• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Visalakshi Ramani

Well-known member
LIFE is strange!

My neighbor brought in prasadham from their village temple today.
There were five different items in a neat tray upto the brim in big cups.

They had spent roughly what I had spent for my pooja 2 days ago.
I also had put in 2 hours of hard work to get my empty vessels back. :(

Today I wonder how much of prasAdham my neighbor would have got from their temple so as to spare for me five full cups divine goodies!
 

Visalakshi Ramani

Well-known member
Music can be dominated by vEdhAlam and VarAgam.

VedhALam = vENdAm thALam

VarAgam = varAdha rAgam

It is said that in music "Sruthir mAthA Laya pithA"
meaning Sruthi is the mother and Layam is the father of good music.

Half the music we hear here belongs to the orphans' group
since they do not have either mother (sruthi) or father (thALam).

One eyed man is the king in the land of blind people. :cool:
It is wisdom not to go there with two eyes and get them poked! :scared:
 

Visalakshi Ramani

Well-known member
# 249. The new culture - to let the hair loose!

ஒரு காலத்தில் பெண்கள் விஸ்தாரமான
தலை அலங்காரம் விரும்பினர் .

பழைய காலத்துப் படங்களையும், சிலைகளையும் பாருங்கள்.
அதில் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்ளுவர் .

பிறகு கொஞ்சம் சிம்பிளான தலை அலங்காரம் தொடங்கியது.

ஆனால் அப்போதும் அவிழ்ந்த கூந்தல்
அனுமதிக்கப் படவில்லை. :nono:

"தலையை விரிச்சுப் போட்டுண்டு நிக்கறா காளி மாதிரி!"

ராமாயணத்தில் விரிவாகப் ப்ராஜெக்ட் செய்தார்கள்
கைகேயி தலைவிரிகோலமாக
தசரதனை ஆட்டிப் படைத்த காட்சியை. :whip:

பாரதப் பாஞ்சாலியின் விரிந்த கூந்தலைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் அறியாதவர்கள் இல்லை.

தலை விரி கோலம் என்றாலே எதோ விரும்பத் தகாத சம்பவம்
அல்லது மிகப் பெரிய இழப்பைக் குறிப்பது என்று ஆயிற்று.

இப்போது ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு,
ஒன்றுடன் ஒன்று தலை மயிர் ஒட்டிக்கொள்ளாமல்
காற்றில் பறக்க வருகின்றார்கள். :mullet:

குட்டை முடியே காற்றில் பறந்தால் பார்க்கத் தாங்காது.

இடுப்புக் கீழேயும், முழங்கால் வரையிலும் முடி உள்ளவர்கள்
இப்படி கல்யாணத்திற்கும், கோவிலுக்கும் வந்துவிடுகிறார்கள்!

தனக்காகத் தெரியவில்லை என்று யாராவது சொல்லப் போனால்
கொஞ்சமும் பிடிக்காது இந்தக் காலத்துப் பெண்களுக்கு!

எப்போது, எங்கிருந்து வந்தது
இந்தத் தலை விரி கோல மோஹம்??? :doh:​
 

Visalakshi Ramani

Well-known member
# 250. Strange aaseervaadam!

(நிறையக் கல்யாணம் பண்ணிண்டு ???) :shocked:

அண்மையில் ஒரு திருமணத்தின் போது
ஆசீர்வாதம் செய்தார் அவர்கள் வாத்தியார்,

"நிறையக் கல்யாணம் பண்ணிண்டு நன்னா இருங்கோ" என்று!

நிறையக் கல்யாணம் எப்போது செய்வார்கள்?
எதற்குச் செய்வார்கள்? எனக்குத் தலை சுற்றியது

"ஆயிரம் காலம் தாலியைக் கட்டிண்டு இரு!" என்றால்
இருவரையும் வாழ்த்தியது போல ஆகிவிடும்

இது என்ன "நிறையக் கல்யணம் பண்ணிண்டு"!
மனத்தை என்னமோ செய்தது எனக்கு! :sad:

காரணம் இப்போது பெருகி வரும் divorce ரேட்டும்.....
செகண்ட் இன்னிங்சுக்கு எல்லோரும் தயாராவதும்!

பிறகு வேண்டுமென்றே வேறு கோணத்தில் யோசித்து
என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன் !

அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம்
போன்றவற்றை அவர் குறிப்பிட்டார் என்று எண்ணினேன்.

அப்போது என் மனம் அவ்வளவு சங்கடப் படவில்லை.

செய்வது திருந்தச் செய்யவேண்டும் :laser:
சொல்வது திருந்தச் சொல்லவேண்டும்! :blabla:
 

Visalakshi Ramani

Well-known member
Deceptive appearances

Case 1:

While making a right angled turn, no vehicle can actually make a right angled turn. The path will be smooth curve demanding more space than the actual right angled space.

That is why the compound walls of the corner houses are rounded off - to let the passing vehicles make the turn easily.

One Einstein in the colony had parked his car outside the gate aligning it with the entrance gate.

When the call taxi driver made the turn , his car kissed lightly the other car parked wrong. Immediately the huge gate was closed so that the taxi can not go out.

The people who owned the car that got kissed came out running blocking the path of the travelers.

There was a lot of heat and sound in the exchanged heated words. But the clever driver never lost his cool....WHY?

He had the presence of mind to photograph the position of the car, the actual damage caused and every other detail before the noisy party turned up!

Case 2:

The servants keep their mobile switched off so that the malik/ malkin can not reach them - whenever they want one day off just like that!

Looking at the face who would credit them with so much intelligence???
 
Last edited:

Visalakshi Ramani

Well-known member
# 251. மாவும், உப்பும்.

பிறந்தவுடனேயே தாயைப் பறி கொடுத்துவிட்டார் அவர்.

தாயில்லாப் பிள்ளை என்று செல்லம் கொடுத்துக் அவரைக்
குட்டிச் சுவராக்கினார்கள் குடும்பதில் உள்ள எல்லோருமாக.

படிப்பும் ஏறவில்லை, தலை எழுத்தும் சரியாக இல்லை.

எப்படியாது பிரயோஜகனாக்க விரும்பிய அவர் அண்ணன்
என்னென்னவோ செய்து பார்த்தார். ஊஹூம்! பயனில்லை!

கடை வைத்துக் கொடுத்தால் அவர் :popcorn:
கடை சாமான்களைத் தின்று தீர்த்தார். :hungry:

அவர் மாவு விற்கப் போனால் புயல் காற்று வீசியது.
அவர் உப்பு விற்கப் போனால் பெருமழை பெய்தது.

ஆனால் ஒரு குருட்டு அதிர்ஷ்டம் கூடவே வந்தது!

ஹோமியோபதி டாக்டர் என்ற போர்டு போட்டுக் கொண்டு
துணிந்து ப்ராக்டீஸ் செய்யத் துவங்கினார் ஒரு நகரில்.

யாராவது நோயாளிகள் வந்தால் நன்றாக தெய்வத்தை வேண்டி
புத்தகத்தைத் திறந்து
கண்ணில் முதலில் படும் மருந்தைக் கொடுப்பார்.:cool:

என்ன அதிசயம்! கை ராசிக்காரர் என்ற பெயர் விரைவிலேயே!
குருட்டு அதிர்ஷ்டம் இவ்வளவு குருடாக இருக்குமா என்ன?

பழைய ஜனாதிபதியின் பெயரும் இவர் பெயராக இருந்ததால்
அதுவும் ரோரிங் பிராக்டிசுக்கு நன்கு உதவியது.

மாவும், உப்பும் ஏமாற்றியவரை, மருந்து காப்பாற்றியது! :thumb:​
 

Visalakshi Ramani

Well-known member
# 252. HARI the terror!

பயங்கரவாதிகள் பலவிதம்; அதில் இவன் தனி விதம்.

உடன் படிப்பவர்கள் வைத்த செல்லப் பெயர்...
HARI the terror!

எது செய்வான் எது செய்யமாட்டான் என்றே சொல்லமுடியாது.
சகல விதமான குறும்புகளும் செய்வான்.

ஒரு நாள் காலையில் கண் விழித்தவர்களுக்கு
ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது! :shocked:

ஹாஸ்டல் வாசிகளான அவர்களின்
சைக்கிள் ஒன்று கூடக் காணோம்!

அது இல்லாமல் முடியாது அவ்வளவு பெரிய campusஇல்!
எல்லோரும் தேடினாலும் ஒரு க்ளூ கூடக் கிடைக்கவில்லை.

எல்லாம் கற்பூரம் போலக் கரைந்து விட்டனவா? :confused:
அல்லது எறும்புக் கூட்டகள் தின்று ஏப்பம் விட்டு விட்டனவா?

தலையைச் சொறிந்துகொண்டு விழித்த ஒருவன் கண்ணில்
பட்டது... மரத்தில் காய்த்துத் தொங்கும் சைக்கிள்கள்!

மாங்காய், தேங்காய் காய்த்துத் தொங்குவது போலவே
தொங்கின அத்தனை பேர்களின் சைக்கிள்களும்!

இரவோடு இரவாக நிஷாச்சர் (அரக்கன்) போல
கயிற்றில் கட்டி மேலே ஏற்றி இருக்கிறான் ஹரி.

நல்ல வேளை போலீஸ் வந்திருந்தால் மானம் போயிருக்கும்.

இத்தோடு போயிற்றே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் வார்டன். :nod:

இன்று அந்த terror ருக்கு இரண்டு tiny terror பேரன்கள்!!!
 

Visalakshi Ramani

Well-known member
The person who distributes flowers offered to Devi, takes an extra long piece for herself. The person in charge of distribution of the neivedhyam has two options.

If the kartha is present she lavishly distributes the neivedhyam leaving behind empty vessels. If the kartha is absent and lives in another city maximum neivedhyam is withheld to be taken home later.

Is there anyone who touches the honey and does not lick his fingers???
 

Visalakshi Ramani

Well-known member
It is a good feeling to be treated as a V.I.P customer

and bask in the borrowed glory for a welcome change!

(Thanks to my very influential and very famous brother!) :thumb:
 

Visalakshi Ramani

Well-known member
Thank you dear sister!
Oh boy! Am I happy that I was missed during my brief absence from the forum. It was inevitable since my MAlik ( my Lord and Master) suddenly fell ill on Christmas Day.
Even though we were completely unaware of the seriousness of the health issue, God guided us and goaded us to make the right decisions and go to the right doctor at the right time.
Things could have gotten much worse - had we delayed our visit to the doctor.
God never forsakes those who trust in Him.
 

Visalakshi Ramani

Well-known member
When there is a crisis we find new energy to face the tasks from an unknown source - like Cosmic Energy or Solar Energy.

Once the task is over we go back to our normal mode with creaking joints and groaning limbs.

Maybe there is a HanumAnji ( I am not talking about our common ancestor) inside each of us - who rises to the occasion and then disappears later once the crisis over!
 

Visalakshi Ramani

Well-known member
# 253. இல்லாத ஷாம்பூவைத் தேடி...

என் நண்பியின் மாமியார் ரொம்பவும் selective.

மைசூர் சந்தன சோப்பு தான் தேய்ப்பார்.
சன் லைட் சோப்பில் துணி துவைப்பார்.
ஒரு ஜாஸ்மின் ஷாம்பூவில் தான் தலைக் குளியல்.

வயது தொண்ணூறை நெருங்கிவிட்டது...
but no compromises or adjustments!!!

அந்த பெரிய ஷாம்பூ பாட்டில் தீர்ந்து விட்டது.
அதைத் தேடித் தேடித் தளர்ந்து போனாள் மருமகள்.

எத்தனை கடைகள் உண்டோ அத்தனையும் ஏறி இறங்கினாள்.

எல்லோரும்," ஸ்டாக் இல்லை!" என்று 'கதை'த்த போது,
ஒருவர் மட்டும் துணிந்து உண்மையைக் கூறினார்.

"அந்த ஷாம்பூ production நிறுத்தி
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன!"

இல்லாத ஷாம்பூவை தேடி அலைந்தவளுக்கு
இதைக் கேட்டதும் வந்தது எதுவாக இருக்கும் ....

இல்லாததைத் தேடி அலைந்ததால் துக்கமா?
இனி மேல் தேடவேண்டாம் என்ற ஆனந்தமா?
 

Visalakshi Ramani

Well-known member
# 254. பயமுறுத்திய புகை.

பள்ளியில் ஐந்தாவது படிக்கும் போது
வகுப்பு வாத்தியார் ஒரு விந்தை புரிவார்.

வாய் வழியாகப் புகையை இழுத்து விட்டு
மூக்கு வழியாக விடுவது சர்வ சாதாரணம்.

இவர் வாய் வழியாக உள்ளே சென்ற புகையைக்
காதுகள் வழியாக வெளி விடுவார்.

எல்லோருக்கும் அது அதிசயமாக இருக்கும்!

ஆனால் எல்லோருக்கும் ஒரே சமயத்தில்
இதைச் செய்து காட்ட மாட்டார் அவர்.

யாரவது ஒருவரைத் தன் மேஜை அருகில்
வரவழைத்து இந்த விந்தையைச் செய்வார்.

"ஆ!" என்று அவர்கள் பார்க்கும்போது மெதுவாக
சிகரட்டால் அவர்கள் கையைச் சுட்டு விடுவார்.

இது அவருக்கு ஒரு விளையாட்டாம்.

அவர் ஒரு சாடிஸ்ட் என்று எனக்கு இப்போது தெரிகிறது.
ஆனால் அப்போது அது யாருக்குமே தெரியவில்லை!
 

Visalakshi Ramani

Well-known member
#1,528
# 255. "நமஸ்காரம் பண்ணினால் காசு!"

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்; நிஜம் தான்.

அந்த சமர்த்துக் குழந்தை எங்கே போனாலும் அந்த
வீட்டுப் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவான்.

உச்சி குளிர்ந்துவிடும் அவர்களுக்கு!
இந்தக் காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா ???

வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டு
ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுப்பார்கள்.

அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுவான்,

"யார் கண்ணா உனக்குப் பெரியவர்களை
நமஸ்காரம் பண்ணச் சொல்லிக் கொடுத்தார்கள்?"

"நமஸ்காரம் பண்ணினால் காசு கிடைக்குமே
அதனால் நானே தான் பண்ணுகிறேன்!"

எத்தனை புத்தி! எத்தனை observation!

அவன் மிகவும் இளவயதிலேயே நல்ல வேலையில்
பணத்தை வாரிக் குவிப்பதில் என்ன அதிசயம்?
 

Visalakshi Ramani

Well-known member
# 256. One person can make a difference!

பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சனை இருப்பது போலவே
எனக்கு வருடாந்திரப் பிரச்சனை ஒன்று உண்டு.

அது மாதங்களில் சிறந்த மார்கழியில் நிகழும்!

எத்தனையோ ஆண்டுகளாகத் திருப்பாவை திரும்வெம்பாவை கோவில்களில் பாடி வந்த எனக்கு
அவற்றைத் தவறாமல் பாட வேண்டும்.

வேறு சில மாமிகள் கோவிலுக்கு வருவதே வம்பு வளர்பதற்காக.

அந்த chat மாமிகளுக்கும் இந்தப் பாட்டு மாமிக்கும்

( இந்த காலனியில் அது தான் என் பெயர்!
விசாலாக்ஷி ரமணி என்றால் யாருக்கும் தெரியாது!)

தேவாசுர யுத்தம் போலத் தொடர்ந்து நடக்கும்.

முதல் ஐந்து நாள் பாடினேன்.

குடத்தில் கூழாங்கற்களைப் போட்டு உருட்டுவது போலத்
தொடர்ந்து பேசவும் வெறுத்துப் போய்விட்டது!

90 நிமிடத் தூக்கத்தையும் தியாகம் செய்து
கோவிலுக்குப் போவது இதற்காகவா?

கோபித்துக் கொண்டாலோ B.P. எகிறி விடும்!
கடந்த பத்து நாட்களாக silent audience தான்.

இன்று என் பூஜை! நேற்றே சொல்லிவிட்டேன்
முதல் பதினைந்து பாசுரம் பாடுவேன்;
எல்லோரும் cooperate செய்யவேண்டுமென்று!

நல்ல வேளை!'chat' மாமி புரிந்து கொண்டார்.
இன்று என் பூஜைக்கு வரவில்லை.

எத்தனை அமைதி! எத்தனை discipline ?
அழகாக எல்லாமே பாட முடிந்தது

one person can make a lot of difference -
either by his presence or by his absence.

(this happened in 2012. It is a recurring incident.
People can neither live with me nor without me!)
 

Visalakshi Ramani

Well-known member
# 257. New dress ....a real mood lifter!

கல்லூரி நாட்கள் ஒன்றில் ஏதோ கோபம் வந்து விட்டது.

'பும்' என்று முகத்தை வைத்துக் கொண்டு
இருந்திருப்பேன் போல.

சீரியஸ் professor அன்று கேட்டார்,
"என்ன ஆயிற்று உனக்கு என்று?"

எப்போதும் அத்தனை பற்களையும் கட்டிக் கொண்டு,
வால்தனம் செய்யும் என்னை
அப்படிப் பார்த்தது அவருக்கே தாங்கவில்லையாம்.

"எனக்கே தெரியவில்லை மிஸ்!" என்றேன்.

அன்று அவர் ஒரு நல்ல அறிவுரை கூறினார்.
அது இன்று வரையிலும் பயன் தருகிறது.

"மூட் சரியாக இல்லாவிட்டால் அன்று ஒரு
புதிய ஆடை அல்லது நல்ல ஆடை அணிந்து கொள்!
சிறிது நேரத்தில் உன் மூட் தானாகவே சரியாகிவிடும்!"

உண்மையிலேயே நியூ டிரஸ் ஒரு மூட் லிஃப்ட்டர் தான்!
அன்றிலிருந்து 'மூட் அவுட்' என்றால் 'நல்ல டிரஸ் இன்!'

நீங்களும் முயன்று பாருங்கள்
உணர்வீர்கள் இதன் உண்மையை.

Observation and inference:

Does this explain why some women walk with their nose in the air like an elegant butler - once they wear a rich brocade silk sari along with some flashing jewels and flowers???
 

Visalakshi Ramani

Well-known member
# 258. "வன்டெ ரூம் மன சேத்துல காதா?"

முன்பெல்லாம் பிள்ளையைப் பெற்றவர்கள் கை
சற்று ஓங்கி இருக்கும். LONG LONG AGO!

இப்போதோ பெண்கள் கையும் (வாயும்)
பெண்களைப் பெற்றவர்கள் கையும் ஓங்கி உள்ளன.

அம்மாவிடம் சொல்லுவேன் நான் அடிக்கடி,

"பிள்ளைகளைப் பெற்றிருக்க வேண்டிய காலத்தில்
நீங்கள் பெண்களைப் பெற்றீர்கள்.

நாங்கள் பெண்களைப் பெற்றிருக்க வேண்டிய காலத்தில்
பிள்ளைகளைப் பெற்று இருக்கிறோம் என்று"

ஆந்திர தேசத்தில் வரதக்ஷணை பரிமாற்றம் அதிகம்

மகன் மெடிக்கல் / இன்ஜினியரிங் காலேஜ் சேர்ந்த உடனே
அவன் மதிப்பு 'மார்கெட்டில்' பல மடங்கு உயர்ந்து விடும்.

சாக்ஸ் அணியாமல் ஷூ போட்டுக் கொண்டும்,
UNDIES அணியாமல் PANTS போட்டுக் கொண்டும்,

BODICE அணியாமல் BLOUSE போட்டுக் கொண்டும்,
வாயைக் கட்டி, வயிற்றைக் காட்டி எப்படியோ
வரதக்ஷணை கொடுத்து விடுவார்கள்!

என் ஒரு நண்பிக்கு இரண்டு மகள்கள்.

அவளைத் தவிர மற்ற எல்லோரும்
அவளுக்காகக் கவலைப் பட்டார்கள்!

அவள் சிரித்துக் கொண்டே சொல்லுவாள்,
"வண்டெ ரூம் மன சேத்துல காதா?"

( = சமையல்அறை நம் கையில் அல்லவா?)

கில்லாடிப் பெண் தான் அந்த நண்பி!

1. ஆணை ஆளுவதற்கு உணவை உபயோகிக்கலாம்.
2. உணவு சமைக்கும் அறை நம் பெண் கையில்.
3. பெண்ணோ நம் கையில்!
4. இனி என்ன கவலை

என்ற அத்தனை தத்துவங்களையும்
அந்த ஒரு கேள்வியில் அடக்கி விடுவார்!

அவள் சொன்னது உண்மை தான்.

THE SHORTEST ROUTE TO A MAN'S HEART IS
THROUGH HIS STOMACH.
 

Follow Tamil Brahmins on Social Media

Latest posts

Top