வெற்றியை தரும் புரட்டாசி பௌர்ணமி:
புரட்டாசி மாத பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம்.
புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள்.
என்ன செய்ய வேண்டும்?
புரட்டாசி மாத பௌர்ணமியான இன்று விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் கிடைக்கும் மற்றும் சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.
புரட்டாசி பௌர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் உண்டாகும்.
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும், தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.
புரட்டாசி பௌர்ணமியின் சிறப்புகள்:
புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும்.
நண்பகலில் சிவபெருமானை வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டுமில்லாமல், இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.
மாலை வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.
சத்யநாராயண பூஜை:
சத்யநாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைபிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும். பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று.
இப்பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்க என எந்த ஒரு நல்ல காரியத்தின் போதும் நடத்தப்படுகிறது. எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும். சத்யநாராயண பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்ணமியன்று செய்தால் மிகவும் நல்லது.
பலன்கள்:
பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணப் பேறு கிடைக்கும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகள் நீங்கும்.
பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வச்சேர்க்கை உண்டாகும்.