலையில் இராமனை யெழுப்புகின்ற முனிவர் கௌசல்யா ஸுப்ரஜாராமா! என்கிறார்.இதனை கௌஸல்யா ஸுப்ரஜா என்று பிரித்துப்பொருள்கொள்கையில் கௌஸல்யாதேவியானவள் நல்லபிள்ளைபெற்றவள் என்றாகிறது. ஒரேபதமாகக்கொண்டால் கௌஸல்யாதேவியின் நல்லபுதல்வனான ராமனே!என்றாகிறது. இராமா!பொழுதுவிடிந்தது எழுந்திரு என்றுசொல்லவேண்டிய சந்தர்ப்பத்தில் கௌஸல்யையைக்கொண்டாடுவது எதற்காகவென்றால்....
முனிவன் உண்ணப்புக்கு வாயைமறப்பாரைப்போலே தான் அதிணரிதாத காரியத்தை மறந்து,பெற்றவயிற்றுக்குப் பட்டங்கட்டுகிறவனாய் ஒரு திருவாட்டி பிள்ளைபெற்றபடி என்னே!* என்று கௌஸல்யையைக்கொண்டாடுகிறான். வடிவழகு படுத்தும் பாடு! என்று...
இராமன் மிதிலாபுரி திருவீதி வலம்வருங்காலத்தில் அவனைக்கண்ட மாதர்களின் தன்மையை
*தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற்கமலமன்ன
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாருமஃதே
வாளாகொண்டகண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார்,
ஊழ்கண்டசமயத் தன்னானுருவுகண்டாரை யொத்தார்*
என்றுகூறுகின்றார்.
இராமனது ஓரோரவயத்தின் அழகைக் கண்டவர்கள் மற்றோரவயத்தில் கண்செலுத்தமாட்டாதவர்களாயினர் என்றுசொன்னவிதனால் திவ்யமங்களவிக்ரஹ சௌந்தர்யம் தெரிவிக்கப்பட்டது.
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பன்னிரண்டாவது வினா..

१२. आत्मवान् क: ?
12. ஆத்மாவையுடையவன்
யாவன்?
ஆத்மா என்பதற்கு ஐந்து பொருள்கள் என்று வடமொழி நிகண்டு..
ஆத்மா ஜீவே, த்ருதௌ, தேஹே, ஸ்வபாவே, பரமாத்மநி என்று ஜீவாத்மா,தைர்யம், உடல், இயல்பு, பரமாத்மா என்பன.
ஜீவாத்மாக்களையுடையவன் என்று முதற்பொருள்.
இராமன் பரமாத்வாயிருந்துகொண்டு ஸகலஜீவாத்மாக்களையும் அடிமையாகக்கொண்டவன் என்றபடி.

அதன்றிக்கே ஜீவாத்மாவாயிருக்குந்தன்மையையுடையவன் என்றுமாம்.ஆத்மவான் என்றது ஆத்மத்வவான் என்றபடி.
ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே இராமனாக அவதரித்தானென்கிற பரமார்த்தமிருக்கச்செய்தேயும் * பிதரம் ரோசயாமாச* என்றும் ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் என்றும் சொல்லுகிறபடியே மநுஷ்யயோநியிலே பிறந்து தசரதாத்மஜனாக ஒரு ஜீவாத்மபாவத்தைத் தன்பால் ஆவாஹனம் செய்துகொண்டானிறே. ஸகலாத்மாக்களுக்கும் சேஷியாய் அதாவது அனைவரும் தனக்குச் செய்யும் கைங்கர்யங்களைக் கொள்ளுமவனாய் ஆனதுபற்றியே பரமாத்மாவாயிருப்பவனான ஸர்வேஸ்வரன் இராமனாய்த்தோன்றி, தான் கைங்கர்யஞ்செய்யும் ஜீவாத்மாவாயினன்.
விச்வாமித்ரன் ஒரு வேள்வியைத்தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்ற தசரதமன்னவனிடம் இராமனைத்தருகவென்று இரந்தான். அரக்கர்களோடு போய்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான இராமனை அனுப்பமாட்டேன் என்ற தசரதன் வார்த்தைக்கு முனிவன் வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதமோதின மஹாபுருஷன் இவன் என்று நானும் மற்றெல்லா நற்றவமுனிவர்களும் அறிவர் என்று அழைத்துச்சென்றான்.
அன்றியும் முனிவர் ஏதோவொரு காரணத்திற்காகவே,நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச்செய்வதற்கே என்றறிந்த இராமன் *இமௌ ஸ்ம முநிஸார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ/ ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்// என்று நானும் தம்பி லக்ஷ்மணனும் உமக்குப்பணிவிடை செய்ய வந்தவர்கள்.உமது அருகிலேயே இருந்து நீர்செய்யும் எவ்வித கட்டளையும் ஏற்று செய்வோம் என்றனன். கைங்கர்யம் செய்வதபன்பது ஜீவாத்மாவின் தன்மையாதலால் ஜீவாத்மத்வத்தையும் இராமன் உடையவன் என்றாகிறது.
ஆத்மாவென்பதற்குத் தைர்யம் என்றும் பொருள்.
விபீஷணாழ்வான் இராவணனால் திரஸ்கரிக்கப்பட்டு த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: என்று வந்துசேர்ந்தபோது ஸுக்ரீவன் மற்றும் வானரவீரர்கள் பலரும் இவன் இராவணனது தம்பி.இவ்விடத்து உளவறிந்துகொண்டுபோக வந்துளன் என்று லக்ஷ்மணனும் சேர்ந்து திரஸ்கரிக்கையில் *பிசாசாந் தாநவாந் யக்ஷாந் ப்ருதிவ்யாஞ்சைவ ராக்ஷஸாந்/அங்குல்யக்ரேண தாந் ஹந்யாம் இச்சந் ஹரிகணேஸ்வர// ஸுக்ரீவ!
இந்தவொரு ராக்ஷஸனல்ல;பூமண்டலம் முழுவதிலுமுள்ள ஸகலராக்ஷஸர்களும் ஒன்றுகூடி மற்றுமுள்ள பிசாச தானவ யக்ஷாதிகளையும் துணைகூட்டிக்கொண்டு அசுர ராக்ஷஸப்பூண்டுகளத்தனையும் ஒன்றுசேர்ந்து எதிரிட்டு வந்தாலும் எனக்கு வில்வேண்டா அம்புகள்வேண்டா கையும் வேண்டா ஒருசுண்டுவிரல் நுனியினால் அந்த சத்ருவர்க்கமனைத்தலயொம் அவலீலையாக இச்சா (ஸங்கல்பம்)மாத்ரத்தினூல் தொலைத்திடுவேன் எனாறனன்.இத்தகைய தைர்யத்துடன் நின்று சரணாகத பரித்ராணத்தைச்செய்துமுடித்தான்.(ஆத்மவான்)
3ஆவது ஆத்மாவுக்குத் தேஹம் என்று பொருள்.

அவனை வதஞ்செய்யவேண்டிய குற்றமிருந்துதான் செய்தாரெனினும்அவனை நேரில் விசாரித்துத்தண்டிக்கவில்லை.கீழே கபந்தவதம் செய்தபோது அவன் விமானத்திலிருந்துகொண்டு ஸுக்ரீவனுடைய நன்மையையும் வாலியினுடைய தீமையையும் சொல்லியிருக்கிறான். அவன் பொய்சொல்லியிருந்தானாகில் அவனை விமானம் தாங்கிநிற்காது.அதனால் ஸுக்ரீவனிடத்தே சிறந்தமதிப்பு வைத்து அவனைப்பரமபக்தனாகத்திருவுள்ளம்பற்றி அவனுக்குப்பரதந்த்ரனாய் அவன்சொற்படி(அவனுகப்புக்காக) வாலிவதம் செய்தார் என்று ஆசார்யர்கள்....

ஆத்மாவிற்கு 5வது பொருள் பரமாத்மா...
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் என்று தானேசொன்னபடி ஒருமனுஷ்யனாய்ப்பிறக்கச்செய்தேயும் பரமாத்வாயிருக்குந்தன்மையிலும் குறைவற்றவன்.இராமனுடைய உண்மைத்தன்மையை மறைத்து மறைத்துப் பேசுகிற வால்மீகியும் *ஸஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:/
அர்த்திதோ மாநுஷேலோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந://*
தேவரிரக்க வந்து பிறந்தானென்று..
இவ்விராமபிரானே கண்ணபிரானாகத்திருவவதரித்து கீதாசாஸ்த்ரத்தில் அவதாரரஹஸ்யத்தில் அஜோபி ஸந் அவ்யயாத்மா பூதாநா மீச்வரோபி ஸந்,ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா என்கிறான்.பரமாத்மாவாயிருக்குந்தன்மையையும் விடாமலே வந்துபிறப்பதாகக்கூறுகிறான்.
இராமனாக, * மயா த்வம் ஸமநுஞ்ஜாதோ கச்சலோகாந் அநுத்தமாந்* என்றுசொல்லி ஜடாயுமஹாராஜர்க்கு மோக்ஷம்கொடுத்திருக்கிறார். மோக்ஷப்ரதத்வமென்பது பகவானுக்கே அஸாதாரணமாகையால் இதில் பரமாத்வத்தன்மை தெரியவருகிறது. ஸத்யேந லோகாந் ஜயதி ஸத்யவாக்யத்தின் மஹிமையாலேயாயினும்
இரெமனுடைய மநுஷ்யபாவனையோடு பொருந்தவைப்பதற்காகவேயாதலால் பரமாத்மபாவம் பொலிந்ததென்னத்தட்டில்லை.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பதினான்காவது வினா..

१३. को जितक्रोद:
13. கோபத்தை வென்றவன் யாவன்?
என்றது
१६. कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे
16. கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே

மேற்கூறிய பதின்மூன்றாம் வினாவையும் பதினாறாம் வினாவையும் பொருந்தவைத்து ஒருங்கே விவரிக்கப்படவேண்டியதாகையாலே இப்போது
பதினான்காம் வினா விவரிக்கப்படுகிறது....

१४. क: ध्युतिमान् ?
14. ஒளியையுடையவன்
யாவன்?
த்யுதியாவது ஒளி.
இராமனை சூர்யனாயும் ரத்னமாயும் வழங்கக்காண்கிறோம்.
ஸ்ரீராமாயணத்திலே (ஸுந்தரகாண்டம்) ராம திவாகர: என்றுள்ளதால் ராமன் ஸூர்யனென்பது ஸ்ரீராமாயணஸித்தமாயிற்று.இந்த ராமஸூர்யனுக்கும் ராமரத்னத்துக்கும் பெருமையை விளைக்கின்ற ஒளி எதுவென்னில் ஸீதாப்பிராட்டியே என்று ஸ்ரீராமாயணமே நன்கு காட்டித்தருகின்றது.
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா சூர்யனுக்கு ஒளிபோலே இராமனுக்கு நான் என்றுஸீதையின் வாக்கு.
இராமனும் *அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா*ப்ரபாவனான சூர்யனும் ப்ரபையும் விட்டுப்பிரியாதிருப்பதுபோல் இவ்விரண்டு தத்துவங்களும்பரஸ்பரம் விட்டுப்பிரியாத தத்துவங்கள் என்றுணரவேண்டும்.
பிராட்டியின் நித்யாநபாயித்வம்

திருமந்த்ரார்த்தத்திலே அவன் மார்பைவிட்டுப்பிரியில் இவ்வக்ஷரம் விட்டுப்பிரிவது என்று காணலாம். நித்யாநபாயிநீ என்னப்படுகிறாள் பிராட்டி.
தேவேந்த்ரனுடைய வேண்டுகோளுக்கிணங்கி மாவலியிடத்து இரப்பாளனாய் ப்ரம்மசாரியாய்ச் சென்றானென்று ப்ரஸித்தமேயாகிலும் க்ருஷ்ணாஜிநேந ஸம்வ்ருண்வந் ச்ரியம் வக்ஷஸ்தலஸ்திதாம் என்று புராண வசனம்.ஆனால் இராமாயணத்தில் ஆங்காங்கே பிராட்டி சேர்வதும் பிரிவதுமாயிருந்தாலும்
* ந தே வாக் அந்ருதா காவ்யே காசித் அத்ர பவிஷ்யதி* இதில் பொய்யானபேச்சு ஒன்றுகூட இல்லையென்பது தேவதா ப்ரஸாதம். ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் என்றுமநுஷ்யபாவனைக்குச்சேர நடந்துகொண்டபடி..
ஸூர்யன் ப்ரபையைவிட்டுப்பிரியாதாப்போலே எம்பெருமானும் நித்யஸித்தமான லக்ஷ்மீஸம்பந்தத்தையுடையனாயிருப்பன் என்றதாயிற்று.
ரத்னமாவது ஒளியினாலேயே மதிப்புபெறுமாபோலே எம்பெருமானும் பிராட்டியினாலேயே மதிப்புபெறுகிறான்.

எம்பெருமானுக்கு ஒளியின் ஸ்தானத்திலே திருக்குணங்களை வைத்து நிர்வஹிப்பது....
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரசதகத்தில் ஜ்ஞாநைச்வரீசகநவீர்ய பலார்ச்சிஷஸ் த்வாம் ரங்கேச! பாஸ இவ ரத்நமநர்க்கயந்தி என்று ஒளியானது ரத்நத்தை விலைபெறுத்துமாபோலே ரங்கநாதா! உனது திருக்கல்யாணகுணங்கள் உன்னை விலைபெறுத்துகின்றன. நாரதமுனிவரை நோக்கி வான்மீகி முனிவர் செய்யும் பதினாறு கேள்விகளும் திருக்குணங்களைப்பற்றியவையேயாயினும் வ்யக்தமாகச்சொன்னகுணங்கள் போக மிகுந்தகுணங்கள் யாவும் த்யுதிமாந் க: என்ற இந்தவினாவிலேயடங்கும்.திருக்குணங்களை விலைசெலுத்துவதற்காகவே திருவவதாரங்கள் செய்தனன் என்பது பரமார்த்தமாயாகிலும் ஸ்ரீராமாயணம் முழுவதும் திருக்குணங்களே ஜீவநாடியாகும்.பிராட்டியின் குணங்களும் சேர்ந்தே த்யுதிசப்தார்த்தம்.லக்ஷ்மீஸம்பந்தமடியாகவே திருக்குணங்கள் தலையெடுப்பனவாதலால்இரண்டுமே முமூக்ஷுப்படியில் அருளிச்செய்திருக்கிறார் பிள்ளையுலகாரியன்.
ஸ்ரீராமாயணத்தில் இலக்குவன் பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: என்று இளமைமுதற்கொண்டே இராமனிடத்தில் மிகுந்த அன்புபூண்டவன்.(ஒரே தொட்டிலில் அருகில் அமர்த்தியது).
விச்வாமித்ரரோடு செல்லுங்கால் ஓரிடத்தில் இராமனைத்துயிலெழுப்புகையில் கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் என்று அவனைநோக்கிக்கருமங்கள் செய்யப்படவிருக்க, அவனைக்கருமங்கள் செய்யத்துயிலெழுப்புவது...
பகவத்கீதையில்(3:22) *நமே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன, நாநவாப்த மவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி// என்றுதான் நித்யகர்மமொன்றும் செய்யவேண்டியதில்லையாயினும் உக்திமாத்ரமன்றிக்கே உண்மையிலனுட்டிப்பதேயென்று ஆசரணையில் காட்டுகிறான் கண்ணன்.
யுத்தகாண்டத்தில்பிராட்டியைப்பிரிந்த வருத்தத்திலும் ஆச்வாஸிதோ லக்ஷ்மணேன ராமஸ் ஸந்த்யாமுபாஸயத இளையபெருமாளால் தேறுதலடைந்து ஸந்தியாவந்தனம் செய்தானென்று.....
கிங்கரௌ ஸமுபஸ்திதௌ என்று விச்வாமித்ரரிடம் நானும் என் தம்பியும் நீர் இட்டவேலைகளைப் பணிவுடன் செய்வதற்கே வந்துளோம் என்று பரத்வத்தை மறைத்து,மஹாராஜகுமாரனாயுமிருந்துவைத்து கைகட்டிநிற்குங்குணம்...
கூரணிந்தவேல்வலவன் குகனொடும் சீரணிந்த தோழமை என்று பெரியாழ்வாரும் ஏழைஏதலன் கீழ்மகனென்னாதிரங்கி * மாழைமான் மடநோக்கி உன்தோழி,உம்பியெம்பியென்றிலை,உகந்து தோழன் நீயெனக்கிங்கொழி* யென்று திருமங்கைமன்னனும்
*குகனைநோக்குங்கால் இழிவானவேடச்சாதி,பகுத்தறிவில்லாத அவிவேகியென்றுபாராமல் அவனுடன் கலந்துபரிமாறின சீலகுணம்...
ஆரணியகாண்டத்தில் முனிவர்கள்பலர் வந்திருக்க அவர்களைப்பார்த்துக் கைகூப்பி * ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா,யதீத்ருசைரஹம் விப்ரைருபஸ்தேயைருபஸ்தித:* என்று அவர்களிருப்பிடங்களுக்குத் தான் வந்து யோகக்ஷேமங்களை விசாரிக்கவேண்டியிருக்க ,தாம் வரும்படி அபசாரம் நேர்ந்துவிட்டதே! என்றான்.
கிட்கிந்தா காண்டத்தில்
ஸுக்ரீவம் சரணம் கத: என்று இராவணனைவதம் செய்ய ஸுக்ரீவனைத்துணைகொண்டானென்று...வாலியிடத்தில் வாசாமகோசரமான பங்கமடைந்த இராவணனை வதஞ்செய்வதற்கு, அந்தவாலியை அவலீலையாகக்கொல்லுமாற்றல்படைத்த இராமன்...
இளையவர்கட்கருளுடையாய் இராகவனே! என்று குலசேகரர் அருளிச்செய்தபடி தன்னுடைய தீனதயாளுத்வத்தை விளங்கச்செய்யவே தன்பெருமையைக்காட்டாது ஸுக்ரீவம் சரணம் கத: என்று பணிவுகாட்டியது குணங்களில் எல்லையானதன்றோ!!
இப்படிப்பட்ட திருக்குணங்களினால் பெருமைபெற்றவன் என்பதே த்யுதிமாந் என்றதற்கு உள்ளுறையாகும்.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 
ஸ்ரீராமாயணத்தில் வான்மீகி நாரத ஸம்வாதம்

ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பதினைந்தாவது வினா..

१५. क: अनसूयक:

15. அஸூயையில்லாதவன்
யார்?
உலகில் மனிதருடைய தன்மைகள்::
குணங்களைக் குணமாகவே கொள்வது;
குணங்களையும் குற்றமாகக்கொள்வது:
(பலருளர்).
குற்றங்களையும் குணமாகக்கொள்வது மிகச்சிறந்த குணவாளர் இயல்பு.
குற்றங்களைக் குற்றமாகவும் குணங்களைக் குணமாகவும் கொள்வதுகூட ஒருசிறந்தகுணமென்று சொல்லலாம். ஏனெனில் குணங்களையும் குற்றமாகவே கொள்ளுமியல்வினர் மலிந்த இந்நிலவுலகினில் உள்ளதை உள்ளபடி கொள்வாருளரேல் வியக்கவேண்டியதே!! அப்படிப்பட்டவர் மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித் என்றுகீதையில் சொன்னபடி பல்லாயிரவரில் ஒருவரே தேறக்கூடும். உலகில் ஸகலவிதமான வியாதிகளுக்கும் மருந்துண்டு.அஸூயையென்னும் வியாதிக்கு மருந்தே கிடையாது.
வேதாந்தாச்சார்யரும் ஸங்கல்பசூர்யோதயத்தில் மயிதத்தாவதாநாயாம் , நிரவதிகுணக்ராமே என்று அஸூயாதேவி சோர்வு சோம்பலால் உறங்கிப்போனால் பகவான் குணசாலியென்று பேர்பெறமுடியும்.அந்த அஸூயாதேவி கண்ணுறங்காதிருக்குமளவும் பகவானாலும் குற்றமற்றவனென்று பேர் பெறமுடியாது.
அடுத்தஸ்லோகத்தில்..
தோஷமென்பது சிறிதுமில்லாதவனும் எல்லைகடந்த திருக்குணங்களுக்கைக் கடல் போன்றவனுமான இராமனிடத்தே பாபிகள் சிலர்வசைகூறுகின்றார்கள். தாடகாவதமாகிற பெண்கொலையைச்செய்தானென்றும் குற்றமற்றவாலியை மறைந்துகொன்றானென்றும்,கரவதத்தில் மூன்றடி பின்வாங்கினானென்றும் வசைகூறுகின்றனர். குணக்கடலான இராமன் திறத்திலேயே இங்ஙனேயாம்போது மிகச்சில குணங்களையுடையராய் குற்றமே வடிவெடுத்தவர்களான நம்போல்வார் மீது வசைகூறுவது வியப்பல்லவே!
ஆக,நற்றங்களைக்குற்றமாக நினைப்பதும் அப்படி பிறர்க்குரைப்பதுமான தன்மைக்கு அஸூயையென்றுபெயர்.
இதற்கு எதிர்த்தட்டாய்க் குற்றங்களைக்குற்றமாகக்கொள்ளாதவளவோடு நில்லாமல் நற்றமாகவுங்கொள்ளுகையாகிற வாத்ஸல்யமுடையவன் யாவன்? என்று கேட்பதே இங்குற்றது.
 
ஸ்ரீராமாயணத்தில் வான்மீகி நாரத ஸம்வாதம்

ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பதினைந்தாவது வினா..

१५. क: अनसूयक:

15. அஸூயையில்லாதவன்
யார்?
உலகில் மனிதருடைய தன்மைகள்::
குணங்களைக் குணமாகவே கொள்வது;
குணங்களையும் குற்றமாகக்கொள்வது:
(பலருளர்).
குற்றங்களையும் குணமாகக்கொள்வது மிகச்சிறந்த குணவாளர் இயல்பு.
குற்றங்களைக் குற்றமாகவும் குணங்களைக் குணமாகவும் கொள்வதுகூட ஒருசிறந்தகுணமென்று சொல்லலாம். ஏனெனில் குணங்களையும் குற்றமாகவே கொள்ளுமியல்வினர் மலிந்த இந்நிலவுலகினில் உள்ளதை உள்ளபடி கொள்வாருளரேல் வியக்கவேண்டியதே!! அப்படிப்பட்டவர் மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித் என்றுகீதையில் சொன்னபடி பல்லாயிரவரில் ஒருவரே தேறக்கூடும். உலகில் ஸகலவிதமான வியாதிகளுக்கும் மருந்துண்டு.அஸூயையென்னும் வியாதிக்கு மருந்தே கிடையாது.
வேதாந்தாச்சார்யரும் ஸங்கல்பசூர்யோதயத்தில் மயிதத்தாவதாநாயாம் , நிரவதிகுணக்ராமே என்று அஸூயாதேவி சோர்வு சோம்பலால் உறங்கிப்போனால் பகவான் குணசாலியென்று பேர்பெறமுடியும்.அந்த அஸூயாதேவி கண்ணுறங்காதிருக்குமளவும் பகவானாலும் குற்றமற்றவனென்று பேர் பெறமுடியாது.
அடுத்தஸ்லோகத்தில்..
தோஷமென்பது சிறிதுமில்லாதவனும் எல்லைகடந்த திருக்குணங்களுக்கைக் கடல் போன்றவனுமான இராமனிடத்தே பாபிகள் சிலர்வசைகூறுகின்றார்கள். தாடகாவதமாகிற பெண்கொலையைச்செய்தானென்றும் குற்றமற்றவாலியை மறைந்துகொன்றானென்றும்,கரவதத்தில் மூன்றடி பின்வாங்கினானென்றும் வசைகூறுகின்றனர். குணக்கடலான இராமன் திறத்திலேயே இங்ஙனேயாம்போது மிகச்சில குணங்களையுடையராய் குற்றமே வடிவெடுத்தவர்களான நம்போல்வார் மீது வசைகூறுவது வியப்பல்லவே!
ஆக,நற்றங்களைக்குற்றமாக நினைப்பதும் அப்படி பிறர்க்குரைப்பதுமான தன்மைக்கு அஸூயையென்றுபெயர்.
இதற்கு எதிர்த்தட்டாய்க் குற்றங்களைக்குற்றமாகக்கொள்ளாதவளவோடு நில்லாமல் நற்றமாகவுங்கொள்ளுகையாகிற வாத்ஸல்யமுடையவன் யாவன்? என்று கேட்பதே இங்குற்றது.
 
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பதின்மூன்றாவது மற்றும் பதினாறாவது வினாக்களை ஸமந்வயப்படுத்தி அனுபவிப்போம்...

१३. को जिदक्रोद:
13. கோபத்தல வென்றவன்
யாவன்?

१६. कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य सम्युगे..

16. *கஸ்ய பிப்யதி தேவாச்ச
ஜாதரோஷஸ்ய ஸம்யுகே?*

போர்க்களத்தில் எவனுடைய கோபத்தைப்பார்த்துத் தேவர்களும் அஞ்சி நடுங்குவார்கள்?

கோபத்தை வெல்வதாவது--அதனை ஸ்வாதீனப்படுத்தி வைத்துக்கொள்ளுகை.
கோபத்தைக்காட்டிக் காரியங்கொள்ளவேண்டிய ஸமயங்களில் மாத்திரம் கோபத்தை வரவழைத்துக் கொள்வதொம்,காரியம் ஆனவாறே அக்கோபம் இருக்குமிடம் தெரியாமல் போம்படிசெய்து கொள்வதும் உத்தமபுருஷர்களின் லக்ஷணமாகும்.அரசன் குற்றவாளிகளையும்,உபாத்தியாயர் மாணாக்கர்களையும்,தந்தையர் மக்களையும் தண்டிக்கவேண்டியகாலங்களில் அவஸ்யம் தண்டிக்கப்ராப்தமாகிறது.
அப்போது கோபமுண்டாகியேதீரும்.
அது தவிர்க்கமுடியாதது.
கோபமே இயல்பாகவுள்ளவர்கள் ப்ரக்ருதிகோபநா: என்பர்.
வான்மீகி வினாக்களுக்கு விடைகூறுகின்ற நாரதர் இக்ஷ்வாகுவம்சப்ரபவோ ராமோநாம ஜநைச்ருத: என்று சொல்லத்தொடங்கி ஸதைவப்ரியதர்சந: என்றும் ஸோமவத் ப்ரியதர்சந: என்றும் சொல்லி மேலே காலாக்நி ஸத்ருஸ:க்ரோதே என்றும் சொல்லியுள்ளார். ஸ்மிதபூர்வாபிபாஷீ என்று நகரத்துஜனங்கள் இராமனின் குணங்களை சக்ரவர்த்தியிடம் தெரிவிக்கின்றனர். பௌராந் ஸ்வஜனவத் நித்யம் குசலம் பரிப்ருச்சதி என்று ப்ரஜைகளை உற்றாருறவினராகவே பாவித்து நாள்தோறும் சேமம் விசாரிப்பவனென்று...
மேலும் * நாஸ்ய க்ரோத: ப்ரசாதச்ச நிரர்த்தோஸ்தி கதாசந/ஹந்த்யேஷ நியமாத் வத்யாந் அவத்யேஷு ந குப்யதி// என்கின்றனர் அயோத்திமக்கள். இராமனுக்குக்கோவமோ அனுக்ரஹமோ ஒருபோதும் காரணமின்றி உண்டாகாது.
தண்டிக்கவேண்டியவர்களைத் தண்டித்தே தீருவன்.


குற்றமற்றவர்களிடத்துக் கோபமே கொள்ளான்.
ஜிதக்ரோத: என்பதற்கு கோபத்தைவென்றவன் என்றுபொருள்.கோபத்தை வென்றவனென்றால் வேண்டாத ஸமயங்களில் அதனைவிலக்கி வேண்டிய ஸமயங்களில் கொள்பவன் என்றபடி. ஜிதக்ரோத: என்பதில் ஸாதாரணகோபந்தோன்றும். பதினாறாவது வினாவில் கோபமென்பது கண்கொண்டுகாணவொண்ணாத (அபரிமிதமான) கோபந்தோன்றும்.நம்போல்வர் நமது அன்பர்களிடத்து யாரேனொம் தீங்குசெய்தால் அதைப்பொருட்படுத்தாமல் நமக்குத் தீங்குசெய்பவர்கள்திறத்து சீற்றங்கொள்வதுகாண்கிறோம். பகவானது தன்மை இதற்குமாறாக, தன்னளவிலே எத்தனை தீங்குசெய்தாலும் மநோவிகாரம் சிறிதுமடையான். தன்னடியார்க்குத் தீங்கிழைப்பார்திறத்து மிக்க சீற்றங்கொள்வான்.
பாண்டவர்க்காகத் துரியோதனாதியரிடம் தூதுபோனகாலத்தில் த்ரோண,பீஷ்ம,துரியோதனரிடத்து விடுத்து பரமபக்தரான விதுரருடைய திருமாளிகையில் அமுது செய்தான். *பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மதுசூதந,
கிமர்த்தம் புண்டரீகாக்ஷ! புக்தம் வ்ருஷல போஜனம்?*
கண்ணா! பீஷ்மரையும் த்ரோணரையும் என்னையும்விட்டு ஒரு சூத்ரனுடைய அன்னத்தை உண்டுவந்தாயே.இதுவென்? என்று,,இதற்குக் கண்ணன், விதுரர் சூத்ரயோநியில் பிறந்தாலும் அவர் சூத்ரரல்லர்; ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதஸ் ஸ்ம்ருதா: என்கிறபடியே அவர் அந்தணர் தலைவரேயாவர்.நான் சூத்ரபோஜனம் செய்ததாகக்கொண்டு என்னைப்பழிக்காதே என்று விடைகொடுக்காமல்,
த்விஷதந்தம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்/பாண்டவான் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா:
*த்வேஷிகளின் அன்னத்தை உண்ணவுங்கூடாது. த்வேஷிகளுக்கு அன்னமிடவுங்கூடாது.நீ பாண்டவர்களிடத்தே த்வேஷங்கொண்டவன் பாண்டவர்கள் எனக்கு உயிர்நிலை என்றான்.
கீதையில் ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்று ஞானிகளைத் தனது உயிராகவும் அவர்களுக்குத்தான் உடலாகவும் சொல்லியிருக்கிறான்.


ஸ்ரீராமபிரானும் தன்னளவில் அபசாரப்பட்டவரிடத்தே சீற்றங்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் தன்னடியார் திறத்து அபசாரப்பட்டவரிடத்து தான் கோபமிட்டவழக்காகின்றதாகவும் வான்மீகி வெகு அழகாகக்கூறுகிறார்.
இராமன் கடலரசனைநோக்கிச்சரணாகதி செய்து மூன்றுநாள் கடற்கரையிலே சயனித்துக்கிடந்தும் கடலரசனா வந்து முகங்காட்டாதவளவில் ஸமுத்ரஸ்ய தத: க்ருத்த: என்று கடலரசன்மீது கோபமுண்டாகப்பெற்றதாக ஸாமான்யமாகச்சொன்னார். பதினாலாயிரம் ராக்ஷஸர்கள் ஜனஸ்தானத்தில் தனக்குத்
தீங்கிழைக்க வந்தபோதும் க்ரோத மஹாரயத் தீவ்ரம் வதார்த்தம் ஸர்வரக்ஷஸாம் என்று கோவத்தை வரவழைத்துக்கொண்டதாகக்கூறினார். (க்ரோதம் ஆஹாரயத்--வரமாட்டேனென்கிற கோபத்தை வருந்தி வரவழைத்துக்கொண்டான்)
ததோ ராமோ மஹாதேஜா ராவணேன க்ருதவ்ரணம்,த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வசமேயிவாந் என்று இராவணன் ஒரு வானரவீரனைப்புண்படுத்தியது கண்ட இராமன் கோபஸ்ய வசமேயிவாந் என்று கோபத்தைத் தன்வசத்தில் வைத்துக்கொள்ளமாட்டாமல் கோபத்துக்கே தான் வசப்பட்டுவிட்டதாகக்கூறியுள்ளார்.

-அபூர்வராமாயணம்
(ஸ்ரீகாஞ்சிஸ்வாமி)
 

Latest ads

Back
Top