எனது நெருங்கின உறவினர் ஒருவரின் பையனுக்கு சில வருஷங்களாய் வரன் கிடைக்க வில்லை. பார்க்கிற பெண்கள் அனைவருமே அபரிமிதமான வருவாய் எதிர்பார்த்தார்கள். இத்தனைக்கும் பையன் ஓரளவு நல்ல சம்பளம் ஈட்டி வந்தான். 30 வயதில் வரன் பார்க்க ஆரம்பித்து அவனுக்கு 40 தாண்டி விடவே, பையன் தான் வேலை பார்த்த இடத்தில் ஒரு வடகிழக்கு மாநில கிறிஸ்த்தவ பெண் காதலைச் சொல்ல, ஒத்துக் கொண்டு கல்யாணமும் செய்து கொண்டு விட்டான். எனது உறவினர் மனதே இல்லாமல் சம்மதித்தார். அந்தப் பெண் அவனுக்கு அறிமுகம் ஆவதற்கு ரொம்ப முன்பிலிருந்தே பையனுக்கு அம்மா இல்லை. அம்மாவிற்கு்த் திவசம் செய்து வந்தான். எனது உறவினர் இப்போது அவன் கிறிஸ்த்தவ பெண்ணை மணந்து கொண்டதால் அவனுக்கு திவசம் செய்ய அதிகாரம் இல்லை என்கிறார். நானும் திவசம் செய்வதால் அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்பது புரிகிறது. மேலும் அவன் எனக்கு கர்மா செய்யவும் அதிகாரம் இல்லை என்கிறார். இப்போது ஸ்ரீவாஞ்சியம் சென்று ஒவ்வொரு அம்மாவாசைக்கும் தர்ப்பணம் செய்கிறார்.
எனது ஸந்தேகம்: திவசம் செய்யும் போது மனைவி தீர்த்தம் விட வேண்டும் என்பது புரிந்தாலும், அவர் சொல்வது போல அவனுக்கு அம்மாவுக்கு செய்யவோ, அவருக்கு செய்யவோ அதிகாரமே இல்லையா? சாத்திரம் என்ன சொல்கிறது? தயை கூர்ந்து விளக்கவும்.