• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

State elections.

Status
Not open for further replies.
With the announcement of poll dates, the Govt cannot announce any new schemes; cannot make postings of officials; cannot transfer officials. Lot of allegations on the ruling party will be made by all other political parties. Use of "stickers" will end.

Today is "chandrashtamam" for Rishabha raasi. Hence, the DMK is at a disadvantageous position - as per one astrologer-friend.

On 8th Mr Vijayakanth will announce his decision on the alliance and number of seats his party would be contesting.

The BJP, Pattali Makkal Katchi, Marumalarchi DMK, the Two left parties, several smaller parties will be trying to finalise their poll strategy / alliance shortly.

It is already hot (weather).. It is going to be hotter. No doubt the ruling party will find the going tough.
 
"chandrashtamam" will be a bad day for Rohini and mrihaseeridam for that day only. It will not have any bearing in future prediction.
 
Advertisement

[h=2]பதிவு செய்த நாள்[/h]05மார்
2016
01:47


Tamil_News_large_1471781.jpg



எதிர்க்கட்சி என்ற தகுதி இல்லாவிட்டாலும், தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கட்சி தி.மு.க., தான். எனவே, அ.தி.மு.க.,வுக்கு யதார்த்தமான மாற்று என்று,பலரும், தி.மு.க.,வை கருத வாய்ப்பு உள்ளது.


ஆனால், அ.தி.மு.க., மீது, மக்களுக்கு, சில கோபங்கள் இருந்தாலும், அவர்களுடைய எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே, தி.மு.க.,வுக்குப் போய்விடும் என்று நம்புவதற்கான எந்த சூழலும் நிலவவில்லை. ஏனெனில், தி.மு.க.,வின், 2006 - -2011 ஆட்சிக்காலத்தின் மீதான வெறுப்பு, மக்கள் மனதில் இருந்து முற்றிலும் துடைக்கப்படவில்லை.அந்த ஆட்சி காலத்தில் நிலவிய கொடூரமான மின்வெட்டை நினைத்துப் பார்த்தாலே இப்போதும் வேர்க்கிறது! ஜெயலலிதா, அதை எப்படி கையாண்டார், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்னென்ன என்பதெல்லாம், கடைக்கோடி வாக்காளருக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த ஐந்தாண்டு காலத்தில் மின்வெட்டு மிகவும் குறைந்துவிட்டது என்ற, ஒரு வரி உண்மை மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்களுக்குக் கூட அதிகாரமில்லை என்பது ஒரு பக்கம் என்றால், கருணாநிதியின் ஆட்சியில், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அதீத அதிகாரம் வந்துவிடும் என்பது, இன்னொரு பக்கமாக உள்ளது.இதனால் பொதுமக்கள் சந்தித்த மிரட்டல்களையும், அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் நினைத்துப் பார்த்தால்; தன்னிச்சை ஆக செயல்பட முடியாத, அ.தி.மு.க., அமைச்சர்களே பரவாயில்லை என்ற எண்ணம், மக்களுக்கு தோன்றி விடுகிறது. அதேபோல், தி.மு.க., ஆட்சியில் நிலவிய நில அபகரிப்பு, இப்போதும் மக்களால் மிரட்சியோடு தான் நினைவுகூரப்படுகிறது.இன்று, தி.மு.க., 'ஊழலற்ற ஆட்சி' என்று பிரசாரம் செய்து வருகிறது. உலக பிரசித்தி பெற்ற, '2ஜி' ஊழலில், இன்றளவும் தி.மு.க.,வின் பங்கு பற்றிய வழக்கு முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை மறந்துவிட முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஈழப் பிரச்னையை காரணம் காட்டி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய, தி.மு.க., மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த இரண்டாண்டுகளில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை எனும்போது, இதை, பொருந்தாக் கூட்டணி என்றோ, நிர்ப்பந்த கூட்டணி என்றோ தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த நிர்ப்பந்தம் எதன் மூலம் வந்தது என்பதையும் யோசிக்க வேண்டும்.

கருணாநிதிக்கு, 92 வயது ஆகிறது. இன்றும் அவரே, தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர். கடந்த மைனாரிட்டிஆட்சியின் போதே அவர் ஸ்டாலினை முதல்வராக்கி இருக்க வேண்டும். அப்போது, இவர்கள் தயவில் தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு இருந்ததால், இந்த முடிவுக்கு, காங்கிரஸ் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவித்து இருக்காது.அது நடக்காததால்,இன்றளவும் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் பட்டியலுக்கு வரவே முடியவில்லை. ஸ்டாலின் முதல்வர் வேட்பாளரானால், தி.மு.க.,வை மக்கள் ஓரளவு நம்ப வாய்ப்பு இருக்கிறது. காரணம், 'ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே' என்று, நடுநிலை வாக்காளர்கள் எண்ணக் கூடும்.

தி.மு.க.,வின் இன்னொரு முக்கியமான பிரச்னை, நாட்டின் பெரும்பான்மையான மதத்தை, எப்போதும் துாஷித்துக் கொண்டே இருப்பது. ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது மதம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டே இருப்பது தான், திராவிட அரசியலின் முக்கியமான பிரச்னை.நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது பண்டிகையின்போது வாழ்த்து சொல்லாமல் இருப்பது; பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே சிறுபான்மை விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது என, தி.மு.க., என்றுமே, மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் மக்களை பிரித்து வைக்கவே விரும்பியிருக்கிறது.இப்படி, மக்களை பிரிக்க நினைக்கும் ஒரு தலைவரை, எந்த காரணம் கொண்டும், மீண்டும் முதல்வராக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ இல்லை. அத்தனை மோசமான நிலையும் தமிழகத்துக்கு இப்போதைக்கு வந்து விடவில்லை.இதை புரிந்து கொண்டு தான், ஸ்டாலின் வேறு ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கப் பார்க்கிறார். ஆனால், அது அவரது வீட்டுக்குள்ளேயே தடுக்கப்பட்டு விடுகிறது. காலமாற்றத்துக்கு ஏற்ப, தம்மை விட வயது குறைந்தவர்களிடம், கட்சியை ஒப்படைத்துவிட்டு, வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, ஊழல்வாதிகளை வெளியேற்றி, புதுரத்தம் பாய்ச்சாத வரை தி.மு.க.,வை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை என்பதை, தி.மு.க., உணர வேண்டிய தருணம் இது.
தொடர்புக்கு: [email protected]
கட்டுரையாளர் - ஹரன் பிரசன்னா -
- கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரிகிறார். 'சாதேவி' உள்ளிட்ட நுால்களின் ஆசிரியர்.

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top