• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

What to do? Om namashivaya

  • Thread starter Thread starter renumani
  • Start date Start date
Status
Not open for further replies.
R

renumani

Guest
உயர்ந்த சிந்தனையிருந்தால்;உயர்ந்த செயல்கள் பிறக்கும்.உயர்ந்த செயல்கள் இருந்தால்;உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும்.உயர்ந்த பழக்கங்களிருந்தால்; வாழ்க்கையே வெற்றியாகி விடும்.

இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன். மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான்.

அந்த தகுதிகள்,அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் தகுதிகள் என்னென்ன?

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்


1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).
2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).
3. அதிகமாக உழைத்தல் ( Extra work).
4. தன்னம்பிக்கை ( Self confidence ).
5. சேமிப்பு ( Saving ).
6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).
7. தலைமைப் பண்புகள் ( Leadership ).
8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).
9. கற்பனைத் திறன் ( Imagination )
10. சுயக் கட்டுப்பாடு ( Self control).
11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).
12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).
13. கவனமாக செயல்படுதல் ( Concentration).
14. ஒத்துழைப்பு ( Co-opertation)
15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).
16. சகிப்புத்தன்மை ( Tolerance ).
17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).
18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).
19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).
20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).
இங்கு இரண்டு விஷயங்களைச் சொல்வது பொருத்தமாக அமையும்.

முதலாவது, விவேகானந்தரின் வாழ்க்கை, இரண்டாவது டால்டாயின் கதை. விவேகானந்தர் மிகச்சிறிய வயதிலேயே உயர்வான அறிவையும் மனவலிமையையும் பெற்றவர். சிறுவனாக இருந்தபோது தன் தந்தையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்.
முதல் கேள்வி :


” நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?”


அதற்கு தந்தை சொன்னார், ”நீ கண்ணாடி முன் நின்று பார். உனக்கே தெரியும்” என்று.

இரண்டாவது கேள்வி :

“இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”.

அதற்கு ” அரசனைக் கண்டு மயங்கிவிடாதே” என்றார். நம் உடலே பெரிய சொத்து செல்வத்தைக் கண்டு சபலமில்லாமலும், வறுமையைக் கண்டு தாழ்வடையாமலும் இருக்கின்ற நடுநிலை மனம், இவ்விரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உயர்விற்கும் முக்கிய அடிப்படை.

டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, ஐயா என்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று பிச்சை கேட்டான்.
அதற்கு டால்ஸ்டாய், ” உண்மையாகாவா?” என்றார்.


”ஆமாம்”.

”உன் கண்களையாவது ரூ. 20,000/- க்கு தருவாயா?”

”மாட்டேன்”.

”சரி, உன் கைகளையாவது ரூ. 10000/- க்கு தருவாயா?”

அதற்கும் சம்மதிக்கவில்லை.

” சரி, உடலிலுள்ள இரண்டு உறுப்புகளில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை கொடுத்தாலும் நிறைய பணம் கிடைக்கும். நீயும் இயல்பாகவே உயிர் வாழ முடியும் தருவாயா?”
அதற்கும் அவன் மறுத்தான்.

டால்ஸ்டாய் சொன்னார், ” பல லட்சங்கள் பெறுமானமுள்ள உடலை வைத்துக் கொண்டு என்னிடம் பணம் இல்லை என்கிறாயே இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிஷம். இதைக்கொண்டு உழை, தங்கம், வெள்ளி மட்டுமில்லை சந்திரனும், சூரியனும்கூட உன்னுடையதாகிவிடும்”.

சபலமில்லா மனதிற்கும்,சுயமதிப்பு பெறவும் இவ்விரண்டு உதாரணங்களும் உதவும்.அநியாயமான ஆசைகளையோ அநியாயமான வழிகளையோ முயற்சித்தால் மிகவும் தாழ்வு. எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள்.
நடக்கத் தெரியாமலிருந்து நடக்கப் பழகுகிறார்கள். பேசத் தெரியாமலிருந்து பேசப் பழகுகிறார்கள். படிக்கத் தெரியாமலிருந்து படிக்கப் பழகுகிறார்கள். இங்கு கொடுத்துள்ள இருபது தகுதிகளையும் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் அவ்வப்போது முயற்சி செய்து செயல்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடும்.

சிறுசிறு மழைத் துளிகளே பெருவெள்ளம்
சிறுசிறு மலர்களே பெரிய மாலை
சிறுசிறு செங்கற்களே பெரிய கோபுரம்
சிறு சிறு தகுதிகளே பெரிய சாதனைகளாக அமையும்
உங்களின் வெற்றிக்கு உறுதி


 
Status
Not open for further replies.
Back
Top