Thirumukkoodal Sri Appan Prasanna Venkatesa Perumal Temple

praveen

Life is a dream
Staff member
திருமுக்கூடல் அருள்மிகு ஸ்ரீஅப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்

இந்த புண்ணிய ஸ்தலம் செங்கல்பட்டிலிருந்து 20 கி.மீ.
காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம் அருகில் பாலாற்றைக் கடந்து மறுபக்கத்தில் உள்ளது.சென்னை 70 கி.மீ.
காஞ்சிபுரம் 20 கி.மீ. தாம்பரம் 39 கி.மீ.தூரம் உள்ளது.
பேருந்து வசதி தனியார் வாகன வசதி உள்ளது.
பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருமுக்கூடல்’ எனும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளது.
நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருமுக்கூடல்’ எனும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளது

மூலவர் திருநாமம் ஶ்ரீ அப்பன் வேங்கடேசப் பெருமாள்
தாயார் திருநாமம் ஶ்ரீஅலர்மேல் மங்கை
தலவிருட்சம் தேவதாரி, வன்னி மற்றும் சந்தனம் மரம்

பிரதான தெய்வம் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் நிற்கும் தோரணையில் கம்பீரமாகக் காணப்படுகிறார். பிரிகு மகரிஷி, ஸ்ரீ மார்க்கண்டேயர் மற்றும் ஸ்ரீ பூமாதேவி அவரை வணங்குவதைக் காணலாம்.
தாயார் தனிச்சன்னதியில் அருள் புரிகிறார்.

மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் தலத்தில், பஞ்ச (ஐந்து) தலங்களின் மூா்த்திகளையும் ஒரு சேர தரிசிக்கும் பேற்றினை நமக்கு அருளும் வகையில் ஒரு விழா நடைபெறுகிறது.

தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று தரிசனம் தரும் ‘பரிவேட்டை’ வைபவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் ஒரே நேரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதிப்பா். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பஞ்சமூா்த்திகளின் தரிசனத்தை ஒருசேரப் பெற்று மகிழ்கின்றனா்.

பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீஅனும னையும் பக்தியோடு வழிபடுகின்றனா். இந்தத் தலத்தில் ஸ்ரீஅனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார். இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.

1200 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்தக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகச்சிறப்புடன் பராமரிக்கப்படுகிறது. திருப்பதி சென்று வேங்கடவனை மனம் குளிர தரிசிக்க இயலாத அன்பா்கள், திருமலை தெய்வத்தை தம் மனக்கண் முன் நிறுத்தி திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்யலாம். அதன்மூலம் திருமலை வேங்கடவனை தரிசித்த நிறைவு நமக்கு ஏற்படும்.

தரிசனநேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரையும்
மாலை 4 மணி முதல் 6 மணி வரை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 8 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் 7 மணி வரை. பக்தர்கள் நேரம் அறிந்து தரிசனம் காண வேண்டும்.

ஜய ஜய ஜய ஜய கோவிந்தா
ஜய ஜய அர ஹர கோவிந்தா
அர ஹர ஜய ஜய கோவிந்தா
ஜய ஜய ஜய ஜய கோவிந்தா

ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ கோவிந்தா
ஓம் ஶ்ரீ அலமேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ அப்பன் வேங்கடேசப் பெருமாள் நமோ நமோ

நன்றி கூகுள்

1627874547578.png


1627874559056.png


1627874566389.png

1627874574530.png
 
Back
Top