Valli Deivanai

வள்ளி தெய்வானை....

முருகப் பெருமானை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் போது சட்டென்று வள்ளி எந்தப்பக்கம்? தெய்வானை எந்தப்பக்கம்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்!..

முருகப் பெருமானுக்கு வலது பக்கம் வள்ளியம்மையும், இடது பக்கம் தெய்வானையம்மை அமர்ந்தருளுவார்கள்.

வள்ளியம்மை இச்சா சக்தியையும், தெய்வானையம்மை கிரியா சக்தியையும்,
முருகப் பெருமான் ஞான சக்தியையும் குறிப்பவர்கள்.

வள்ளியம்மை இகலோகத்திலும், தெய்வானையம்மை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம். வள்ளியம்மை திருக்கரத்தில் தாமரை மலரும், தெய்வானையம்மை திருக்கரத்தில் நீலோத்பல மலரும் கணப்படும். எம்பெருமான் முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள்.

வலது புறம் இருக்கும் வள்ளியம்மை திருக்கரத்தில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையம்மை திருக்கரத்தில் இருக்கும் நீலோத்பல மலரும், கந்தனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம்.

முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவர் இருபத்தி நான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பார்.

வேலும் மயிலும் துணை .

1719631253936.png
 
Back
Top