அதிவ்ய பித்ருக்களை காக்கும் தேவர்களுக்கு ( இதிலும் பலம் குழுக்கள் உண்டு ) நாந்தி சிராத்தம் செய்கிறோம். இந்த தேவர்களின் மனைவிக்கும், பெண் குழந்தகளுக்கும் பூஜை செய்வதே சுமங்கலி பூஜை எனப்படுகிறது. இவர்களது ஆசீர்வாதமும் பெறப்படுகிறது.
ஆதலால் அஷ்டோத்திரம் எதுவும் கிடையாது. நாந்தி செய்து விச்வேதேவர்களின் ஆசி பெறுகிறோம் விஸ்வேதேவர்களின் மனைவிக்கும், பெண் குழந்தைகளுக்கும் சுமங்கலி பூஜை செய்து ஆசி பெறும் போது அந்தந்த வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்கள் ஆசியையும் சேர்ந்து பெறவே அவர்கள் பெயரையும் சேர்த்து சொல்லுகிறோம்.பெண் குழந்தைகளுக்காகத்தான் சிறிய பெண் குழந்தைகளையும் சுமங்கலி பூஜையின் போது சேர்த்து கொள்கிறோம்.