The mantra that helps in having a Darisanam of Lord Murugan!

முருகப்பெருமானை தரிசிக்க உதவும் மூல மந்திரம் !

முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது.

இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ அதற்கேற்ப நமக்கு அரிய பல சக்திகள் கிடைக்கும் என்று கந்த குரு கவசத்தில் கூறப்பட்டுள்ளது.

முருகன் மூல மந்திரம் :

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது.

முருகன் மூல மந்திரத்தை எத்தனை முறை ஜபித்தால் எந்த வகையான அருள் கிடைக்கும்

ஒரு மனதோடு இம்மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும். அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது. நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.

இந்த உலகில் இணையற்ற ஒரு சக்தியை பெற இந்த மந்திரத்தை கோடி முறை ஜபிக்க வேண்டும். அதோடு சித்தர்களும் ஞானிகளும் கடுந்தவம் இருந்து அறிந்த பல வேத சூட்சும ரகசியங்களை நாம் எளிதில் அறியலாம். அந்த ரகசியங்களை முருகப்பெருமானே நமக்குள் அருள்பெறும் ஜோதியாய் தோன்றி கற்பிப்பார்.

இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறுங்கள்


1769580532271.webp
 
Back
Top