ஆடி மாதம் மட்டும் அப்படி என்ன விசேஷம்?:
வானவெளியில் சஞ்சரிக்கும் சூரியனே நம்முடைய முதற்கடவுளாகத் திகழ்கின்றார். பிரபஞ்சத்தை மூடி இருந்த இருளில் இருந்து, 'ஓம்' என்னும் பிரணவ ஒலியுடன் தோன்றிய சுடர் கடவுள்தான் சூரியன் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
வானவெளியில் சஞ்சரிக்கும் சூரியனின் இயக்கத்தை பொறுத்தே பூமியின் இயக்கமும் அமைகின்றது. சூரியனின் சஞ்சாரப் பயணத் தை இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களை உத்தராயண புண்ணிய காலம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள ஆறு மாதங்களை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் சொல்வார்கள்.
உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாக வும், தட்சிணாயணம் தேவர்களின் இரவுப் பொழுதாகவும் அமைந்திருப்பதாக சாஸ்திரங் கள் குறிப்பிடுகின்றன.
ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இரவுப் பொழுது அதிகமாக இருக்கும். நாளெல்லாம் ஓடியாடி விளையாடும் குழந்தை, அந்தி மயங்கி இருள் கவியும் இரவு பொழுதில் அம்மாவின் மடியில்தான் தஞ்சம் அடையும்.
அதேபோல், வரப்போகும் மழைக் காலத்தில் அம்பிகையின் குழந்தைகளாகிய நமக்கு எந்த நோய்களும் ஏற்படாமல் இருப்பதற்காக, நாம் அம்பிகையின் திருவடிகளில் அடைக்கலம் ஆகிறோம். அதனால்தான் ஆடி முழுவதும் அம்மனுக்கு விழா எடுத்துக் கொண்டாடி, அவளிடம் அடைக்கலம் ஆகிவிடுகிறோம்.
பன்னிரண்டு மாதங்களில் தட்சிணாயணம் தொடக்கமான ஆடியும், முடியும் மார்கழியும் சரி தெய்வ வழிபாட்டுக்கென்றே நம் முன்னோ ர்களால் விதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி
ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியி ல், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்க ல்ய பலம் கூடும். ஆடி மாதச் செவ்வாய்க்கிழ மைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.
கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விஇரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திரும ணம் கூடிவரவும் விரதம் மேற்கொள்கின்றனர்
ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள்.
ஆடி பெருக்கு
ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெ டுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ஆடி கிருத்திகை
கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெரு மானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களை யும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் தொட ங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இரு ந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லா ம் தரும் ஆற்றல் படைத்த வர். நமது மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆடி பூரம்
ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமா கும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரி த்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.
ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டும ல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்
ஆடி பவுர்ணமி ஆடி தபசு
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதி கை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும் என்றார்.
அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டு கோளை நிறைவேற்றி சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனா க வடிவம் கொண்டு அந்தக் காட்சியை கண்டு தரிசனம் செய்தார்.