எவ்வாறு நெருப்பு அதன் உஷ்ணம், பால் அதன் வெண்மை என்னும் இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்க இயலாதோ, அது போன்றே
ஒரு பொருள் அதன் தன்மை இவற்றை தனித்தனியே பிரிக்க
இயலவே இயலாது.
"பாகம்பிரியாள்" என்பது அம்பிகையின் ஒரு நாமம். அச்சொல்லிலேயே
சிவனும் உண்டு, சக்தியும் உண்டு. அதாவது அங்கு கூடிப்பிரிவதோ
அல்லது பிரிந்து கூடுவதோ இல்லை. இத்தகைய 'மெய்ஞானம்'
எல்லா தம்பதியருக்கும் வாய்க்கப்பெற்றால்?
எல்லோரும் எக்காலத்தும் "பாகம்பிரியாள்" என்னும் சொல்லுக்குரியவர்களே.
சாய்ராம்.