Zoology

Status
Not open for further replies.
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கொண்டுஇருந்தான். எவ்வளவு மருந்தும் இன்ஜெச்ஷுனும் கொடுத்தும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. கடைசியில் அவனது புத்திசாலி மனைவி ஒருநாள் சொன்னாள். "பேசாமல் நீங்க இந்த டாக்டரை விட்டுட்டு ஒரு கால்நடை டாக்டரை பார்த்து சிகிச்சை செய்து கொள்ளுங்கள். அதுதான் சரிவரும் என்று எனக்கு தோன்றுகிறது என்றாள்'.

"உனக்கு என்ன மூளை கீளை கேட்டுப்போச்சா" என்று சீறினான் கணவன். "எனக்கு ஒன்றும் கெட்டுப்போகவில்லை, உங்களுக்குத்தான் எல்லாமே கேட்டுப்போயிருக்கு" என்று பதிலடித்தாள் மனைவி. "நீங்க தான் காலம்கார்த்தாலே கோழி மாதிரி எழுந்திருந்து, காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி 'லபக்', 'லபக்' என்று வாயிலே போட்டுண்டு, குதிரை மாதிரி ஓட்டம்பிடித்து ஆபீசுக்கு போறதும், அங்கேபோய் வேலை செய்கிறவர்களுடன் கரடி மாதிரி கத்திட்டு, சாயந்தரம் ஆடு, மாடு மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க.


வந்ததும் வராததுமா என்னிடம் நாய்மாதிரி கொலைக்கிறீங்க. பின் முதலை மாதிரி "சரக், சரக்" என்று சாப்பிட்டுவிட்டு எருமைமாடு மாதிரி படுத்து தூங்கறீங்க. மறுபடியும் காலையில் அதே கோழிக்கதை தான். அதனாலே தான் சொல்றேன் உங்களுக்கு 'வெட்' டாக்டர் தான் சரி". மழை பெய்து ஓய்ந்தவுடன் கணவன் முழிக்க, "எதுக்கு கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க? போங்க" என்று மொழிந்தாள் அந்த போனஜன்ம zoo-keeper!
 
Status
Not open for further replies.
Back
Top