Kanakabhishekam Pooja and Rituals

  • Kanakaapishekamkkகனகாபிஷேகம்


    சாந்தி குசுமாகரம் பூர்வ பாகம் அத்யாயம் 99 .சைவாகம ப்ரோக்தம்


    ஸீமந்த புத்ரனின், ஸீமந்த புதரனுக்கு பிறந்த ஸீமந்த புத்ரனை காண்பவருக்கு இந்த கனகாபிஷேகம் செய்ய படுகிறது. ஸீமந்த புத்ரனல்லாத இரண்டாவது புத்ரனின் பேரனை காண்பவருக்கும் இந்த கனகாபிஷேகம் இல்லை.


    முதல் கர்பம் ஸீமந்ததிற்கு முன்பு கலைந்துவிட்டாலும் பிறகு பிறந்த குழந்தையின் பேரனை கண்டாலும் இந்த கனகாபிஷேகம் கிடையாது. சதாபிஷேகம் மட்டும் உண்டு.


    இவ்வாறான ஒரு பாக்கியம் கிடைப்பது மிகமிக அரிது.
    ஜன்ம நக்ஷத்திரம், சுப நக்ஷத்ரம், சுப தினத்தில் மனைவியும், புத்ரனும், பேரனும் ,கொள்ளு பேரனும் உடனிருக்க இதை செய்ய வேண்டும்.


    கர்த்தா காலையில் எண்ணை ஸ்நானம் செய்து, சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் ஒளபாஸனம், செய்து முடித்து விட்டு, சாந்த குணமுள்ள கல்வி அறிவு மிக்க வேத அத்யயனம் நன்றாக செய்துள்ள , மந்திர தந்திரங்களில்


    வல்லுநர் ஆன நல்ல பரம்பரையில் வந்த குடும்பஸ்தராக உள்ள ஒருவரை ஆசாரியராக வரித்துக்கொள்ளவும் .இம்மாதிரியே ருத்விக்குகளும் வரித்து கொள்ளவும் .மண்டபம் ஏற்பாடு செய்யவும். அதை தங்கத்தூண், ரத்ன மாலைகளால் அலங்கரிக்கவும்..


    ஐந்து த்ரோண அளவிற்கு தான்யங்களை குவித்து ஸ்தண்டிலம் தயாரிக்கவும்.


    நாந்தி சிராத்தம் புண்யாகவசனம் செய்யவும்.
    ப்ரதான கலசத்தில் லக்ஷிமி நாராயணர், அருகிலுள்ள இரு கும்பங்களில் சூரியன் சந்திரன். ஆவாஹனம். ப்ருஹ்மா அதி தேவதை ப்ரதி அதி தேவதை குறைந்த பக்ஷம் 9 கலசங்கள் . சதாபிஷேகம் மாதிரி .,தங்க பதுமைகளை கலசம் மேல் வைத்து 16 உபசார பூஜை செய்யவும்.


    . மேற்கு பக்கத்தில் ஹோம குண்டம். ப்ரதிஷ்டை அக்னி முகாந்தம்
    .., செய்து ப்ரதான ஹோமம் செய்யவும்.ஆவாஹன மாகியுள்ள தேவதைகளுக்குள்ள மந்திரங்களால் 1008 ஆஹூதிகள் அளிக்கவும். விஷ்ணு


    காயத்ரி சொல்லி அரசு சமித்தால் ஹோமம். நவகிரஹ ஹோமம் செய்யவும் .ஜயாதி ஹோமம் பூர்ணாஹூதி உத்தராங்கம் செய்து முடிக்கவும்..


    பின்னர் இரண்டு பசுக்களை தானம் செய்யவும். பின்னர் ப்ராஹ்மணர்களை கொண்டு ருத்ரம், சமகம், ஸ்ரீ ஸூக்தம் சொல்லி ஸ்வர்ணாபிஷேகம் செய்யவும்.
    பிறகு பலிகள்; புனர்பூஜை.. பிறகு கலச புனர்பூஜை. கலச தண்ணீர் அபிஷேகம். கர்த்தாவிற்கு.. . பிறகு இலுப்பை சட்டியில் நெய் விட்டு கர்த்தாவும் கர்த்தா மனைவியும் முகம் பார்த்து தானம்.


    புது வஸ்த்ரம் தரித்து யஜமானன் ப்ரதிமையை நிறைய தக்ஷிணையுடன் தானம் செய்யவும். தச தானம், பூரி தானம் செய்யவும். பசு மாடு தானம் செய்யவும்.
    அனைவருக்கும் பழம் தாம்பூலம் சாப்பாடு போடவும்.
    சதாபிஷேகம் செய்வது போல் அனைத்தும் இதில் இருக்கிறது. ஸ்வர்ண அபிஷேகம் இதில் மட்டும் உள்ளது.


    இது யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ர காரர்களுக்கு. மற்ற ருக், ஸாம, போதாயன காரர்களுக்கு .. வித்தியாசம் உள்ளது.,


    • sir, you have to search old threads. I have given on 15-2-20. in this forum.in rituals ceremonies and pujas thread.

 
Back
Top