• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Uthrayanam and Dakshinayanam

gvis

New member
I am trying to understand how Uthrayanam and Dakshinayanam works especially in regards to poonal ceremony. For this year(2023) Dakshinayanam starts June 21 per most calendars including scientists. But according tamil panchangam it starts on July 16. We heard its best to do Upanayanam in Uthrayanam. But its it ok to do in July?

Should we follow Tamil panchangam of July 16 for Dakshinayanam or June 21st. We would like to do what is good per shastram for our children as much as possible.
 
---------------+++++++
நாம் வசிக்கும் மண்டலத்தின் பெயர் சூரிய மண்டலம் ஆகும். இந்த சூரிய மண்டலத்தில் சூரியன் மையத்தில் நிலையாக இருக்கிறது.சூரியனைச் சுற்றி பூமி உள்ளிட்ட பிற கோள்கள் சுற்றி வருகின்றன.பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர
24 மணி நேரம் ஆகிறது. அதாவது பகல் 12 மணி நேரமும், இரவு 12 மணி நேரமும் ஆகிறது. பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. அதாவது
365 1/2 நாட்கள் ஆகும். பூமி 27 டிகிரியில் சாய்வாக சூரியனைச் சுற்றி வருகிறது.
இதை நாம் பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் சுற்றி வருவது போல் ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. அதனால் தான் சூரியன் சுற்றுகிறது என்கிறோம். இதில் நாம் பூமியை தான் சூரியன் என்று சொல்கிறோம் பாமர மக்கள் புரிந்து கொள்வதற்காக.
#உத்தராயணம்:
"உத்தர் ' என்றால் வடமொழியில் வடக்கு என்று அர்த்தம்.
"அயணம்' என்றால் வடமொழியில் பயணம் என்று அர்த்தம்.
ஒரு வருடத்திற்கு 12மாதங்கள் வரும். அந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகும். அப்படி பெயர்ச்சியாகும் போது 6மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய சுழற்சி பாதையை ராசி மண்டலத்தில் மாற்றிக் கொள்ளும் அப்போது ஒரு வருடத்தில் 2அயணங்கள் ஏற்படும். இதை உத்தராயணம், தட்சிணாயணம் என்கிறோம்.
சூரியன் தென்கிழக்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையில் பயணம் செய்யும் காலம் உத்தராயணம் காலம் ஆகும்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி,
ஆனி
ஆகிய 6மாதங்களும் உத்தராயணம் காலம் ஆகும். சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கி செல்லும் காலமாகும்.உத்தராயணம் காலம் ஆரம்பமாக தைமாதம் தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த 6மாதங்களிலும் பூமியில் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த 6மாத காலமும் தேவர்களுக்கு ஒரு பகல் பொழுதாகும்இது மிகவும் புண்ணிய காலம் ஆகும். ஞானிகள் யோகப் பயிற்சிகள் செய்து குண்டலினி சக்தியை எழுப்பி ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்கள் வழியாக மேலே கொண்டு வந்து பிராணன் என்ற உயிர்க் காற்றை தன் உச்சந்தலை வழியாக வெளியேற்றி உயிர் துறப்பர். அவ்வாறு செல்லும் உயிர் நேராக இறைவனிடம் சென்று விடும். மீண்டும் பிறவி நிலையை அடையாது.இவ்வாறு பிரியும் உடல் வற்றுமே தவிர அழுகாது.யோக வழியில் நின்று முக்தி அடைய விரும்புபவர்கள் தட்சணாயணம் காலத்தில் உயிர் துறந்தால் அவர்கள் இறைவனிடம் செல்ல முடியாது என்ற மெஞ்ஞான அறிவை உலகிற்கு உணர்த்தியதோடு, புண்ணிய காலமான உத்தரயாணம் காலம் தொடங்கும் தை முதல் நாளை தைப் பொங்கல் பண்டிகையாக கொண்டாடி உலக மக்களுக்கு தெரிவித்த ஞானிகள் நம் தமிழர்கள்.
சிவன், முருகன், அகத்தியர்,போகர் உள்ளிட்ட சித்தர்கள் யோக வழி நின்று இறை நிலையை அடைந்தவர்கள். தை மாதத்தில் ஆரம்பிக்கும் உத்தராயணம் காலத்தில் சித்தர்கள் ரசமணி குளிகைகள் செய்தனர். அதற்கு நமசிவய போன்ற ஐந்தெழுத்து மந்திரங்கள் சொல்லி சித்திநிலை அடைந்து கூடு விட்டு கூடு பாய்ந்தனர். வானில் பறந்தனர். கோள்களின் இயக்கங்களை விண்ணில் சென்று ஆராய்ந்து வானநூல் சாத்திரம் படைத்தனர். உலகில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாள் கணக்கு , வாரக் கணக்கு , மாதக் கணக்கு, ஆண்டுக் கணக்கு ஆகியன நம் தமிழர்கள் உலகிற்கு வழங்கிய கொடைகள் ஆகும். தமிழர் வரலாற்றில் அகத்தியர் பெயரில் 3 சித்தர்கள் அறியப்படுகிறார்கள். அதில் கடைசி சித்தராக கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியச் சித்தர் இலங்கை திரிகோணமலையில் ஒரு சிவ ஆலயம் அமைத்து அதற்கு நேர் வடக்காக இமயமலையில் உள்ள கைலாச மலைக்கு நேர்க்கோட்டில் இந்தியாவில் பல சிவ ஆலயங்களை மன்னர்கள் துணையுடன் அமைத்துள்ளார். இந்தியாவின் வரை படத்தை உற்று நோக்கினால் இந்த உண்மை தெரிய வரும். அகத்தியர்,போகர்,
திருமூலர் போன்ற சித்தர்கள் வாழ்ந்த கி.பி 5,6ஆம் நூற்றாண்டை தமிழகத்தின் இருண்ட காலம் என ஆங்கிலேயர் எழுதிய வரலாற்றை நாம் பாட நூல்களில் இன்று படித்து வருகிறோம்.
#மகர #சங்கராந்தி:
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளில்
தை மாதம் மகர ராசிக்குரிய மாதமாகும். உத்தராயணம் காலம் ஆரம்பிக்கும் நாளான தை 1ஆம் தேதியில் இருந்து சூரியன் மகர ராசியில் நுழைகிறது. எனவே உத்தராயண கால ஆரம்பம்
#மகர #சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டை போல் இந்த ஆண்டும் தை1 ஆம் தேதி (14-1-2022) நாளை மகர சங்கராந்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் வரும் மகர சங்கராந்தி நாளில் சூரியன் சனியின் வீடான மகரத்தில் நுழைந்து ஒரு மாத காலம் இருக்கப் போகிறார். ஏற்கெனவே சனி மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். இக் காலத்தில் சூரியன் சனியின் மீதான கோபத்தை மறந்து இருப்பார். சூரியன் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி நாளில் மகர ராசியில் நுழையும் போது மிகவும் அரிதாகவே தனது மகனான சனியை சந்திப்பார். இந்த அபூர்வ நிகழ்வு 29 வருட இடைவெளிக்குப் பிறகு சூரியனும், சனியும் மகர ராசியில் நாளை சேர்ந்திருக்கப் போகிறார்கள். எற்கெனவே 1993 ஆம் ஆண்டு மகர ராசியில் சூரியனும், சனியும் சேர்த்திருந்தனர். அதற்கு பின் இப்போது தான்
(14-1-2022) மீண்டும் சேர்கிறார்கள்.
#தட்சிணாயணம் :
"தட்சண் ' என்றால் தெற்கு என்று அர்த்தம். சூரியன் வட திசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயணம் காலமாகும்.
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி ஆகிய 6மாதங்கள் தட்சிணாயணம் காலமாகும். அதாவது இந்த 6மாத காலங்களில் சூரியன் வடகிழக்கில் இருந்து தென் கிழக்கு நோக்கி ஒவ்வொரு நாளும் நகர்ந்து உதயமாகும்.ஆடி 1ஆம் தேதியில் இருந்து ஆரம்பமாகும் தட்சிணாயணம் காலமான 6மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும் .இந்த காலங்களில் வெப்பம் குறைந்து குளிர் மிகுந்து காணப்படும். விரதம் இருப்பவர்கள் இந்த தட்சிணாயணம் காலத்தில் விரதம் இருப்பர். யோகப் பயிற்சிகள் செய்பவர்கள் இந்த காலங்களில் தங்களுக்கு சக்தி ஏற்றிக் கொண்டு உத்தராயணம் காலத்தில் முக்தி அடைவர்.
அன்னிய மதமாற்ற தீய சக்திகளால் தமிழர்கள் தங்களது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக இழந்து வருகின்றோம். கிறித்துவரோ, இஸ்லாமியரோ நம் தமிழ் மாத காலண்டரை பயன்படுத்த மாட்டார்கள்.இந்துக்களாகிய தமிழர்கள் தான் தமிழ் மாத கணக்கை பயன்படுத்தி வருகின்றோம். ஆரம்பப் பள்ளிகளில் முதலில் சித்திரை, வைகாசி தமிழ் மாதங்களை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 

Latest ads

Back
Top