pillayaar chathurthi on 11september2010 saturday

Status
Not open for further replies.

tnkesaven

Active member
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்!
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு: காமார்த்த ஸித்தயே!!
பொருள்: தீர்க்காயுள், விருப்பம், செல்வவளம் ஆகியவற்றை அருளும் பார்வதியின் மைந்தனும், தூய்மையான பக்தர்களின் நெஞ்சில் வசிப்பவருமான விநாயகப்பெருமானை தினமும் வணங்குகிறேன்.

மனப்பாடப் பகுதி
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளியோடும் தொடர்வினைகளே!
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.
பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர், நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்கு இனிமையான அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.
 
this year lots of things happening on sep 11 - apart from vinayakar chathurhi, it is also the end of ramzan, and also ofcourse the anniversary of the 9/11 bombing.

may this day pass peacefully. God Bless.
 
Status
Not open for further replies.
Back
Top