பித்ருக்களை மகிழ்விக்கும் பிரம்மா அருளிய பித்ரு தேவதா ஸ்தோத்திரம்!
இந்த பதிவு சம்பிரதாயமாக, சாஸ்திரப்படி பித்ரு தர்ப்பணம் செய்து வருபவர்களுக்கானது அல்ல.
ஏதும் தெரியாத பித்ருக்களுக்கு எப்படி தர்ப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பவர்களுக்கானது.
தை அமாவாசை/ஆடி அமாவாசை/புரட்டாசி மஹாளய அமாவாசை மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாட்கள்.
அதாவது இந்த நாட்களில் நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள்.
உயர்சாதிகாரர்களுக்குத்தான் அது சரிபட்டு வரும்.
நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள்.
சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள்.
திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது.
தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின்
பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய
12 பேர் மட்டும் தெரிந்தால் போதும்.
சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம்.
அதற்கும் கவலைப்பட வேண்டாம்.
என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள கருப்பு எள் மீது தண்ணீர் ஊற்றி,
ஓம் பித்ரு தேவதாயை நமஹ
என்று சொல்லி அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.
தர்ப்பணம் கொடுத்து முடித்ததும்
ஓம் பித்ரு தேவதாயை நமஹ
என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை தன்னைதானே சுற்றிக்கொண்டு ஆத்ம பிரதட்சினம் செய்ய வேண்டும்.
பிறகு
ஓம் பித்ரு தேவதாயை நமஹ
என்று சொல்லிக் கொண்டு மூன்று முறை விழுந்து வணங்க வேண்டும்.
இந்த நாட்களில் அகத்தி கீரை ,வெல்லம்,பச்சரிசி போன்றவற்றை பசுமாடுகளுக்கு கொடுத்து அதன் பின்புறம் தொட்டு வணங்க வேண்டும்.
காக்கைக்கு சாதம் கட்டாயம் வைக்க வேண்டும்.
முடிந்தால் இரண்டு ஏழைகளுக்கு உணவுப்பொட்டலம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அவரவர் முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம்.
நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.
ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது.
மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.
பித்ரு தர்ப்பணத்தை அபரான்ன காலத்தில் செய்தால் மட்டுமே அது பித்ருக்களை சென்றடையும்
அபரான்ன காலம் என்பது மதியம் 1-12 மணி முதல் 3-36 மணிவரை உள்ள காலமாகும்.
அபரான்ன காலத்தில் பூமி வெப்பத்தால் தகிக்கும்.நம்மால் வெறும் காலால் பூமியின் வெப்பத்தை தகிக்க முடியவில்லை எனில் அதுவே பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு தகுந்த நேரம்.
தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.
தை அமாவாசை/ஆடி அமாவாசை/புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம்.
இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள்.
அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்.
இது பலரும் அனுபவித்து வரும் உண்மை.
ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் தை அமாவாசை/ஆடி அமாவாசை/புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை நாளில் பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.
தை அமாவாசை/ஆடி அமாவாசை/புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை தினத்தன்று கீழ்கண்ட முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.
1. புனித நதிகளில் நீராட வேண்டும்.
2. பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
3. மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.
4.காக்கைக்கு உணவிடுதல் வேண்டும்
5.அகத்தி கீரை , வெல்லம்,பச்சரிசி போன்றவற்றை பசுமாடுகளுக்கு கொடுத்து அதன் பின்புறம் தொட்டு வணங்க வேண்டும்
6.இரண்டு பேருக்காவது (ஏழைகளுக்கு )அன்ன தானம் கொடுக்க வேண்டும்.

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
என்கிற பிரம்மா அருளிய பித்ரு தேவதா ஸ்தோத்திரத்தை கூற வேண்டிய முறை பிரம்மா அருளிய பித்ரு தேவதா ஸ்தோத்திரத்தின்
ஒலி வடிவ காணொளிக்காட்சி உங்களுக்காக