• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Nakshatra Parigarangal

நட்சத்திர பரிகாரங்கள்

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எமகண்ட காலத்தில் அவ்வப்போது குதிரைகளுக்கு கொள்ளு மற்றும் இராசாளி பறவைகளுக்கு தானிய வகைகள் வழங்கி வரும் பொழுது தங்களின் சகலவித அனைத்து தோஷங்களும் நீங்கும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் யானைக்கும் யானை பாகனுக்கு உணவு தானம் வழங்குவதும், காகத்திற்கு அன்னம் அளிப்பதும், வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ஆட்டுக்கறி உண்பதை தவிர்த்து, அத்தி மரம் வளர்த்து, மயில்களுக்கு இரைஅளித்து வர தங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நிவர்த்தி பெற்று வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடலாம். மேலும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக இருந்து செயல்படுங்கள்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நாகத்தை வணங்கி புற்றுக்கு பால் ஊற்றுவதும், நாவல் மரத்திற்கு நீர் விடுவதும், நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களுக்கு செல்வதும், வீட்டில் ஆந்தை படம் ஒன்றை வாங்கி வைத்து அதனை தினசரி பார்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெற்று இன்புறலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் புற்றுக்கு பால் வார்ப்பது, கோழி மற்றும் சேவலுக்கு இரை போடுவதும், பிராமணர்கள், குழந்தைகள், சன்னியாசிகளுக்கு ஆடை மற்றும் உணவு தானம் அளிப்பதும் நல்ல பலன் தரும். மேலும் கோழி இறைச்சி தவிர்ப்பதும், உலக்கையால் உரலை இடிக்காமல் இருப்பதும் அவசியம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பாம்புகளுக்கு பால் கொடுப்பதும், நாய்களுக்கு துரோகம் இழைக்காமல் இருப்பதும், புற்று மாரியம்மனை வணங்குவதும், ஆடலரசன் சிவபெருமான் உள்ள திருத் தலங்களான மதுரை சிதம்பரம் குற்றாலம் திருநெல்வேலி உள்ளிட்ட திருத்தலங்களுக்குச் சென்று வருவது தங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி நன்மையை ஏற்படுத்தும்,

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பூனைக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதும், மூங்கில் மரங்களை நட்டு வளர்ப்பது, மூங்கில் மரங்களை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களுக்கு செல்வதும், அன்னப்பறவை யுடன் கூடிய சரஸ்வதி தாயாரை வணங்குவதும், ஆட்டு இறைச்சி தவிர்ப்பதும், தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் தனது நட்சத்திர விலங்கான ஆடுகளை வளர்ப்பதும், ஆடுகளை உணவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும், அரச மர விநாயகரை 108 முறை வலம் வருவதும், ((நீர்காகம்)) காகத்திற்கு அன்னம் படைப்பதும், திருச்செந்தூர் முருகனை வழிபடவும் தங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்து நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் பூனைக்கு தீங்கு விளைவிக்காமல்ம், புன்னை மரத்தை நட்பு வளர்ப்பதும், கிச்சிலி போன்ற பறவைகளுக்கு உணவளிப்பதும், புற்றுகளுக்கு பால் வார்ப்பதும், திங்கட்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் கூடிய நாளில் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்வதாலும் சகல தோஷங்களும் நிவர்த்தி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

மகம் நட்சத்திரக்காரர்கள் ஆலமர விநாயகரை வணங்குவதும், கருட பகவானையும் கருட தரிசனம் செய்வதும், எமதர்மராஜாவிற்கு சிறப்பு அர்ச்சனை செய்வதும், பித்ரு தேவதைகளான முன்னோர்களை வணங்குவதும், தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதும், இரண்டு மற்றும் நான்கு கால் பிராணிகளை வளர்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து வித தோஷங்களையும் நிவர்த்தி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்,

பூரம் நட்சத்திரக்காரர்கள் விநாயகருக்கும் விநாயகர் வாகனத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்வதும், கருடனை வணங்குவது, ஸ்ரீரங்கம் கருடபகவானுக்கு சிறப்பு ஆராதனை செய்வதும், பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவிலுக்கு செல்வதும், வருடம் ஒருமுறை காஞ்சி காமாட்சி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரையும் தரிசனம் செய்துவர தங்கள் ஜாதகத்தில் ஏற்படும் அனைத்து தடைகளும் நிவர்த்தி பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பொதுவாக பசு மாடுகளுக்கு அகத்திகீரை வெல்லம் பச்சரிசி போன்ற உணவளிப்பதும், அலரி அல்லது இலந்தை மரத்திற்கு நீர் ஊற்றுவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த மகாலட்சுமி தாயாரையும் தேவகுரு பிரகஸ்பதியையும் வணங்குவதும், ஸ்ரீரங்கத்தில் உள்ள லக்ஷ்மி அம்சமாக இருக்கும் வில்வ மரத்தை வலம் வந்து வணங்கலாம்.மேலும் உத்திரமும் வெள்ளிக்கிழமையும் சேரும் நாளில் வீட்டில் அஷ்ட லக்ஷ்மி பூஜை செய்வதில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் பருந்து பறவை விருந்து வைப்பதும், பெண் எருமைக்கு உணவளிப்பதும், திருப்பைஞ்சீலி சென்று எமதர்மராஜா வணங்குவதும், தினசரி சூரிய பகவானை வணங்குவது உடன் காயத்ரி தேவியின் காயத்ரி மந்திரம் சொல்லுவதும், அத்தி மரம் வளர நீர் ஊட்டுவதும், சூரிய பகவான் மனைவி மக்கள் என குடும்பத்துடன் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வணங்குவதும் தங்கள் வாழ்வில் எல்லையற்ற இன்பத்தைப் பெற்று தரும்...

சித்திரை நட்சத்திரக்காரர்கள் புலியுடன் கூடிய ஐயப்பனை வணங்குவது,, வில்வமரம் தலவிருட்சங்கள் செல்வதும் வில்வ மரம் நட்டு வளர்ப்பது, மரங்கொத்திப் பறவைக்கு உணவளிப்பதும்,, தேவதச்சன் விஸ்வகர்மா ஆலயம் செல்வது,ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வாரை வணங்கி 16 நெய்தீபம் ஏற்றுவதும்,ஆண்டுக்கொருமுறை சுதர்சன ஹோமம் செய்வதால் தங்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களும் நீங்கி சக்கரத்தாழ்வாரின் 16 ஆயுதங்கள் உதவியுடன் 16 செல்வங்களுடன் வாழலாம்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் எருமைக்கு உணவளிப்பதும், மருத மரத்திற்கு நீர் ஊற்றுவதும், தேனீ கூடுகளை பராமரிப்பதும், தினசரி தேன்கூடு படத்தைப் பார்த்து வருவதும், மருதமலை முருகனை தரிசிப்பதும், தனது காலடியின் கீழ் எருமை மாட்டுடன் இருக்கும் காளிதேவியை வணங்குவதும், செவ்வாய்க்கிழமை சுவாதி நட்சத்திரத்துடன் கூடிய ராகுகாலத்தில் நரசிம்ம பெருமாளை வணங்குவது தங்களுக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் விளாம் மரம் நட்டு வளர்ப்பதும், செங்குருவி போன்ற பறவைகளுக்கு உணவளிப்பது, புலி மேல் அமர்ந்த ஐயப்பனை வணங்குவதும், மதுரைக்கு அருகே உள்ள திருமோகூர் கஜேந்திர வைபவம், காஞ்சிபுரம் கருட சேவை தரிசனம் செய்வதும், திருச்செந்தூர் கடற்கரையில் சந்தன மலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் மான் பொம்மை அல்லது படம் வீட்டில் வைப்பதும், மகிழ மரம் நட்டு வளர்ப்பது, வானம்பாடி பறவைக்கு உணவு வைப்பதும், லட்சுமி நாராயணனை வணங்குவதும், திருநறையூர் உள்ள நாச்சியார்கோவில் சென்று பெருமாளுக்கு உடைய கல் கருடவாகன சேவையை தரிசனம் செய்வதும், பிராமணர்களுக்கு நல்லெண்ணை தானம் செய்வதும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் மான்கள் படத்தை அவ்வப்போது பார்த்து வருவதும், திருச்சி அருகே திருப்பராய்த்துறை சென்று சிவபெருமானை வழங்குவதும், திருவிடந்தை ஊரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வராக பெருமாளையும், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீ பூவராக பெருமானையும் வணங்கிவர தடைப்பட்ட அனைத்து சுப காரியங்களும் இனிதே நிறைவேறும்.

மூலம் நட்சத்திரகாரர்கள் நாய் இனங்களுக்கு துரோகம் இழைக்காமல் பிஸ்கட் போன்ற உணவு அளிப்பதும்,, மரா மரம் வளர்ப்பதும்,, பருந்துகளுக்கு உணவளிப்பதும்,, பிரதி மூலம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மற்றும் ஸ்ரீராமஜெயம் சொல்ல அனைத்து தோஷங்களும் விலகப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்.

பூராடம் நட்சத்திரக்காரர்கள் குரங்குகளுக்கு பழங்கள் தருவதும், வஞ்சி மர தலங்களுக்கு செல்வதும், கௌதாரி பறவையை பார்த்து வருவதும், வருணபகவான் உள்ள கோவில்களுக்கு சென்று வருவதும், தங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி தாயாரை வழிபட்டு வர சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி வர குழந்தை பாக்கியமும், கீரிப்பிள்ளை படத்தைப்பார்த்து வர நன்மைகளும், பலா மரம் வளர்ப்பதும், வலியான் பறவைகளுக்கு உணவளிப்பதும், ஸ்ரீரங்கத்தில் உள்ள விஸ்வேஸ்வரர் வணங்குவதும், பிள்ளையார்பட்டி பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், உட்பட அனைத்து விநாயகர் கோவில்கள் சென்று வணங்குவதும், யானைகளுக்கு வாழைப்பழம் வழங்குவதும் சகல நன்மைகளும் தரும்,

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம் வழங்கும், வீட்டில் எருக்கு விநாயகர் வைப்பதும், நாரைகளுக்கு உணவளிப்பதும், செவ்வாய் பகவானை வணங்குவதும், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் மற்றும் திருமலை சீனிவாச பெருமாள் உருவம் கொண்ட ஸ்ரீ மகாவிஷ்ணு வணங்குவதும், சிராவண மற்றும் ஏகாதசி விரதம் இருப்பது தங்களுக்கு அனைத்து நன்மைகளையும் பெற்று தரும்,

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அத்ரவன், அணிலன், அனலன், ஆபன், சோமன், துருவன், பிரத்யூசன், பிரபாசன் ஆகிய அஷ்டவசுக்கள் வணங்குவதும், சிங்கம் உருவம் கொண்ட படங்களை பார்ப்பது, வன்னிமர தலங்கள் சென்று வணங்குவதும், பொன்வண்டு பார்ப்பதும், அனந்த கோலத்தில் இருக்கும் பெருமாளை வணங்குவதும், சப்த கன்னியர்களை வணங்குவதும் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்,

சதயம் நட்சத்திரக்காரர்கள் காக்கைக்கு அன்னமிட்டு முன்னோர்களை வழிபடுவதும், குதிரைகளுக்கு கொள்ளு தருவதும், கடம்ப மரம் தலவிருட்சமாகக் கொண்ட குளித்தலை கடம்பவனேஸ்வரர் வணங்குவதும், திருப்பைஞ்சீலி சென்று யமதர்மராஜாவை வணங்குவதும், எருமை மாட்டிற்கு அவ்வப்போது அகத்திக்கீரை தருவதும், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வதும் தங்கள் வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும்.

பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வதும், சிங்க வாகனத்தில் இருக்கும் காளி தெய்வத்தை வணங்குவது, உள்ளான் பறவைகளுக்கு உணவளிப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதிக்கு அமாவாசை பவுர்ணமி நாட்களில் சென்றுவர தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பசுபதீசுவரர் மற்றும் பசுக்களை வணங்குவதும், வேப்ப மரம் வளர்த்து வருவதும், கோட்டான் பறவைகளுக்கு உணவளிப்பதும், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கோ பூஜை செய்வதும், பசுக்கள் வழிபட்ட சிவாலயங்கள் சென்று வழிபடுவதும், காமதேனு கோவில்களுக்கு செல்வதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து இடர்களையும் நீக்கி வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் யானைக்கு வாழைப்பழம் கரும்பு வழங்குவதும், சிவபெருமானுக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றுவதும், தாங்கள் பிறந்த தமிழ் மாதம் ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தாயாரையும் வழிபட தங்கள் வாழ்வில் வசந்தம் உண்டாகும்.
 

Latest ads

Back
Top