The glory of the water flowing from the sanctum sanctorum of the temple after the abhishekam is over

திருக்கோவில் கருவறையிலிருந்து அபிஷேகம் முடிந்து வெளிவரும் கோமுக நீர் மகிமை.

லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் தினமும் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர். ஆனால் அந்த பாவங்களை ஏற்றுள்ள கங்கையோ, ஆலயங்களில் உள்ள கோமுக நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு புனிதம் அடைகிறாள். இறைத் திருமேனியை உரசியபடி வெளியேறும் நீர் ஒப்பற்ற சக்தி கொண்டதாக திகழ்கிறது.

சிவ வைணவ ஆலயங்களில் மூலஸ்தான சுவாமிகளுக்கு திருமஞ்சன நீர் வெளியேறும் வாய்ப்பகுதிக்கு ஏன் கோமுகம் என்று பெயர் வைத்தனர் என்றால் கோ என்கிற பசுவின் உடம்பும் கருவறை போல இறை ஆற்றல் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே கருவறை மஞ்சன நீர் பசுவில் இருந்து பெறப்படுவது போல பாவிக்கப்படுகிறது.

கோவிலுக்கு செல்பவர்கள் கோமுகம் வழியாக வரும் அபிஷேக நீரைப் பருகுவதால் திருஷ்டி, தோஷம் பில்லி, சூனியம், ஏவல், துர்வினைகள் நீங்கப்பெற்று நோய்கள் நீங்கி குணம் பெறுவர். சர்வ மங்களங்களும் உண்டாகும்.

வியாபாரம் செழிக்க

கோவிலில் மூல ஸ்தானத்திலிருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்திற்கு கோமுக நீர் என்று பெயர் ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து அருள்பாலிக்கும் இடமே கோமுகமாகும். விசாகம் நட்சத்திரத்தன்று கோமுக நீரை எடுத்து வியாபார ஸ்தலம் , கல்லாபெட்டியில் தெளித்தால் வியாபாரம் நன்கு செழிக்கும் அந்த கோமுக தீர்த்தத்தை தந்த மூலவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கோமுகவழி என்பது என்ன?

கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த திரவியங்கள் வழியும் பாதைக்கு கோமுகம் என்று பெயர். இதில் வரும் நீரை நிர்மால்யதீர்த்தம் என்று சொல்வர். இதைத் தலை, கண்களில் வைத்துக் கொள்வர். சிவாலயத்தில் கோமுகத்திற்கு மேலே வடக்கு நோக்கியபடி துர்க்கை சந்நதி இருக்கும். கோ என்றால் பசு. சில கோயில்களில் பசுவின் முகத்தின் வடிவத்திலேயே கோமுகம் அமைந்திருப்பது சிறப்பு.

கோவில் கோமுகம் மிக புனிதமானது. அங்கு வழியும் தீர்த்தம் நம்முள் இருக்கும் அனைத்து கெடுதல்களையும் விலக்கும். கோமுகததை சுத்தம் செய்து, சந்தானம் குங்குமம் இட்டாலே அங்கு உறையும் இறைக்கு நாமே நேரடியாக பூசை செய்த பலன் கிடைக்கும்.
 
Back
Top