Thiruverkadu Devi Karumariamman

praveen

Life is a dream
Staff member
சென்னையில் உள்ளது புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். இது புகழ்பெற்ற கோவிலாகும்

இந்த ஆடி மாதத்தில் அம்பாளை தரிசித்தால் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் அதனால் ஆடியை குறிப்பிட்டு சொல்கிறோம் இந்த மாதத்தில் மட்டுமல்ல வருடத்தில் எந்த நாளும் திருவேற்காடு கருமாரியம்மன் கேட்கும் வரம் கொடுப்பாள்.

கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதிக்கு சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம்.

இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.

மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்றுள்ளனர். தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.
தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.
தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.
பூர நட்சத்திரம் - கலைகளில் வல் லமை பெறலாம்.
சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறை வேறும்.

புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்

1628512007229.png
 
Back
Top