Meaning of Namo Narayana.

Meaning of Namo Narayana.

"நமோ நாராயணாய" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா...

ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் வரை (சுமார் 100KM) நடந்து நடந்து நம்பியிடம், எட்டெழுத்து திருமந்திரத்தை உபதேசம் பெற, ராமானுஜர் வந்த போது,
"யார்?" எனக் கேட்க,
"நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்." எனச் சொல்ல,
நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே,
"நான் செத்து வா!' என்றார்.

புரியாத ராமானுஜரும் அமைதியாக திரும்பி ஸ்ரீ ரங்கம் சென்றுவிட்டார்.

ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.

இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி "நான் செத்து வா!' என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது.

இந்த முறை, ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார்.
அவரை ஆசையுடன் அழைத்த நம்பி, "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திர உபதேசம் செய்து, அதன் உட்பொருளை விளக்கினார்.

"நான் என்ற அகம்பாவம் இல்லாமல் இருந்தால் தான் உபதேசம் பெற தகுதி பெறுகிறாய்" என்பதை தான், மறைமுகமாக "நான் செத்து வா!' என்றார் நம்பி.

"நான்" என்ற அகம்பாவமே இல்லாதவர் யதிராஜர் ராமானுஜர்.

ஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருகோஷ்டியூர் 100km தூரம்..
18 முறையும் நடந்து நடந்து வந்தார் ராமானுஜர்.
17 முறை திருப்பி அனுப்பப்பட்டும், "இப்படி அலைய விடுகிறாரே!' என்று நம்பியின் மீது கோபப்படவும் இல்லை, "தன் உடலை இப்படி வருத்திக்கொள்ள வேண்டுமா" என்று நினைக்கவும் இல்லை.
18 தடவை நடந்தும், உபதேசம் பெறுவதில் ஆர்வம் இருந்ததே தவிர, அகம்பாவமோ, கோபமோ துளியும் இல்லாதவர் ஸ்ரீ ராமானுஜர்.


நான், எனது என்ற அகம்பாவம் இல்லாமல், ராமானுஜர் காட்டிய ஆர்வத்தோடு படிக்கவும்....
 
Back
Top