Sri Sudarsana Jayanti Worship

அமைதியும், ஆரோக்கியமும் தரும் ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி வழிபாடு
ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்குரிய ஆயுதங்கள் மொத்தம் ஐந்து.

1. சுதர்சனம் என்னும் சக்கரம்
2. பாஞ்சஜன்யம் என்னும் சங்கு
3. கவுதமோதகீ என்னும் கதை
4. நந்தகம் எனப்படும் வாள்
5. சாரங்கம் எனப்படும் வில்

இவற்றில் முதன்மையானது ஸ்ரீசுதர்சன சக்கரமாகும்.
விஷ்ணு பகவானிற்கு எத்தகைய சக்தி இருக்கின்றதோ அத்தகைய சக்தி இச்சகரத்திற்கும் உள்ளது. ஆயுதங்களின் அரசன் எனபோற்றப்படுவதும் இதுவாகும். இதனால் இதனை சக்கரத்தாழ்வார் எனவும் அழைப்பர்.

எனவே இந்த சிறப்பு மிக்க சக்கரத்தாழ்வாரின்
பெருமைகளை இங்கே காண்போம்.சுதர்சனம் என்ற பெயருக்கு பார்ப்பதற்கு அழகானவர். நல்வழியைக் காட்டுபவர் என்று அர்த்தமாகும். ஸ்ரீசுதர்சன சக்கரம் ஒவ்வொரு விஷ்ணு ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

1. ஆசக்கரம்,
2. விசக்கரம்,
3. சக்கரம்,
4. தீ சக்கரம்,
5. சஞ்சக்கரம்,
6. வாலா சக்கரம்
என்னும் ஆறு (கோண) சக்கரங்களின் நடுவில்அமைந்திருக்கும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை (ஆழ்வாரை) பூஜிப்பதால் அனைத்து நன்மைகளும் கிட்டும், எதிரிகள் விலகி ஓடுவார்கள்.அனைத்து பயங்களும் விலகும், உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் ஏற்படும்.

ஸ்ரீ சுதர்சனருக்கு உபதேவதையாக ஸ்ரீ நரசிம்மர் பிரகாசிக்கிறார்.
ஆகவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு
பின்புறத்தில் யோகநரசிம்மர் வீற்றிருப்பதை காணலாம். பொதுவாக நவக்கிரகங்களால் ஏற்படும் உபாதைகள் திருஷ்டி தோஷம், வியாதி,பயம், எதிரித் தொல்லை போன்றவை நீங்கவும் ஸ்ரீ சுதர்சன மூர்த்தியை வழிபடலாம். சைவத்தில் சிவனின் அம்சமாக சூலத்தை, வேலைமுருகனாக ஆராதிப்பதைப் போலவே வைணவத்தில் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை ஸ்ரீ விஷ்ணுவாகவே ஆராதிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சித்திரையில் சுதர்சன ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி அன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீ மகாசுதர்சன மூர்த்தியை
அர்ச்சித்து, ஸ்தோத்திரம் சொல்லி, ஸ்ரீ சுதர்சன மந்திரம் ஜபித்து, வணங்கி வழிபாடுகள் செய்தால் எதிரிகளின் தொல்லைகளிலிரு ந்து உடனே விடுபடலாம். மகாலட்சுமியின் அருளால் செல்வந்தராகவும் ஆகலாம்.
 
Back
Top