• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Akilandeswari 108 Potri

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 108 போற்றி

இன்று 14/5/2021 வெள்ளிக்கிழமை அன்று அன்னையே அகிலாண்டேஸ்வரியே என்று அன்னையின் திருவடியை சரணடைவோம் !ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயார் திருவடிகள் போற்றி!

ஓம் அன்னையே அகிலாண்டேஸ்வரியே போற்றி
ஓம் அன்னத்தைப் பழிக்கும் நடையுடைய ஹம்ஸத்வனியே போற்றி
ஓம் அறிவிலா மூடன் எனக் கனுகி ரகிப்பாய் போற்றி
ஓம் அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதியே போற்றி
ஓம் அபயமளிக்கும் அபயாம்பிகையே போற்றி
ஓம் அழகுக் கடலான அங்கயற்கண்ணி போற்றி
ஓம் அழகிய ஸ்தன பாரங்களையுடைய அம்பிகே போற்றி
ஓம் அக்கினியாய் அருள் செய்யும் ஆவுடையே போற்றி
ஓம் ஆதி சக்தியானவளே ஆதரிப்பாய் போற்றி
ஓம் ஆதியந்த மற்ற பரம்பொருளே போற்றி
ஓம் ஆழமான பார்வையையுடைய அபிராமி போற்றி
ஓம் இன்பங்களெல்லாம் தந்தருள்வாய் ஈஸ்வரியே போற்றி
ஓம் இருளைப் போக்கி ஒளியைத் தரும் ஜோதியே போற்றி
ஓம் இரத்த பிஜனை சம்கரித்த பத்ரகாளி போற்றி
ஓம் இரவை ஏற்படுத்தும் சௌகந்திகா போற்றி
ஓம் ஈசனின் இடப்பக்கம் அமர்ந்தவளே போற்றி
ஓம் உம்பர்களுக்கு உவப்பளித்த உலகமாதா போற்றி
ஓம் ஊசிமேல் தவமிருந்த உலகநாயகியே போற்றி
ஓம் ஊனிலும் உயிரிலும் கலந்த உமையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே ஏகாட்சரி போற்றி
ஒம் என் இதயமே கோவிலாய் கொள்ளுவாய் போற்றி
ஓம் எல்லையற்ற குணநிதியே! ஏகாம்பரி போற்றி
ஓம் என்றும் பதினாறாய் விளங்கும் ஏலங்குழலி போற்றி
ஓம் ஏது செய்வேன் ஆதரிக்கும் நாயகியே போற்றி
ஓம் ஏழேழு பிறவியிலும் எனைக் காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரனைப் பெற்ற அன்ன பூரணியே போற்றி
ஓம் ஐசுவரியத்தை அள்ளித்தரும் சோமசுந்தரியே போற்றி
ஒம் ஒன்றே பலவான ஓங்காரி போற்றி
ஓம் என்னும் எழுத்திலே உறைந்தவளே போற்றி
ஓம் ஒளடதமாய் அங்கிருந்து ஆதரிப்பாய் போற்றி
ஓம் கயிலையில் வாழும் கற்பகமே போற்றி
ஒம் கரும்பு வில்லைக் கையில் கொண்ட கல்யாணி போற்றி
ஓம் கங்கா நதிக்கரை வாழும் விசாலாட்சி போற்றி
ஓம் காமேச்வரன் மகிழும் காமேச்வரி போற்றி
ஓம் காமத்தை ஜெயித்தக் காமாட்சி போற்றி
ஓம் கிளியைக் கையில் கொண்ட கின்னரரூபி போற்றி
ஓம் குதர்க்கமில்லா மனம்தருவாய் கோலவிழி போற்றி
ஓம் குவலயத்தை ரட்சிக்கும் கோமதி போற்றி
ஓம் குங்குமப்பூ நிறத்தாளே குமரியே போற்றி
ஓம் குகனைப் பெற்ற உமாதேவி போற்றி
ஓம் கேசவனின் தங்கையான ராஜ ராஜேஸ்வரி போற்றி
ஓம் கேட்டவர்க்கு வரமளிக்கும் காந்திமதியே போற்றி
ஓம் கோடி சூர்யப்ரகாச வதனி போற்றி
ஓம் சண்டமுண்டனை சம்கரித்த சாமுண்டி போற்றி
ஓம் சப்த ஸ்பரிச,ரூபரஸ்.கந்தங்களைப் பாணங்களாய் தரித்தவளே போற்றி
ஓம் சத்துருக்களை ஒடுக்கும் சாரதையே போற்றி
ஓம் சங்கரன் பாதம் பணியம் சமயாம்பா போற்றி
ஓம் சபேசனோடு நடமிடும் சிவகாமி போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி போற்றி
ஓம் சிந்தித்ததை அளிக்கவல்ல சிந்தாமணியே போற்றி
ஒம் சிரித்துப் புரமெரித்த சிவப்பிரியே போற்றி
ஓம் சிவனையே சோதித்த சாம்பவி போற்றி
ஒம் சீர்காழியில் உறையும் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் கம்ப நிசும்பரை வதைத்த துர்க்காதேவி போற்றி
ஓம் சூதறியா பாலகன் நான் துணையிருப்பாய் போற்றி
ஓம் சூரிய சந்திரர்களை தாடங்கமாய் அணிந்த அகிலாண்டேஸ்வரி போற்றி
ஓம் செல்வமே வடிவான செளந்தரி போற்றி
ஓம் சொக்கருக்கு மாலையிட்ட மீனாம்பிகே போற்றி
ஓம் சௌபாக்கியத்தைத் தரும் செளதாமினி போற்றி
ஓம் சௌந்தரியத்தின் பிறப்பிடமாம் சியாமளையே போற்றி
ஓம் ஞான சம்பந்தருக்கு அருளிய சிவசங்கரி போற்றி
ஓம் ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகே போற்றி
ஓம் தட்சனுக்காக வாதிட்ட தாட்சாயிணி போற்றி
ஓம் தனங்களை அள்ளித்தரும் தயாமித்ரையே போற்றி
ஓம் திக்விஜயம் செய்த தடாதகை தேவியே போற்றி
ஓம் தில்லையில் தாண்டவமிடும் சபேசினி போற்றி
ஓம் தீராவினை தீர்க்கும் தியாகேஸ்வரி போற்றி
ஓம் துஷ்டர்களுக்கு அச்சத்தை தருபவளே போற்றி
ஓம் தூய என் நெஞ்சிலே துணையிருப்பாய் போற்றி
ஓம் தேன் போன்ற குரலுடைய தர்மாம்பிகா போற்றி
ஓம் தேவாதி தேவர்களின் ஸேவிதையே போற்றி
ஒம் தேடிவந்து ரட்சிக்கும் கிருபாகரி போற்றி
ஓம் தை வெள்ளியிலே ஊஞ்சலிலே ஆடிடுவாய் போற்றி
ஓம் தொண்டர்களின் உள்ளமெல்லாம் குடியிருப்பாய் போற்றி
ஓம் தோகையே! தூயமணி மரகதமே போற்றி
ஓம் நவநிதிகளின் இருப்பிடமான நவாட்சரி போற்றி
ஓம் நாடெல்லாம் நயந்து அன்பு காட்டும் நிமலையே போற்றி
ஓம் நாத வடிவானவளே நிரஞ்சனியே போற்றி
ஓம் நிரந்தரமாய் ஆனந்தத்தைத்தரும் நிர்குணமே போற்றி
ஒம் பண்டாசுரனை வதைத்த பாலாம்பிகே போற்றி
ஓம் பர்வத ராஜன் மகளான பார்வதியே போற்றி
ஓம் பகலை உண்டாக்கிய பஞ்சாட்சரி போற்றி
ஒம் பதினாறு பேறுகளையும் அளிக்கவல்ல பதிவிரதே போற்றி
ஓம் பாபம் தொலைப்பவளே பராத்பரி போற்றி
ஓம் பிறப்பறுக்க வந்த புவனேஸ்வரி போற்றி
ஓம் பிணி தீர்க்கும் நாயகி பரமேஸ்வரி போற்றி
ஓம் பிரளய காலத்திலும் பிரகாசிக்கும் பைரவி போற்றி
ஓம் பீஜாட்சரத்தில் உறையும் பத்ராயை போற்றி
ஓம் பூதப்ரேத பைசாசங்களிடமிருந்து காப்பாற்றும் வாராஹி போற்றி
ஓம் பை நாகங்களை ஆபரணமாய் அணிந்தவளே போற்றி
ஒம் மஹிஷாசுரனை வதைத்த மர்த்தனியே போற்றி
ஓம் மலையாள தேசம் வாழும் மஹேஸ்வரி போற்றி
ஓம் மலையத்துவஜன் யாகத்தில் தோன்றிய அங்கயற்கண்ணி போற்றி
ஓம் மதுரமான சிரிப்பை உடைய மதுரகாளி போற்றி
ஓம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத மதனசுந்தரி போற்றி
ஓம் மலைவாழையை தோற்கடிக்கும் துடையையுடைய மகாராக்ஞ போற்றி
ஓம் மங்களத்தைக் கொடுக்கும் மங்களாம்பிகா போற்றி
ஓம் மன்மதனை ஆளும் மகா மாயா போற்றி
ஓம் மதங்க முனிவரின் தவப்பலனாகப் பிறந்த மாதங்கி போற்றி
ஓம் மந்தகாச முகமுடைய மலர் வதனி போற்றி
ஓம் மாரியாய் அருள் புரியும் கருமாரி போற்றி
ஓம் மின்னல் கொடி போன்ற மனோன்மணியே போற்றி
ஓம் மீனைப் போன்ற கண் படைத்த மீனாட்சி போற்றி
ஓம் மூன்று குணங்களை உடைய மூகாம்பிகை போற்றி
ஓம் மேகம் போன்ற கூந்தலை உடைய மதுமதியே போற்றி
ஓம் மோகத்தை வெல்ல வைக்கும் மாயாதேவி போற்றி
ஓம் ஜலமயமான அம்ருதேஸ்வரி போற்றி
ஓம் ஸ்ரீ சக்கரத்தில் வாழும் ஸ்ரீ லலிதாம்பா போற்றி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயார் திருவடிகள் போற்றி!

1620998263532.png
 

Latest ads

Back
Top