• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Utthana Ekadashi

உத்தான ஏகாதசி.....!!!


தேவோத்தானி - ஹரிபோதினி - என்னும் பெயர்களாலும் இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனிடம் - "ஹே அர்ஜூனா, நீ எனக்கு அதிபிரிய தோழனாவாய். ஹே பார்த்தா!, இப்பொழுது உனக்கு பாபங்களை அழிக்க வல்ல மற்றும் புண்ணியத்தையும், முக்தியையும் அளிக்கவல்ல ப்ரபோதினி ஏகாதசி விரத மஹிமையின் கதையையும் மற்றும் இது தொடர்பாக நாரதருக்கும், பிரம்மதேவருக்கும் இடையில் நடந்த சம்பாஷணையையும் உனக்கு கூறுகிறேன். சிரத்தையுடன் கேள்.

ஒரு முறை, நாரத ரிஷி பிரம்மதேவரிடம் ‍ " தந்தையே!! ப்ரபோதினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பதால் கிட்டும் பலனை பற்றி விஸ்தாரமாக உபதேசிக்க வேண்டும்" என்று வேண்டி நின்றார்.

பிரம்மதேவர் பதிலளிக்கையில் "மகனே ! ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் பலனானது, ஆயிரம் அஸ்வமேத யாகம், நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் பலனிற்கு இணையானது ஆகும்" என்றார்.

நாரதர் பிரம்ம தேவரிடம் - "தந்தையே, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருத்தல், இரவு மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டித்தல், நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் மேற்கொள்ளுதல் இவற்றினால் கிட்டும் பலன்களின் வித்தியாசத்தை பற்றி கூறுங்கள்" என்றார்.

பிரம்மதேவரும்,-" நாரதா! ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பதால் இரண்டு ஜென்மாவின் பாபங்கள் நீங்குகிறது. நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பதால் ஏழு ஜென்மங்களின் அனைத்து பாபங்களும் நீங்கப்பெறுகிறது. மூவுலகங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் க்ஷண நேரத்தில் நஷ்டமடைகிறது. பூர்வ ஜென்மத்தில் செய்த அநேக தீய வினைகளின் பாபங்கள் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தினால் க்ஷண நேரத்த்தில் நஷ்டமடைகின்றன. எவர் ஒருவர் தன்னுடைய ஸ்வபாவத்தினபடி ப்ரபோதினி ஏகாதசியை விதி பூர்வமாக விரதத்தை கடைபிடிக்கிறாரோ, அவருக்கு விரதத்தின் பூரண பலன் கிட்டுகிறது.

எவர் ஒருவர் சிரத்தையுடன் இத்தினத்தில் சிறிதளவேனும் புண்ணியம் செய்தால், அது மலையளவிற்கு ஈடாகிறது. ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதாக சங்கல்பத்தை தன்னுடைய மனதில் நினைத்தாலே நூறு ஜென்ம பாபங்கள் அழிந்து விடுகின்றன. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணு லோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர்.

"ஹே, புத்ர !, பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களும் ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் நிவர்த்தி பெறுகிறது. அஸ்வமேத யாகம் போன்ற மகத்தான யாகங்கள் செய்வதால் கிட்டும் பலனை விட பன்மடங்கு பலன் ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப் பெறுகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், சர்வ புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி பெறும் புண்ணியம், கோ (பசு) தானம், ஸ்வர்ண (தங்கம்) தானம், பூமி (நிலம்) தானம் ஆகியவற்றால் கிடைக்கப்பெறும் புண்ணியம் இவற்றிற்கு ஒப்பானதாகும்.

மேலும் நாரதா, " இவ்வுலகத்தில் எவர் ஒருவர் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்து தன்னுடைய குலத்தை பவித்ரமாக ஆக்குகிறாரோ, அவர் தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் ஆவார். உலகத்தில் எத்தனை விதமான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதோ, மேலும் எத்தனை விதமான புண்ணிய தீர்த்தங்களை விரும்ப முடியுமோ, அத்தனையும் ப்ரபோதினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பவரது வீட்டிலேயே அமைந்து இருக்கிறது.

இறைவனின் திருஅருளைப் பெற சுக்லபட்சத்தில் வரும் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் மற்ற அனைத்து செயல்களையும் துறந்து விதி பூர்வமாக அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். எவர் ஒருவர் இவ்விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் தனவானாக‌, யோகியாக , தபஸ்வியாக‌ மற்றும் இந்திரனையும் வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றவராக ஆகிறார். ஏனெனில் ஏகாதசி திதியானது பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் ப்ரியமான நாளாகும். இவ்விரதத்தின் பலனாக, இதைக் கடைபிடிப்பவர் மறுபிறவி இல்லா நிலையை அடைகிறார்.

இவ்விரதம் மேற்கொள்வதால், உடல், சொல், மனம், இம்மூன்றினாலும் செய்த பாபங்கள் நஷ்டமடைகின்றன. இவ் ஏகாதசி நாளன்று பகவானின் அருள் வேண்டி எவர் ஒருவர் தானம், தவம், ஜபம், ஹோமம், யக்ஞம் ஆகியவற்றை செய்கிறாரோ, அவர் என்றும் குறையாத புண்ணிய பலனை பெறுகிறார்.

பால பருவம், யௌவன மற்றும் முதுமை என்று அனைத்து பருவத்தின் சர்வ பாபங்களும், ப்ரபோதினி ஏகாதசியன்று விஷ்ணு பூஜை செய்வதால் நீங்குகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனானது, சூரிய கிரகணத்தின் போது ஸ்நானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை போன்று ஆயிரம் மடங்கு அதிகமானது. ஒருவர் பிறப்பிலிருந்து இது நாள் வரை செய்த புண்ணியங்கள், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை இவற்றை சமன் செய்து நோக்குகையில், இது நாள் வரை அனுஷ்டித்த விரத பலன் ஒன்றுமில்லாமல் போகிறது எனலாம். அதாவது, வாழ்நாளில் ப்ரபோதினி ஏகாதசி விரதம் மேற்கொள்ளாதவரின் புண்ணியபலன்கள் வியர்த்தமாகிறது.

செய்யப்படும் தான, தர்மங்களை விட, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள விரத கதைகளை பக்தியுடன் ஸ்ரவணம் செய்வது பகவானுக்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது. ஐப்பசி மாதம், பகவத் லீலா கதைகள் சிறிதளவேனும் பாராயணம் செய்வது அல்லது ஸ்ரவணம் செய்வது, நூறு கோ (பசு) தானம் செய்த புண்ணிய பலனுக்கு நிகரான பலனை அளிக்க வல்லது.

எவர் ஒருவர் இவ் ஏகாதசி விரத மஹிமையை பாராயணம் அல்லது ஸ்ரவணம் செய்கிறாரோ, அவர் அஸ்வமேத யக்ஞம் செய்த பலனை அடைவர்.

பிரம்ம வைவர்த்த புராணம், ஐப்பசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி அதாவது ப்ரபோதினி ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

WhatsApp Image 2021-11-14 at 6.24.23 PM.jpeg
 

Latest ads

Back
Top