• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

India's 10 Richest Temples

இந்தியாவின் பொக்கிஷமாக விளங்கும் 10 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் புகழ்பெற்ற இந்து கோயில்கள் பல உள்ளன. அதில் ஒரு சில கோயில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷமாகவும் விளங்குகின்றன.

பெரும்பாலான கோயில்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அறக்கட்டளைகள் மூலமாகவும், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்தியாவின் பொக்கிஷமாக விளக்கும் 10 புகழ்பெற்ற பணக்கார கோயில்களைப் பற்றி பார்ப்போம்.

1. பத்மநாபசுவாமி திருக்கோயில், திருவனந்தபுரம்

பத்மநாபசுவாமி திருக்கோயில் இந்தியாவில் இல்லையென்றாலும், உலகில் பணக்காரக்கார கோயில்களில் முதலாவதாக விளங்குகின்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். இந்தக் கோயில் பகவான் விஷ்ணுவைப் பிரதானமாக கொண்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இக்கோயில் மூலநாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். பழமையான இக்கோயில் திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் பெரும் புகழுடன் விளங்கியது. அச்சமயத்தில் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்டது.

இக்கோயிலில் பாதாள ரகசிய அறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறைக்குள் விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் எனக் கருதப்படுகிறது.


2. திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோயில், ஆந்திர பிரதேசம்

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இத்தலம் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 650 கோடி வருமானம் வரும் இந்தியாவின் பணக்கார கோயில்களில் இரண்டாவதாகும். இந்தக் கோயிலின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடியாகும்.

3. ஷீரடி சாய்பாபா திருக்கோயில், மகாராஷ்டிரா

இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் பணக்காரக் கோயிகளில் ஷீரடி சாய்பாபா கோயிலும் ஒன்று. இந்துக்கள் இவரைக் கடவுளாகவும், குருவாகவும் போற்றுகின்றனர்.

தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்தக் கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு சுமார் 50 கோடியாகவும், வங்கி சேபிப்பு 627 கோடியே 56 லட்சம் வரை உள்ளது. ஆண்டு வருமானம் 450 கோடியாகவும் உள்ளது.

4. பூரி ஜெகன்நாதர் திருக்கோயில், ஒடிசா

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலத்தில், பூரி நகரத்தில் அமைந்துள்ள வைணவத் திருத்தலமாகும். இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆஷ்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும். இந்தடி தேரோட்டத் திருவிழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கோயிலில் விலை மதிக்கத்தக்க தங்கம், வைரம் வைடூரியங்கள் உள்ளதாக கூறுப்படுகிறது. வட-கிழக்கில் அமைந்துள்ள பணக்கார கோயில்களில் சிறப்பு வாய்ந்தவை என்று அழைக்கப்படுகிறது.

5. சித்தி விநாயகர், மும்பை

மும்பையில் உள்ள மிகப்பெரிய கோயில் சித்தி விநாயகர் கோயில். பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சினிமா துறையில் உள்ள பாலிவுட் நடிகர், நடிகளைகள் விநாயகரின் ஆசியைப் பெற வருவதோடு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.

சித்தி விநாயகரின் விக்ரகத்தில் தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது.

இந்தக் கோயிலில் எலக்ட்ரானிக் தளத்தின் மூலம் நன்கொடைகளைப் பெற 2016-ல் கோயில் நிர்வாகம் டீடேட் கணக்கு ஒன்றை துவக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த 2009 வரை கணக்கிட்ட போது சுமார் 140 கோடி சொத்துகள் இருந்தது. வருடத்திற்கு 10 முதல் 15 கோடி வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.

மும்பையில் பணக்கார கோயில்களில் ஒன்றாக திகழும் இது உலகில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

6. வைஷ்ணவ தேவி திருக்கோயில், ஜம்மு - காஷ்மீர்

புனிதமான இந்து சமயக்கோயில்களில் ஒன்றாக திகழ்வது வைஷ்ணவ தேவி திருக்கோயில். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த கோயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவ தேவி மலையில் அமைந்துள்ளது.

வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் 5200 அடிகள் உயரத்திலும் கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வருகின்றனர். திருமலை வெங்கடேஸ்வர கோயிலுக்கு அடுத்து அதிகமான பக்தர்கள் திரளாக வந்து வழிபடும் கோயில்களில் இது 2-வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தக் கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இங்கு வருடத்திற்கு 500 கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி ம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்ட சோம்நாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கு தினமும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சோம்நாத் கோயிலின் சொத்து மதிப்பு 1,639.14 கோடியாகும். இந்தியாவின் பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்று.

7. சோம்நாத் கோயில், குஜராத்

குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது.

இங்கு ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி ம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்ட சோம்நாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கு தினமும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சோம்நாத் கோயிலின் சொத்து மதிப்பு 1,639.14 கோடியாகும். இந்தியாவின் பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்று.


8. மீனாட்சியம்மன் திருக்கோயில், மதுரை

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று. மீனாக்ஷி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது மீன் போன்ற கண்களை உடையவள் என்று பொருள்.

இந்தக் கோயில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஏப்ரல்-மே மாதங்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா மிக விமர்சையாக நடைபெறுகிறது. அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

தினமும் இக்கோயிலுக்கு 15 ஆயிரம் முதல் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தியாவில் 33 ஆயிரம் சிற்பங்கள் உள்ள ஒரே கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில். இந்தியாவில் தெற்கு பகுதியில் பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்று.


9.ஹர்மந்திர் சாஹிப் (தங்க கோயில்), அம்ரித்சர்

சீக்கிய மக்களின் முக்கிய கோயிலாக ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோயில் உள்ளது. சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.

ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து மதங்களை சார்ந்த ஆண்கள் பெண்கள் சமமாக வந்த கடவுளை வழிபடுவதற்காக உருவாக்கப்பட்டதேயாகும். இங்குத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்தக் கோவிலின் விதானம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. இதன் மேல் விலையுயர்ந்த கற்கள், வைரம் மற்றும் இரத்தினங்களைப் பதிக்கப்பட்டுள்ளது. பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது.


10. காசி விசுவநாதர் கோயில், உத்திப்பிரதேசம்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி எனும் இடத்தில் உள்ள பழமையான மற்றும் புகழ்வாய்ந்த கோயிலாக காசி விசுவநாதர் கோயில் விளங்குகிறது. ஜோதிர் லிங்கங்களில் பன்னிரண்டாவதாகும்.

பிரதான தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார். வாரணாசி என்று அழைக்கப்பட்டாலும் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருள்.

வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இந்நிகழ்வை காங்கா ஆர்த்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள். இங்குத் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது,
 

Latest ads

Back
Top