• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

karbha aadhaanam.

kgopalan

Active member
11/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து கர்ப்பாதானம் என்கின்ற சம்ஸ்காரத்தில் ஒரு சரித்திரத்தை மகாபாரதத்தில் இருந்து காண்பித்து மேலும் தொடர்கிறார்.*

*ஒரு வயதான பெண்ணானவள் காந்தாரியின் இடத்திலிருந்து பேசிவிட்டு, உன்னுடைய கர்ப்ப முக்கியமாக ஒரு நல்ல மருத்துவரை உடனடியாக பார்த்து நீ பேசிக் கொள் என்று சொல்லி விட்டு போனதும், இவளுக்கு மிகவும் கவலையாக போய் உடனே ஒரு மருத்துவரை போய் பார்த்தாள்.*

*அந்த மருத்துவர் பார்த்துவிட்டு ஒன்றும் கவலைப்பட கூடியவகையில் இல்லை என்ன ஆகி இருக்கிறது என்றால், கர்ப்பம் எல்லாம் சாதாரணமாக தான் இருக்கிறது. எப்படி பக்ஷிகள் எல்லாம் தன்னுடைய வயிற்றில் சுமக்கும் அதுபோல் நீ சுமந்து கொண்டு இருக்கிறாய் அதாவது ஒரு மூட்டை போல் இருக்கிறது உன்னுடைய கர்ப்பம். அது மட்டுமல்ல ஒரு குழந்தை என்று சொல்ல முடியாது. நிறைய குழந்தைகள் ஆனால் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கின்றன. அத்தனை குழந்தைகளும் முதிர்ச்சி பெற்று வளர்வதற்கு ஒரு வருட காலம் ஆகும். இரண்டு வருடங்கள் கூட ஆகலாம் என்று மருத்துவர் சொல்லி, அவளுக்கு ஆலோசனை எல்லாம் சொன்னார்.*
*இப்படி கேட்டதும் அவளுக்கு மிகவும் துக்கமாக போய்விட்டது. முட்டை போலிருக்கிறது என்று சொல்கிறார்களே இது குழந்தை தானா அல்லது இல்லையா? வியாசர் உடைய வரம் வீணாக போய் விட்டதா என்று அவளுக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. உடனே வியாசரை வரவழைத்தாள். அவருக்கு நமஸ்காரம் செய்து இந்த விஷயத்தைச் சொன்னாள் காந்தாரி.*

*வியாசர் சொன்னார் ஒன்றும் கவலை வேண்டாம் ஈஸ்வரனுடைய ஆஞ்யை படித்தான் எல்லாம் நடக்கும். உனக்கும் நான் சொன்ன வரம் வீணாகப் போகாது. உனக்கு கட்டாயம் நூறு குழந்தைகள் பிறக்கும். அப்படி ஏன் எனக்கு இப்படி இருக்கிறது என்று காந்தாரி கேட்டதும் அந்த கர்ப்பாதான முகூர்த்தம் ஆனது செய்யப்பட வேண்டிய காலத்தில் செய்யாததினால், ஆதலால் அது தோஷமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.*

*பக்ஷிகள் எல்லாம் தன்னுடைய வயத்தில் குழந்தைகளை முட்டையாக தான் பிரசவம் செய்கிறது. அண்டஜம் என்று பக்ஷி களுக்குககெல்லாம் பெயர். எப்பொழுது இது போல் ஆகும் என்றால், கர்ப்பாதானம் செய்யப்பட வேண்டிய காலத்தில் செய்யாவிடில், அப்படி ஆகும். பக்ஷிகள் எல்லாம் இரவிலே கர்ப்பாதானம் செய்வதில்லை பகலில் தான் செய்கின்றன. அதேபோல்தான் பருவகாலத்தில் மிருகங்கள் எல்லாம் பருவத்திற்கு வரும். இந்த பஞ்ச பர்வா என்று சொல்லக்கூடிய காலத்தில்தான், மிருகங்கள் எல்லாம் கர்ப்பத்தை தறிக்கும்.*

*அதுபோல் பஞ்ச பர்வாவில் உனக்கு கர்ப்பாதானம் ஆன காரணத்தினாலே முட்டை போல உன்னுடைய கர்ப்பத்திலே குழந்தைகள் எல்லாம் உற்பத்தியாகின்றன. கவலைப்படாதே எல்லாம் நல்லவைக்குதான் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது தான் எனக்கு ஒரு விஷயம் காதிலே விழுந்தது, அதையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.*

*குந்திக்கு குழந்தை பிறந்து விட்டது என்று சொன்னார். கேட்டாள் பின்பு அவர் கிளம்பி சென்றுவிட்டார். தனக்கு முன்னர் அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று கேட்டதும் மிகவும் துக்கமாக போய் விட்டது அவளுக்கு. நம் குழந்தை அல்லவா முதலில் பிறக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எனக்கு குழந்தை பிறந்து பேர்சொல்லி இராஜாவாக வரணும் என்று நினைத்தேன் ஆசைப்படுகின்ற பொழுது அதற்குள் அவள் எவ்வாறு பிரசவித்தாள்?.*

*இந்த செய்தி காந்தாரி மனதை மிகவும் வாட்டியது. என்ன ஆகியது என்றால் வயத்திலே அடித்துக்கொண்டு அழுகிறாள். இப்படி அடித்துக் கொண்டு அழுததினால் அந்த கர்ப்பம் கலைந்து போய்விட்டது. இதுபோல் இந்த கர்ப்பத்திலே இவ்வளவு முட்டைகள் எல்லாம் இருக்கிறது என்பதைப்பற்றி திருதராஷ்டிரனுக்கு தெரிவிக்கவில்லை. அண்டம் போல அப்படியே கீழே விழுந்துவிட்டது.*

*எப்படி ஒரு பக்ஷியானது முட்டை போல் பிரசவிக்குமோ அதுபோல் அந்த கர்ப்பமானது கீழே விழுந்துவிட்டது. அதற்கப்புறம்தான் அவளுக்கு தெரிய வருகிறது ஒரு விபரீதம் நடந்துவிட்டது, உணர்ந்து அழுது இப்படி ஒரு குறைவான பிரசவம் ஆகின்றது என்றால் அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு வேதனைகள் இருக்கும். அவ்வளவு வேதனைகள் பட்டாள் காந்தாரி.*

*இருந்தும்கூட ஷத்திரிய ஸ்திரீ ஆனதால் அவளுக்கு மிகவும் மனோ தைரியம் இருந்தது. எல்லாம் அழுது முடித்த பின்னர் இந்த கர்ப்பம் அழியக்கூடாது அப்படி ஆகிவிட்டால் வியாசர் உடையவரும் வீணாகப் போய்விடும் நம்முடைய வம்சம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணி, குழம்பி போனாள். திரும்பவும் யோசனை செய்து வியாசரை வரவழைக்கிறாள் மரியாதையுடன் கூட.*


*ஏன் என்ன ஆகியது இப்படி இருக்கிறதே என்று வியாசர் கேட்க? அப்போது காந்தாரி சொன்னாள் குந்திக்கு குழந்தை பிறந்தது என்று கேட்டவுடன் எனக்கு கர்ப்பம் இது போல் இருக்கின்றது என்கின்ற வேதனையை விட, அவளுக்கு குழந்தை பிறந்து விட்டதே என்ற வேதனை என்னை மிகவும் வாட்டியது. அதுனாலே நான் வயத்திலே அடித்துக்கொண்டு அழுதேன்.*

*நான் கேட்ட நூறு குழந்தைகள் வரம் அப்படியே நடக்கும் என்று நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் எனக்கு இது போல் ஆகி விட்டது என்று எனக்கு வருத்தமாகவும் கவலையாகவும் போய்விட்டது. ஆகையினால்தான் என்ன செய்யலாம் என்று உங்களிடம் கேட்டு வந்தேன் என்று அழுது கொண்டு நின்றாள்.*

*வியாசர் அவளை ஆசுவாசப் படுத்தினார். கவலைப்படாதே என்னுடைய வரம் வீணாகப் போகாது நீ சொல்வது சத்தியம். உன்னுடைய கர்ப்பத்தில் உற்பத்தியான குழந்தைகளும் வீணாகப் போகாது. கட்டாயம் இரண்டும் நடக்கும். இதுவும் ஈஸ்வரனுடைய ஆஞ்யை படித்தான் நடக்கிறது. கவலைப்படாதே தைரியமாக இரு.*

*குறை பிரசவம் ஆக வந்த இவர்களே உனக்கு புத்திரர்களாக வருவார்கள். அதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் அதை நீ கேள் என்று ஒரு வழியைக் காண்பிக்கின்றார் வியாசர். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
*12/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றிய ஒரு விவரத்தை மகாபாரதத்தில் இருந்து ஒரு சரித்திரம் மூலமாக மேலும் நமக்கு விவரிக்கிறார்.*

*கர்ப்பாதானம் எப்பல்லாம் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பதைப்பற்றி அந்த சம்பவத்தில் விவரிக்கிறார். காந்தாரி யானவள் குந்திக்கு முதலில் குழந்தை பிறந்து விட்டது என்பதை கேள்வியுற்று, வயிற்றில் அடித்துக்கொண்டு கோவப்பட்டு அழுதாள். அதனால் அந்த கர்ப்பமானது பிண்டமாக கீழே விழுந்துவிட்டது.*

*அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வியாசரை இங்கு அழைத்து யோசனை கேட்கிறாள். அவரும் ஒன்று சொல்கிறார். இதை அப்படியே விடக்கூடாது பாதி அளவு குழந்தை உற்பத்தி ஆகி இருக்கிறது. இதை நாம் பாதுகாக்க வேண்டும் ஏனென்றால் என்னுடைய வரம் ஆனது வீணாகப் போகாது. உன்னுடைய கர்ப்பத்தில் உற்பத்தியான குழந்தையும் வீணாகப் போகாது.*

*அதனால் இதற்காக என்று ஸ்தீரிகளை நியமனம் செய்ய வேண்டும். இந்த கர்ப்பத்தை ஒரு கலசத்தில் போட்டு உள்ளுக்குள் கதகதப்பாக இருக்க வேண்டும். வெளியில் குளுமையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு இடம் ஏற்பாடு செய்து அந்த கலசத்தில் இந்த கர்ப்பத்தை வைக்க வேண்டும்.*

*அதை நன்கு பராமரிக்க வேண்டும் ஆட்களை நியமித்து. கலசத்தை நெய்யினால் நிரப்பி அதனுள் இந்த கற்பத்தை வைத்து பின்பு சுற்றிவர ஜலத்தினால் நிரப்பவேண்டும். இப்படி ஜலத்தை விட்டுக் கொண்டே வரவேண்டும் என்று வியாசர் சொல்ல, அப்படி கலசத்தை கொண்டுவர அந்த முட்டையில் இருந்து எடுத்துப்பார்த்தால் சின்ன சின்னதாக கட்டை விரல் அளவுக்கு குழந்தைகள் இருக்கின்றன.*

*கட்டை விரல் அளவு தான் குழந்தைகள் வளர்ந்து இருக்கின்றன. நூற்றி ஓர் சிசுக்கள் இருக்கின்றன. அத்தனையும் வரிசையாக கலசங்களில் வைத்து ஜலம் விட்டு அந்த குழந்தைகளை வைத்தார்கள். அதற்காக ஒரு அறையை ஏற்பாடு செய்து ஆட்களை வைத்து பாதுகாக்க சொல்கிறார்கள்.*

*இவ்வளவெல்லாம் செய்த பிறகுதான் திருதராஷ்டிரனுக்கு தெரியவந்தது இப்படி ஆகிவிட்டது என்று. பின்பு திருதராஷ்டிரன் மிகவும் கோபித்துக் கொண்டான் காந்தாரியை. ரொம்ப சத்தம் போட்டு வருத்தப் பட்டான். யாசர் அவனிடம் சொன்னார் இது வருத்தப்படக்கூடிய காலமும் கோபப்பட கூடிய காலமும் இல்லை ஈஸ்வரனுடைய ஆஞ்யை பகவானுடைய சித்தப்படி தான்

நடக்கும். கர்ப்பாதானம் ஆனது சரியான காலத்தில் செய்யப்படாததால், இந்த விஷயத்தில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இனிமேல் செய்ய வேண்டிய காரியங்கள் சரியாக நடக்க வேண்டும் என்று சொல்லி, அந்த கலசங்களில் உள்ள சிசுக்களுக்கு பும்ஸவனம் செய்து வைக்கிறார் வியாசர்.*

*அதன்பிறகு நாலாவது மாசம் பிறந்ததும், அந்த சீ மந்தத்தையும் செய்து வைக்கிறார். பின்பு அந்த கலசங்களை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி அந்த குழந்தைகள் பிறக்க வேண்டிய காலம் வந்தால், தானாகவே அந்த கலசத்தில் இருந்து குழந்தைகள் வெளியே

வந்துவிடும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி தனியாக திருதராஷ்டிரனை அழைத்துக்கொண்டு சென்று அவன் காதில் சில விஷயங்களை சொல்லி, கவலைப்படாதே நல்ல குழந்தைகளே உனக்குப் பிறக்கும். இப்படி இருவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வியாசர் அங்கிருந்து இமய பர்வதத்திற்க்கு தவம் செய்ய வந்து விடுகிறார்*

*அப்படிப் இருக்கவேண்டிய காலம் வந்ததும் அந்த கலசத்தில் இருந்து ஒரு குழந்தை வெளியே வந்தது. அதை திருதராஷ்டிரனிடம் பொய் சொன்னார்கள். அதைச் சொன்னதும், மூத்தவன் யுதிஷ்டிரன் தான் இராஜாவாக வரவேண்டும் என்பது தெரிந்து போய்விட்டது.*

*பரவாயில்லை அவருக்கு அடுத்ததாக இந்த குழந்தை இருக்கட்டும் என்று திருதராஷ்டிரன் சொல்லி, பீஷ்மர் விதுரர் அவர்களுக்கு இந்த தகவலை அனுப்பினார். அனைவரையும் அங்கு வர வைத்தார். குழந்தை பிறந்ததற்கான விறை தானம் செய்து, அப்படி ஜாதகர்மா அவை செய்தார்கள்.*

*அப்படி நாமகரணம் செய்ய வரும்பொழுது திருதராஷ்டிரன், எப்படிப்பட்ட எதிரிகளையும் தன்னுடைய சாமுத்திரியம் மூலம் ஜெயிக்கும் படியான காலத்திலேயே இவன் பிறந்திருக்கிறான், அதனால் இவனுக்கு துரியோதனன் என்று பெயர் வைத்து பீஷ்மர் முன்னால் அதை நாம கரணம் சூட்டுகிறேன்.*

*அதே நாளில் இங்கு பீமனும் பிறக்கிறான். இருவரும் ஒரே நாளில் பிறந்தார்கள். அசாத்தியமான காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காக பீஷ்மர் அவனுக்கு பீமன் என்று பெயர் சூட்டுகிறார்.*

*இங்கு துரியோதனன் பிறந்த உடனே குழந்தை ஓவென்று அழ வேண்டும் அப்பொழுதுதான்

ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். துரியோதனன் பிறந்தவுடன் அவன் ஒரு குட்டிக் கழுதை போல் அழுதான். அதைக் கேட்டதும் அவ்வளவு பேருக்கும் தெரிந்து போய்விட்டது இவனுடைய சப்தமே சரியில்லையே என்று. விசித்திரமாக இவனுடைய குரல்/சிரிப்பு இருக்கிறது.*
*அப்போது எல்லோரும் இது சாதாரண குழந்தை அல்ல என்று தெரிந்து கொண்டனர்.

திருதராஷ்டிரன் சொன்னார் குழந்தை பிறந்திருக்கிறது நூறு குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் வியாசரின் அனுக்கிரகத்தினால், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, என்ன இருந்தாலும் எனக்கு மூத்த புத்திரன் என்பவன் யுதிஷ்டிரன் தான். இந்த குலத்திற்கு அடுத்த இராஜா என்பவன்

யுதிஷ்டிரன் தான் என்பதை நான் தீர்மானிக்கிறேன். அதற்கு அடுத்ததாக துரியோதனன் இராஜாவாக வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று சொல்லி மேற்கொண்டது சரித்திரம் போகிறது. ஏன் அப்படி சொன்னார் திருதராஷ்டிரன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top