Jokes/Humour

Status
Not open for further replies.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே

Alwan
 
டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

Alwan
 
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
 
கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...
 
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?

Alwan
 
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

Alwan
 
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..

Alwan
 
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..

Alwan
 
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

Alwan
 
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!

Alwan
 
டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

Alwan
 
ஐயோ..மனச..தளர விடாதீங்க...கண்கலங்காதீங்க...கவலைப்படாதீங்க மாமா… உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்…!
அட நீங்க வேற மாப்பிள்ளை…! நான் கவலைப்படறது, பாவம்.. உங்களுக்காகத்தான்..! ம்ம்ம்...நாங்க தப்பிச்சோம்...நீங்க...என்ன பாடு பட போறீங்களோ...
Alwan
 
ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!

எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல
போடவான்னு கேட்டாரே..?
 
கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்
எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!
 
Sir,
Thanks. Instantly it made me to forget myself for a moment and I took the opportunity to share the jokes released by you along with my colleagues who are all very busy with their legal advisory work. All of us enjoyed.
 
Sir,
Thanks. Instantly it made me to forget myself for a moment and I took the opportunity to share the jokes released by you along with my colleagues who are all very busy with their legal advisory work. All of us enjoyed.

Thanks,
Alwan
 
Status
Not open for further replies.
Back
Top