• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

rudhra ekadasini.

kgopalan

Active member
ருத்திர ஏகாதசினி.


எவர் அளித்த அன்னம் வேத பாராயணத்தின் போது ருத்விக் வயிற்றில் ஜீரணமாகிறதோ அவரது குலத்தினர் ஆயிரங்கோடி வருடங்கள் ப்ருஹ்ம லோகத்தில் வசிப்பர் எங்கிறது தர்ம சாஸ்திரம். ஆதலால் மிதமான உணவு உண்ட பின்னும் வேத பாராயணம் செய்யலாம் என்று சொல்லலாம்.


பால் போன்ற திரவ உணவு கூட அருந்தாது செய்யும் தேவ பூஜையும் பித்ருக்களுக்கு ப்ரீதி கரம் எங்கிறது சாஸ்திரம்.பால் போன்ற திரவ பதார்த்தமாக அருந்தி 6 மணி நேரம் ஆகும் ருத்திர ஏகாதசினி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.


ஆதலால் சத்துமாவு, கோதுமை கஞ்சி;பழங்கள், பால், இளநீர், சுக்கு, ஜீரகம் போட்டு காய்ச்சிய வென்னீர், வால் மிளகு, கல்கண்டு,போன்றவை கொடுக்க கர்த்தா ஏற்பாடு செய்ய வேண்டும்.


லெளகீக விருந்தினர்க்கு அளிக்கும் உணவு வைதீகர்களுக்கு அளிப்பது அவர்கள் சிரத்தையுடன் ஜபம் செய்வதற்கு உள்ள சூழ் நிலையை அமைத்து தராது.வைதீகர்கள் கர்த்தாவிற்கு தேவையான பலனை வேத பாராயணம் செய்து ஈட்டி தருகிறார்கள்.


11 ருத்விக்குகள் 11 தடவை ருத்திர ஜபம் செய்வதே ருத்திர ஏகாதசினி. ஒவ்வொரு ஆவர்த்திக்கு பிறகு ஏகாதச ருத்திரனுக்கு உபசாரம், அர்க்கியம், உபாயன தானம், ப்ரார்த்தனை விதிக்க பட்டுள்ளது. ஆதலால் ருத்துவிக்குகளை தனித் தனியே ஒவ்வொரு கலசத்துக்கு என


முதலிலேயே வரித்து தீர்த்த பாத்திரம், அக்ஷதை, புஷ்பம், தூப, தீப நைவேத்யங்களுக்கு தேவையானவைகளை கொடுக்க வேண்டும். கடைசியில் அவர்களை கொண்டே அபிசேகம் செய்ய செய்வதால் பூஜா பலன் பூரணமாக கிடைக்கிறது


. 11 ருத்விக்குகளும் தாமதமாக வராமல் சீக்கிரமாக வந்து ஆரம்பிக்க வேண்டும். ஒருவர் வராவிட்டாலும் அவருக்காக காத்திருந்து எல்லோரையும் சேர்த்து ஒவ்வொரு கலசத்திற்கும் வரிக்க வேண்டும்.


ஸர்வா தேவதா ஆபஹ; ஆபோ வை ஸர்வா தேவதாஹா என்ற வேத வாக்கியப்படி அனுசரித்து ஸ்வாமி கடத்திலேயே ஏகாதச ருத்திரர்களையும் ஆவாஹானம் செய்யலாம்.
பூர்வாங்கத்தில் ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்தால் உத்ராங்கத்திலும் ஆகம முறைப்படி யதாஸ்தானம் செய்யவும்.


வைதீக முறைப்படி பூர்வாங்கத்தில் ஸ்தாபனம் செய்த கடங்களிலிருந்து உத்திராங்கத்தில் வைதீக முறைப்படி யதாஸ்தானம் செய்ய வேண்டும்.பிறகு அபிஷேகம் செய்ய வேண்டும்.


ஹோமத்திலும் பூர்வாங்க உத்திராங்க முறைகள் உண்டு. ஹோமாக்னியிலிருந்து ஸ்வாமியை கலசத்திற்கு ஸம்யோஜனம் செய்ய வேண்டும். கட ஸ்தாபனம் , ஹோமம் இரண்டும் வைதீக முறைப்படி அல்லது ஆகம முறைப்படி ஒறே மாதிரி செய்ய வேண்டும்.



ஜபம், பூஜை, ஹோமத்திற்கு பயன்படுத்த படும் பாத்திரங்கள் , கரண்டி, தாம்பாளம், விளக்கு
போன்றவைகள் எவர் சில்வரில் வேண்டாம்.செப்பு, பித்தளை, வெண்கலம்,மரம் போன்றவைகளில் இருப்பதே நலம்.


ஆம்ப்ளிப்பயர் மைக் கில் ஒருவர் கனத்த குரலில் சொல்ல மற்றவர்கள் அவர்களுடன் சேர்ந்து சொல்ல குரல் ஒருங்கிணைந்து ஒலித்தால் தான் வேத நாதம் ப்ரகாசிக்கும். ருத்ர ஜபம் நடந்து கொண்டிருக்கும் போது கர்த்தா அதி சிரத்தையுடன் , அமைதியாக வேத நாதத்துடன் ஒன்றுபட்டு அனுபவிக்க வேன்டும். வேத த்வனி, மற்ற ஒலி சேர்க்கை கலப்பினால் மாசு படுத்த படாமல் இருந்தால் தான் பூரணமான வேத நாத சக்தி முழு பலனை தரும்.


ருத்விக்குகள் மனம் ஒன்றி ஜபம் செய்து கொண்டிருக்கும் போது , கர்த்தா அதற்கு தரும் மதிப்பை கண்டு ருத்விக்குகள் ஒறே த்வனியில் உற்சாகமாக வேதம் ஓதுவார்கள். இது தான் கர்த்தாவிற்கு கிடைக்கும் பாக்கியம்.


நிகழ்ச்சிக்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள் கர்த்தா செய்து கொள்வது ஒரு மஹா ப்ராயஸ்சித்த கர்மா.இங்கு லெளகீக பேச்சே பேசாமல் வேத த்வனியில் மெய் மறந்து இருக்க வேண்டும். கர்த்தாவின் செய்கைக்கு இடையூராக இருக்க கூடாது


.ருத்விக்குகள் வேதம் ஓதும் போது இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நற்கதிக்கான வழிகாட்டியாக அமைகிறார்கள்.இங்கு உரத்த குரலில் லெளகீக பேச்சு பேசுபவர்கள் அடுத்த பிறவியில் தவளை களாக பிறப்பார்கள் என பழமொழி உண்டு.இது ருத்விக்குகளை அவமதிப்பதாகும் என அறிய வேண்டும்.


ஒரு சடங்கினை செய்யும் விதிகளை படிபடியாக விரிவாக கூறும் வாக்கியங்களுக்கு காரிகை என்று பெயர்.ஒரு சடங்கை செய்யும் போது மந்திரங்களுக்கு இடையே வரும் காரிகை வாக்கியத்தையும் உரக்க கூற வேண்டும்.


வேத த்வனி உங்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது. ஆதலால் உங்கள் வீட்டிலேயே ருத்ர ஏகாதசினி செய்வது நல்லது. வீட்டுவாயிற்படி தாண்டி வரும் உணவு பொருட்கள் சுவாமி நைவேத்யத்திற்கோ, ருத்விக்குகள் சாப்பிடவோ உதவாது. ஆதலால் ருத்விக்குகள்


சாப்பிடவும், நைவேத்யதிற்கும் வீட்டிலேயே சமையல் செய்து கொள்ள வேன்டும். மற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கேட்டரர் மூலம் டிபன், காபி, சாப்பாடு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


ஒரு பேப்பரில் உங்கள் நக்ஷத்திரம், ராசி, சர்மா, உறவு முறை மற்ற உங்கள் உறவினர்கள் பெயர்களயும் முன் கூட்டியே எழுதி வாத்தியாரிடம் கொடுத்து விட்டால் ஸங்கல்பம்செய்யும் போது ஒன்று கூட விட்டு போகாமலும் சீக்கிரமாகவும் முடிந்து விடும்.


உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுக்க விரும்பும், வேட்டி, சட்டை, துண்டு, பேண்ட், புடவை, சுடிதார், ரவிக்கை துண்டுகள், முன்னதாக வாங்கி வைத்து கொள்ளவும்,
gift article தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ளவும். தாம்பூல பை, அதில், , போட


பழம் அல்லது தேங்காய், வெற்றிலை பாக்கு, பக்ஷண வகைகள், தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ளவும்.சுமங்கலிகளுக்கு மஞ்சள், கும்குமம், ஐ டெக்ஸ்; மருதானி பெளடர்,
வளையல், கண்ணாடி, சீப்பு---தேவையானவைகளை வாங்கி வைத்து கொள்ளவும்.
ருத்திர ஏகாதசினிக்கு சாஸ்திரிகளுக்கு தேவையானவைகள்.


மஞ்சள் தூள் 100 கிராம்; உருண்டை மஞ்சள் 100 கிராம், குங்குமம்-50 கிராம்; சந்தன பவுடர்-100 கிராம்; பாக்கு-200 கிராம்; வாசனை பாக்கு தூள்-100 கிராம்;

ஊதுபத்தி-2 பாக்கெட்; கற்பூரம்-2 பாக்கெட்; பச்சை கற்பூரம், குங்கும பூ; ஏலக்காய்; வெட்டி வேர்; விளாமிச்சை வேர் -பொடித்து கலசங்களில் போட;

சுண்ணாம்பு-1 டப்பி; கற்கண்டு-200 கிராம்; கோரோஜனை-1 பாட்டில்; வெண் கடுகு -100 கிராம்;சக்கரை-1 கிலோ;


வெற்றிலை-100+100, பூவன் பழம்-30+20., தேங்காய்-15+8; மாவிலை கொத்து-15; உதிரி புஷ்பம்-2 கூடை, எலுமிச்சம் பழம்-4;
ஆப்பிள், ஆரஞ்ச்; மாதுளை; பன்னீர் திராக்ஷை; மாம்பழம்; பலாசுளை; வகைக்கு ஒரு கிலோ;

ஹாரம்-2+2; தொடுத்த புஷ்பம்-15+15 முழம்; கத்தி; கத்திரிக்கோல்;கண்ணாடி; சீப்பு; குங்கும சிமிழ்;


சிராய் தூள்-10 கிலோ; விராட்டி-50; விசிறி-1; நெய்- 3 கிலோ; ஹோமத்திற்கு.


ஸ்ரீ சக்ரம்- அபிஶேகத்திற்கு பால்- 1லிட்டர்; தேன்- 100 கிராம்; இளநீர் 5; பன்னீர்- 1 பாட்டில்; வெல்ல சக்கரை-100 கிராம்; தயிர்-500 மில்லி லிட்டர்; பஞ்ச கவ்யம்; பஞ்சாம்ருதம்;சந்தனம்.


பஞ்ச கவ்யம் செய்ய- ஒரே பசுமாட்டின் பால், தயிர், நெய், மூத்திரம், சானி.

நவகிரஹங்களுக்கு- ஸமித்து-1 ஸெட், ஆடை-1 ஸெட்; தானியம்-1 ஸெட்;


9 புது பித்தளை கலசம் ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு; ஒரு பித்தளை குடம்; பத்தாம் நம்பர் நூல் கண்டு-2; குத்து விளக்கு-2; இதற்கு தேவையான திரி, எண்ணய், தீபெட்டி;
கர்பூர தட்டு; ஆரத்தி தட்டு; தாம்பாளம்/டிரே-5; கிண்ணங்கள்-6; பித்தலை டபரா-4; சமித்து-4


கட்டு; தடுக்கு-15 நம்பர்; ஹோம குண்டம்-1; அல்லது செங்கற்கள்-20; மணல்- 1 சட்டி; மணி-1


கோதுமை-5+3 கிலோ; பச்சரிசி-5+3 கிலோ; கருப்பு உளுந்து-1+1 கிலோ; கருப்பு எள்ளு-500 கிராம். பழைய ந்யூஸ் பேப்பர்2 +2; நுனி வாழை இலை-6.+4


எவர் சில்வர் டப்பி-1; அதில் விட நெய்- 250 கிராம்; முகம் பார்த்து தக்ஷணையுடன் தானம்.


தச தானம்:- மட்டை தேங்காய்-2; சந்தன கட்டை-1; வெள்ளி; தங்கம்; ஒன்பது ஐந்து வேஷ்டி-1
நெய்-100 கிராம்; தானியம்- 1 கிலோ; வெல்லம்-1 கிலோ; கல் உப்பு- 1 கிலோ; கருப்பு எள்ளு-100 கிராம்; ருத்திர ஏகாதசினி முடிந்த வுடனும் தானம் உண்டு--அதற்கு தான் மட்டை தேங்காய்-2 போடபட்டது.


பஞ்ச தானம்:- பித்தளை விளக்கு எண்ணய், திரியுடன் ஏற்றி கொடுக்க வேண்டும்; 9/5 வேட்டி-1; பித்தளை சொம்பு-1; புத்தகம்-1; மணி-1;


ஆசமனம்; குரு வந்தனம்; வேதியர்களை வலம் வருதல்.வேதியர்கள் வேதம் ஒத அவர்களை வலம் வருதல். கையில் தாம்பாளத்தில் தாம்பூலம், பழம், புஷ்பம், தேங்காய் வைத்து கொண்டு கணவன் பின்னால் மனைவி வர மற்ற உறவினர்களும் அதிக வயதுள்ளவர்கள் முதலிலும் குறைந்த வயதுள்ளவர்கள் பின்னாலும் வரலாம்.


பிறகு மஞ்சள் தடவிய இரு தேங்காய்களை ஸ்வாமி படம், குல தெய்வ படம் முன் வைத்து வணங்கி பிறகு வயதில் மூத்தோர் கையில் கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெற்று பிறகு பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து கிழக்கு முகமாக நின்று பவித்ரம் பெற்று வலது கையில்


ருத்த்யாஸ்ம ----மந்திரம் சொல்லி கையில் அணிந்து பாக்கி அக்ஷதையை தன் தலையிலும் தன் மணைவி தலையிலும் போட வேண்டும்.


அனுக்ஜை:--பர்மிஷன்--எவ்வளவு ஆஹூதிகள் கொடுத்து ஹோமம் செய்ய போவதாக முதலில் தீர்மானித்தபடி சொல்லிக்கொள்ளவும்.


விக்னேஸ்வர பூஜை; மஹா ஸங்கல்பம்;விக்னேஸ்வரம் யதா ஸ்தானம்; க்ருஹ ப்ரீதி;
நாந்தி சிராத்தம்; வைஷ்ணவ சிராத்தம்; கோ தானம்; தச தானம்; க்ருச்சராசரணம்;ஆசார்ய ருத் விக் வரணம்; ஸ்தண்டிலத்தில் கலச ஸ்தாபனம்; வருண ஆவாஹணம்; பூஜை




புண்யாஹ வசனம்; பஞ்சாங்க ருத்ர ந்யாஸம்; பஞ்ச முக ந்யாஸம்;கேசாதி பாதாந்த ந்யாஸம்; தசாங்க ந்யாஸம்; பஞ்சாங்க ந்யாஸம்; ஹம்ஸ காயத்ரி ஜபம்; திக் ஸம்புட ந்யாஸம்; ஶோடச அங்க ரெளத்ரீகரணம்; ஶடங்க ந்யாஸம்;ஆத்ம ரக்ஷா; ஶிவ சங்கல்பம்;


பாராயணம்:- புருஷ ஸூக்தம்;உத்திர நாராயணம்; அப்ரதிரதஹ; ப்ரதிபூருஷம்;ஶத ருத்ரியம்; பஞ்ச அங்க ஜபம்; அஷ்ட அங்க ப்ரணாமம்--எட்டு நமஸ்காரங்கள்; ஸ்ரீ ருத்ர லகு ந்யாஸம்;


கலசங்களுக்கு ஶோடச உபசார பூஜை;ப்ராண ப்ரதிஷ்டை; ஆவாஹனம்; ருத்ர விதான ஶாம்ப பரமேஸ்வர ஶோடச உபசார பூஜை, ருத்ர த்ரிசதி அர்ச்சனை;ப்ரதக்ஷிணம்; பதிமூன்று நமஸ்காரங்கள்; ப்ரார்த்தனை;


ஸ்ரீ ருத்ர ஜப பூர்வாங்கம்-- தேவதா ந்யாசம்; பீஜ சக்தி கீலக ந்யாசம்;ருத்ர ஜப அங்க ந்யாசம்; கவசம்; அஸ்த்ரம்;பூரவாங்க த்யானம்; பஞ்ச பூஜை;கணபதி த்யானம்; ஶாந்தி பாடம்; ருத்திர ஜபம்; 11 அனுவாஹங்கள் சொல்லிய பிறகு சமகம் முதல் அனுவாகம் முடித்த பிறகு 6 உபசாரம்; கற்பூரம்; ப்ரார்த்தனை;

அர்க்கியம்; பல தானம்;ஆசீர்வாதம்;இம்மாதிரி ஒவ்வொரு முறையும் 11 அனுவாகங்கள் சொல்லி முடிந்தவுடன் செய்து பின் ருத்ர ஹோமம் செய்ய செல்ல வேண்டும்.


கலசங்களுக்கு புனர்பூஜை; யதாஸ்தானம்;ப்ரோக்ஷணம்; ப்ராசனம்; அபிஷேகம்;
நிகழ்ச்சியின் நிறைவாக மீண்டும் வைஷ்ணவ சிராத்தம்; தச தானம்; கோ தானம் செய்ய வேண்டும். ரக்ஷை; ருத்விக்குகளுக்கு கலச வஸ்த்ர தானம்; ஆர்த்ரா வஸ்த்ர தானம்; ருத் விக்


ஸம்பாவனை; ஆசார்ய ஸம்பாவனை;ஆசீர் வாதம்;பலஶ்ருதி; ஹாரத்தி. ருத்விக்குகள் மாத்யானிகம் செய்வர். -இப்போது ரித்விக்குகள் அவர்களுக்காக ஒரு தடவை ருத்ர ஜபம் செய்வர்; பிறகு மாத்யானிகம் செய்து விட்டு சாப்பிட வருவர்; த்ரிஸுபர்ண மந்திரங்கள் ஓதுவர்;


மறு நாள் 60 அல்லது 70 அல்லது 80க்குள்ள ஜப ஹோமங்கள்
 

Latest ads

Back
Top