தடையில்லா வருமானம் கிடைக்க பனிரெண்டு இராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகார வழிபாடுகள்
பனிரெண்டு இராசிக்காரர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும்.
மேஷ இராசி
வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.
ரிஷப இராசி
வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.
மிதுன இராசி
அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சைப் பயறு தானம் செய்து வரலாம். அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
கடக இராசி
உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமையில் பசும்பால் வாங்கி அபிஷேகம் செய்து வரலாம்.
சிம்ம இராசி
இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும். கிழக்கு பகுதியில் செடிகள் வைத்திருந்தால் அந்த செடிகளுக்கு ஊற்றலாம் நல்ல பலன் கிடைக்கும். செம்பு அல்லது பித்தளை மட்டும் பயன்படுத்துவது உத்தமம்.
கன்னி இராசி
புதன் பகவானுடைய பச்சை நிறத்தை புதன் கிழமைகளில் உடுத்திக் கொள்வது அதிர்ஷ்டத்தைத் தரும். ஒரு சிறு பச்சை நிற கைகுட்டையாவது அன்றைய நாளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
துலாம் இராசி
பணம் பல வழிகளில் வந்தாலும், வந்த வழியே சென்று விடும். இந்த சூழ்நிலை மாறி செல்வ செழிப்பு உண்டாக திங்கள் கிழமை தோறும் சிவபெருமான் அபிஷேகத்திற்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை வாங்கித் தரவும்
விருச்சிக இராசி
முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
தனுசு இராசி
வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடை உடுத்தி, வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, படிக்கத் தெரியாதவர்கள் அதனை பாடல்கள் மூலம் ஒலிக்கச் செய்வது நன்மை தரும்.
பின்னர் ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும்.
மகர இராசி
துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம். துளசி செடி வைத்திருப்பவர்கள் சனிக்கிழமைகளில் துளசி செடிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.
கும்ப இராசி
சனிக்கிழமையில் சனி பகவானை வணங்குவது மிகவும் நல்லது. கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நீர்க்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ந்து சனிக்கிழமையில் உங்களால் முடியும் பொழுது செய்து வந்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
மீன இராசி
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது நல்லது. உங்கள் இராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அல்லது மஞ்சள் கைக்குட்டையாவது கையில் வைத்துக் கொண்டு, இவர்களுக்கு மஞ்சள் நிற நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது யோகத்தை தரும்.