• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kaisika Ekadasi - Namperuman Karpoora Padiyettra Sevai

கைசிக ஏகாதசி(இன்று 16/11--கைசிக துவாதசி)-பதிவு 3
🙏🌺🍀☘️🌸💐🌹🌺🙏🏿
நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற சேவை.
🙏🙏🥀🌹🌺🌻🌷🌸🙏🙏
திருவரங்கம் பெரியகோயிலில் 15/11/2021நேற்று இரவு கைசிக ஏகாதசி வைபவங்களும்--365 சால்வை போர்த்து
தல்,கைசிக புராணம் படிப்பு,ஆகியவை
யும், இன்று 16/11/21 விடியற்காலை கைசிக துவாதசியில் நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற உற்ஸவமும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டன. இதில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற சேவை இன்று காலை சரியாக 5.45க்கு நடைபெற்றது.

கற்பூரப் படியேற்ற சேவையின் சித்தாந்தம் / தத்துவம்:
🙏🧱🧱🧱🧱🧱🧱🧱🙏
கற்பூர வாசனை---ஸ்ரீ ரங்கத்தில், கைசிக ஏகாதசி அன்று,நம்பெருமாளுக்கு,கற்பூரப்
படியேற்ற சேவை ,கண்கொள்ளாக் காட்சி. விடியற்காலை வேளையில், இதைத் தரிசிப்பதற்கு என்றே பல்லாயிரம் பக்தர் காத்துக் கிடப்பர்.
கற்பூரத்தை ,அக்னியில் ஏற்றியவுடன், வரும் வாசனை அலாதியானது. (அக்காலத்தில் கொஞ்சமும்
கலப்பிடமில்லாத கற்பூரம் )

வாசனை---முன் பிறப்புகளில் சேர்ந்த அனுபவங்கள், இப்பிறப்பில் குணமாக ஆகிறது -----பழைய ஜென்மங்களின் வாசனை .

கற்பூரம், சென்ற ஜன்மத்தில் எப்படி இருந்ததோ நமக்குத் தெரியாது, ஆனால் இந்த ஜன்மத்தில் , தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் குணத்தைப் பெற்று இருக்கிறது.

அதே போல் திருமால் அடியார்களும் தங்களையே த்யாகம் செய்து ( அதாவது கைசிக ஏகாதசிக்கு முன்
தான் செய்த பாபங்களை ( பழைய வாசனைகளை) நம்பெருமாளின் தரிசனத்தால் போக்கிக் கொண்டு,(
புதிய மனிதனாக மாறி) ( அதாவது புதிய வாசனை யாகிய கற்பூர நறுமணத்தை பெற்று இந்தப் பிறவியில் உய்வடைதல்) பகவானாகிய ஸ்ரீமந்நாராயணனின் கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அடியார்களுக்கு நினைவூட்டும் பொருட்டு நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற ஸேவை
கண்டருள்கிறார் என்று ஐதீகம்.

ஒரு வருடம் காத்திருந்து சேவித்த மன்னர்
விஜய ரங்க சொக்கநாதர் !!
🔱🔆🔯🕎✡🕉⚛⚜🔱
விஜய ரங்க சொக்கநாதர் ,மதுரையை தலைநகராக கொண்டு ,ஆண்டு வந்த தெலுங்கு மன்னர்.
மன்னர் கற்பூரப்படியேற்ற சேவிக்க தம் குடும்பத்தார்/பரிவாரங்களுடன் ஸ்ரீரங்கம் வந்தார்.ஆனால் கைசிக துவாதசியன்று அவர் வருவதற்குள் நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற சேவை முடிந்து ஆஸ்தானம் எழுந்தருளி விட்டார்.(ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை சரியாக 5.45க்கு படியேறிவிடுவார்..இன்றும் அவ்வாறே).மன்னர் உள்ளே சென்று பெருமாளைச் சேவித்து தாம் தொலைதூரத்திலிருந்நு வந்திருப்பதால்,
மீண்டும் ஒரு முறை கற்பூரப்படியேற்ற சேவை சாதித்து அருளுமாறு வேண்டினார்.அதற்கு நம்பெருமாள்
"ஒச்சே ஏண்டிகி"(அடுத்தஆண்டு)
என்று சொல்லி விட்டார்.விஜய ரங்க சொக்கநாதரும், அவர் குடும்பத்தாரும் ஒரு ஆண்டுகாலம் ஸ்ரீரங்கம் கோயிலிலேயே இருந்து, அரங்கனின் அனைத்து உற்சவங்களையும் கண்டு சேவித்து ,மறுவருடம் கைசிக ஏகாதசி அன்று ,இரவு முழுவதும் அரங்கனை தரிசித்து ,மறுநாள் அதிகாலை நடைபெறும் கற்பூர படியேற்ற சேவையைக் கண்ட பிறகே ,மீண்டும் மதுரை சென்றாராம்.

ஓராண்டு காலத்தில் அரங்கருக்கு பல கைங்கர்யங்கள் செய்தார்.நம்பெருமாள் , விஜய ரங்க சொக்கநாதர் கனவில் தோன்றி தங்க குடத்தையும், தங்க திருமுத்து குடையையும் (வைர கல் பதித்தது) சமர்ப்பிக்குமாறு சொன்ன மாத்திரமே, அரசன் ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு கைங்கரியமாக தங்க குடத்தையும், தங்க திருமுத்து குடையையும் செய்தார்.

கற்பூரப் படியேற்ற சேவையின் மேன்மையையும்/விஜயரங்க சொக்கநாதரின் பக்தியையும் எடுத்துக்காட்டும் வைபவம் இது.மன்னர்/குடும்பத்தாரின் சிலைகள்(யானைத் தந்த்தால் செய்யப் பட்டவை)சந்தனு மண்டபம் மேலப்படிக்கு (கற்பூரப்படி) நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.இன்றும் இவர்களைச் சேவிக்கலாம்.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்/காணொளி:
1.கைசிக ஏகாதசிக்கு நம்பெருமாள் புறப்பாடு.
2,3,4 அர்ச்சுன மண்டபத்தில் 365 போர்வைகள் போர்த்திக் கொண்டு சேவை
5,6,7:அஸ்மத் ஆசார்யர் ஸ்ரீ.உ.வே.பராசர அழகிய சிங்க பட்டர் ஸ்வாமி கைசிக புராணம் படிக்க எழுந்தருளல்/படித்தல்
8,கற்பூரப் படியேற்ற சேவை.
9,10.விஜயரங்க சொக்கநாதர் தம் குடும்பத்தாருடன் .
11,12 கைசிக ஏகாதசிக்காக,திருமலை திருவேங்கடவர்,பெரியபெருமாள்-பெரியபிராட்டிக்கு அனுப்பி வைத்த சீர்வரிசை(நேற்று காலை).
13.கீழே உள்ள link ல் கற்பூரப் படியேற்றம் காணொளி.

4e1ceaab-c497-4476-99dd-b13543edb830.jpg
d676c4ee-c41e-4457-85c1-18f6b6b5e842.jpg
de3a58cd-bb57-4fa8-a86c-1e6cd02c6d37.jpg
f1813971-2f1c-4c80-bc87-a4ba549ad607.jpg
1e511305-124d-45ec-891e-d02bcc9b2060.jpg
24a797bf-fa48-4952-a176-0e89307ca8fc.jpg
2674362e-37f2-4966-b31c-6250abd9a53e.jpg
9afe6ef1-54bf-4864-b003-0c0272da128f.jpg
e4ee79e9-bad5-4ea4-9d75-fb9c75deaba8.jpg
 

Latest ads

Back
Top