• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Lord Aishwaryeshwar Pooja

குபேரன் பார்வை கிடைக்கச் செய்யும் ஐஸ்வர்யேஸ்வரர் வழிபாடு பற்றிய சிறப்பு பதிவு

குபேரனுக்கும் லட்சுமி தேவிக்கும் சிவபெருமான் நிதிகளையும் ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் போது தேவர்கள் முனிவர்கள், தபஸ்விகள் பூமாரி பொழிந்து பல்வேறு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரங்களைப் பாடினர். இதனால் அவர் ஐஸ்வர்ய சிவன் ஐஸ்வர்யேஸ்வரர் எனப்பட்டார்.

ஐஸ்வர்யேஸ்வரரை வழிபடும் முறை

முக்கண்களில் சாந்தத் திருவிழிகளைப் பெற்று கழுத்தில் ருத்ராட்சமணி, அணிந்தவராகக் காட்சி தருகிறார். சிவம் என்பதற்கு மங்கள் என்று பொருள். சிவனருளுக்கு வித்தாக அமைந்திருப்பது திருமந்திரமே.

சிவமே திருமந்திரம் என்று சொல்லி அதையும் நமக்கு உபதேசிக்கிறார். மங்களன் என்கிற சிவனை நினைத்திருகையில் நாம் எண்ணுவது கைகூடும் என்பதாகும்.

சிறப்பிற்குரிய சிவனை ஆதிசிவனான ஐஸ்வர்யேஸ்வர மூர்த்தியை வழிபட்டால் நமக்கு ஐஸ்வர்யமாகிய குபேர சம்பித்து நமக்குத் தானாகவே வந்து சேரும்.

ருத்திரன் சிவபெருமானுடைய ஒரு பகுதி. இதனால் சிவன் கோபம் அடைந்து அழிக்கும் சுவாமி என்று தவறாக எண்ணுகின்றனர். உண்மையாகவே சிவன் அருள் தருகிற கடவுள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிவபெருமானுடைய பூஜை கல்ப விதிப்படி ஐஸ்வர்யேஸ்வரரை
ஒவ்வொரு திங்கட்கிழமையும், விரதமிருந்து கீழே கொடுக்கபட்டுள்ள சிவாஷ்டோத்திரத்தால்
வில்வ தளத்தைக் கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும் (வில்வத்தில் மகாலட்சுமி இருக்கிறாள் என்று வேத சாஸ்திரம் சொல்கிறது)

சிவாஷ்டோத்திரம்

01.ஓம் சிவாய நமஹ
02. ஓம் மஹேச்வராய நமஹ
03. ஓம் சம்பவே நமஹ
04. ஓம் பினாகிநே நமஹ
05. ஓம் சசிசேகராய நமஹ
06. ஓம் வாம தேவாய நமஹ
07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
08. ஓம் கபர்தினே நமஹ
09. ஓம் நீலலோஹிதாய நமஹ
10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ
12. ஓம் கட்வாங்கிநே நமஹ
13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
15. ஓம் அம்பிகா நாதாய நமஹ
16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
18. ஓம் பவாய நமஹ
19. ஓம் சர்வாய நமஹ
20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ
22. ஓம் சிவாப்ரியாய நமஹ
23. ஓம் உக்ராய நமஹ
24. ஓம் கபாலிநே நமஹ
25. ஓம் காமாரயே நமஹ
26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
27. ஓம் கங்காதராய நமஹ
28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
29. ஓம் காலகாளாய நமஹ
30. ஓம் க்ருபாநிதயே நமஹ
31. ஓம் பீமாய நமஹ
32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
33. ஓம் ம்ருகபாணயே நமஹ
34. ஓம் ஜடாதராய நமஹ
35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ
36. ஓம் கவசிநே நமஹ
37. ஓம் கடோராய நமஹ
38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ
41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
43. ஓம் ஸ்வரமயாய நமஹ
44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
45. ஓம் அநீச்வராய நமஹ
46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
47. ஓம் பரமாத்மநே நமஹ
48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
49. ஓம் ஹவிஷே நமஹ
50. ஓம் யக்ஞ மயாய நமஹ
51. ஓம் ஸோமாய நமஹ
52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
53. ஓம் ஸதாசிவாய நமஹ
54. ஓம் விச்வேச்வராய நமஹ
55. ஓம் வீரபத்ராய நமஹ
56. ஓம் கணநாதாய நமஹ
57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
59. ஓம் துர்தர்ஷாய நமஹ
60. ஓம் கிரீசாய நமஹ
61. ஓம் கிரிசாய நமஹ
62. ஓம் அநகாய நமஹ
63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
64. ஓம் பர்க்காய நமஹ
65. ஓம் கிரிதன்வநே நமஹ
66. ஓம் கிரிப்ரியாய நமஹ
67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
68. ஓம் புராராதயே நமஹ
69. ஓம் மகவதே நமஹ
70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ
71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
74. ஓம் ஜகத் குரவே நமஹ
75. ஓம் வ்யோமகேசாய நமஹ
76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
78. ஓம் ருத்ராய நமஹ
79. ஓம் பூதபூதயே நமஹ
80. ஓம் ஸ்தாணவே நமஹ
81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
82. ஓம் திகம்பராய நமஹ
83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
84. ஓம் அநேகாத்மநே நமஹ
85. ஓம் ஸாத்விகாய நமஹ
86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
87. ஓம் சாச்வதாய நமஹ
88. ஓம் கண்டபரசவே நமஹ
89. ஓம் அஜாய நமஹ
90. ஓம் பாசவிமோசகாய நமஹ
91. ஓம் ம்ருடாய நமஹ
92. ஓம் பசுபதயே நமஹ
93. ஓம் தேவாய நமஹ
94. ஓம் மஹாதேவாய நமஹ
95. ஓம் அவ்யயாயே நமஹ
96. ஓம் ஹரயே நமஹ
97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
98. ஓம் அவ்யக்ராய நமஹ
99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ
101. ஓம் ஹராய நமஹ
102. ஓம் அவ்யக்தாய நமஹ
103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ
106. ஓம் அனந்தாய நமஹ
107. ஓம் தாரகாய நமஹ
108. ஓம் பரமேச்வராய நமஹ

ஐஸ்வர்ய சிவன் தமிழ்ப் போற்றி

ஓம் அம்மையே அப்பா போற்றி
ஓம் அளப்பிலா அருளே போற்றி
ஓம் அன்பெனும் மலையே போற்றி
ஓம் அடியார்கள் துணையே போற்றி
ஓம் அணுவினுள் அணுவே போற்றி
ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
ஓம் அகரமே அறிவே போற்றி
ஓம் அறிந்திடு மொழியே போற்றி
ஓம் அகத்தனே போற்றி போற்றி!

ஓம் அலைகடல் விரிவே போற்றி
ஓம் அழகனாம் அமுதே போற்றி
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
ஓம் அவிரொளி
சடையாய் போற்றி
ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
ஓம் அருமறை முடிவே போற்றி
ஓம் அருந்தவர் நினைவே போற்றி
ஓம் அரஹரா போற்றி போற்றி!

ஓம் ஆதியே அருளே போற்றி
ஓம் ஆலால கண்டா போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி
ஓம் ஆலமர் குருவே போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி
ஓம் ஆரூரின் தியாகா போற்றி
ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
ஓம் ஆடரவு அணியாய் போற்றி
ஓம் ஆற்றலே போற்றி போற்றி!

ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
ஓம் இனியசெந் தமிழே போற்றி
ஓம் இலக்கியச் செல்வா போற்றி
ஓம் இமயவள் பங்கா போற்றி
ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
ஓம் இறைவனே போற்றி போற்றி!

ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
ஓம் இடபவா கனத்தாய் போற்றி
ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
ஓம் ஈந்தருள் தேவே போற்றி
ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
ஓம் ஈசானத் திறையே போற்றி
ஓம் ஈசனே போற்றி போற்றி!

ஓம் உலகிதன் முதலே போற்றி
ஓம் உமையரு பாகா போற்றி
ஓம் உள்ளளிர் சுடரே போற்றி
ஓம் உணவொடு நீரே போற்றி
ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
ஓம் உடைகரித் தோலாய் போற்றி
ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
ஓம் உருவொடும் அருவே போற்றி
ஓம் உடையனே போற்றி போற்றி!
ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
ஓம் ஊங்கார ஒலியே போற்றி
ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
ஓம் எல்லையில் எழிலே போற்றி
ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் எருதேறும் ஈசா போற்றி
ஓம் எம்பிரான் போற்றி போற்றி!

ஓம் ஏகநா யகனே போற்றி
ஓம் ஏதிலார் புகலே போற்றி
ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
ஓம் ஏகம்பா இறைவா போற்றி
ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
ஓம் ஏந்தலே போற்றி போற்றி!

ஓம் ஐயனே அரனே போற்றி
ஓம் ஐம்பூத வடிவே போற்றி
ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
ஓம் ஒண்குழைக் காதா போற்றி
ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!

ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓம் ஓதிடும் பொருளே போற்றி
ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
ஓம் ஓசையின் ஒலியே போற்றி
ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!

ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
ஓம் காமனை எரித்தாய் போற்றி
ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
ஓம் கருணைமா கடலே போற்றி
கடவுளே போற்றி போற்றி!

ஓம் சிவமெனும் பொருளே போற்றி
ஓம் செவ்வொளி வடிவே போற்றி
ஓம் தவநிலை முடிவே போற்றி
ஓம் தண்பதம் தருவாய் போற்றி
ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் பரமெனும் பொருளே போற்றி
ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
ஓம் புண்ணியா போற்றி போற்றி!

குபேர தியானம்

"மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம்
கருட ரத்ன நிபம் நிதி தாயகம் !
சிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!"

குபேரர் காயத்ரி

ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே
அளகாதீசாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்

ஸரீ குபேர மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்மியை
கமல தாரிண்யை தனார்ஷிண்யை சுவாஹா

குபேர துதி

வளம் யாவும் தந்திடும் வைஸ்ரவணா போற்றி
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி
பொங்கும் நலம் யாவும் உன்னருளே போற்றி
தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி போற்றி

குபேர ஸ்லோகம்

ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம் மே
தேஹி தேஹி தாபய ஸ்வாஹா

லட்சுமி துதி

முத்துநகை ரத்தினங்கள் மூக்குத்தி பில்லாக்கு
சத்தமிடும் கங்கணங்கள் சங்கீத மெட்டியுடன்
சித்திரை நிலவு முகம் சிங்காரப் புன்சிரிப்பு
பத்தரைப் பசும்பொன்னே பவனிவரும் இலக்குமியே!

பாற்கடலில் உதித்தவளே! பவள நிறத்தவளே!
சீர்மேவும் சித்திரமே! சிங்கார நல்முத்தே!
கார்மேகக் கருணைமனம் கைகளோ வள்ளன்மை
பார்வையிலே பலனுண்டு பைங்கிளியே இலக்குமியே!

செல்வச் சிறப்புடனே சீர்மை வளத்துடனே
வல்லச் சுவையுடனே வெற்றி தருபவளே!
அள்ளக் குறையாத அறமோடு பொருளீந்து
உள்ளக் களிப்பினிலே ஒன்றிடுவாய் இலக்குமியே!

செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே! அமிர்தம் வேண்டி கடைந்தபோது திருபாற்கடலில் தோன்றியவளே! தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! சந்திரனுக்கு சகோதரியே! திருமாலின் மனைவியே! வைஷ்ணவியாய் அருள்பவளே! பக்தர்களின் நலவாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே! ஹரி எ
னும் திருமாலுக்கு பிரியமானவளே! தேவர்களுக்கெல்லாம் தேவியே! மகாலட்சுமியாய் பேரழகு கோலத்தில் திகழ்பவளே! உன்னை வணங்குகின்றேன்

லட்சுமி அஷ்டக துதி

🕉ஆதிலக்ஷ்மி”


நின்மேலுமாணை!நின்மகன்மேளுமாணை!நின்மாகொழுநன்
தன்மேலுமாணை! தமிழ்மேழும் ஆணை! தலமாவணிகச்
சின்னஞ்சிறுவர் தெரியாத காளையர் என்செயினும்
பின்னும் பொறுத்திருப்பாயே பெரிய இலக்குமியே!

உன்னைத் தொழுதேன், உயிர்க்குப் புகலுதவும்
பொன்னே! முதல் திருவே! பூவிருக்கும்-அன்னே!
எனதுள்ளம் என்றும் இனிப்பே அடையக்
கனிவுனது கண்மலராற் காட்டு,

“🕉தான்யலக்ஷ்மி”

புல்லை விதையாக்கிப் பூமியிலே நட்டாலும்
நெல்லாக மாற்றும் நிறைவுடையாய்!
கல்லெல்லாம் ஆக்கிப் புசிக்கும் அருமை
உணவாக வாய்க்கத் தருவாய் வரம்!

இருக்கும் இடமெங்கும் இன்கனியும் பூவும்
பெருக்கி மகிழ்வுதவும் பெண்ணே!
பருக்கரும்பை ஏந்தும் திருமகளே! எங்கள்
கழனியெல்லாம் சேர்ந்து வளங்கொழிக்கச் செய்!

“🕉வரலக்ஷ்மி”

பஞ்சான கையால் படைக்கருவி ஏந்தாமல்
எஞ்ஞான்றும் வெல்லும் இயல்புடையாய்!
அஞ்சாமல் நேர்மைப் படையால் நெருங்க
பகைவெல்லும் கூர்மை எமக்குக் கொடு!

தரமுயர்ந்த வீரம் தருக்கர்களை வாட்டக்
கரமருவும் போர்க்கருவி காட்டி- வரமளிக்க
வாகை புனைத்திலங்கம் வஞ்சிநீ எம்மனையிற்
சேர்க எனப் பணிந்தோம் சேர்ந்து

“🕉கஜலக்ஷ்மி”

ஆனை இருபுறமும் அள்ளிச் சொரிபுனல்போல்
தானம் கொடுக்கும் தவப்பயனே! ஈனமெனும்
இந்தப் பிறவி இனிமேலே போயொழியத்
துந்திக்கை தாராய் துணை!

துலங்கு பொற்கும்பத் துதிக்கையால் ஆனை
நலங்கெழுநீர் ஆட்ட நயந்த -இலங்கிழையே!
கையேந்தி உன்பாற் கசிந்து தொழுகின்றோம்
செய்யவளே சீரெமக்குச் செய்!

“🕉சந்தானலக்ஷ்மி”

கள்ளூறும் வாயால் கனிமழலை பேசுகிற
பிள்ளை வரமருளும் பேரன்பே! எல்லாரும்
நல்லவரைப் பெற்றிடவும் நாடு சிறந்திடவும்
வல்லவளே! ஈவாய் வரம்!

“🕉வித்யாலக்ஷ்மி”

நீங்காது நின்மகளும் நீண்டதிருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல்-தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம்பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு!

நினைத்துத் தொழுதெழுந்தோம் நேயத்திருமால்
மனைக்கு விளக்கே! மலரால் உனக்கடிமை
செய் ஆனை போலுயர்த்து சீர்கொண்டு
இலங்கவே தையல் நீ ஈவாய் வரம்!

“🕉தனலக்ஷ்மி”

காடுவெட்டிப் போட்டு கடியநிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்
வீடுகட்கு அன்றைக்கு வந்த எங்கள் அம்மா!
இலக்குமியே! என்றைக்கும் நீங்காதிரு!

செய்ய திருமேனி செம்பொன் அணிசெறியக்
கையிருக்கும் தம்பலத்துக் காரிகையே!
வையகத்தில் என்றும்பொன் மாரியினால்
இன்பம்பெருகிவர என்றென்றும் எம்பால் இரு!

ஆகிய துதிகளை கூறி வணங்கி தூப, தீப, நிவேதனம் செய்து ஆர்த்தி செய்த பிறகு, 108 தடவை "ஓம் சாம் ஐஸ்வர்யேஸ்வராய நம" என்ற ஐஸ்வர்யேஸ்வரர் மூலமந்திர ஜபத்தினை பூஜை முடித்து 48 நாட்கள் செய்து வர வேண்டும்.

ஐஸ்வர்யேஸ்வரர் படத்தை வைத்துக்கொண்டு இருந்தால் எப்பொழுதும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான், நீங்கள் செல்வ செழிப்புடன் வாழ ஐஸ்வர்யேஸ்வரர் படத்தை வைத்து வணங்கி வாருங்கள்.

1635388214874.png
 

Latest ads

Back
Top