ராமேஸ்வரம், ப்ரயாகை, காசி, கயா, யாத்ரை.
ராமேஸ்வரம்,, ப்ரயாகை,காசி, கயா யாத்திரை விவரம்.
முதலில் தேவையானவைகளை தயார் படுத்திக்கொள்ளுதல்.
எந்த எந்த காலங்களில் காசி யாத்திரை செய்யக்கூடாது.என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
தன் வீட்டிற்கு புது மருமகள் கல்யாணம் செய்துகொண்டு வந்த ஒரு வருடம்; தான் கல்யாணம் செய்து கொண்ட ஒரு வருஷம்; தான் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஒரு வருஷம்;
தன் நெருங்கிய உறவினர்களுகு இறுதி க்ரியை செய்த ஒரு வருஷம் ,வேறு வகையான சூதகங்கள்//தீட்டுகள் ஏற்பட்டுள்ள காலங்களிலும் தீர்த்த யாத்திரை செய்ய க்கூடாது.
பெண்கள் மாதவிடாய் ஆன ஐந்தாவது நாள் முதல் தேவ , பித்ரு கார்யங்களில் கலந்து கொள்ளலாம் .யாத்திரை தொடங்கிய பின்னர் தீட்டு தெரிந்தால் தீட்டு முடியும் வரை சென்ற இடத்திலேயே தங்கி விட்டு தீட்டு போன பின்னர் யாத்திரை தொடர வேண்டும்.
மனைவி கர்பமாக இருக்கும்போது தீர்த்த யாத்திரை செல்லக்கூடாது. செல்லும்படி நேர்ந்தால் முண்டனம் (வபனம்) முடி நீக்கல் செய்யக்கூடாது. கர்ப காலம் ஏழு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தால் தீர்த்த சிராத்தமும் செய்யக்கூடாது.
தீர்த்த யாத்திரையின் போது பொய் சொல்லக்கூடாது. உடலுறவு கொள்ளக்கூடாது. ஒரு கால சாப்பாடே உட்கொள்ள வேண்டும்.
அசைக்க முடியாத நம்பிகையும், பக்தியும், சுத்தமும் முக்யமானது. தீர்த்த வாஸிகளை தூஷிக்ககூடாது.
தன் சக்திக்கு அதிகமாகவும் குறைவாகவும் இல்லாமல் தானங்கள் தீர்த்த கரையில் செய்ய வேண்டும்.
செய்யும் கர்மாவிற்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் அல்லவா. ஆதலால் எவ்வித குறையுமில்லாமல் வைதீக கர்மங்களை எவ்விதம் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும்.
தான் செய்த தான தர்மங்களை புகழ்ச்சியாக யாரிடமும் சொல்ல வேண்டாம்.
அகம்பாவம், ஆணவம், ஆடம்பரம் வேண்டாம். .அறிந்தோ அறியாமலோ செய்த பாபங்களுக்கு பஸ்சாதாபத்துடன் பரிஹாரம் செய்து கொள்ளவும்.
செய்யும் கர்மாக்களை ப்ரஹ்மார்பணமாக செய்ய வேண்டும். தீர்த்த யாத்திரையின் போது தான் பிறரிடம் தானம் எதுவும் பெற்றுக்கொள்ளக் கூடாது.
தேவி பாகவதத்தில் எல்லா ஆஸ்ரமத்தாரும், எல்லா வர்ணத்தாரும் , பெண்களும் ருத்ராக்ஷம் அணியலாம் என்று சொல்லபட்டிருக்கிறது.
பாத் ரூம் செல்லும்போதும் தூங்கும் போதும் ருத்ராக்ஷம் அணிய வேண்டாம். ஐந்து முக ருத்ராக்ஷம் அணிந்து யாத்திரை செல்லலாம்.
யாத்ரா தானம் செய்து விட்டு தீர்த்த யாத்திரைக்கு தேவையானவைகளை சேகரித்து கொண்டு சுவாமிக்கு அஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு கிளம்ப வேன்டும். குல தெய்வம் கோயிலுக்கு சென்று அபிஷேகம் ஆராதனை செய்து விட்டு தான் யாத்திரை செல்ல வேண்டும்.
அடுத்து செல்ல உள்ள க்ஷேத்திரத்திற்கு மட்டும் ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும், அங்கு சென்று முடிந்த பிறகு அங்கிருந்து அடுத்த க்ஷேத்திர த்திற்கு செல்லும் போது அடுத்த க்ஷேத்திறத்திற்கு மட்டும் ஸங்கல்பம்
செய்து கொண்டு செல்ல வேண்டும்.ராமேஸ்வரம், அலஹாபாத், காசி, கயா என்று எல்லா ஊர்களுக்கும் மொத்தமாக ஸங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது என்கிறது த்ரிஸ்தலி யாத்ரா விதானம் புத்தகம்.
பயணம் செல்லும் வழியில் உங்கள் உறவினர்களோ நண்பர்களோ இருந்தால் சாப்பாட்டிற்கு அவர்கள் உதவியை நாடலாம். இல்லாதவர்கள் கையில் வேண்டியதை தயார் செய்து வைத்துகொண்டு எடுத்து செல்ல வேண்டும்.. ரயிலில் கொடுக்கும் உணவு உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் ஆகிவிட்டால் அதனால் பேதி, வயிற்றுவலி வந்து விட்டால் நாம் செல்லும் நோக்கம் நிறைவேறாது.
இங்கு கிடைக்கும் வெற்றிலை வட மாநிலங்களில் கிடைக்காது .நீங்கள் வெற்றிலை எடுத்து செல்ல விரும்பினால் கிளம்பும் நாள் அண்று வெற்றிலை வாங்கி தண்ணிரில் நனைத்து ஒவ்வொன்றாக எடுத்து இரு பக்கமும்
துடைத்து அடுக்கி ஈர துணியில் சுற்றி அதன் மேல் அடிக்கடி தண்ணீர் தெளித்து காற்று புகாத ஜிப்லாக் கவரில் போட்டு வைத்து கொள்ளவேண்டும்.
வாடிய , அழுகும் நிலையில் உள்ள வெற்றிலைகளை பார்த்து முதலில் உபயோகிக்க வேண்டும். பாக்கு, சுன்னாம்பு ஏலக்காய், கிராம்பு தேவையான வற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.
பித்ருக்களுக்கு தீர்த்த சிராத்தம் ராமேஸ்வரம், அலஹாபாத், காசி. கயா என்ற நான்கு ஊர்களிலும் செய்ய பட வேண்டும்., அதில் பெறப்படும் ஆசீர்வாத அக்ஷதைகளை நம் குழந்தைகளுக்கும்,, பேரன் பேத்திகளுக்கும், மற்றும்
உறவினர்களுக்கும் எடுத்து செல்ல வசதியாக ப்லாஸ்டிக் கவர் பெயர் எழுதி வைத்து கொள்ளவும். ஆசிர்வாத அக்ஷதைகளை அதில் போட்டு விட்டு ஜிப் போட்டு மூடி பையில் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டிய ஏற்பாடு
செய்து கொள்ளவும். மார்க்கர் பேனா. எடுத்து செல்லவும், அந்தந்த கவரில் அந்தந்த ஊர்களில் பெயர் எழுதி போட்டு வைத்து கொள்ளவும்.
தேவையான அளவு, தர்பை, ஸமித்து, பொரச இலைகள் எடுத்து செல்ல வேண்டும். அங்கு போதுமான அளவு கிடைப்பதில்லை..
காசியிலிருந்து கயா விற்கு காரில் செல்பவர்களுக்கு வழியில் சாலை ஓரங்களில் தர்பை இருக்கும். கத்தி, கத்திரிக்கோல் எடுத்து சென்று
பச்சையாக தர்ப்பையை வெட்டி எடுத்து செல்லலாம். தர்பை செடிகளில் பூச்சிகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். பச்சை தர்பை உபயோகபடுத்தலாம்.
தோலினால் ஆன பெல்ட் வேண்டாம். ப்லாஸ்டிக் அல்லது ரப்பர் பெல்ட் அணிவதற்கு வாங்கி எடுத்து செல்ல வேண்டும். நதி நீர் ஓடும் வேகம் நம்மையே கீழே தள்ளும். வேஷ்டி எம்மாத்திரம்,.
பி வி சி அல்லது ரப்பர் செறுப்பு வாங்கி கொள்ள வேண்டும், இதில் நடந்து பழக்கி கொள்ள வேண்டும் முன்பாகவே. தோல் செறுப்பு வேண்டாம்.
ரயிலில் செல்லும் போது வியாபாரிகள் தொல்லை இருக்கும். நமது பொருட்கள் திருட்டு போகாமலும் ரயிலில் வியாபாரிகள் திணிக்கும் மோசமான பொருட்களை வாங்காமலும் இருக்க வேண்டும்.
சில ஊர்களில் குரங்கு தொல்லை இருக்கும். மூக்கு கண்ணாடி, அங்கு அணியக்கூடாது. கை பை கையிலோ அல்லது தோளிலோ இருக்க கூடாது.
அணிகலன்கள், ஆபரணங்கள் மிக மிக குறைவாக அணிந்து கொள்ள வேண்டும். ரூம் ப்ரஷ்னர், கொசு விரட்டி, ; ஸ்ப்ரேஸ் எடுத்து செல்ல வேண்டும். இது ரயிலிலும் நாம் சென்று தங்கும் இடங்களிலும் தேவை படுகின்றது. எல்லா இடங்களிலும் திருடர்கள் இருப்பார்கள். கவனம் தேவை
ஊருக்கு வந்தவுடன் சமாராதனை செய்த பிறகே நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அன்னபூர்ணி, கங்கை ஜலம், ரக்ஷை கயிறு முதலியன கொடுக்க வேண்டும்.
ரயிலில் ப்ரயாணத்தின் போது சாப்பிட பேப்பர் கப்புகள், அட்டை ப்லேட்டுகள்.
அல்லது அலுமினியம் ப்லேட்டு, அலிமினியம் டம்ப்லர், ஸ்பூன்கள், தேவையானவற்றை கணக்கு செய்து வாங்கி செல்ல வேண்டும்.
லேன்ட் லைனிற்கு வரும் கால்களை உங்கள் செல் போனுக்கு வரும்படி செய்து கொள்ளுங்கள். செல் போன் சார்ஜர், ஷேவிங் செட், வேஷ்டி, ஒன்பது ஐந்து துண்டுகள்,, புடவைகள் 9 கஜம் உள்ளாடைகள் பேஸ்ட், ப்ரஷ், சோப்பு, சீப்பு,
கண்ணாடி, தலைக்கு தடவ எண்ணெய், குங்குமம், மஞ்சள்,பொடி; துணி துவைக்கும் சோப்பு; ஈரமான உடைகளை வைத்துக்கொள்ள ப்லாஸ்டிக் பைகள், பஞ்சபாத்திர உத்திரிணி, பித்தளை தாம்பாளம், பாக்கு மட்டை
கிண்ணங்கள். உடை உலர்த்த ப்லாஸ்டிக் கயிறு,, வீபூதி, சந்தனம்பொடி க்லிப்புகள்; பித்தளை சொம்பு. எடுத்து செல்ல வேண்டும்.