• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Shyamala Navaratri

02.02.2022 முதல் சியாமளா நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமளா நவராத்திரி பூஜை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை 02.02.2022 முதல் 10.02.2022 வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள்.

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாட்கள் தான் ச்யாமளா நவராத்திரி தினங்களாகும்.

சியாமளா தேவி:- சியாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக, (முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

கவி காளிதாசர் அருளிய ஸ்ரீ ச்யாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பம் உடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

கடல் போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும்.இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை.

நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான், அறிவு என்னும் அம்பை கட்டுப்படுத்துகிறது.எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால் தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.

தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள். இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.

தேவியின் ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது.மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.

மாதங்கியின் பதினாறு பெயர்களைப் பற்றி பார்ப்போம்.

1.சங்கீத யோகினி
2.சியாமா
3.சியாமளா
4.மந்த்ர நாபிகா
5.மந்த்ரிணி
6.சசிவேசானி
7.ப்ரதானேசி
8.சுகப் பிரியா
9.வீணாவதி
10.வைணிகி
11.முத்ரிணி
12.பிரியகப்பிரியா
13.நீபப்பிரியா
14.கதம்பேசி
15.கதம்பவன வாசினி
16.சதாமாதா

ஆகியவையாகும்.

மாதங்கி தேவி எட்டு கரங்களை உடையவள்.அவளுடைய ஒரு திருக்கரத்தில்உள்ள சம்பா கதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும்,இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்,வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் சியாமளா தண்டகம் கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள்.

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தைக் காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை. அதனால் தான் அங்கு எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம்.

லகு மாதங்கி:- மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.

வாக்வாதினி:- நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.

நகுலி :- ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.

சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.

ச்யாமளா நவராத்திரி நாட்களில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியில் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக!

1643773676800.png
 
நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை…
ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.

அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.

சாக்தமும் நவராத்திரிகளும்:

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும்.

பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை
நாம் அறிவோம்.

நவராத்திரியின் வகைகள்
1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது
வஸந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது
ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது
சாரதா நவராத்திரி.
(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

4தை மாதத்தில் கொண்டாடப்படுவது
ச்யாமளா நவராத்திரி.
(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ச்யாமளா தேவி
ச்யாமளா’ என்றும்,
‘ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும்,
ஸ்ரீமாதங்கி என்றும்,
‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை,

மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு
எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி,
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.

அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள்.

அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,
(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.

இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

சரஸ்வதி தேவி அருள்
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே
ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது.

வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள்.

அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை.

ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர்.

இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘சியாமளா’ என்று பெயர்.

சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.

சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இன்று (15ம் தேதி சதுர்த்தி நாள்). நாளைய தினம் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வசந்த பஞ்சமி.

அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.

சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி என்பார்கள்.

பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

மாணிக்ய வீணா முபலாலயந்தீம் |
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸம் ||
மஹேந்திர நீலத்யுதி கோமலாங்கீம் |
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி ||

மாதா மரகத சியாமா மாதங்கீ மதசாலீனீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பாத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே

சியாமளா நவராத்திரி முதல் நாள் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு,பலன்கள்

1643773767610.png
 
சியாமளா நவராத்திரி பூஜை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமை யிலிரு ந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு, ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால், வெற்றி பெறுவோம்!!!!
.
சியாமளா சகஸ்ரநாமம்,ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே.ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மடப்பள்ளியில் ஒரு வாய் பேசவியலா ஊமை வேலை செய்து கொண்டிருந்தான். ஒருநாள் மீனாட்சியம்மை சுமங்கலிப் பெண்ணாக வந்து புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியைப் பெரும்பான்மையோர் அறிந்திருப்பர். அதேபோல ராமநவமி சமயத்தில் பிரதமை திதி முதற்கொண்டு லலிதா நவராத்திரி விழாவை வடநாட்டில் சாக்தர்கள் கொண்டாடுவர்.

ஆடி மாதப் பிரதமை நாள் தொடங்கி வாராஹி நவராத்திரி விழாவையும் கொண்டாடுவர். இவற்றைப் போல நான்காவதாக ஒரு நவராத்திரி விழாவும் உண்டு. அதுதான் சியாமளா நவராத்திரி. இது மாசி மாதப் பிரதமை நாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான விழாவாகும்.

ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகையிடம் லயிக்கச் செய்ய முடியும்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

தேவியின் தசமகா வித்தைகளில் (பத்து வடிவங்கள்) ஒன்பதாவது வித்தையாக விளங்குபவள் சியாமளா தேவி. உஜ்ஜயினி யில் இந்த தேவியை வணங்கியே, மூடனாயிருந்த அவன் வாயைத் திறக்கச் சொன்னாள். அவ்வாறே அவன் வாய் திறக்க, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழ்ந்தாள் தேவி. அதன் பின்னர் அவன் மீனாட்சி தேவிமீதும், திருசிறுந்தூர் முருகன்மீதும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினான்.

அப்பய்ய தீட்சிதரின் சகோதரரின் பேரன் நீலகண்ட தீட்சிதர். இவர் மதுரை மன்னரிடம் அமைச்சராக விளங்கினார். மதுரைக் கோவிலைப் புதுப்பிக்க உதவியர் இவர். மதுரை மன்னர் தன் மனைவியின் சிலையைக் கோவிலில் அமைக்க எண்ணினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி நீலகண்ட தீட்சிதரிடம் கூறினார். அதன்படி சிலை செய்யப்ப ட்டது. ஆனால் தொடைப்பகுதியில் சிறு பின்னம் உண்டானது. எனவே வேறு சிலை செய்யும்படிக் கூறினார் தீட்சிதர். அந்த சிலையிலும் அதே இடத்தில் சிறு பின்னம் ஏற்பட்டது. சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த தீட்சிதர், அந்த சிலையே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.

சிலையைப் பார்வையிட வந்த மன்னர் தொடைப்பகுதியில் இருந்த பின்னத்திற்குக் காரணம் கேட்க, அரசியின் தொடையில் - அந்த இடத்தில் மச்சம் இருப்ப தாகச் சொன்னார் தீட்சிதர். இதனால் மன்னருக்கு தீட்சிதர் மீது சந்தேகம் எழுந்தது. அரண் மனை திரும்பிய அவர் மன அமைதியை இழந்தார். சேவகர்களை அழைத்து நீலகண்ட தீட்சிதரின் கண்களைக் குருடாக்க உத்தரவிட்டார்.

அப்போது அம்பிகையின் பூஜையில் அமர்ந்திருந்த தீட்சிதருக்கு மன்னரின் உத்தரவு உள்ளுணர்வில் தெரிந்தது. இத்தகைய அபவாதத்திற்கு ஆளாக நேர்ந்ததே என்று மிகுந்த வேதனையுற்ற அவர், அம்பிகைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து, அந்த தீபச் சுடரால் தன் கண்களைத் தாமே பொசுக்கிக் கொண்டார். அப்போது மன்னரின் உத்தரவை நிறைவேற்றுவதற் காக அங்கு வந்த சேவகர்கள், நடந்த காட்சியைக் கண்டு ஓடிப்போய் மன்னரிடம் தெரிவித்தனர். தன் தவறை உணர்ந்த மன்னன் ஓடி வந்து தீட்சிதரிடம் மன்னிப்பு கேட்டான்.

அப்போது தீட்சிதர் மீனாட்சி அன்னைமீது, "ஸ்ரீஆனந்த சாகரஸ்தவம்' என்னும் 108 துதிகளைப் பாடினார். மீனாட்சி அன்னையின் அருளால் அவர் கண்கள் மீண்டும் பார்வை பெற்று ஒளிர்ந்தன.

சங்கீத மும்மணிகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் காஞ்சி காமாட்சி அன்னைமீது பல கீர்த்தனைகளை இயற்றினார். அப்போது ஒரு பெரியவர், "நீர் மதுரை மீனாட்சியையும் தரிசித்துப் பாடுங்களேன். அம்பிகையும் பரவசமடைவாள்' என்று கூறினார். அதன் படியே அவர் மீனாட்சிமீது ஒன்பது கீர்த்தனை களைக் கொண்ட நவரத்ன மாலிகையைப் பாட முடிவு செய்தார்.

ஏழு கீர்த்தனைகளை எழுதி முடித்த நிலையில், அவரது குரு சியாமா சாஸ்திரிகளின் கனவில் தோன்றி, "நீ இன்னும் மதுரைக்குப் போகவில்லையா?' என்று கேட்க, மறுநாள் ஏழு பாடல்களுடன் மீனாட்சியை தரிசிக்கச் சென்ற அவர், அன்னையின் அருளால் மீதி இரண்டு பாடல்களையும் பாடி நவரத்னமாலிகை யைப் பூர்த்தி செய்தார்.

அவர் பாடலில் மெய்மறந்த ஆலய அர்ச்சகர் அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார். அங்கேயிரு ந்த ஒரு ரசிகர் யானைமுகத் தம்புராவைப் பரிசாகக் கொடுத்தார்.

சங்கீத மும்மூர்த்திகளில் மற்றொருவரான முத்துசுவாமி தீட்சிதரும் ஒரு ஸ்ரீவித்யா உபாசகரே. இவரும் மீனாட்சியம்மனைப் பற்றிப் பாடியுள்ளார். இவர் தம் இறுதிக் காலத் தில் எட்டயபுரத்தில் வாழ்ந்தார். எட்டயபுரம் மன்னர் இவரது நண்பர். ஒரு தீபாவளி சமயத்தில் தன் சீடர்களை அழைத்த தீட்சிதர் இறை கீர்த்தனங்க ளைப் பாடச் சொன்னார். "மீனாக்ஷிமுதம் தேஹி' என்னும் கீர்த்தனையைப் பாடச் சொல்லிக் கேட்டார். மாலை சுமார் நான்கு மணியளவில், "மீனலோசனி பாசமோசனி' என்ற பதங்களை மூன்று முறை பாடச் சொல்லி, அதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே தேவிபதம் அடைந்தார். அவர் கடைசி நாட்களில் வாழ்ந்த இடம் இப்போதும் எட்டயபுரத்தில், மகாகவி பாரதி பிறந்த வீட்டிற்கு அருகில் உள்ளது. இது இசைக் கலைஞர்களுக்குப் புனிதத் தலமாக விளங்குகிறது.

எனவே இந்த சியாமா நவராத்திரி நாட்களில்- சியாமளாவை- மீனாட்சியம்மனை வணங்கினால் சங்கீத சாகித்ய கலையருள் கிட்டுமென்பது திண்ணம். மாணவ மாணவியர் கல்வியில் உயர்வு பெறுவதும் திண்ணம்!
 

Latest ads

Back
Top