Thiruvudaiyamman 108 Potri

praveen

Life is a dream
Staff member
திருவுடையம்மன் 108 போற்றி:

ஓம் திருவுடையம்மனே போற்றி
ஓம் திருவருள் தருபவளே போற்றி
ஓம் தேவியே தயாபரியே போற்றி
ஓம் மூவரில் முதல்வியே போற்றி
ஓம் வேதம் அறிந்தாய் போற்றி
ஓம் பிரம்மனுக்கு அருளினாய் போற்றி
ஓம் வாணிக்கு அருளினாய் போற்றி
ஓம் நாராயணனுக்கு உதவினாய் போற்றி
ஓம் ஸ்ரீதேவி நாயகியே போற்றி
ஓம் இடர்களை தீர்ப்பவளே போற்றி

ஓம் சிவனை பூஜித்த தேவியே போற்றி
ஓம் மேலூர் மேவிய தேவியே போற்றி
ஓம் ஐராவதத்திற்கு அருளினாய் போற்றி
ஓம் வணிகனுக்கு வரமளித்தாய் போற்றி
ஓம் கிரக தோஷம் போக்கும் தேவியே போற்றி
ஓம் இடர்களை களைபவளே போற்றி
ஓம் கால பைரவருக்கு அருளினாய் போற்றி
ஓம் வியாதிகளை போக்குபவளே போற்றி
ஓம் ரோகம் வராமல் காப்பாய் போற்றி
ஓம் அபித குசாம்பிகையே போற்றி

ஓம் உமையே தேவியே போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரியே போற்றி
ஓம் கவிக்கொண்ட தேவியே போற்றி
ஓம் ஹயக்கிரீவருக்கு அருளினாய் போற்றி
ஓம் நாகங்களை காத்தவளே போற்றி
ஓம் அசுரர்களை அழித்தாய் போற்றி
ஓம் கந்தனுக்கு அருளினாய் போற்றி
ஓம் கணேசனுக்கு உபதேசித்தாய் போற்றி
ஓம் காளியின் வடிவே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பாய் போற்றி

ஓம் கிரீடம் தரித்தாய் போற்றி
ஓம் பஞ்ச பூதம் காத்தாய் போற்றி
ஓம் வருணனுக்கு வரமளித்தாய் போற்றி
ஓம் வாயுதேவனை வாழ வைத்தாய் போற்றி
ஓம் இந்திரனுக்கு பதிவிதந்தவளே போற்றி
ஓம் பாசத்தை தருபவளே போற்றி
ஓம் பூமியை காப்பவளே போற்றி
ஓம் நெருப்பை நீராக்குபவளே போற்றி
ஓம் பாவங்களை போக்குபவளே போற்றி
ஓம் கொற்றவை தேவியே போற்றி

ஓம் திடமனது தருவாய் போற்றி
ஓம் திருவே தலமே போற்றி
ஓம் தீவினை போக்குபவளே போற்றி
ஓம் நலம் தரும் நாயகியே போற்றி
ஓம் கதிரவனை காத்தாய் போற்றி
ஓம் நிலவுக்கு நலம் தந்தாய் போற்றி
ஓம் வெற்றியின் நாயகியே போற்றி
ஓம் வேண்டியதை அருள்பவளே போற்றி
ஓம் உணவு தருபவளே போற்றி
ஓம் உயிரைக் காப்பாய் போற்றி

ஓம் துர்கை தேவியே போற்றி
ஓம் அள்ளிக் கொடுக்கும் அன்னையே போற்றி
ஓம் துன்பத்தில் காப்பாய் போற்றி
ஓம் உன்னடி சேர்ந்தேன் போற்றி
ஓம் தேன் மொழி தேவியே போற்றி
ஓம் இனிமை குரலே போற்றி
ஓம் மகேஸ்வரி தேவியே போற்றி
ஓம் சிம்மவாகினி தேவியே போற்றி
ஓம் நவகாளியே போற்றி
ஓம் நாகவல்லியே போற்றி

ஓம் நாமமாயிரம் கொண்டவளே போற்றி
ஓம் சக்ரதேவியே போற்றி
ஓம் சக்தி தேவியே போற்றி
ஓம் கல்யாண தேவியே போற்றி
ஓம் நாராயணி போற்றி
ஓம் விவேகம் தருவாய் போற்றி
ஓம் பாட்டின் பொருளே போற்றி
ஓம் மங்கையற் எண்ணியே போற்றி
ஓம் பாதம் பணிவோம் போற்றி
ஓம் உடலைக் காப்பாய் போற்றி

ஓம் பாடலின் பொருளே போற்றி
ஓம் முழுநிலவு நாயகியே போற்றி
ஓம் உயர் மேலூர் தேவியே போற்றி
ஓம் பாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் அங்குச நாயகியே போற்றி
ஓம் நன்மதி தருபவளே போற்றி
ஓம் நான்முகி போற்றி
ஓம் அடியார்க்கு அருள்பவளே போற்றி
ஓம் சதுர்புஜ தேவியே போற்றி
ஓம் திருமணங்கீசர் நாயகியே போற்றி

ஓம் நான்மறை காத்தவளே போற்றி
ஓம் திருவிளையாடல் புரிபவளே போற்றி
ஓம் திருமேலூர் நாயகியே போற்றி
ஓம் குலத்தை காக்கும் நாயகியே போற்றி
ஓம் வளம் தரும் நாயகியே போற்றி
ஓம் முப்பெரும் சக்தியே போற்றி
ஓம் நவராத்திரி தேவியே போற்றி
ஓம் ஆதிதேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் துயர் களைப்பவளே போற்றி

ஓம் பார்வதியே போற்றி
ஓம் பராசக்தியே போற்றி
ஓம் மாமணியே போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆதி திருவே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மகா தேவியே போற்றி
ஓம் கொடுக்கும் கரமே போற்றி
ஓம் கடமையை தருவாய் போற்றி
ஓம் அகந்தை நீக்குபவளே போற்றி

ஓம் பிறவி அறுப்பவளே போற்றி
ஓம் அபயம் தருவாய் போற்றி
ஓம் ஒளியின் உருவே போற்றி
ஓம் ஓங்கார தேவியே போற்றி
ஓம் பேதமை அகற்றுவாய் போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் இச்சா சக்தியின் வடிவமே

போற்றி ! போற்றி !
 
Back
Top