காசிக்கு நிகரான ஆறு புனித சிவத்தலங்கள்
காசி சென்று வழிபட வேண்டும் என்பது பல சிவபக்தர்களின் விருப்பம். ஆனால், தமிழகத்திலேயே காசிக்கு நிகரான முக்தித் தலங்களாகப் போற்றப்படும் ஆறு சிறப்புமிக்க சிவத்தலங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத ஆன்மிகச் செய்தியாகும்.
இந்த ஆறு தலங்களும் “ஷட் க்ஷேத்திரங்கள்” எனப் போற்றப்படுகின்றன.
1. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு, சிவபெருமானின் அருள் நிறைந்த மிகப் பழமையான புனிதத் தலங்களில் ஒன்று. இங்கு ருத்ரபாதத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பாவச் சுமைகள் நீஙகும். குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படும் தடைகள் நீங்கும் . ஆன்மிக முன்னேற்றம் கிடைக்கும்
இங்குள்ள ருத்ரபாதத்தை வழிபட்டால் பல தலைமுறைகளின் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
2. மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில்
காவிரிக்கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை, காசிக்கு நிகரான புனிதத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
காவிரியில் புனித நீராடி, மாயூரநாதரை தரிசிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
முன்னோர் தொடர்பான வழிபாடு செய்ய அவர்கள் ஆசி கிடைக்கும். பாவங்கள் நீங்கும். மன அமைதி மற்றும் குடும்ப நலன் கிடைக்கும்
காவிரி நீராடல் மற்றும் சிவவழிபாடு இத்தலத்தின் முக்கிய ஆன்மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
3. சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் அருகில்
காவிரி கடலுடன் சங்கமிக்கும் புனிதப் பகுதியை ஒட்டியுள்ள சாயாவனம், காசிக்கு நிகரான புண்ணியத் தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
காவிரி – கடல் சங்கமத்தின் புனிதம் இத்தலத்தின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.
பாவ நிவர்த்தி கிடைக்கும் வாழ்க்கையில் புதிய தொடக்கம் உண்டாகும். சிவபெருமானின் அருள் கிடைக்கும்
4. திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில்
“ஐந்து ஆறுகள்” சூழ்ந்த புனிதத் தலம் என்பதால் திருவையாறு எனப் பெயர் பெற்றது.
காவிரியின் புனித நீரும், ஐயாறப்பரின் அருளும் இணையும் இத்தலம் காசிக்கு நிகரான முக்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
குடும்ப நலம் உண்டாகும்
மன அமைதி கிடைக்கும். சிவபக்தியில் முன்னேற்றம் கிடைக்கும். முன்னோர் ஆசி. கிடைக்கும்
ஐயாறப்பரை தரிசித்து, காவிரியை வணங்குவது மிகுந்த புண்ணியம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
5. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயில்
மத்தியார்ஜுனம் என்றும் அழைக்கப்படும் திருவிடைமருதூர், சிவபெருமானின் மகத்தான தலங்களில் ஒன்று.
இத்தலம் குறிப்பாக பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி தொடர்பான ஆன்மிக நம்பிக்கைகளுக்குப் புகழ்பெற்றது.
பல்வேறு தோஷ நிவர்த்தி, பாவ நிவர்த்தி கிடைக்கும்
வாழ்க்கையில் தடைகள் நீங்கும். மனக்கவலை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் நீங்கும்
மகாலிங்கசுவாமியை மனமுருகி வழிபட்டால் பாவங்களும் தோஷங்களும் நீங்கி இறைவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
6. திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில்
இந்த ஆறு தலங்களில் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த தலமாக திருவாஞ்சியம் போற்றப்படுகிறது.
காசியை விட வீசம் அதிகம் என்று தலபுராண மரபில் இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது.
இங்கு எமதர்மராஜாவுக்குத் தனிச்சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.
இங்கு வழிபடுதலால் மரண பயம் நீங்கும் வேண்டுவோர். ஆயுள் அதிகரிக்கும் . முன்னோர் ஆசி கிட்டும். பாவ நிவர்த்தி மற்றும் முக்தி கிடைக்கும்
வாஞ்சிநாதரை தரிசிப்பதும், எமதர்மராஜாவை வழிபடுவதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள இந்த புனிதத் தலங்கள், சிவபெருமானின் அருளை நாடும் பக்தர்களுக்கு சிறப்பான ஆன்மிகப் பயணமாக அமையும்.
காசி செல்ல முடியாதவர்கள் மட்டுமல்ல… காசி சென்றவர்களும் தரிசிக்க வேண்டிய தமிழகத்தின் புனித சிவத்தலங்கள்