• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Memories of My Beloved Guruji Maha Periyava......

Status
Not open for further replies.
The Whole Nation Celebrated Teachers Day Yesterday on The Eve of our beloved Radhakrishnan ji our Nation's Ex President....

I am submitting the series of Photo Albems in Memory of my beloved Maha Periyava thro the following Link....

Album 1 - https://plus.google.com/u/1/photos/107376772421425361405/albums/5775740743108490161


Album 2 - https://plus.google.com/u/1/photos/107376772421425361405/albums/5775768672563616433


Hara Hara Shankara.......... Yeya Jeya Shankara.....
 
Dear SN sir,
i would like to post an incident which i read recently about Mahaperiyava. Pranaams to the Dakshinamoorthy swaroopam.

[FONT=TSCu_SaiIndira]எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ஹக்ரி என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது.[/FONT][FONT=TSCu_SaiIndira][/FONT]
[FONT=TSCu_SaiIndira]கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது . கறியிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமாஇருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. அந்த ஊர் ஒரு போட்டால் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்த கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்ஜாவுர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.[/FONT]
[FONT=TSCu_SaiIndira] "நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? " என்று தெய்வம் அவரை கேட்டது. [/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். " அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்" உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது. [/FONT]
[FONT=TSCu_SaiIndira] [/FONT]
[FONT=TSCu_SaiIndira]ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார். அருகில் இருந்தவர்களிடம் " நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ" என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். [/FONT][FONT=TSCu_SaiIndira][/FONT]
[FONT=TSCu_SaiIndira]இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள். [/FONT][FONT=TSCu_SaiIndira][/FONT]
[FONT=TSCu_SaiIndira] [/FONT]
[FONT=TSCu_SaiIndira]அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது. நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது. ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார். அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.[/FONT]
[FONT=TSCu_SaiIndira] [/FONT]
 
One more for the TB members :

பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை "அப்பா" என்றும் "நீ" என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர் நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை முன்னால் பார்த்திருக்கிறோம்.

பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம் சதாராவில் போய் பெரியவாளை தர்சனம் பண்ணிவிட்டு அன்றுதான் திரும்பியிருந்தார். அவரைத் தேடிக்கொண்டு ஒரு நண்பர் வந்தார். முகத்தில் அப்படியொரு சோகம்.
"மஹாலிங்கம் ஸார்....எம்பிள்ளை மெட்ராஸ்ல படிச்சிண்டு இருக்கான்.. திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல்லா எடத்லையும் விஜாரிச்சாச்சு! ஒண்ணுமே தெரியலை.....நீங்கதான் பெரியவாளோட பரம பக்தராச்சே!....பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேற கதி இல்லே....என்னை சதாராவுக்கு அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார். மகாலிங்கத்திற்கோ என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அவர் மனைவி சொன்னாள் "பாவம்.....அழைச்சிண்டு போங்கோ! பிள்ளையைக் காணாம தவிக்கறார்" என்று பரிந்தாள்.

இருவரும் கிளம்பி சதாராவை அடைந்தபோது விடிகாலை மணி மூணு! பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு வந்தால்...........மஹாராஜபுரம் சந்தானம் மூன்று நாட்களாக பெரியவா தர்சனத்துக்காக காத்திருக்கிறார் என்று தெரிய வந்தது! மணி விடிகாலை நாலரை!"என்ன மஹாலிங்கம்! சந்தானத்துக்கே இந்த நெலைமை...ன்னா...நாம எப்டி பெரியவாளை தர்சனம் பண்ண முடியும்?" நண்பர் கவலைப் பட்டார்.பெரியவா ஒரு சின்ன "டொக்கு" மாதிரி ரூமில் ஜன்னல் கதவைக்கூட சாத்திக் கொண்டு இருந்தார்."ஏன் கவலைப்படறேள்? பெரியவா காருண்ய மூர்த்தி..........தன்னை நம்பி வந்தவாளை கைவிட்டதா சரித்திரமே கெடையாது.........கதவு தெறக்கும்! தர்சனம் கெடைக்கும்!" அடித்துச் சொன்னார் மஹாலிங்கம்.சொன்ன மறு நிமிஷம், பிரஹ்லாதனின் வார்த்தையை "சத்யம்" என்று நிருபிக்க தூணைப் பிளந்துகொண்டு வெளியே வந்த நரசிம்ஹமூர்த்தி, இங்கே "டொக்கு" ரூமில், சௌம்ய நாராயணனாக இருந்தாலும், பக்தானுக்ரகம் என்ற கல்யாண குணத்தை அவனால் விட முடியாதே! எனவே, "படக்"கென்று ஜன்னல் திறந்தது.......உள்ளே பெரியவா! மகாலிங்கத்தை சைகை காட்டி அழைத்தார்...........நண்பர் கண்ணீர் வழிய " பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ஒரு தகவலும் இல்லே.....கொழந்தை க்ஷேமமா திரும்பி வர அனுக்ரகம் பண்ணணும்......பெரியவா" என்று கூறி, அவனுடைய போட்டோ ஒன்றையும் காட்டினார். திருநயனங்கள் அதை கருணையோடு பார்த்தன! கரங்களை உயர்த்தி ஆசி கூறினார். மஹாலிங்கம் இன்னும் தெம்பாகிவிட்டார்! இருவரும் நமஸ்கரித்துவிட்டு கிளம்பினார்கள்."ஸார்......நீங்க திரும்ப நெய்வேலிக்கே வந்துடுங்கோ! பெரியவா பாத்துப்பா! ஒங்க பிள்ளை நிச்சயம் திரும்ப வந்துடுவான்..........கவலையே படாதீங்கோ! வந்ததும், மடத்துக்கு ஒரு தந்தி அனுப்பிடலாம்" என்று ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டினார்.

அடுத்த ரெண்டு நாட்களில் பையன் திரும்ப வந்துவிட்டதாக மடத்துக்கு தந்தி போனது! பையன் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு, கடைசியில் மந்த்ராலயம் போயிருக்கிறான். அங்கே துங்கபத்ராவில் குளிக்கும்போது அவன் மனஸில் ஒரு குரல்......"நீ உடனே வீடு திரும்பு" என்று சொன்னது. அது எப்போது? எந்த விடிகாலையில் சதாராவில் பெரியவா அவனுடைய போட்டோவை கடாக்ஷித்தாரோ.......அப்போதுதான்! "சஹாஸ்ராக்ஷ சஹாஸ்ரபாத்" என்று வேதங்கள் ஸ்துதி பாடுவதும் இவரைத்தானே?அந்தப் பையன் பின்னாளில் மிகப் பிரபலமான பாடகராக, நல்ல பக்தராக திகழும் நெய்வேலி சந்தானகோபாலன்தான்!
 
another interesting one for all TB members;

சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர் நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது. இது பின்னர் மஹா பெரியவா தரிசனங்கள் என்ற பெயரில் வரும் தொடர் வெளியீட்டில் வரலாம். இப்ப ஸ்னீக் ப்ரிவியூ!

சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார். முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.
பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.வந்திருந்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார்.கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார்.

திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு!
பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன
?
வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.சரியா இருக்கு!பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார்.
சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார்.அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார்.
கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கனும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.
வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தார்.வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார்.கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?
(
ராவணன் சிவ பெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.எதிரில் நாரதர் வந்தார்.என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?நான் சிவ பெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!அட அசடே! அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!என்ன சொல்லறீங்க? வேலை செய்யாமலும் இருக்குமான்னா?எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு. உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?
ஆமா. சரி, இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!
கைலாசத்தை ஒன்பது தலை 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம்.பார்வதி திடுக்கிட்டுப்போய் சிவனை கட்டிண்டாளாம்! சிவன் சிரிச்சாராம். பார்வதி கோபிச்சுக்கொண்டு, ஓய் உமக்கு ஸ்த்ரீயின் குணம் எப்படி தெரியபோறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரேதன் சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)மலை கொஞ்சம அசைஞ்சதும்பெருமான் கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார்.மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.ராவணன் செய்வது அறியாமல் திகைச்சு போனான்.
நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.நாரதரே தப்பிக்க ஏதாவது வழி சொல்லும்.அட உனக்குத் தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.நான்தான் மாட்டிக்கொண்டேனே?பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு.வீணை இல்லையே?இதோ நான் தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.ராவணனும் ஸாம கானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப்படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.

அது சரி, இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.இதில் ராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?யாருக்குத்தெரியப்போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.
ஜெய ஜெய சங்கர....ஹர ஹர சங்கர
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

  • Wanted Need Brahmin cook for home
    Brahmin cook needed to make breakfast and lunch at home (Mylapore). Please text 7200448767 (do...
    • ram1618 (+0 /0 /-0)
    • Updated:
  • For rent 2BHK APT WANTED.
    2BHK APT wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Chanting class.
    Sloka chanting teacher wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Announcement Hobby Classes.
    Hobby art classes are conducted by an experienced senior lady for high school children and adult...
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Shan
    Required female Brahmin cook to prepare lunch and dinner for 2 people
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
Back
Top