• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

kadal snaanam.

kgopalan

Active member
03-11-2020 to 19-11-2020* *No Broadcaste* *20-11-2020*
*சமுத்திர ஸ்நானம்*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய கடமைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வரக்கூடிய

வரிசையில் ஷண்ணவதி தர்ப்பணம் செய்கின்ற முறைய விரிவாகப் பார்த்து அதில் நாம் செய்யாமல் விட்டால், மேலும் அதற்கான பிராயச்சித்தங்கள் என்ன என்பதை பார்த்துக் கொண்டு வருகிறோம்.*

*இதற்கு நடுவில் சமுத்திர ஸ்நானம் என்பதைப் பற்றி சில தர்ப்பண தினங்களில் விசேஷமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதை பார்க்க இருக்கிறோம்.

இதைப் பார்த்த பிறகு ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்ய முடியாவிடில் அதற்கான பரிகாரங்களை பார்க்கலாம்.*
*பொதுவாக எந்த புண்ணிய நதிகளுக்கு சென்றாலும் ஸ்நானம் பானம் இவைகள் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழில் சொல்லும் பொழுது கங்காஸ்நானம் துங்கா பானம்.* *கங்கைக்கு போனால் ஸ்நானம் பிரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது.
துங்கா நதிக்கு போனால் ஒரு உத்தரணி தீர்த்தமாவது குடிக்க வேண்டும் அங்கு ஸ்நானம் பிரதானம் இல்லை. இப்படி ஒவ்வொரு புண்ணிய நதிகளுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

எந்த புண்ணிய நதிகளுக்கு நாம் சென்றாலும் அங்கே ஸ்நானம் செய்ய வேண்டும் ஒரு உத்தரணி நாம் அதை சாப்பிட வேண்டும்.*
*இப்படி வரும் பொழுது அதிலே சமுத்திரமும் சொல்லப்பட்டுள்ளது. சமுத்திரத்திற்கு போனால் அங்கே ஸ்நானம் செய்துவிட்டு ஒரு உத்தரணி அந்த தீர்த்தத்தையும் பருகலாமா என்ற கேள்வி வருகிறது.

தர்மசாஸ்திரம் சமுத்திர ஸ்தானத்திற்கு என்று தனியாக விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.* *_வேதம் இதைப் பற்றி சொல்லும்போது ஒரு கதையை சொல்லி சொல்லுகிறது.
சமுத்திரத்தின் உடைய தண்ணீரை நாம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கடல் தண்ணீர் குடிக்க கூடியது அல்ல.
கடல் தண்ணீரை நாம் குடித்தாலோ அல்லது குடிக்கும் படி செய்து அதை நாம் உபயோகப்படுத்தினால் தண்ணீர் சம்பந்தமான நோய் மூலம் நாம் இறக்க நேரிடும்.
கடல் அதாவது சமுத்திர தண்ணீரை நான் உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் சில காலங்களில் ஸ்நானம் என்பது விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.*

*இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, அரசமரத்தை எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும் குறைந்தபட்சம் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும்.

அதேபோல சமுத்திரத்தை நாம் எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும் சமுத்திர இராஜா. ஆபாம் பதிகி என்று பெயர் சமுத்திரத்திற்கு. சமுத்திரத்தை நாம் எங்கு பார்த்தாலும் கை கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும்.*
*ஆனால் இந்த இரண்டையும் கையால் தொடக்கூடாது எப்பொழுதும் சில காலங்களை தவிர்த்து. அதாவது அரச மரத்தை வைத்து விடுவதோ அல்லது அதை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்வது சில காலங்களில் தான் செய்யலாம்.

அமாவாசையும் திங்கட்கிழமையும் வரக்கூடிய அமா சோமவாரத்திலும், சனிக் கிழமைகளிலும், இந்த இரண்டு தினங்களில் தான் அரச மரத்தை தொடுவதோ ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்வது செய்யலாம்.*

*அதேபோல, கடலில் நாம் ஸ்நானம் அல்லது அதைத் தொடுவது பருவகாலங்களில் தான் அதை செய்யலாம். பௌர்ணமி அம்மாவாசை இவை இரண்டுக்கும் பர்வா என்று பெயர். இந்த இரண்டு தினங்களில் தான் நாம் சமுத்திரத்தை தொடலாம் ஸ்நானம் செய்யலாம். இந்த தகவலை நமக்கு சொல்வது மகாபாரதம்.*

*ஒரு புல்லின் நுனியால் கூட அரச மரத்தையோ சமுத்திரத்தையும் நாம் தொடக்கூடாது. ஆனால் பருவ காலத்தில் ஸ்னானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.

பௌர்ணமியில் அல்லது அமாவாசையில் சமுத்திர ஸ்நானம் செய்தால், ஒரு முறை ஸ்நானம் செய்யும்போது லட்சம் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து போகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.

மற்ற நாட்களில் சமுத்திரத்தை தொடுவதோ அதில் ஸ்நானம் செய்வதும் கூடாது.*
*ஆனால் சேதுவில் அதாவது ராமேஸ்வரத்தில் சமுத்திர ஸ்நானம் நித்தியமாகவே என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஜெமினி என்கின்ற மகரிஷி சொல்கிறார். ராமேஸ்வரத்தில் ஸ்நானம் தினமுமே செய்யலாம். விதிவிலக்காக

சொல்லப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்தில் சமுத்திரத்திற்கு நாம் சென்றாலும் பவுர்ணமி அமாவாசை தினங்கள் தவிர நாம் அதை தொடவோ அதில் ஸ்னானம் செய்யவோ கூடாது.*

*மேலும் சில புண்ணிய தினங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. பௌர்ணமி அமாவாசை கிரகண புண்ணிய தினங்கள் பவுர்ணமியும் பிரதம யும் சேர்ந்து வரக்கூடிய நாட்களில் கிரகணம் வரும் அமாவாசையும் பிரதமரையும் சேரக்கூடிய நாட்களில் தான் கிரகண புண்ணிய காலம் வரும்.

சில நேரங்களில் முதல் நாள் கூட பௌர்ணமியும் அமாவாசையும் வரலாம் மறுநாள் கிரகணம் வரும். ஆகையினாலே கிரகண புண்ணிய காலத்தில் சமுத்திர ஸ்நானம் என்பது செய்யலாம்.
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை வரும் பொழுது செய்யலாம். கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி என்று இந்த மூன்றும் சேர்ந்து வருவதற்கு பெயர்.* *கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி அன்று நாம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதால் ஆயிரம் ஜென்மங்களில் செய்த பாவங்கள் போய்விடுகிறது.

அதேபோல் யுகாதி புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் முறையாக யுகாதி புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்தால்,

குருக்ஷேத்திரத்தில் ஆயிரம் கோதானம் செய்தால் என்ன புண்ணியங்கள்/பலன்கள் கிடைக்குமோ, அதாவது நமக்கு மட்டுமல்ல நம்முடைய பிதுருக்கள் மற்றும் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கும் பலன்கள் கிடைக்கும் என்று சௌர புராணம் காண்பிக்கிறது.

இப்படியாக விசேஷமாக சமுத்திர ஸ்நானம் இந்த புண்ணிய காலங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.*

*இந்த சமுத்ர ஸ்நானம் செய்ய வேண்டிய முறையையும் தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது அதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

21-11-2020* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய தர்மங்களின் வரிசைகளை பார்த்துக் கொண்டு வருகின்ற வகையில் சில புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் பெருமைகளையும் புண்ணியங்களையும் மேலும் தொடர்கிறார்.*
 
*அதாவது கடலுக்கு சென்று ஸ்நானம் செய்வது அதனுடைய முறையையும் தர்மசாஸ்திரம் நமக்கு காட்டுகிறது. பொதுவாகவே எந்த ஒரு நதிக்கும் நாம் சென்று ஸ்நானம் செய்யும்போது அதற்கான ஒரு

முறை சொல்லப்பட்டிருக்கிறது. தர்ம சாஸ்திரத்தில் நமக்கு ஒரு முறை வழி சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.*

*முதலில் தேக ஆரோக்கியம் நமக்கு கிடைக்கின்றது. அதுதான் திர்ஷ்டம் பலம். தேக ஆரோக்கியத்திற்கு, இரண்டு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.
ஒன்று திர்ஷ்டம் மற்றொன்று அதிர்ஷ்டம். கண்ணினால் பார்க்கக் கூடியதான பலனுக்கு திர்ஷ்டம் என்று பெயர். அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடிய பலனுக்கு அதிர்ஷ்டம் என்று பெயர்.*

*திர்ஷ்டம் அதனுடைய பலன் என்ன என்றால், தேக ஆரோக்கியம் நமக்கு கிடைக்கிறது. இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்லும்பொழுது எங்கு நாம் ஒரு நதிக்கு ஸ்னானம் செய்ய போகிறோமோ அங்கு அது எப்படி இருக்க வேண்டும் என்று காண்பிக்கிறது.*


*அதாவது வியாசர் இதைப் பற்றி சொல்லும் பொழுது, ஒரு நதியிலே நாம் நானும் செய்யப்போகிறோம் என்றால் அந்த நதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். ஆறுகளில் ஓடக்கூடிய தண்ணீர் எப்பொழுதும் கெட்டுப்போகாது.

நாம் ஒரு குடத்திலோ அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நாம் பிடித்து வைத்தால் ஒரு நாள் தான் அது சுத்தமாக இருக்கும். மறுநாள் அதில் ஒரு வழவழப்புத் தன்மை வந்துவிடும். கெட்டுப் போய்விடும்.

ஆனால் நதியில் வேகமாக ஓடிக்கொண்டு இருப்பதினால் அது சுத்தமாக இருக்கும். ஈஸ்வர ஷிஷ்டி அப்படியாக உள்ளது. ஒரு நதியில் தண்ணீர் தேங்கி இருந்தது என்றால் அங்கே ஸ்நானம் செய்யக்கூடாது.

தடுக்கப்பட்டு இருந்தால் ஸ்நானம் செய்யக்கூடாது. போகின்ற தண்ணீர் திரும்பவும் சுற்றி வருகிறது என்றால் அங்கே ஸ்நானம் செய்யக்கூடாது. இவை எல்லாம் தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*


*அதனால்தான் பழைய நாட்களில் நம் முன்னோர்கள் தண்ணீரை சேமிப்பதற்கு, சில வழிகளைக் கண்டுபிடித்து கையாண்டிருக்கிறார்கள்.

எந்த நதியும் அவர்கள் தடுக்க மாட்டார்கள். நம் முன்னோர்கள் நதியை தடுத்து அணை கட்ட வேண்டும் என்று நினைத்து இருந்தால் எவ்வளவோ அணைகள் கட்டி இருக்கலாம். அதனால் நதிக்கு குறுக்கே எந்த அணையும் அவர்கள் கட்டவில்லை.*


*பெரிய நதிகளில் இருந்து கிளை நதியாக வெட்டி அங்கங்கே குளங்கள், ஏரிகள், நீர் நிலைகளை சேமிக்கிறார்கள். ஒரு நதியில் ஓட கூடிய தண்ணீரை தடுக்கக்கூடாது. அந்த நதியின் உடைய வேகம் குறைந்து போய்விடும்.
நம்முடைய தேசத்தில் எல்லா நதிகளும் சம தளத்தில் தான் போகிறது. மேற்கு தூக்கியும் கிழக்கே தணிந்து போகவில்லை.*

*ஏதோ சில இடங்களில் மலைகளிலிருந்து கீழே இறங்குவதால் அல்லது மேட்டிலிருந்து பள்ளத்திற்கு இறங்குவது இருக்கலாம். தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தால்தான்

கடைசிவரையிலும் அந்த தண்ணீர் பாயும். நம்முடைய முன்னோர்கள் அதனால்தான் எந்த நதியின் குறுக்கே அணைகளைக் கட்ட வில்லை காரணம் நபியுடைய வேகத்தை குறைக்கக் கூடாது.*


*வேகத்தை குறைத்தால் தண்ணீர் சீராக பாயாது. ஆகையினால் நம் முன்னோர்கள் அனைத்து நதிகளின் பக்கத்திலும் குளங்கள் ஏரிகளை வெட்டினார்கள். அந்த நதியில் செல்லக்கூடிய தண்ணீரை குளங்களிலும் ஏரிகளிலும் தான் சேமித்தார்கள்.*

*அதனால் நதிகள் கெட்டுப்போகாமல் கடைசிவரையிலும் பாய்ந்தது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அப்பொழுது சூழல் நன்றாக இருந்தது மழை நிறைய பெய்தது அதனால் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது அளவுக்கு அதிகமாக மழை இருந்ததனால்.

ஆனால் இப்போது மழை குறைந்து போய்விட்டது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் பெரிய அளவில் மழை ஒன்றும் குறைந்து போகவில்லை. நாம் நதியின் குறுக்கே அணைகள் கற்றுக் கொ

ள்வோம் என்று இடைஞ்சல் செய்து ஊற்றுத் தண்ணீர் எல்லாம் குறைந்து போய்விட்டது. நதிகளிலே ஊற்றுத் தண்ணீர் என்றும் உண்டு.*


*கோடை காலங்களில் அங்கங்கே தண்ணீர் ஊற்று மூலமாக வந்து கொண்டிருக்கும். ஜீவநதிகள் என்று பெயர். வருஷம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் அதற்கு ஜீவநதிகள் என்ற பெயர்.

அதனால் தான் நம் முன்னோர்கள் எந்த நதிக்கு குறுக்கே ஒரு தடுப்பணையை கட்டாமல் இருந்தார்கள். மாறாக ஏரி குளங்களில் தண்ணீரை சேமித்தார்கள்.*

*எப்பொழுது ஆற்றிலே தண்ணீர் வந்தாலும் அந்த குளங்களும் ஏரிகளும் நிரம்பும். அதிலிருந்து நாம் உபயோகப்படுத்துவது என்கின்ற வழக்கம் தான் முன்னோர்கள் இடத்தில் இருந்தது. தர்ம சாஸ்திரமும் அதைத்தான் சொல்கிறது.*

*ஆகையினாலே நிற்கக்கூடிய தண்ணீரில் நாம் ஸ்நானம் செய்யக்கூடாது. ஏனென்றால் அங்கே நம்முடைய உயிரைப் பறிக்க கூடிய சக்திகள் நிறைய இருக்கும்.

தண்ணீர் தேங்கி தானே இருக்கிறது என்று இறங்கினால் நம்மை உள்ளே இழுத்து விடும். ஓடக்கூடிய தான தண்ணீர் நம்மை தள்ளி விடுமே தவிர உள்ளே இழுக்காது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் தர்மசாஸ்திரம் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகளை சொல்கிறது.*


*தண்ணீர் போய் திரும்ப அங்கேயே வருகிறது என்றால் இங்கேயும் நாம் குளிக்கக்கூடாது அது விஷம் கலந்த தண்ணீராக இருக்க வாய்ப்பு உள்ளது. நம்முடைய உடம்பிற்கு அது ஆரோக்கியத்தை கொடுக்காது.*


*நதிகளுக்கு சென்று நாம் ஸ்நானம் செய்தால்,அவஹாக ஸ்நானம், அதாவது நன்றாக மூழ்கி குளிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. யார் யார் எப்படி எப்படி ஸ்னானம் செய்யவேண்டும் என்பதையும் காண்பிக்கிறது.*
*கிரகஸ்தர்கள் கல்யாணம் செய்து கொண்டவர்கள் நதிகளுக்கு சென்றால் நன்றாக மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். மற்றவர்கள் நதியிலே உட்காரக்கூடிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியை எடுத்து விட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் கடலுக்கு சென்றால், எக்காரணத்தைக் கொண்டும், அவஹாக ஸ்நானம் யாருக்குமே கிடையாது கூடாது.

சமுத்திரத்திற்கு சென்று ஸ்நானம் செய்யக்கூடாது. சமுத்திரத்திற்கு சென்றால் உட்காரக்கூடிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணீரை எடுத்து மேலே விட்டுக் கொண்டுதான் ஸ்நானம் செய்ய வேண்டும்.

மேலும் யார் யாரெல்லாம் சமுத்திர ஸ்நானம் செய்யலாம் யார் செய்யக்கூடாது என்பதையும் தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது அடுத்த உபன்யாசத்தில் அதை பற்றி பார்ப்போம்.*


*22-11-2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சமுத்திர ஸ்நானம் பற்றி சில புண்ணிய காலங்களில் செய்வதை மேலும் தொடர்கிறார்.*
*சமுத்திர ஸ்நானம் சில புண்ணிய காலங்களில் செய்யும் பொழுது நிறைய புண்ணியங்களையும் மனநிம்மதியும் சமுத்திரத்தை பார்த்தாலே நமக்கு கிடைக்கிறது.*

*மனக்கலக்கம் மனசிலே குழப்பங்கள் அமைதியின்மை இருந்தால் நம் முன்னோர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசனம் செய்து விட்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்.*

*அங்கே என்ன சமுத்திர தீர்த்தம் சுப்ரமணிய சுவாமியை பார்த்துவிட்டு அந்த சமுத்திரத்தை நாம் தரிசனம் செய்தாலே மனக் கலக்கங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.*

*அதனால்தான் சமுத்திரம் எங்கு இருந்தாலும் அங்கு சென்று பார்த்து சற்று அமர்ந்து விட்டு வந்தாலே நமக்கு மன அமைதியை நிம்மதியை கொடுக்கும் சமுத்திர தரிசனம்.*

*நம்முடைய தர்ம சாஸ்திரம் சமுத்திர ஸ்நானம் என்பதை சில புண்ணிய காலங்களில் வகுத்துக் கொடுத்திருக்கிறது. அந்த சமுத்திர ஸ்நானம் யார் யாரெல்லாம் செய்யக் கூடாது என்றும் சொல்கிறது.*

*சிலபேர்கள் சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவளுடைய கணவன் செய்யக்கூடாது எந்தப் புண்ணிய காலமாக இருந்தாலும் கூட. தூர யாத்திரை (காசி யாத்திரை) அதாவது நீண்ட பயணம் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுது செய்யக்கூடாது. வபனம் செய்து கொள்ளக் கூடாது அந்த நேரங்களில்.*

*அடுத்ததாக, சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது மேலும் இறந்தவர்களுடைய உடலை தூக்கிச் செல்லக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளது.*

*பரத்வாஜ மகரிஷி சொல்லும் போது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வபனம் கூடாது. சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது செய்தால் என்ன என்றால் அவனுக்கு பிறக்கக்கூடிய குழந்தை அவனுக்காக இல்லாமல் போய்விடும்.

ஓரளவு வளர்ந்த பிறகு அந்த குழந்தை எங்கேயாவது ஒரு தூரதேசம் சென்று நமக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடும். அல்லது அந்த குழந்தை வேறு எங்காவது போய்விடும் அடுத்த தலைமுறையே நமக்கு இல்லாமல் போய்விடும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.*

*மற்றவர்கள் இந்த புண்ணிய காலங்களில் கட்டாயம் சமுத்திர ஸ்நானம் செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்றால், தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது கையிலே நாம் ஜலம் எடுத்துக்கொண்டு போக வேண்டும். ஏனென்றால் ஸ்நானம் செய்வதற்கு முன்பு ஆசமனம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.*

*ஆசமனம் செய்வதற்கு சமுத்திர ஜலத்தை நாம் உபயோகப்படுத்தக் கூடாது. வாசனைப் பொருட்கள் கலந்த ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. சமுத்திரம் ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. நிறம் மாறி இருக்கக்கூடிய தண்ணீரினால் ஆசமனம் செய்யக்கூடாது. இதை எல்லாம் தர்மசாஸ்திரம் காண்பித்துள்ளது.*

*பொதுவாக முதலில் எந்த நதிகளுக்கு சென்றாலும் முதலில் ஒரு தடவை மூழ்கி ஸ்நானம் செய்து விடவேண்டும். பிறகு ஆசமனம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.*

*சமுத்திர ஸ்நானத்திற்க்கு போகும் பொழுது முதலில் வீட்டிலேயோ அல்லது நாம் எங்கு தங்கி இருக்கிறோமோ அந்த இடத்தில் ஸ்நானம் முதலில் செய்து விட்டு பிறகு போக வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் சமுத்திர ஸ்நானம் என்பது கூடாது.

முதலில் வேறு தண்ணீரில் நாம் குளித்துவிட வேண்டும் பிறகு சமுத்திரக் கரைக்கு சென்று ஸ்நானம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்வதற்கு கையிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.*

*ஆசமனம் சங்கல்பம் செய்த பிறகு தண்ணீரை இரண்டு கைகளினாலும் அள்ளி அள்ளி விட்டுக் கொள்ள வேண்டும். சமுத்திரத்தில் மூழ்கி குளிக்க கூடாது அதனால் கையில் பித்தளை சொம்பு எடுத்துக்கொண்டு போய் அதன்மூலமாக எடுத்துக்கொண்டு நாம்

தலையில் விட்டுக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. சமுத்திரம் குளம் ஏரி இவைகளுக்கு செல்லும் பொழுது எந்த திசையில் நின்று நாம் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றால், சூரியன் எந்த திசையில் இருக்கிறாரோ அந்த திக்கை பார்த்து அமர்ந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

கிரகண புண்ணிய காலமாக இருக்கின்ற சமயத்திலே இரவிலே சந்திரன் எந்த திசையில் இருக்கிறாரோ அந்த திசையில் பார்த்து உட்கார்ந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.*

*அப்படி ஸ்நானம் செய்த பிறகு ஸ்நானாங்க தர்ப்பணம் உண்டு. தர்ப்பணம் செய்வதற்கு அந்த சமுத்திர தண்ணீரை உபயோகப்படுத்தலாம் ஏனென்றால் நாம் குடிக்கக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது தவிர, ஆனால் ஆசமனம் செய்வதற்கு நாம் தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

அதனால் சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தி ஸ்நானாங்க தர்ப்பணங்களை செய்யலாம். பிறகு வாசோதகம் சிகோதகம் என்று உண்டு. தலையில் முடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற தண்ணீர் மூலமாக செய்வது அதை கரையிலே வந்து செய்ய வேண்டும். நாம் பிழிய கூடிய தண்ணீர் வேஷ்டியில் இருந்தோ அல்லது தலையிலிருந்தோ சமுத்திரத்தின் உள்ளே விடக்கூடாது.*

*ஸ்னானம் செய்து விட்டு கரைக்கு வந்து விட வேண்டும். இங்கு தான் ஸ்நானாங்க தர்ப்பணம் செய்து வேஷ்டியை பிழிந்து கட்டிக்கொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு சொல்கிறது. இந்த முறையிலேயே சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்*

*பிறகு நாம் பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணங்கள், பிரம்மயஞ்கியம் இவைகளெல்லாம் சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தி செய்யக்கூடாது இதற்காக நாம் தனியாக எடுத்துக் கொண்டு போன ஜலத்தை வைத்து தான் உபயோகப்படுத்த வேண்டும்.
அதனால் தீர்த்த ஸ்ராத்தம் நாம் கரையிலே செய்யும் பொழுது வேறு தண்ணீர்தான் வைத்துக்கொள்ள**வேண்டுமை தவிர சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தக் கூடாது.*
*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top