Vetri Tharum Chakrathazhwar

Status
Not open for further replies.
சக்கரத்தாழ்வார்,பலபுராணங்களில் பேசப்படுகிறார்.நரசிம்மஅவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாகஇருந்தவர்சுதர்ஸனர்தான் என்கிறது புராணம்.அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போதுதானம்கொடுக்கவந்தமஹாபலிசக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.
அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார்.
அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.
கஜேந்திரமோட்சத்தில்சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால்.
புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம்அழிந்திடசக்கரத்தாழ்வாரே காரணம்.
மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட கிருஷ்ண பரமாத்மா சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.
இவர் சுதர்ஸனர்,திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும்அறியப்பெறுகிறார்.
சுதர்சனர்(சக்கரத்தாழ்வார்)மந்திரம்வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

 

Attachments

  • Vetri Tharum Chakrathazhwar.webp
    Vetri Tharum Chakrathazhwar.webp
    112.4 KB · Views: 239
Status
Not open for further replies.
Back
Top