Vaagmi
Well-known member
ஜெமோ வின் கருத்து:
ஜெமோ வின் கருத்து:
1. எழுத்தாளர்களுக்கு அந்தரங்கம் இருக்க முடியாது.
இதில் எதுவும் எனக்கு உடன் பாடு இல்லை. காரணம்? மேலேபடியுங்கள்.
1. எழுத்தாளனுக்கு அந்தரங்கம் உண்டு. எழுத்தாளனின் விலை மதிப்பில்லாப்பொக்கிஷம் அது.அந்தப் பொக்கிஷத்தை அவன் மிக கவனமாகப் பாதுக்காக்கிறான். ஆழ்ந்து சிந்தித்து, தவம் செய்து, குருவி போல் சிறுகச்சிறுகச் சேர்த்து, பலமுறை வடிகட்டி, சக்கைகளையெல்லாம் களைந்து சாறைமட்டும் கெட்டிப்படுத்தி,தேடித்தேடி சேகரித்துவைத்திருக்கும் ஒரு நிதி அது. ரணப்பட்டபோதும் கூத்தாடி மகிழ்ந்தபோதும் காரணமாய் மிஞ்சிவிட்ட அனுபவங்கள் அவை. எழுத்தாளன் காணும் எல்லாவற்றையும் தனது அந்தரங்கம் என்ற உறைகல்லில் உறைத்துப்பார்த்து அங்கிருக்கும் மூசைத்தங்கத்தின் துகள்களொடு ஒப்பிட்டுத்தான் எழுதுகிறான். அவனுடைய அந்தரங்கத்தில் அவலங்களும் உண்டு. இப்படித்தான் பார்க்கில் புல்தரையில் படுத்து விளையாடும் குழந்தைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும்போது எட்டுக்கால்களில் விரைவாகநடந்து சென்று கொண்டிருந்த பொன்வண்டு ஒன்றை சிறுவன் ஒருவன் அறியாமல் மிதித்துவிட அது பரிதாபமாக இறந்தபோது மனம் பரிதவித்துப்போகிறது ஒரு எழுத்தாளனுக்கு. ஏதாவது செய்து அதை உயிர்ப்பிக்க முடியுமா என்று தவித்து மனம் சோர்ந்து போகிறான். இந்தத்தவிப்புதான் ஆதிகாவியமான ராமாயணத்துக்குக் கூட மூல காரணம் எனக்கருதப்படுகிறது. இதில் எழுத்தாளன் சாதாரண மனிதனிலிருந்து சற்று வேறு படுகிறான். ஏழுத்தாளனுக்கு அந்தரங்கம் உண்டு. அது மிகவும் சென்சிடிவ் ஆனது. ஜெயகாந்தன் கூறியதுபோல இந்த அந்தரங்கம் மிகப்புனிதமானது மட்டுமல்ல: மிக சென்சிடிவ் ஆனதும் கூட. அவ்வளவே. எனவே எழுத்தாளனை அகமும் புறமும் எல்லாமும் அம்மணமாக்கப்பட்டு வெளிச்சத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு திக்கம்பரனாக உருவகப்படுத்துவது எனக்கு உடன்பாடில்லை.
2. எழுத்தாளன் தன்னை முன் வைத்து எழுதுகிறானா? இல்லவே இல்லை. காணும் சம்பவங்களை தன்னுள் உறைத்துப்பார்த்து மெருகேற்றி நகாசு வேலைகள் செய்து வாசகனை முன்வைத்து எழுதுகிறான். எழுதுவது சென்று சேரவேண்டிய இடத்தை நினைவிலிருந்து அகல விடுவதில்லை அவன்.
3. எழுத்தாளன் சமூகத்தின் ஒரு துளி. எனவே அவனுடைய அந்தரங்கமும் சமூகத்தின் திரட்டிஎடுக்கப்பட்ட அந்தரங்கத்தின் ஒரு துளியாகவே இருக்கலாம். ஆனால் இதற்கு ப்ரதிநிதித்துவ முக்கியத்துவம் எங்கிருந்து வருகிறது? அப்படியெlல்லாம் ஒன்றுமில்லை.
4. அவனுடைய அகத்தின் மொழிவழி வெளிப்பாடு அல்ல. அவனுடைய அகமென்ற கண்ணாடியில் உலகின் நடைமுறைகளும் சம்பவங்களும் உருவாக்கும் ப்ரதிபலிப்புக்களின் மொழி வழி வெளிப்பாடு என்று வேண்டுமானால் கூறலாம்.
Dear Mr.Kunjuppu,
These are my views of what you brought in here. Thanks.

- எழுத்தாளன் தன்னை முன் வைத்து எழுதுகிறான்.
- எழுத்தாளனின் அந்தரங்கம் சமூகத்தின் அந்தரங்கத்தின் ஒருதுளி மட்டுமல்ல அதற்கு ஒரு ப்ரதிநிதித்துவ முக்கியத்துவமும் இருக்கிறது.
- அவனுடைய அகத்தின் மொழி வழி வெளிப்பாடுதான் அவன் எழுத்து.