• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

sandhya vandhanam-tamil meaning.

kgopalan

Active member
சந்தியா வந்தனம்.

முதலில் ஆசமனம். நின்று கொண்டு ஆசமனம் செய்யக்கூடாது. உட்கார்ந்து கொன்டு தான் செய்ய வேண்டும். விளக்கம் :- கும்ப கோணம் வேத சாஸ்திர பரிபாலன சபாவில் யூ ட்யூபில்
SSDSS என்று க்லிக் செய்யவும்.

ஸ்ம்ருதி ஸந்தேசம் தர்ம சாஸ்திர செய்திகள் ஒன்று முதல் 400 வரை சிறிது சிறிதாக உள்ளது. இதில் மைலாப்பூர் சம்ஸ்க்ருத காலேஜில் ஓய்வு பெற்றவர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். ஆசமனம் பற்றி இதில் பார்த்து கொள்ளுங்கள்.

1. ஆசமனம்.2. ப்ராணாயாமம்;3.ஸங்கல்பம்;4 மார்ஜணம்;5. ப்ராசனம்; 6. புனர் மார்ஜனம்;
7.அர்க்கிய ப்ரதானம்;8. ப்ராயசித்த அர்க்கியம்; 9. நவகிரஹ கேசவாதி தர்ப்பணம்.

10. ஜப விதி,11. ந்யாஸம்; 12. உபஸ்தானம்;13. திக் தேவதா வந்தனம்;


காலையில் 5 மணியிலிருந்து 6 மணி வரை காலையிலும், மத்யான்னம் 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை ஸந்தியா வந்தனம் செய்ய சரியான காலமாகும்.

தற்காலத்தில் உத்யோகஸ்தர்கள் காலை சந்தியா வந்தனம் முடிந்த வுடன் மாத்யானிகம் செய்து விடலாம். ஸாயங்காலம் வீடு வந்து சேர்ந்ததும் ஸாயம் ஸந்தியா வந்தனம் செய்ய வேண்டும்.

கை கால்களை சுத்தமாக அலம்பிக்கொண்டு, அவரவர் பெரியோர் தரித்த படி, வீபூதி, சந்தனம் இட்டு கொண்டு அவசிய மில்லாமல் யாருடனும் பேசாமல் செய்யவும்.

வீடுகளில் ஸந்தியா வந்தனம் செய்யும் போது கால்களை குந்திட்டு ( ப்ருஷ்ட பாகம் தரையில் படாமல்) உட்கார்ந்து கொண்டு இரு கைகளின் முழங்கைபாகம் கால்களுக்கு நடுவில் இருக்குமாதிரி வைத்துக்கொள்ளவும்.ஆசமனம் செய்ய வேண்டும்.

வலது கை சுண்டு விரலையும், மொதிர விரலையும் மட்டும் நீட்டி, மற்ற மூன்று விரல்களையும் சிறிது மடக்கி உள்ளங்கையில் சிறிது குழிவு ஏற்படும் படி செய்து அதில் ஒரு உளுந்து மூழ்கும் அளவிற்கு தீர்த்தம் விட்டு அச்சுதாய நம; என்று கூறி உறிஞ்சும்

சப்தம் இல்லாமல் ,ப்ரும்ஹ தீர்த்ததால் உட்கொண்டு, பிற்கு அ நந்தாய நம; என்று சொல்லி ஒரு உளுந்து மூழ்கும் அளவிற்கு தீர்த்தம் விட்டு ப்ருஹ்ம தீர்த்ததால் உட்கொண்டு, பிறகு கோவிந்தாய நம; என்று சொல்லி ஒரு உளுந்து மூழ்கும் அளவிற்கும் ஜலம் விட்டு ப்ருஹ்ம தீர்த்ததால் உட்கொள்ளவும். பிறகு உதட்டை துடைத்துக்கொள்ளவும்.

பிறகு வலது கை கட்டை விரலால் கேசவ; நாராயணா என்று சொல்லி வலது கன்னம், இடது கன்னம் தொடவும்.பிறகு பவித்திர விரலால் மாதவா, கோவிந்தா என்று சொல்லி வலது கண், இடது கண் தொடவும். ஆள் காட்டி விரலால் விஷ்ணு, மதுஸூதனா என்று சொல்லி வலதுமூக்கு, இடது மூக்கை தொடவும்.

சுண்டு விரலால் த்ரிவிக்கிரமா, வாமனா என்று சொல்லி வலது காது இடது காது தொடவும். நடு விரலால் ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா என்று சொல்லி வலது தோள், இடது தோள் தொடவும். பத்ம நாபா தாமோதரா என்று சொல்லி எல்லா விரல்களாலும் மார்பு தலையை தொடவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் 5 முறை குட்டிக்கொள்ளவும்.

வெண்மை வஸ்த்திரம் தரித்தவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், சந்திரனை போல் நிறமுடையவரும், நான்கு கைகளை உடையவரும்,மலர்ந்த முகத்தை உடையவருமான விநாயகரை எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காக த்யானம் செய்கிறேன்.

2. ப்ராணாயாமம்:- நடு விரலையும், ஆள் காட்டி விரலையும் மடித்து கட்டை விரலால் வலது மூக்கை அழுத்தி பிடித்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மனதினில் உச்சரித்துக்கொண்டு மூச்சு காற்றை உள்ளிழுத்து சுன்டு விரல் பவித்ர விரல்களால் இடது மூக்கை அழுத்தி , பிறகு வலது மூக்கால் மெதுவாக காற்றை வெளியில் விட்டு பிறகு வலது காதை தொட வேண்டும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸ விதுர்வரேணியம்; பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதி ரஸ: அம்ருதம் ப்ருஹ்ம ஓம் பூர்புவஸுவரோம்.

3. ஸங்கல்பம்:- இடது கையை வலது தொடை மேல் மல்லாத்தி வைத்து அதன் மீது வலது கையை கவிழ்த்து வைத்து கொண்டு மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராதஸ் ஸந்த்யாம் உபாசிஷ்யே.என்று காலையிலும், பகலில் மாத்யானிகம் கரிஷ்யே என்றும் மாலையில் ஸாயம் ஸந்தியாம் உபாசிஷ்யே என்றும் சொல்ல வேண்டும்.

பிறகு உத்தரிணியில் ஜலம் எடுத்து அதில் வலது கை மோதிர விரலால் ஓம் என்று உத்தரணி ஜலத்தில் எழுதி ஓம் ஸ்ரீ கேசவாயா நம: என்று சொல்லி புருவ மத்தியில் இந்த ஜலத்தை தடவி கொள்ள வேண்டும்.

4. மார்ஜனம்:- மந்திரத்தை ஜபித்துகொண்டே ஜலத்தை ப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும். மந்திரம் ஜபிக்காமல் ஜலத்தை மாத்திரம் ப்ரோக்ஷித்து கொண்டாலும், மந்திரம் ஜபித்துக்கொண்டு ஜலம் தலையில் படாமலேயே ப்ரோக்ஷித்து கொள்வது போல் கையை அசைத்தாலும் பலன் தராது.

கீழ் கண்ட மந்திரம் சொல்லி கை விரல்களால் அந்தந்த இடங்களை தொடவும். இதற்கு ந்யாஸம் என்று பெயர். இது சிலருக்கு கிடையாது. ஆத்து வழக்கபடி செய்யவும். ஆபோஹிஷ்டேதி மந்த்ரய ஸிந்து த்வீப ரிஷி: ( தலை) தேவீ காயத்ரீ சந்த: ( மூக்கு நுனி) ஆபோ தேவதா ( மார்பு). மார்ஜனே வி நியோக: அல்லது ப்ரோக்ஷணே வி நியோக:


ஆபோ ஹிஷ்டா என்ற மந்திரத்திற்கு ஸிந்து த்வீபர் என்பவர் ரிஷி; தேவீ காயத்ரி சந்தஸ். ஜலம் தேவதை. இந்த ஆபோஹிஷ்டா என்ற மந்திரத்தை சொல்லி தலையில் ப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும் என பொருள். முதல் 7 மந்திரங்களால் தலையில் ப்ரோக்ஷித்து கொள்ளவும். பிறகு யஸ் யக்ஷயாய ஜின்வத: என்பதால் கால்களில் ப்ரோக்ஷித்து அடுத்த மந்திரத்தால் மறுபடியும் தலையில் ப்ரோக்ஷித்து க்கொள்ளவும்.


ஓம் ஆபோஹிஷ்டா மயோ புவஹ தான ஊர்ஜே ததாதன: மஹேரணாய சக்ஷஸே யோவஶ்ஶிவதமோ ரஸ: தஸ்ய பாஜயதே ஹன: உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்க மாமவ: யஸ்யக்ஷயாய ஜின்வத ஆபோஜனயதா சன:

ஓம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி ஜலத்தால் தன்னை பரிசேஷனம் செய்து கொள்ள வேண்டும்.அதாவது தலையை சுற்றிலும் பிரதக்ஷிணமாக ஜலத்தை சுற்ற வேண்டும்.

( பொருள்). உலகத்திற்கு சுகத்தை தருவதற்காக முதலில் ஜலம் படைக்கபட்டது. ஸ்நான பானாதிகளாலும், பயிரை வ்ருத்தி செய்து அன்னத்தையும் மற்ற ரஸங்களையும் தருவதாலும் ஜல தேவதை நமக்கு இன்பமூட்டுகிறது.

குழந்தைகள் செய்யும் குற்றத்தை மன்னித்து குழந்தைகளுக்கு தாய், தான் உண்ணாமல் கூட உயர்ந்த ஸத்துள்ள பொருட்களை அளிப்பாள். தாய் போலுள்ள தீர்த்த தேவதையே எனக்கு அத்தகைய தாய் போல் அன்னாதிகளை தந்து இந்த உடலை காப்பாற்றவும்.

ஸ்தூல உடலுக்குள் உள்ள ஸூக்ஷ்ம உடலுக்கு அறிவே உணவு. அதில் உயர்ந்ததான ஞானத்தை எனக்கு அளியும்.உமது அருளால் நான் பேரின்பம் அடைய வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கு ஜலம் அவசியமானது.ஜலத்தின் ஸூக்ஷ்ம அம்சமே ப்ராணன்.

மங்களகரமான ரஸத்தால் இவ்வுடலுக்கும் மிக மிக மங்கள கரமான ரஸத்தால் ஜீவனுக்கும் நன்மை அளிக்கும்படி இந்த மந்திரத்தால் வேண்டுகிறோம்.

(தொடரும்)5. ப்ராசனம்.
 

Latest ads

Back
Top