• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

PADHMINI EKADASI.

kgopalan

Active member
பத்மினி ஏகாதசி இன்று
27.09.2020 - ஞாயிற்றுக்கிழமை
மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார்:

ஓ கிருஷ்ணா, ஓ ஜனார்தனா, அதிக மாசத்தில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி எனக்கு கூறுங்கள். மேலும் இதை கடைபிடிப்பவர் என்ன பலனை அடைவார் என்பதையும் எனக்கு கூறுங்கள்.
பகவான் கிருஷ்ணர் பதில் அளித்தார்:

ஓ! மன்னா! இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் பத்மினி. இந்த ஏகாதசியை சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர் பகவான் பத்மநாபரின் பரமத்தை அடைவார். இந்த ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்து விடும். இந்த ஏகாதசியின் முழு பலன்களை பற்றி எடுத்துரைக்க பிரம்மாவாலும் இயலாது. இருப்பினும் முன்பு ஒரு காலத்தில் செல்வம் மற்றும் முக்தியை அளிக்கக்கூடிய இந்த பத்மினி ஏகாதசியின் புகழை பிரம்மா நாரதரிடம் விளக்கி கூறினார்.


பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஒருவர் இந்த ஏகாதசியை கடைபிடிக்க, ஏகாதசியின் முன்தினமான தசமி நாளன்றே துவங்க வேண்டும். புனித நாமங்களை ஜபிக்க வேண்டும். ஒருவர் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது. ஏகாதசி அன்று இரவு விழுத்திருந்து புனித நாமங்கள் மற்றும் பகவானின் தன்மைகளை புகழ வேண்டும். ஏகாதசி இரவில் முதல் மூன்று மணி நேரம் விழுத்திருப்பவர் அக்னி ஸ்தோமா யாகத்தை செய்த பலனை அடைவார். முதல் ஆறு மணி நேரம் விழித்திருப்பவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.

முதல் ஒன்பது மணி நேரம் விழுத்திருப்பவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார். முழு இரவு விழித்திருப்பவர் ராஜசூய யாகத்தின் பலனை அடைவார். துவாதசியன்று வைஷ்ணவர்கள் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பவர் நிச்சயமாக முக்தி அடைவார்.

பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ, பாவமற்றவனே, உனது வேண்டுக்கோளுக்கு, இணங்கி நான் இந்த ஏகாதசியை கடைப்பிடிக்கும் முறையினை விளக்கினேன். இப்பொழுது புலஸ்ய முனிவர், நாரத முனிவருக்கு கூறிய சுவராஸ்யமான கதையை கவனமாக கேள். ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனா இராவணனை தோற்கடித்து சிறையில் அடைத்தார். இராவணனை இக்கோலத்தில் கண்ட


புலஸ்ய முனிவர் கார்த்வீர்யார்ஜீனாவிடம் சென்று இராவணனை விடுதலை செய்யுமாறு வேண்டினார், புலஸ்ய முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி அரசன் இராவணனை விடுதலை செய்தார். இந்த வியக்கத்தக்க நிகழ்ச்சியை கேட்ட நாரத முனிவர் புலஸ்ய முனிவரிடம் கேட்டார், ஓ முனிவரில் சிறந்தவரே! இந்திரன் உள்பட எல்லா தேவர்களையும் வென்ற இராவணனை கார்த்வீர்யார்ஜீனாவால் எவ்வாறு வெல்ல முடிந்தது. இதனை எனக்கு விளக்குங்கள்!!

புலஸ்ய முனிவர் பதில் அளித்தார், ஓ நாரதா! திரேதா யுகத்தில் ஹைஹயா வம்சத்தில் பிறந்த கிருதவீர்யா என்ற மன்னர் இருந்தார். இவருடைய தலைநகர் மாஹிஸ்மதீபுரி. இவருக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தனர், ஆயினும் நாட்டை ஆள தகுந்த ஒரு மகன் இருக்கவில்லை. இவர் தன் முன்னோர்களையும் சாதுக்களையும் பூஜித்து வந்தார் மற்றும் முனிவர்களின் வழிமுறைப்படி பல

விரதங்களை மேற்கொண்டார். இருப்பினும் அவருக்கு ஓரு ஆண்வாரிசு உண்டாகவில்லை ஆகையால் மன்னர் தவம் செய்ய முடிவு செய்தார். தன் ராஜ்யத்தின் பொறுப்புகளை எல்லாம் பிரதம மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்வதற்காக மரப்பட்டையால் செய்த ஆடையை அணிந்து காட்டிற்கு சென்றார். தனது மனைவிகளில் ஒருவரான பத்மினி, மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை கண்டார். பத்மினி இக்ஸ்வாகு வம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரனின் மகள், பத்மினி தன் கணவர் தவம் செய்வதற்காக காட்டிற்கு செல்வதை அறிந்து உடனே தானும் தன் ஆபரணங்களை துறந்து கணவருடன் மந்தாரா மலைக்கு சென்றனர்.

மந்தார மலை உச்சியில் மன்னர் கிருதவீர்யா மற்றும் தன் மனைவி பத்மினி இருவரும் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர் தன் கணவரின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து போவதை கண்ட பத்மினி இதற்கு ஒரு தீர்வு காண நினைத்தாள். பத்மினி அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயாவிடம் கேட்டார். ஓ, கற்புக்கரசியே, என் கணவர் தவம் புரிவதில் பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தார். ஆயினும், அனைவரின் துன்பங்களை நீக்கக்கூடிய கேசவனை திருப்திப்படுத்த

முடியவில்லை. ஓ, அதிர்ஷ்டசாலியே, எந்த ஒருவிரதத்தை மேற்கொண்டால் பகவான் திருப்தியடைந்து சிறந்த மன்னனாகக் கூடிய ஒரு மகனை எனக்கு அருள்வார் என்பதை கூறுங்கள். இவ்வாறு வேண்டிய பத்மினியிடம் அனுசுயா கூறினார், முப்பத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் மாதம் தோன்றும். இந்த அதிக மாதத்தில் வரக்கூடிய ஏகாதசிகள் பத்மினி மற்றும் பரமா. இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால், பகவான் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்.


பகவான் கிருஷ்ணா மேலும் தொடர்ந்தார், அனுசுயாவின் வழிமுறைப்படி அரசின் பத்மினி இந்த ஏகாதசியைக் கடைப்பிடித்தாள். கேசவன் கருட வாகனத்தில் பத்மினியின் முன் தோன்றி தனக்கு வேண்டிய வரத்தை கேட்கச் சொன்னார். அரசி முதலில் பகவானை வணங்கி தனது பிரார்த்தனைகளை சமர்ப்பித்தார், பிறகு தனக்கு ஒரு மகனை அருளுமாறு வேண்டினார். பகவான் கூறினார், ஓ சாந்தமும், நற்குணமும் நிறைந்த பெண்ணே உன்னுடைய விரதத்தால் நான் திருப்தி அடைந்தேன். அதிக மாசத்தை விட எனக்கு பிரியமான மாதம் வேறு எதுவும் இல்லை இந்த மாதத்தின் ஏகாதசிகள் எனக்கு பிரியமானவை. நீ இந்த ஏகாதசியை சரியாக கடைபிடித்திருக்கின்றாய். எனவே நிச்சயமாக உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.
பத்மினியிடம் இவ்வாறு கூறிய பகவான் பிறகு, அரசன் முன் சென்று ஓ சிறந்த மன்னா!! உன் மனைவியின் ஏகாதசியின் விரதத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு வேண்டிய வரத்தை கேள், விஷ்ணு பகவானின் வார்த்தைகளை கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மிக வலிமையுடன் எப்பொழுதும் வெற்றியை அடையும்படியான ஒரு மகனை தனக்கு அருளுமாறு

வேண்டினார். ஓ, மதுசூதனா, பிரபஞ்சத்தின் பகவானே, தேவர்கள், மனிதர்கள், பாம்புகள், மற்றும் அரக்கர்கள் போன்றவர்களால் வெல்ல முடியாத ஒரு மகனை எனக்கு அருளுங்கள். பகவான் மன்னர் வேண்டிய வரத்தை அருளி மறைந்தார். முழுமையாக திருப்தியடைந்த மன்னனும் அவர் மனைவியும் தங்கள் பழைய உடல்நிலையை அடைந்து தங்கள் நாட்டிற்கு திரும்பினர். அரசி பத்மினி மிக்க வல்லமைபடைத்த ஒரு மகனை பெற்றெடுத்தாள்,

அவன் கார்த்தவீரயார்ஜுன என புகழ் பெற்றான். மூவுலங்களிலும் தன்னை விட வலிமைமிக்க வீரர் இருக்கவில்லை, பத்து தலைகள் கொண்ட இராவணனும் கார்த்தவீயார்ஜுனாவால்

தோற்கடிப்பட்டான். இந்த அற்புதமான கதையை கூறிவிட்டு புலஸ்திய முனிவர் விலகி சென்றார்.
பகவான் கிருஷ்ணன் கூறினார், ஓ! பாவமற்ற மன்னா, அதிக மாசத்தில் வரும் ஏகாதசியை பற்றி உன்னிடம் விளக்கினேன். ஓ, மன்னர்களில் சிறந்தவனே இந்த ஏகாதசியை கடைபிடிப்பவர்

யாராயினும், பகவான் ஹரியின் பரமத்தை அடைவார். கிருஷ்ணரின் வாக்கிற்கு இணங்கி, மகாராஜா யுதிஸ்டிரர் தன் குடும்பத்துடன் இந்த ஏகாதசியை கடைப்பிடித்தார். ஒருவர் தன் வாழ்நாளில் இந்த ஏகாதசியை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் அவர் புகழ் அடைவார். யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளை பற்றி படித்தாலோ அல்லது கேட்டாலோ அவருக்கு மிகுந்த அளவில் தெய்வ பக்தி கிடைக்கும்.

பத்மினி ஏகாதசி விரதத்தின் மகிமை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துக்கூறினார். இந்த விரதக்கதையினை கேட்டவர்களும், படித்தவர்களும் மேலும் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறியவர்களும் மிகுந்த புண்ய பலனைப்பெறுகிறார்கள் என்றும் கோ தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என்றும் ஸ்காந்த புராணம் எடுத்துரைகின்றன
 
நீங்கள் தொடர்ந்து அதிக மாசம் வரும் பலவற்றை எழுதி வருகிறீர்கள் நன்றி. எனக்கு ரொம்ப நாளாகவே சந்தேகம். இந்த அதிக மாசத்தில் (தமிழ் மாதங்கள் பார்ப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை) பிறப்பு நட்சத்திரம் அல்லது இறப்பு திதி வரும் வருடங்களில் எப்படி கணக்கிடுவது? இது தெரிந்து கொள்ள கேட்ட கேள்வி.
 
26/09/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் முறையை மேலும் தொடர்கிறார்.*
*இதில் முதலில் தர்ஸ ஸ்ராத்தமான அம்மாவாசை தான் பித்ரு காரியங்கள் ஆரம்பிக்கின்றது. எல்லா சாஸ்திர கிரந்தங்களிலும் முதலில் இதை தான் ஆரம்பிக்கின்றன.*
*ஏனென்றால் அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய இந்த தர்ப்பணம் தான் அடிப்படையானது. பிரகிருதி. வருடத்தில் 12 வரும். அதிக மாசம் வந்தால் பதின்மூன்றாவது ஆக ஒன்று கூட வரும்.*
அதையும் சேர்த்து செய்ய வேண்டிய தான் தர்ப்பணம் செய்பவர்களுக்கு இதில் எந்த சந்தேகமும் வராது. சிராத்தம் என்று வரும் பொழுது, வருடாந்திர ஸ்ராத்தம் அமாவாசை அன்று வரும் பொழுது, ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால், எதில் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று பார்க்கும் போது, ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால் #சௌரமானம்_அனுஷ்டிப்பவர்கள், #அதாவது_ஸ்மார்த்தர்கள், #இரண்டாவதாக_வரக்கூடிய_திதியில் #அவர்கள்_சிராத்தத்தை #செய்யவேண்டும்.
இதில் ஒரே கட்டுப்பாடு தான் மாறுதல் கிடையாது. #பஞ்சாங்கத்திலேயே_ஒரே #மாதத்தில்_இரண்டு_திதிகள்_வந்தால், #முதலில்_வரக்கூடியதான_திதிக்கு #சூன்ய_திதி_என்று_போட்டிருப்பார்கள். அதாவது சூன்ய திதி என்று போட்டிருந்தால் அதே திதி திரும்பவும் வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம் அந்த மாதத்தில்.
அதுபோல்தான் அமாவாசைக்கும் உள்ள கட்டுப்பாடு. #சாந்திரமான_படி #அனுஷ்டிப்பவர்கள்_அவர்களுக்கு_இந்த #சூன்ய_திதி_என்பதே_கிடையாது, #ஏனென்றால்_சந்திரனை_அனுசரித்து #பார்க்கும்_பொழுது_மாதத்திற்கு_ஒரு #திதி_என்று_வரிசையாக_வந்து #கொண்டே
#இருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் என்று சாந்திரமான படி வரவே வராது.
அதிக மாசம் என்று எப்போது வருகிறதோ அப்போதுதான் அதிகப்படியாக ஒரு திதி வரும். அப்படி ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால், சாந்திரமான படி அனுஷ்டிப்பவர்கள் இரண்டு முறை சிராத்தம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன.
அதனால் இந்த மாதத்தை மலமாதம் அல்லது அதிக மாசம் என்று சொல்கிறோம். இந்த அம்மாவாசை சிராத்த திதி ஆக இருந்தால், சாந்திர மானத்தைக் அனுஷ்டிப்பவர்கள், இரண்டு தடவை சிராத்தத்தைச் செய்ய வேண்டும். முதலில் வரக்கூடியதுதான அமாவாசையிலும் செய்ய வேண்டும் இரண்டாவதாக வரக்கூடிய அமாவாசையிலும் செய்ய வேண்டும்.
இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, ஆகையினாலே ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால், #இரண்டு_திதிகளிலும் #சிராத்தத்தை_செய்யவேண்டும் #சாந்திரமான_படி_அனுஷ்டிப்பவர்கள், #அதிக_மாசம்_வந்தால்.
#சௌரமான_படி_முதலில்_சூன்ய_திதி #என்று_எடுத்துக்கொள்ள_வேண்டும். #இரண்டாவதாக_வரக்கூடிய_திதியில் #சிராத்தம்_செய்ய_வேண்டும். ஆனால் இந்த அமாவாசை அன்று இரண்டுமே செய்ய வேண்டியது தான். அதாவது தர்ப்பணத்தை இரண்டு அமாவாசையிலும் செய்துவிடவேண்டும் இப்படித்தான் தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.
அதில் மாறுதலே வராது. அபரான்ன காலத்தில் அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முதல் நாளும் அமாவாசை திதி என்று போட்டிருக்கிறது மறுநாளும் போட்டிருக்கிறது என்கின்ற பட்சத்தில், முதல் நாளே தர்ப்பணம் செய்வது என்பது கூடாது. அப்படி செய்தால் ஆயுள் போய்விடும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது. #அதற்கு_பூதவித்தா_என்று_பெயர். தர்ம சாஸ்திரத்தில் முதல் நாளும் மறுநாள் அமாவாசை இருக்கின்றது, அபரான்னத்தில் முதல் நாள் அமாவாசை இல்லை, மறுநாள் அபரான்னத்தில் இருக்கிறது என்றால், இதையெல்லாம் பார்த்து தான் நமக்கு நிர்ணயம் செய்து கொடுத்து இருப்பார்கள் பஞ்சாங்கத்தில். அதைப் பார்த்து செய்ய வேண்டும்.
#அபரான்ன_காலத்தில்_அமாவாஸ்ய #இல்லாதபட்சத்தில்_செய்யும்_பொழுது #அவர்களுக்கு_ஆயுசு_போய்விடும்
#நோய்_வந்து_இறக்க_நேரிடும்_என்று #தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.
*வியாதிகள் வந்து இறக்க நேரிடும் என்பதினால் தர்ஸ சிராத்தம் அந்தக் காலத்தில் செய்ய வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக பார்த்து செய்ய வேண்டும்.*
*இந்த அம்மாவாசை யாரை உத்தேசித்து செய்ய வேண்டும். வர்க்த்துவைய பிதுர்க்களையும் உத்தேசித்து செய்ய வேண்டும். இந்த ஷண்ணவதி 96 இல் ஒரு சிலது மாறுபடுகிறது. அது என்ன என்பதை பின்னால் பார்ப்போம்.*
*அதேபோல் இந்த அமாவாசை அன்று புண்ணிய காலங்கள் அதிகப்படியாக சேரும். இதில் ஒரு புண்ணிய காலம் இரண்டு புண்ணிய காலம் மூன்று புண்ணிய காலம் நான்கு புண்ணிய காலங்கள் கூட சேரும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*
அப்படி வருகின்ற போது எவ்வளவு தர்ப்பணம் செய்யவேண்டும் எதை முதலில் செய்ய வேண்டும்? என்பதை விரிவாக நாம் பார்ப்போம். இந்த அமாவாசை தர்ப்பணத்திற்கு நித்தியம் என்று பெயர்.
#ஷண்ணவதியில்_நித்தியம்_மற்றும் #நைமித்திகம்_என்று பிரித்திருக்கிறார்கள் தர்ம சாஸ்திரத்தில். இந்த 96 மே நித்தியம் தான் அதில் மாறுதல் இல்லை. கட்டாயம் செய்து ஆகவேண்டும் என்றிருந்தால் அது நித்தியம் என்று பெயர்.
இதற்கு நியத நித்தியம் அநீத நித்தியம் என்று தர்ம சாஸ்திரத்தில் உட்பிரிவுகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் நாம் ஓரளவுக்குத்தான் மனதிலேயே வைத்துக் கொள்ள முடியும். வாத்தியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் பஞ்சாங்கத்தில் என்ன புண்ணியகாலம் என்று காண்பித்து இருப்பார்கள். வருட ஆரம்பத்தில் பஞ்சாங்கத்தைப் பார்த்து இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் என்று வருகிறது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். விட்டுப் போகாமல் செய்து கொண்டு வரவேண்டும்
*அம்மாவாசை அன்று நாம் செய்யக்கூடிய அந்த தர்ஸ சிராத்தத்தில், வர்க்கத்துவய பிதுருக்களையும் உத்தேசித்து நாம் செய்கிறோம். அதாவது முதலில் பிதுர் வர்க்கம்.*
*பிதுர்பிதாமஹ பிரபிதாமஹர்கள் தாயார் இருந்தால் அவர்களுக்கு முன்னால் உள்ள மூன்று தலைமுறை. மாதா மஹ வர்க்கம் தாயாரின் உடைய தகப்பனார் முதற்கொண்டு மூன்று தலைமுறை. தாயாருடைய தாயார் முதற்கொண்டு மூன்று தலைமுறை. இதற்குத்தான் வர்க்கத்துவய பிதுருக்கள் என்று பெயர்.*
*அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய நியமங்கள் இதுதான். இதுதான் ஆரம்பம் இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களுக்கும். இது 12 அல்லது 13 வரும். இரண்டாவது யுகாதி என்று சொல்லக்கூடிய தான புண்ணியகாலம். இதை இரண்டாவதாக தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது. காலம் முன்பின் மாறிவரும் காலங்கள் ஒன்றுக்கும் வேறுபடும். வரிசை என்று வரும் பொழுது இப்படி அதை நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். வருடத்தில் நான்கு யுகாதிகள் வரும் அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
 

Latest ads

Back
Top