• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

How to find out shannavathi tharppanam days, yogam ,karanam?

Namaskaaram!

I follow vaakya/paambu panchangam. Please let me know how to identify shannavathi days. amavasai, maasa pirappu, mahalaya paksham are straightforward. However, I want to learn how to identify vyathipaadham, vaithruthi, yugadhi, manvaadhi, etc. Also, how to should the yogam and karanam are to be identified for a given date and time? I could not decipher these information in panchangam.

Please guide me.
 
Namaskaaram!

I follow vaakya/paambu panchangam. Please let me know how to identify shannavathi days. amavasai, maasa pirappu, mahalaya paksham are straightforward. However, I want to learn how to identify vyathipaadham, vaithruthi, yugadhi, manvaadhi, etc. Also, how to should the yogam and karanam are to be identified for a given date and time? I could not decipher these information in panchangam.

Please guide me.
I will answer first the query on yogam and karaNam.
Let us read the line in paambu panchangam on 15 May 2025.
First is vaaram (Thrursday), next is tithi (tRtiiyai upto 52 naazhi 40 vinaadi; they have converted the duration in modern time i.e. tRtiiyai duration is up to 03:04 am on the next day), next is nakshatra (jesshTha nakshatram up to 18 naazhi 48 vinaadi (converted into modern time 01:40 pm in the afternoon), next is yogam (shiva yoga up to 1 naazhi 40 vinaadi (if converted into modern time, shiva yogam duration is up to 40 minutes after sun rise on that day, say up to 06:40 am, then citta yogam starts from 06:41 am to next day 06:26 am; to know what is the next yoga after shiv yoga, look at the panchaangam same day or next day (if the duration of the yogam is very less in the day, they will mention the next yogam on the same day, otherwise on the next day; same principle as followed for tithi and nakshatra), next comes karaNam (vaNija karaNam up to 21 naazhi 22 vinaadi; if converted to modern time, say till 02:31 pm and then saadya karaNamis ascendant till next day).

For this to understand, we have to know the names of the 27 yogas and the names of the 11 karaNas
I give below the names:
Yogam: visshkambha, preeti, aayusshmaan, sowbhaagya, sshobhana, atikaNDa, sukarma, tRti, shoola, kaNDa, vRtti, dRva, vyaapaga, harshaNa, vajra, siddhi, vyaadiipaada, variiyaana, pariiga, shiva, citta, saadya, shubha, shubra, braahmya, mahendra, vaidRtii
KaraNam: bava, baalava, kaulava, taitila, garaja, vaNija, bhadraa, shakuni, catusshpaada, naagava, kimstughna
[How to pronounce: ‘ssh’ as in vissham (poison), ‘N’ as in lavaNam (salt), ‘D’ as in divyam (divine), ‘R’ as in Rsshi (sage), ‘sh’ as in eesha (lord), ‘c’ as in caturti (fourth tithi), ‘d’ as in danam (wealth), ‘gh’ as in ghanam (thick)]

For converting our Hindu time in naazhi and vinaadi to modern time in hours and minutes, follow the formula:
60 naazhi = 1 day = 24 hour = 1440 minutes
60 vinaadi = 1 naazhi = 24 minutes
From this we derive, 1 naazhi is 24 minutes and 10 vinaadi is 4 minutes.

So, on 15 May 2025, tRtiiyai is up to 52 naazhi and 40 vinaadi; it is converted into 1248 minutes plus 16 minutres = 1264 minutes = 21 hours and 4 minutes; if Sun is assumed to rise at 6 am on 15 May 2025, tRtiiyai tithi duration is up to the whole of 15th and further up to 3 hours and 4 minutes on 16th early morning; thereafter, caturti tithi starts.
Same principle for calculation of duration for nakshatra, yogam and karaNam.

While vaaram, nakshatram, tithi and yogam occur in strict serial order, it is not so in karaNam. So, we have to be careful, as what panchangam says about that day’s karaNam and what follows after that. This is because first seven karaNams repeat often, while the last four karaNams occur occasionally.
I do not know the reason, but it is so.

As regards, sshaNNavati tarpaNam dates, the vaakya panchaangam (paambu panchangam) discloses on the respective days, the manvaadi days, tisresshTaka, asshTaka and anvasshtaka days, kRtu yugaadi, tretaa yugaadi, dvapara yugaadi and kali yugaadi days.

As regards vyaadiipaadam and vaidRtii, these are two names out of 27 yogams. So, we find the tarpaNam dates for vyaadiipaadam and vaidRtii fall on those days when these yogams are ascendant.
Why tarpaNam are done for only for these two yoga days , I do not know.
Also, if the yogam spreads on two days, which usually is, on which day should it be done? I do not have clear answer.
Some one having more knowledge on this area may explain.
 
16-07-2025 அன்று தான் தக்ஷினாயண புண்ய கால தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸூர்ய சந்திர கிரஹணம் தவிர வேறு எந்த தர்ப்பனமும் மதியம் 2 மணிக்கு மேல் செய்ய கூடாது. தக்ஷிணாயன புண்ய காலம் 24 மணி நேரம் முன்னதாக வந்து விடுகிறது.அதாவது கடக ராசியில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் நேரம் மாலை 5-30 மணிக்கு என்று போட்டு இருக்கிறார்கள். பாம்பு பஞ்சாக்ழ்த்தில் இரவு 1 மணிக்கு என்று போட்
டு இருக்கிறார்கள். இந்த நேரத்திற்கு தக்ஷிணாயன புண்ய காலம் 24 மணி நேரம் முனதாக ஆரம்பம்.

இதே மாதிரி உத்த்ராயண புண்ய காலத்திற்கு இந்த மாத்ரி நேரத்திற்கு 24 மணி நேரம் பின்னதாக புண்ய காலம் வருகிறது. மற்ற சில மாதங்களுக்கு 6 மணி 24 நிமிடம் ஒவ்வொரு ராசியிலும் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலத்திற்கு 6மணி 24 நிமிடம் முன்னும் பின்னும் புண்யகாலம் வருகிறது. மற்ற சில மாதங்ககளுக்கு 10 மணி மற்றும் 12 மணி முன்னும் பின்னும் வருகிறது.

நன்னிலம் ப்ரும்ம ஸ்ரீ ராஜ கோபால கனபாடிகள் அவரது வைதீக ஸ்ரீ புத்த்கங்களிலும், பித்ரு தர்ப்பணம் என்ற புத்தகத்திலும் விரிவாக இதை பற்றி எழுதி இருக்கிறார்கள்.
ஆதலால் 16-07-2025 காலை 8-30 முதல் பகல் 1-30 மணிக்குள் தான் தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். இதிலேயே பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
 
shannavathy tharpana vivaram, yokam karaNam manvaathi etc detail are here. in a new post in the year 2021 i have written here in this forum which now i have copied and pasted for you people.
 
நாம் ஒருவருக்கு சாப்பாடு போடுகிறோம் அல்லது குடிக்க ஜலம் தருகின்றோம் என்றால் நாம் அதை இரண்டு காலங்களில் செய்யலாம்.



நமக்கு ஸெளகரிய மான நாளில் செய்யலாம்.



சாப்பிடும் நபருக்கு எப்போது பசி தாகம் எடுக்கிறதோ அந்த சமயத்தில் அவருக்கு சாப்பாடு போட்டு ஜலம் குடிக்க தரலாம்.



நமது சாஸ்திரம் நமது பித்ருக்களுக்கு எப்போது பசி தாகம் எடுக்கிறது என்பதை நமக்கு காண்பிக்கிறது.



ஒரு வருஷத்தில் இந்த 96 நாட்கள்= ஷன்னவதி காலத்தில் பித்ருக்களுக்கு பசி தாகம் அதிகம் உள்ளது



இந்த நாட்களில் பித்ருக்களுக்கு சாப்பாடு,ஜலம் கொடுங்கள் என நமது சாஸ்திரத்தில் உள்ளது.



அவையாவன:- அமாவாசை 12; மாத பிறப்பு 12; அஷ்டகா 12; யுகாதி4; மன்வாதி 14; மஹாளயம் 16; வைத்ருதி 13; வ்யதீபாதம் 13. மொத்தம் 96. முசிறி அண்ணா இது பற்றி விரிவாக கூறியுள்ளதை படித்து தெரிந்து கொள்வோம்.



*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் முறையை மேலும் தொடர்கிறார்.*





*இதில் முதலில் தர்ஸ ஸ்ராத்தமான அம்மாவாசை தான் பித்ரு காரியங்கள் ஆரம்பிக்கின்றது. எல்லா சாஸ்திர கிரந்தங்களிலும் முதலில் இதை தான் ஆரம்பிக்கின்றன.*



*ஏனென்றால் அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய இந்த தர்ப்பணம் தான் அடிப்படையானது. பிரகிருதி. வருடத்தில் 12 வரும். அதிக மாசம் வந்தால் பதின்மூன்றாவது ஆக ஒன்று கூட வரும்.*



அதையும் சேர்த்து செய்ய வேண்டிய தான் தர்ப்பணம் செய்பவர்களுக்கு இதில் எந்த சந்தேகமும் வராது.



சிராத்தம் என்று வரும் பொழுது, வருடாந்திர ஸ்ராத்தம் அமாவாசை அன்று வரும் பொழுது, ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால், எதில் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று பார்க்கும் போது, ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால்







#சௌரமானம்_அனுஷ்டிப்பவர்கள், #அதாவது_ஸ்மார்த்தர்கள், #இரண்டாவதாக_வரக்கூடிய_திதியில் #அவர்கள்_சிராத்தத்தை #செய்யவேண்டும்.





இதில் ஒரே கட்டுப்பாடு தான் மாறுதல் கிடையாது. #பஞ்சாங்கத்திலேயே_ஒரே #மாதத்தில்_இரண்டு_திதிகள்_வந்தால், #முதலில்_வரக்கூடியதான_திதிக்கு #சூன்ய_திதி_என்று_போட்டிருப்பார்கள்.



அதாவது சூன்ய திதி என்று போட்டிருந்தால் அதே திதி திரும்பவும் வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம் அந்த மாதத்தில்.



அதுபோல்தான் அமாவாசைக்கும் உள்ள கட்டுப்பாடு. #சாந்திரமான_படி #அனுஷ்டிப்பவர்கள்_அவர்களுக்கு_இந்த #சூன்ய_திதி_என்பதே_கிடையாது,



#ஏனென்றால்_சந்திரனை_அனுசரித்து #பார்க்கும்_பொழுது_மாதத்திற்கு_ஒரு #திதி_என்று_வரிசையாக_வந்து #கொண்டே



#இருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் என்று சாந்திரமான படி வரவே வராது.







அதிக மாசம் என்று எப்போது வருகிறதோ அப்போதுதான் அதிகப்படியாக ஒரு திதி வரும். அப்படி ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால், சாந்திரமான படி அனுஷ்டிப்பவர்கள் இரண்டு முறை சிராத்தம் செய்ய வேண்டும்.



உதாரணத்திற்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன.



அதனால் இந்த மாதத்தை மலமாதம் அல்லது அதிக மாசம் என்று சொல்கிறோம். இந்த அம்மாவாசை சிராத்த திதி ஆக இருந்தால், சாந்திர மானத்தைக் அனுஷ்டிப்பவர்கள், இரண்டு தடவை சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.



முதலில் வரக்கூடியதுதான அமாவாசையிலும் செய்ய வேண்டும் இரண்டாவதாக வரக்கூடிய அமாவாசையிலும் செய்ய வேண்டும்.





இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, ஆகையினாலே ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால், #இரண்டு_திதிகளிலும் #சிராத்தத்தை_செய்யவேண்டும் #சாந்திரமான_படி_அனுஷ்டிப்பவர்கள், #அதிக_மாசம்_வந்தால்.



#சௌரமான_படி_முதலில்_சூன்ய_திதி #என்று_எடுத்துக்கொள்ள_வேண்டும். #இரண்டாவதாக_வரக்கூடிய_திதியில் #சிராத்தம்_செய்ய_வேண்டும்.



ஆனால் இந்த அமாவாசை அன்று இரண்டுமே செய்ய வேண்டியது தான். அதாவது தர்ப்பணத்தை இரண்டு அமாவாசையிலும் செய்துவிடவேண்டும் இப்படித்தான் தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.





அதில் மாறுதலே வராது. அபரான்ன காலத்தில் அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.



அதாவது முதல் நாளும் அமாவாசை திதி என்று போட்டிருக்கிறது மறுநாளும் போட்டிருக்கிறது என்கின்ற பட்சத்தில், முதல் நாளே தர்ப்பணம் செய்வது என்பது கூடாது.



அப்படி செய்தால் ஆயுள் போய்விடும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது.



#அதற்கு_பூதவித்தா_என்று_பெயர். தர்ம சாஸ்திரத்தில் முதல் நாளும் மறுநாள் அமாவாசை இருக்கின்றது, அபரான்னத்தில் முதல் நாள் அமாவாசை இல்லை,



மறுநாள் அபரான்னத்தில் இருக்கிறது என்றால், இதையெல்லாம் பார்த்து தான் நமக்கு நிர்ணயம் செய்து கொடுத்து இருப்பார்கள் பஞ்சாங்கத்தில். அதைப் பார்த்து செய்ய வேண்டும்.



#அபரான்ன_காலத்தில்_அமாவாஸ்ய #இல்லாதபட்சத்தில்_செய்யும்_பொழுது #அவர்களுக்கு_ஆயுசு_போய்விடும்



#நோய்_வந்து_இறக்க_நேரிடும்_என்று #தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.



*வியாதிகள் வந்து இறக்க நேரிடும் என்பதினால் தர்ஸ சிராத்தம் அந்தக் காலத்தில் செய்ய வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக பார்த்து செய்ய வேண்டும்.*



*இந்த அம்மாவாசை யாரை உத்தேசித்து செய்ய வேண்டும். வர்க்த்துவைய பிதுர்க்களையும் உத்தேசித்து செய்ய வேண்டும். இந்த ஷண்ணவதி 96 இல் ஒரு சிலது மாறுபடுகிறது. அது என்ன என்பதை பின்னால் பார்ப்போம்.*



*அதேபோல் இந்த அமாவாசை அன்று புண்ணிய காலங்கள் அதிகப்படியாக சேரும். இதில் ஒரு புண்ணிய காலம் இரண்டு புண்ணிய காலம் மூன்று புண்ணிய காலம் நான்கு புண்ணிய காலங்கள் கூட சேரும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*



அப்படி வருகின்ற போது எவ்வளவு தர்ப்பணம் செய்யவேண்டும் எதை முதலில் செய்ய வேண்டும்? என்பதை விரிவாக நாம் பார்ப்போம். இந்த அமாவாசை தர்ப்பணத்திற்கு நித்தியம் என்று பெயர்.



#ஷண்ணவதியில்_நித்தியம்_மற்றும் #நைமித்திகம்_என்று பிரித்திருக்கிறார்கள் தர்ம சாஸ்திரத்தில். இந்த 96 மே நித்தியம் தான் அதில் மாறுதல் இல்லை. கட்டாயம் செய்து ஆகவேண்டும் என்றிருந்தால் அது நித்தியம் என்று பெயர்.



இதற்கு நியத நித்தியம் அநீத நித்தியம் என்று தர்ம சாஸ்திரத்தில் உட்பிரிவுகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் நாம் ஓரளவுக்குத்தான் மனதிலேயே வைத்துக் கொள்ள முடியும்.



வாத்தியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் பஞ்சாங்கத்தில் என்ன புண்ணியகாலம் என்று காண்பித்து இருப்பார்கள்.



வருட ஆரம்பத்தில் பஞ்சாங்கத்தைப் பார்த்து இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் என்று வருகிறது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். விட்டுப் போகாமல் செய்து கொண்டு வரவேண்டும்





*அம்மாவாசை அன்று நாம் செய்யக்கூடிய அந்த தர்ஸ சிராத்தத்தில், வர்க்கத்துவய பிதுருக்களையும் உத்தேசித்து நாம் செய்கிறோம். அதாவது முதலில் பிதுர் வர்க்கம்.*



*பிதுர்பிதாமஹ பிரபிதாமஹர்கள் தாயார் இருந்தால் அவர்களுக்கு முன்னால் உள்ள மூன்று தலைமுறை.



மாதா மஹ வர்க்கம் தாயாரின் உடைய தகப்பனார் முதற்கொண்டு மூன்று தலைமுறை. தாயாருடைய தாயார் முதற்கொண்டு மூன்று தலைமுறை. இதற்குத்தான் வர்க்கத்துவய பிதுருக்கள் என்று பெயர்.*





*அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய நியமங்கள் இதுதான். இதுதான் ஆரம்பம் இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களுக்கும். இது 12 அல்லது 13 வரும்.



இரண்டாவது யுகாதி என்று சொல்லக்கூடிய தான புண்ணியகாலம். இதை இரண்டாவதாக தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது. காலம் முன்பின் மாறிவரும் காலங்கள் ஒன்றுக்கும் வேறுபடும்.



வரிசை என்று வரும் பொழுது இப்படி அதை நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். வருடத்தில் நான்கு யுகாதிகள் வரும் அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
 
முசிறி அண்ணா ஷண்ணவதி தர்ப்பணம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.*





*ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை வரிசைப் படுத்திப் பார்க்கும் பொழுது யுகாதி பற்றிய புண்ணிய காலத்தை பார்க்கிறோம். அதற்கு நடுவில் சில சந்தேகங்களுக்கு பதிலைப் பார்ப்போம்.*





*அதாவது இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒருநாள் ஆரம்பித்து அப்படியே ஒரு வருடம் செய்து முடிப்பது என்கின்ற வழக்கம் உண்டா? என்றால் அப்படி கிடையாது.







ஒரு புண்ணிய காலம் பார்த்து அதை ஆரம்பிப்பதும் ஒரு புண்ணிய காலம் பார்த்து அதை முடிப்பதும் என்றெல்லாம் கிடையாது.*



*சந்தியாவந்தனம் எப்படி செய்கிறோமோ அதே போல்தான் இந்த தர்ப்பணங்கள். அதனால் ஒரு வருடத்திற்கு நான் செய்கிறேன் என்று சங்கல்பித்து கொண்டு செய்வது என்பதெல்லாம் கிடையாது, இது முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.*





*இரண்டாவது, இந்த 96 தர்ப்பணங்களை நாம் குறித்து வைத்துக்கொண்டு அப்பப் பொழுது பார்த்து செய்துகொண்டு வருகிறோம்.



சில காரணங்களினால் நடுவில் செய்ய முடியாமல் போகலாம். அப்பொழுது அதற்கான பரிகாரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.*



*எதனால் அது விட்டுப் போகிறது என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மூன்றுவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.வ*



*தீட்டு நடுவில் வந்தால் அந்த புண்ணிய காலங்கள் விட்டு போகலாம் 10 நாள் தீட்டு ஒருவர் காக்க நேரிடுகிறது என்றால், அதற்கு நடுவில் ஒரு புண்ணிய காலம் வருகிறது அந்த தீட்டு முடிந்து அந்த புண்ணிய காலத்தை செய்ய வேண்டுமா என்றால் வேண்டியதில்லை.*



*தாயார் தகப்பனார் களுக்கு செய்யக்கூடிய ஸ்ராத்தம் நடுவில் வந்தால், தீட்டு போகக்கூடிய அன்று அதை செய்தே ஆக வேண்டும்.



ஆனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு வரும்போது தீட்டுக்கு நடுவில் அவைகள் வந்தால், அந்த தர்ப்பணங்கள் கிடையாது தீட்டுக்கு நடுவில்.



அது விடப்பட்டு போய்விடுமே என்றால் அங்குதான் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.*





#ஒரு_ஜீவனை_உத்தேசித்து_நாம்_தீட்டுக் #காத்துக்_கொண்டிருக்கிறோம். #அதனாலேயே_இந்த_தர்ப்பணம் #செய்ததாக_ஆகிறது_என்று_தர்ம #சாஸ்திரம்_காண்பிக்கிறது.



நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கும் பொழுது என்ன விதமான நியமங்களில் இருக்கிறோமோ அதே நியமங்கள் தான் நாம் தர்ப்பணம் செய்யக்கூடிய தினத்திலும் கடைபிடிக்கிறோம்.*





*அதாவது ஒரு காலம்தான் போஜனம் செய்ய வேண்டும் மற்ற இடங்களுக்குப் போய் சாப்பிடக்கூடாது.



இந்த நியமங்கள் தீட்டு காலத்திலும் உண்டு. தர்ப்பணம் மட்டும்தான் கிடையாதே தவிர மற்ற எல்லா நியமங்களும் ஒன்றாகத்தான் இருக்கும்.



அதனாலே அந்த தீட்டு காலத்தில் வரக்கூடிய அமாவாசையும் மற்ற புண்ணிய காலங்கள் செய்ய வேண்டியதில்லை,



தீட்டு காலம் முடிந்த பிறகும் கூட, அதற்கு #கால_பிரயத்தம் என்று பெயர்.*





*அதுதான் காலம் இப்போது அம்மாவாசை இருக்கிறது என்றால், அப்போது நமக்கு ஒரு தீட்டு வந்துவிட்டது என்றால், அம்மாவாசை போன பிறகு நாம் அதை செய்யக்கூடாது.



அந்தக் காலம் தான் முக்கியம். அந்தக் காலம் விட்டு போனது என்றால் விட்டு போனது தான். இதுபோன்ற காலங்களில் விட்டுப்போனால் தோஷமில்லை.*





*அதேபோல் இரண்டாவது காரணம் ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வியாதிகள் வந்தால். மருத்துவமனையில் போய்ச் சேர்ந்துவிட்டோம் எழுந்திருக்க முடியவில்லை என்ற காரணத்தினால்.



இது போன்ற காரணங்களினால் சில புண்ணிய காலங்கள் வரும் பொழுது நாம் செய்ய முடியவில்லை என்றால் அப்போது என்ன செய்வது அதற்காக சில மந்திரங்களை சொல்லி இருக்கிறார்கள்.*





*ஒவ்வொரு புண்ணிய காலங்களிலும் அந்த தர்ப்பணங்களை செய்ய முடியாவிடில், அதற்குப் பரிகாரமாக சில மந்திரங்களை காண்பித்திருக்கிறார்கள்



அந்த மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒரு மந்திரத்தை காண்பித்து குறிப்பிட்ட எண்ணிக்கையும் சொல்லி யிருக்கிறார்கள்*





*இந்த மந்திரத்தை 12 அல்லது 108 முறை ஜெபம் செய்யவேண்டும் என்று காண்பித்து இருக்கிறார்கள்.



அதை ஜெபிக்கவேண்டும் அன்றைய தினம் சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.



நோயுற்றவன் அதுபோல்தான் இருப்பார் கஞ்சி குடித்துக் கொண்டு. ஆகையினாலே அது விட்டு போனதாக ஆகாது தோஷமில்லை.*





#ஏதோவொரு_பிரயாணத்தின் மூலமாகவோ அல்லது மறதியின் மூலமாகவோ விடுபட்டு போகிறது, என்றால் அதற்கு #தோஷம்_ஜாஸ்தி.



நமக்குத் தெரிந்தே அது விட்டுப் போகிறது என்றால் #அதற்கு_பரிகாரம் #சமுத்திர_ஸ்நானம்.



காயத்ரி மந்திரம் சொல்லி, விட்டு போனதற்கான மந்திரங்களையும் சொல்லி, சமுத்திர ஸ்நானம் மூலமாக அந்த பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது.





*நமக்கு உடனே என்ன தோன்றும் இவ்வளவு பொறுப்புகள் இருக்கும் போது இதை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று, மன்வாதி புண்ணிய காலம் வருகிறது



உத்தியோகம் காரணமாக நாம் எங்கோ இருக்கிறோம் நமக்கு தெரியவில்லை, எடுத்துக்கொண்டு அதை ஏன் விட்டு விடுவானே என்று செய்யாமலேயே இருந்து விடுகிறோம்.



#செய்யாமல் #இருந்தால்_இன்னும்_பாவங்கள் #ஜாஸ்தி.





*ஆகையினாலே புத்திபூர்வமாக அதை விடக் கூடாது. அதற்கு மந்திரம் இருக்கிறது.



வாத்தியாரை வைத்துக்கொண்டு அந்த மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும்.



ஒவ்வொரு புண்ணிய காலமும் விட்டு போனால் என்ன விதமான ரிங் மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இந்த 96 தர்ப்பணங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.*





எந்தெந்த காலங்களில் நமக்கு தர்ப்பணங்கள் விட்டு போய்விட்டதோ அதற்கான ரிங் மந்திரங்கள் என்ன, அந்த மந்திரங்களுக்கு ஆன அர்த்தங்கள் என்ன, என்பதை தனியாக நாம் கடைசியில் பார்க்கலாம்.





இப்பொழுது யுகாதி புண்ணிய காலம் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். இவை விட்டுப் போகாமல் நாம் செய்ய வேண்டும் என்பதை வைத்துக் கொள்ள வேண்டும்.



#எந்த_ஒரு_புண்ணிய #காலத்திற்கும்_ஒரு_நியமம் #வைத்துக்கொள்ள_வேண்டும்.



#தர்ப்பணம்_நாம்_செய்த_பிறகு #இன்னொருவர்_வீட்டிலே_போய் #போஜனம்_செய்யக்கூடாது_தர்ப்பணம்



#தினமன்று_நாம்_வெளியில்_போக #வேண்டிய_நிலைமை_ஏற்படுமேயானால்_நாம்_கையிலே_ஆகாரம்_எடுத்துக்



#கொண்டு_போய்விட_வேண்டும். #அல்லது_போகின்ற_இடத்திலே_நாமே #ஆகாரம்_செய்து_சாப்பிட_வேண்டும்.





முக்கியமாக இன்னொருவர் வீட்டில் இன்னொருவர் சமைத்து நாம் சாப்பிடக்கூடாது என்பது வைத்துக்கொள்ளவேண்டும்.



அதே நாளில்தான் கூடுமானவரையில் புண்ணிய காலங்களில் நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கின்ற நியமங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.





*இந்த யுகாதிக்கும் மாத பிறப்பிற்கும் சம்பந்தம் உள்ளது. அவைகள் தனியாக இருக்கின்றன என்று நினைக்காமல் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.



இவை இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.









முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்



இதிலே யுகாதி புண்ணிய காலம் பற்றி விரிவாகப் பார்த்தோம். மாச பிறப்பிற்கும் யுகாதிக்கும் சம்பந்தம் உண்டு.





நாம் ஒரு வருடத்தில் செய்ய வேண்டிய தர்ப்பணங்கள் என்று பார்த்தால் அமாவாஸ்யா யுகாதி மன்வாதி சங்கரமணம் மஹாளயம், இப்படி பலவிதமான தர்ப்பணங்களை பண்ணுகிறோம்.





இவைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை என்று நமக்கு தோன்றும். ஆனால் அப்படியில்லை.



ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சில பேர் அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு மட்டும் நான்





செய்து கொண்டு வருகிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால் மாதப்பிறப்பு செய்கின்றவர்கள் யுகாதி கட்டாயம் செய்ய வேண்டும்.





இவை இரண்டிற்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன உதாரணத்திற்கு, வருஷத்தில் 4 யுகாதி புண்ணிய காலங்கள் வருகின்றன. அதை யுகாதி சிராத்தம் என்று நாம் செய்கிறோம்.



அம்மாவாசை அன்று நாம் செய்யக்கூடியது தர்ஸ ஸ்ராத்தம்என்று பெயர். யுகாதி புண்ணிய காலங்களில் யுகாதி சிராத்தம் என்று பெயர்.





அதேபோல் மாதப்பிறப்பன்று செய்யவதற்கு சங்கரமணம் என்று பெயர். அதற்கு தனிப்பட்ட ஒரு பெயரும் சொல்கிறோம் அது என்ன என்பதை பின்னாடி விரிவாக பார்ப்போம்.





மாச பிறப்பு பற்றி தர்ம சாஸ்திரத்தில், சூரிய சங்கரமணம் அதாவது சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்வது.





அன்றைய தினம் இந்த சங்கரமணம் ஸ்ராத்தம் நாம் கட்டாயம் செய்ய வேண்டும். அதைத்தான் நாம் தர்ப்பணம் ஆக செய்து கொண்டு வருகிறோம்.



#இந்த_சங்கரமணம்_வருடத்தில் 12 தான் வரும் அமாவாசை கூட அதிக மாசமாக இருந்தால் ஒன்று கூட வரும். 13 அமாவாசைகள் வரலாம்





யுகாதி 4 தான் வரும். மாதப்பிறப்பு ஏன் இந்த அளவுக்கு புண்ணியகாலம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், யுகாதி என்பது ஒரு யுகத்தின் ஆரம்ப காலம்.





மாத பிறப்பு என்பது யுகங்கள் முடிவு காலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



நடுவில் இடைவெளி இருக்கின்றது அதற்கு சந்தி என்று பெயர். சூரிய சங்கரமணம் அதாவது சிம்ம சங்கரமணம், சூரியன் சிம்ம ராசிக்குள் பிரவேசிப்பதற்கு பெயர்.



அதாவது ஆவணி மாதப்பிறப்பு, இது கிருத யுகத்தின் முடிவு காலம்.





விருச்சிக சங்கராந்தி. கார்த்திகை மாதப் பிறப்பு தான், திரேதா யுகத்தின் உடைய முடிவு தினம்.





விருஷப சங்கராந்தி அதாவது வைகாசி மாசம். வைகாசி மாதப்பிறப்பு தான் துவாபர யுகத்தின் முடிவு தினம்.





கும்ப சங்கராந்தி அதாவது மாசி மாதத்தின் பிறப்பு தான், கலியுகத்தின் உடைய முடிவு காலம்.



இந்த யுகத்தின் உடைய ஆரம்ப காலம் யுகாதி ஆகவும், யுகத்தின் முடிவு காலம் மாதப் பிறப்பாகவும், அக்ஷய மான புண்ணியத்தை நமக்கு கொடுக்கக் கூடியது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.



வருடாவருடம் இந்த யுகங்கள் எல்லாம் முடிந்து ஆரம்பமாகின்றது என்றால், இப்போது நடக்கின்றது கலியுகம் இந்த கலியுகம் ஒரு காலத்தில் முடியப் போகின்றது,





அது எவ்வாறு இருக்கும் என்றால் கும்ப சங்கராந்தி, மாசி மாதப் பிறப்பில் தான் இந்தக் கலியுகம் முடியப்போகிறது.





தினம் அதுதான் வருடங்கள் மாறும். அதற்குத்தான் மகா பிரளயம் என்று பெயர்.





பிரளயங்களை இரண்டு விதமாக உபநிஷத் காண்பிக்கின்றது. மகாப் பிரளயம் அவாந்தர பிரளயம் என்று இந்த இரண்டு விதம்.



#ஒரு_யுகம்_முடிந்து_வரக்கூடியது





#மகா_பிரளயம். அப்பொழுது என்ன ஆகும் என்றால் இந்த உலகத்தில் நாம் பார்க்கக்கூடியதான எல்லா வஸ்துக்களும் ஈஸ்வரன் இடத்திலேயே லயத்தை அடைந்து விடும். #அப்புறம்





#எதுவுமே_இருக்காது_அம்_மையமாக #இருக்கும்_அதாவது_தண்ணீர்_தீர்த்தம் #சூழ்ந்து_இருக்கும்_இதற்கு_மகாப் #பிரளயம்_என்று_பெயர்.





#அவாந்தர_பிரளயம்_என்றால்_நாம் #தினமும்_இரவில்_தூங்கி_காலையில் #எழுந்து_இருக்கிறோம்





_நாம் #தூங்கியதில்_இருந்து_எழுந்து #கொள்ளும்_வரை_உள்ள_காலம்_தான் #அவாந்தர_பிரளய_காலம்_என்று_பெயர்.





*நாம் அசந்து தூங்கும் பொழுது எந்த வஸ்துக்களுமே நமக்குத் தெரியாது. இருந்தது என்றால் தெரிய வேண்டுமே ஏன் தெரியவில்லை என்றால், அதுவும் ஒரு பிரளயம் ஆக சொல்லப்பட்டிருக்கிறது





எப்படி மகா பிரளயம் காலத்திலே அனைத்து வஸ்துக்களும் ஈஸ்வரன் இடத்திலேயே லயத்தை அடைகின்றனவோ,





#அதேபோல்_சுஷுப்தி_நிலையிலே, #நாம்_பார்க்கக்_கூடிய_அனைத்து #வஸ்துக்களும்_ஈஸ்வரன்_இடத்திலேயே #லயத்தை_அடைகின்றன.





திரும்பவும் மறுநாள் காலையிலே புதியதாக உற்பத்தியாகின்றன, பிரளய காலத்திலே, சுக்ஷூக்தி நிலையில்தான் நாம் ஈஸ்வரனை அடைகிறோம் என்று உபநிஷத் காண்பிக்கிறது.





நாம் இந்த சுக்ஷூக்தி நிலையில்தான் ரொம்ப சுகமாக இருக்கிறோம், நாம் அனுபவிக்கக்கூடிய வஸ்துக்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்றால் ஈஸ்வரன் இடத்திலேயே லயத்தை அடைந்து விட்டன.





திரும்பவும் காலையில் நாம் எழுந்து கொள்கிறோம், படுத்துக் கொள்ளும் பொழுது நாம் நாமாக படுத்திக் கொள்கிறோம்.





#காலையில்_நாம்_நாமாக_எழுந்து #கொள்ள_வேண்டுமென்றால் #ஈஸ்வரனுடைய_அனுகிரகம்_வேண்டும். #சுக_கர்ம_பலன்_வேண்டும்.





#நம்முடைய_கர்மா_தான்_நம்மளை #காலையில்_எழுப்புகின்றது. அதனால் தான் இரவு படுத்துக் கொள்ளும் போது காலையில் நான் நானாக எழுந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு படுத்துக் கொள்ள வேண்டும்.





இல்லையென்றால் எழுந்த பிறகு நாம் நாமாக இருக்க மாட்டோம். சுப கர்மபலன் இருந்தால் தான் நாம் நாமாக இருக்க முடியும்.





அதற்கு தான் பிரார்த்தனை செய்கிறோம். இதற்கு அவாந்தர பிரளயம் என்று பெயர். அப்படி தினமுமே ஒரு பிரளயம் ஆக சொல்லப்பட்டு இருக்கிறது.





அதனால்தான் சூரியோதயம் எல்லாம் தினமும் புதியதாக உதிக்கின்றது. நாம் பார்க்கக்கூடிய வஸ்துக்கள் எல்லாம் புதியதாக தெரிகிறது. இதை உபநிஷத் காண்பிக்கின்றது.





கலியுகம் முடிவு என்பது மாசிமாச பிறப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதினாலே, சங்கரமண ஸ்ராத்தம் என்பதும் மிகவும் முக்கியம்.





மாச பிறப்பில் நாம் செய்ய வேண்டிய தர்ப்பணம். ஆகையினாலே யுகாதியும் செய்யவேண்டும் மாசப் பிறப்பும் செய்ய வேண்டும்.





யுகாதி புண்ணியகாலம் செய்து மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் ஒன்றை செய்து ஒன்றை செய்யாததாக ஆகும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்க்கலாம்.
 
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து இருக்கக்கூடிய தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி விரிவாக மேலும் பார்த்துக்கொண்டு வருகிறோம்.*





*அதில் தற்போது பார்த்துக் கொண்டு வரக்கூடிய புண்ணியகாலம் மன்வாதி. இவை வருடத்திலே 14 புண்ணிய காலங்கள் வரும்.*



*இந்த மன்வாதி விஷயமாக புராணங்கள் நமக்கு நிறைய விஷயங்களை காண்பிக்கிறது. மத்ஸ்ய புராணத்திலே முக்கியமாக இந்த மனுக்கள் பற்றிய தகவல்களை நமக்கு நிறைய தெரிவிக்கிறது.*





#இவர்களைப்_பற்றி_சொல்லும்_போது #இவர்கள்_14_பேர்கள்_பிரம்மாவின் #புத்திரர்களாக_ஆவிர்பவித்தவர்கள்.



*அவர்கள்தான் கால ரூபமாக இருந்து கொண்டு, இந்த உலகத்தில் வேதமும், நம்முடைய தர்மங்களும், இருப்பதற்கும், அதை ஆதாரமாகக் கொண்டு ஜனங்கள் வாழ்வதற்கும், முக்கியமாக இருப்பவர்கள் இந்த பதினான்கு மனுக்கள்.*







*நமக்கு மேலே ஆறு உலகங்கள் இருக்கின்றன நமக்கு கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன நாம் இருக்கக்கூடிய இந்த உலகத்தையும் சேர்த்து சதுர்தச புவனம் என்று சொல்கிறோம்.*



*இந்தப் பதினான்கு புவனங்களையும் நேர்மையான முறையில் நடத்துபவர்கள் இந்த மனுக்கள் தான்.





புராணங்களில் இவர்களைப் பற்றிய தகவல்கள் நிறைய காண்பிக்கப்படுகின்றன.*



*இப்பொழுது நடக்கக்கூடிய மனுவினுடைய காலமானது வைவஸ்வத மனு என்று பெயர்.





சங்கல்பத்திலேயே சொல்லுவோம், ஶ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதி தமே என்று சங்கல்பத்தில் சொல்கிறோம்.*





*இப்போது நடக்கக்கூடிய காலத்திற்கு அதிபதி யார் என்றால் இந்த வைவஸ்வத மனு தான்.





இவருடைய ஆட்சியில் தான் நாம் இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறோம். இப்படி பதினான்கு மனுக்கள் இருக்கின்றனர்.*





*இவர்கள்தான் இந்த உலகத்தை நடத்துவதற்கும், நடத்துவதற்கு அடிப்படையாக உள்ள பொருளாதாரத்தையும் குடும்ப சட்ட திட்டங்களையும், அனைத்தையும் இயற்றி, நம்மை வழி நடத்துபவர்கள் இந்த மனுக்கள்.*





*எந்த இராஜாவின் உடைய சரித்திரத்தையும் நாம் எடுத்துக் கொண்டால், ஒரு மனுவில் இருந்து தான் ஆரம்பம் ஆகும்.





புராணங்களில் இராஜாக்களின் உடைய வம்சங்கள் பார்த்தோமேயானால், ஒரு மனுவில் இருந்து ஆரம்பமாகும் அந்த இராஜாவினுடைய வம்சம்.*





*இவர்கள்தான் ஆதாரமாக உள்ளவர்கள். நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் அடிப்படையாக உள்ள கிரந்தம் மனு ஸ்மிருதி.





அனைத்து மகரிஷிகளும் ஸ்மிருதிகள் செய்திருக்கிறார்கள். அதில் நாம் முக்கியமாக எடுத்துக்கொண்டது 18 ஸ்மிருதிகள்.





இவர்கள் குள்ளே அடிப்படையாகவும் மிகவும் முக்கியமாக இருப்பது இந்த மனுஸ்மிருதி தான்.*



*ஏன் அந்த அளவுக்கு உயர்வாக சொல்கிறோம் என்றால், இந்த நாட்களில் இருக்கக் கூடிய சிக்கல்கள் அனைத்திற்கும், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய கஷ்டங்களுக்கும், பரிகாரம் மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டது.*





*மேலும் இந்த தேசத்தை நடத்துவதற்கு இராஜ தர்மம் மிகவும் முக்கியம். இந்த இராஜ தர்மங்களை மிகவும் விரிவாக காண்பித்து,





சட்டங்களை நமக்கு காண்பிப்பது இந்த மனு ஸ்மிருதி தான். இந்த நாட்களில் நமக்கு சட்டங்கள் என்று இயற்றி வைத்துக் கொள்கிறோம்.





அதன்படி நாம் நடந்து கொள்கிறோம். இப்போது உள்ள இந்த சட்டங்களுக்கு ஒரு குறிப்புகள் பார்க்க வேண்டுமானால் மனு ஸ்மிருதியில் இருந்து நாம் பார்த்துக் கொள்ள முடியும்.*





*மேலும் மனு ஸ்மிருதிக்கு என்ன உயர்வு என்றால், எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் அதை கடைபிடிக்கக் கூடிய சூழ்நிலையை மனுஸ்மிருதி தான் காண்பிக்கிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது*



*ஆனால் அதை நன்றாக உள்வாங்கி கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும் மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்ளக் கூடாது.





அதை சரியாக புரிந்து கொள்ளாததினால் தான் இன்றைய காலத்திற்கு மனு சொல்வதெல்லாம் முடியாது பொருந்தாது என்று நாம் சொல்கிறோம்.*





*ஆனால் அப்படி இல்லை. அந்தந்த காலத்திற்கு தகுந்தாற்போல் காண்பிப்பது மனுஸ்மிருதி.





ஆகையினால்தான் அதில் உயர்வு காண்பிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால் ஒரு ஸ்ராத்தம் செய்வதற்கு,





இதை எந்தெந்த முறையில் நாம் செய்யவேண்டும் என்று சொல்லும் பொழுது, 12 முறையாக மனுஸ்மிருதி காண்பிக்கின்றது.*



*எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் நம்முடைய பிதுர்களின் ஸ்ராத்தங்களை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய முறையையும் காண்பிக்கின்றது மனுஸ்மிருதி.*





*நாம் என்ன செய்கிறோம் என்றால் ஒரே ஒரு முறையை பார்த்து மனுஸ்மிருதி சொல்கின்ற படி நாம் செய்ய முடியாது வாழமுடியாது என்று சொல்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல.*



*எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் நம்முடைய வேதத்தை காப்பாற்றியாக வேண்டும்.





நம்முடைய தர்மங்களை நாம் செய்தாக வேண்டும். அந்த அளவுக்கு வலியுறுத்தி காண்பிக்கின்றது இந்த மனு ஸ்மிருதி ஆன கிரந்தம்.*





*இந்த மனுக்கள் தான் இந்த மனுஸ்மிருதி கிரந்தத்தை நமக்கு காண்பித்து, அதன்படி வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.





அந்த அளவுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் இந்த மனுக்கள் இடத்தில். இந்த மன்வாதி புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடிய





தர்ப்பணம் நம்முடைய பிதுருக்களை உத்தேசித்து இருந்தாலும்கூட, இந்த மனுக்களுக்கு நன்றி செலுத்துவதாக அமைகிறது இந்த புண்ணியகாலம்.*





*குறிப்பிட்ட ஒரு காலம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த மன்வாதி புண்ய காலம் செய்வதற்கு, ஆஶ்வயுஜ நவமியில் சுவாயம்பவ மனு என்று பார்க்கிறோம்.





அன்றைக்கு தான் அந்த மனிதனுடைய ஆட்சிகாலம் முடிகின்றது. அவருக்கு நன்றி செலுத்துவதாக தான் இந்த புண்ணிய காலத்தை நாம் செய்கிறோம்*



*மனுக்கள் எனக்காக செய் என்று அவர்கள் சொல்லவில்லை, நீ செய்ய வேண்டிய கடமையை செய்தால் அதுதான் நீ எங்களுக்கு





நன்றி செலுத்துவதாக அமையும். ஆகையினாலே தான் ரிஷிகளுக்கு துல்லியமாக மனுக்களை நாம் சொல்கிறோம்.*





*மகரிஷிகள் உடைய எண்ணமும் இதுதான். மகரிஷிகள் என்னுடைய படத்தை நீ வைத்துக்கொள் என்னுடைய விக்கிரகத்தை





வைத்துக் கொண்டு, எனக்கு பூஜை அபிஷேகங்கள் செய்து என்று, மகரிஷிகள் சொல்லவில்லை.





இந்த இந்த காலங்களில் இந்த இந்த தேவதைகளை நீ பூஜை செய்வதினால்,





இந்த இந்த கர்மாக்களையும் செய்வதினால் இந்த நன்றிக்கடன் நீ முடிக்கிறாய் என்று தான் காண்பிக்கிறார்கள் மகரிஷிகள்.*





*ஒரு மகரிஷியின் கோத்திரம் பெயர் சொல்கிறோம் என்றால், அந்த ரிஷி படி நாம் வாழ்க்கையை நடத்த வேண்டும் செய்ய வேண்டும். அதுதான் நாம் செய்யக்கூடிய பூஜை அவர்களுக்கு.





அதேபோல்தான் இந்த மன்வாதி புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியது ஆன தர்ப்பணம், மனுக்களுக்கு நாம் நன்றி செலுத்துவதாக அமைகிறது.*



*மனுஸ்மிருதி என்கின்ற இந்த கிரந்தத்தினுடைய பெருமையை, சொல்லி முடியாது ஏனென்றால் இன்றைக்கு வரை பிரமாணமாக அது இருக்கின்றது.





இந்நாளில் உலகத்திலுள்ள சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது மனு ஸ்மிருதி தான் என்று பார்க்கிறோம்.*





*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மன்வாதி புண்ணிய காலம். இந்நாளில் இந்த தர்ப்பணத்தை நாம் கட்டாயம் செய்வதினால்,





அந்த மனுக்களுக்கு நாம் நன்றி செலுத்துவது ஆகும். நாம் செய்யக்கூடிய மற்ற காரியங்களும் பூரணமான பலன்களை நமக்கு கொடுக்கும். ஆகையினாலே தான் மன்வாதி புண்ணிய காலம்





நாம் செய்யவில்லை என்றால், பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். வரி செலுத்தாதது மாதிரிதான் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.





அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மன்வாதி புண்ணிய காலங்கள் மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

















முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் முறையை மேலும் தொடர்கிறார்.





நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தான ஒவ்வொரு தர்ப்பணமாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.





அதிலே மாச பிறப்பிற்கும் மற்றும் யுகாதி புண்ணிய காலத்திற்கும் உள்ள சம்பந்தத்தை தெரிந்து கொண்டோம்.





மேலும் சங்கரமண சிராத்தம் என்று மாச பிறப்பு அன்று நாம் செய்யக்கூடிய தான தர்ப்பணத்திற்கு பெயர். பஞ்சாங்கத்தில் நாம் பார்த்தோமேயானால் ஒரு புண்ணிய காலம் போட்டிருக்கும்.





ஷடஶீதி, விஷ்ணுபதி என்று போட்டிருப்பார்கள். அன்றைய தினம் நாம் சங்கல்பத்தில் சொல்லிக் கொள்ளும் பொழுது,, அன்றைய தினத்திலேயே அந்தக் காலத்தையும் அந்த தேவதையும் சேர்த்து குறிப்பதுதான் அந்த புண்ணிய காலம்.





உதாரணத்திற்கு அம்மாவாசை எடுத்துக் கொண்டால்,அன்றைக்கு நாம் செய்யக்கூடிய தர்ப்பணத்திற்கு தர்ஸ சிராத்தம் என்று பெயர்.





அப்பொழுது நாம் தர்ஶ புண்ணிய காலே என்று சொல்லாமல் தர்ஶ சிராத்தே என்று சொல்லி கொள்கிறோம்.





அம்மாவாசை / தர்ஸம் என்பது காலத்தைக்/தேவதையை குறிக்கின்றது பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தம்.





அதை நாம் பிரித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாஸ்யா சிராத்தம் என்று சொல்லாமல் அமாவாஸ்யா தர்ஸ**சிராத்தம் என்று சொல்ல வேண்டும்.





காலத்தையும் தேவதையும் சேர்த்து குறிக்கின்றது



அதேபோல் பௌர்ணமியை பார்த்தால், பௌர்ணமாசியா என்ற ஒரு சப்தம் இருக்கிறது





மற்றும் பூர்ணிமா இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்,





பூர்ணிமா என்றால் அந்த காலத்தை குறிக்கின்றது, பௌர்ணமாசியா என்றால் தேவதையைக் குறிக்கின்றது. அப்படி இதை மாற்றி புரிந்து கொள்ள வேண்டும்.



ஆகையினால்தான், நாம் உபாகர்மா செய்கின்ற பொழுது சிராவன்யாம், பூர்ணிமா யாம் என்று சொல்கிறோம்.





சிராவன்யாம் பௌர்ணமாசியா என்று சொல்லக்கூடாது. பௌர்ணமாசியா என்றால் தேவதையைக் குறிக்கின்றது. பூர்ணிமா என்றால் அந்த காலத்தை குறிக்கும்.





அதனால்தான் சிராவனத்தில் நாம் சங்கல்பம் செய்யும்போது ஸ்ராவன்யாம் பூர்ணிமா யாம் என்று சொல்கிறோம்.





அதேபோல்தான் அமாவாஸ்யா என்பது அந்தக் காலத்தையும் தேவதையும் சேர்த்து குறிக்கின்றது. ஆனால் தர்ஸம் என்பது அன்றைக்கு நாம் செய்யக்கூடிய பித்ரு கர்மாவை குறிக்கின்றது.





அதே போல் தான் இந்த சித்திரை மாதத்தில் இருந்து நாம் பார்த்தோமேயானால், ஒவ்வொரு பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.





அன்றைக்கு நாம் செய்யக்கூடிய 12 மாத தர்ப்பணத்திற்கு சங்கரமணம ஸ்ராத்தம் என்றுதான் பெயர். அதில் மாற்றமே கிடையாது.





அப்படி என்கின்ற பொழுது தனியாக ஒரு பெயர் சொல்லி இருப்பது அந்தக் காலத்தையும் அந்தக் காலத்தில் உள்ள தேவதையும் சேர்த்து குறிக்கின்றது அந்த பெயர், என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.



இப்பொழுது சித்திரை மாதப் பிறப்பு எடுத்துக்கொண்டால், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலம் இருக்கின்றதே அதற்கு விஷூ என்று பெயர்.





மேஷ விஷு என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நாழிகை அது சொல்லப்பட்டிருக்கிறது.





நாம் மாதம் பிறந்ததும் தர்ப்பணம் செய்ய வேண்டியதற்கான காலம் ஒரே காலம் தான்.





மாத்யானிக காலம் தாண்டி தான் தர்ப் பணத்திற்கான காலம். அதில் மாற்றம் ஏதும் இல்லை.





அது முதல் நாள் அல்லது மறுநாள் என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதாவது முதல் மாதத்தின் கடைசி நாட்களில் வருகின்றதா





அல்லது அடுத்த மாதம் முதல் தேதி அன்று தர்ப்பணம் வருகிறதா என்பதை மட்டும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்.





பஞ்சாங்கத்தில் மேஷ ரவி ரிஷப ரவி என்று போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஒரு நாழிகை காண்பித்து இருப்பார்கள்.



ஆனால் இந்த விஷ்ணுபதி ஷடஶீதி என்பதெல்லாம் ஒவ்வொரு மாதத்திற்கும் அந்த நாழிகைகள் மாறுபடுகின்றன.





10 16 18 என்று ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நாழிகை சொல்லப்பட்டிருக்கிறது அது எதற்காக என்றால் ஒரு விரதம் இருக்கின்றது.



அந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு அந்த காலம் நமக்கு வேணும். அதற்காக அந்தப்பெயர் சொல்லப்பட்டிருக்கிறது.





ரிஷப ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது வைகாசி மாதம். விஷ்ணுபதி என்று பெயர்.





மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது, அந்த காலத்திற்கு ஷடசீதி என்று பெயர்.





கடக ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, அதாவது ஆடி மாத பிறப்பு. அதற்கு அயனம் என்று பெயர்.





தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள்.





சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, விஷ்ணுபதி என்ற பெயர்.





கன்னியா ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடிய காலத்திற்கு ஷடசீதி என்ற பெயர்.



ஐப்பசி மாதப் பிறப்பு துலா ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலம், அதற்கு விஷு என்ற பெயர். துலா விஷு என்று பஞ்சாங்கத்தில் பார்க்கலாம்.





விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு விஷ்ணுபதி என்று பெயர்.





மார்கழி மாத பிறப்பிற்கு அதாவது தனுர் ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, ஷடஶீதி என்று பெயர்.





மகர ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, அயனம் என்று பெயர். தைமாத புண்ணிய காலத்திற்கு உத்தராயணம் என்று பெயர்.





கும்ப ராசியில் சூரியன் பிரவேசிக்கப் கூடியதான காலத்திற்கு விஷ்ணுபதி என்ற பெயர்.





மீன ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு ஷடஶீதி என்று பெயர். இந்த வரிசையில் பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள்.





சங்கல்பத்தில் அப்போது நாம் எப்படி சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால், சித்திரை மாதப் புண்ணிய காலத்தில்





மேஷ விஷூ புண்ணிய காலே மேஷ சங்கரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேன கரிஷ்யே என்று சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்.





விஷ்ணுபதி புண்ணிய கால ரிஷப சங்கரமண சிராத்தே என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.





ஆனி மாத பிறப்பாக இருந்தால், ஷடக்ஷிதி புண்ணிய காலே மிதுன சங்கர மன சிராத்தம் என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.





இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் அன்றைக்கு சொல்லப்பட்ட புண்ணிய காலத்தை சொல்லி, சங்கரமன என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும்





12 மாதத்திற்குமே, அந்தக் காலத்தையும் தேவதையும் சேர்த்து குறிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.





#ஷடஶீதி_விஷ்ணுபதி சிராத்தம் என்று சொல்லக்கூடாது.





புண்ணிய காலத்தை தான் அது குறிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பெயர் எதற்காக போட்டு இருக்கிறது என்ற காரணமும் இதுதான்.





எப்படி மாச பிறப்பில் நாம் செய்ய வேண்டியது தர்ப்பணத்தை பார்த்தோம்.





அடுத்ததாக தர்மசாஸ்திரம் காண்பிக்கக் கூடிய புண்ணியகாலம் மன்வாதி, இது வருடத்தில் 14 புண்ணிய காலங்கள் வருகின்றன.





இந்த மன்வாதி புண்ணிய காலம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. நாம் இப்போது செய்து கொண்டிருக்கின்ற புண்ணிய காலங்கள் எல்லாம்





நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் நம் பித்ருக்களை உத்தேசித்து செய்து கொள்ளக் கூடியது.





#ஆனால்_இந்த_மன்வாதி_புண்ணிய #காலம்_என்பது_இந்த_தேசத்திற்காக #நாம்_செய்யவேண்டும்_





என்று #காண்பித்து_இருக்கிறது_தர்ம #சாஸ்திரம்_மிக_மிக_முக்கியமான_ஒரு #புண்ணிய_காலம்_அதைப்பற்றி_அடுத்த #உபன்யாசத்தில்_பார்ப்போம்.





முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தானே தர்ப்பணம் முறைகளை வரிசைப்படுத்தி பார்த்துக்கொண்டு வருகிறோம் அதில் மேலும் தொடர்கிறார்.*





மன்வாதி 14 புண்ணிய காலத்தை இதுவரை நாம் விரிவாக தெரிந்து கொண்டோம். இவர்கள் கால தேவதையாக சொல்லப்பட்டிருக்கிறது.





ஒரு மன்வாதி என்றால் அதாவது மன்வந்திரம் என்பது காலத்தைக் குறிக்கிறது. #ஒரு_மன்வந்திரம்_என்பது #30_கோடியே_85_லட்சத்து_71_ஆயிரத்து #428_வருஷங்களை_கொண்டது.



#காலவிதானம்_போன்ற_கிரந்தங்கள் #இதை_காண்பிக்கின்றன. இத்தனை வருடங்களைக் கொண்டது





ஒரு மன்வந்தரம் என்பது. அதிலே இப்போது நடக்கக்கூடியது வைவஸ்வத மன்வந்தரம் என்பது பெயர்.*





*காலத்தை நமக்கு நிர்ணயம் செய்து கொடுப்பது இந்த மன்வாதி புண்ய காலங்கள் தான். பிரம்மாவின் உடைய காலத்தை நிர்ணயம்





செய்யக் கூடியதும் இந்த மன்வந்திரம் தான். இப்படி மன்வாதி பெருமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன*



*வைதிருதி புண்ணியகாலம் அடுத்ததாக.
 
அதாவது மன்வாதி என்பது ஒரு குறிப்பிட்ட மாதம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு குறிப்பிட்ட திதியில் வரக்கூடியது. மாசம் பக்ஷம் திதி சேர்ந்து வரக்கூடியது சில புண்ணிய காலங்கள்.*





#இந்த_வைதிருதி_என்பது_27 #யோகங்கள்_இருக்கின்றன_நாம் #தினமும்_பஞ்சாங்கம்_பார்த்து_தின #சுத்தி







#தெரிந்துகொள்ளவேண்டும்_என்பது #ஒரு_முக்கியமான_தர்மம். காலையில் நாம் எழுந்ததும் சுப்ரபாதம் சொன்னபிறகு, பஞ்சாங்க படணம் செய்ய வேண்டும்.





#ஐந்து_விஷயங்களை_நாம் #தெரிந்துகொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.





#திதி_வாரம் #நட்சத்திரம்_யோகம்_கரணம். இந்த ஐந்தையும் நாம் தினமும் தெரிந்து கொள்ள வேண்டும்.*





அதிலேயே யோகம் என்று ஒன்று வருகிறது அதில் தான் இந்த வைதிருதி என்கின்ற புண்ணியகாலம்.





ஒவ்வொருநாளும் இன்றைக்கு என்ன யோகம் என்று தெரிந்து கொள்வதினால், ரோக நிவர்த்தி நமக்கு கிடைக்கிறது, என்று பலன் சொல்லப்பட்டு இருக்கிறது.





மொத்த யோகங்கள் 27, அதில் #சுபயோகம்_அசுபயோகம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.





ஒன்பது யோகங்கள் அசுப யோகம் என்று பெயர். விஷ்கம்பம் அதிகண்டம் சூலம் கண்டம் வியாகாதம் வஜ்ரம் வ்யதீபாதம் பரிகம் வைதிரிதி என்ற இந்த ஒன்பது யோகங்களும் அசுப யோகங்களாக அசுரர்களின் நாமக்களாக சொல்லப்பட்டிருக்கிறது.





ஆகையினாலே தான் நாம் சங்கல்பம் செய்யும் போது கூட வாரம் திதி நட்சத்திரம் சொல்லுவோம், யோகம் கரணம் நேரடியாக சொல்வதில்லை. சுப யோக சுப கரண என்று தான் சங்கல்பத்தில் சொல்லுவோம்.





ஏன் அப்படி ஒரு முறையாக அமைத்து இருக்கிறார்கள் என்றால், இந்த #அசுரர்களின்_நாமாக்களை அங்கு சொல்லும்படியாக நேரும் என்ற காரணத்தினால்.





இன்றைய தினம் அதிகண்ட யோகமாக இருந்தால்,சங்கல்பத்தில் நட்சத்திரத்துடன் இதை சேர்த்து சொல்லும்படியாக வரும்.





அதனால் சுப யோகம் சுப கரணம் என்று சொல்வது ஒரு வழக்கமாக இருக்கின்றது.





ஆகையினாலேஇந்த ஒன்பது யோகங்களும் அவர்களுடைய நாமாக்களை குறிப்பதால் நாம் சுப காரியங்களை அன்று செய்யாமல் இருக்க வேண்டும்.





#இந்த_அசுபயோகங்கள்_உள்ள #தினத்திலே_வபனம்_செய்து #கொள்ளக்கூடாது.





சுப கர்மாக்களை தவிர்க்க வேண்டும் அப்படியாக தர்மசாஸ்திர நமக்கு காண்பிக்கிறது.



இதில் கடைசியில் வரக்கூடியது இந்த வைதிருதி என்கின்ற புண்ணியகாலம். இது மாதத்தில் ஒரு தடவை வரும்.





இது அக்ஷயம் ஆன திருப்தியை பித்ருக்களுக்கு கொடுக்கக்கூடியது புண்ணிய காலம். த்ருதி என்று பெயர் ஜோதிடத்தில் வைத்ருதி என்று காண்பித்திருக்கிறார்கள் முக்கியமான யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது





அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய பிதுர் கர்மாக்கள் நிறைய பலன்களைக் கொடுக்கக்கூடியது.





தர்ப்பணம் செய்ய வேண்டும். வைதிருதி சிராத்தம் என்று காண்பித்து இருக்கிறார்கள். அதை நாம் தர்ப்பணம் ஆக செய்ய வேண்டும்.





மேலும் இந்த வைத்ருதி யோகத்திற்கு, என்ன விசேஷம் என்றால், #நிறைய #வருடங்கள்_திதிகள்_தெரியாமல்





#ஒருவர்_சிராத்தம்_செய்ய_வில்லை #என்றால்_வைதிருதி_யோகம்_வருகின்ற #அன்று_சிராத்தம்_செய்ய_வேண்டும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.





அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த வைதிருதி புண்ய காலம்.





ஒருவர் திதி மறந்து விட்டால் இந்த வைதிருதி யோக மும் என்று வருகிறதோ, அந்தத் திதி யை எடுத்துக் கொள்ள வேண்டும், என்று ஹேமாத்ரி என்கின்ற கிரந்தம் காண்பிக்கின்றது.





இந்த யோக நாளில் முகூர்த்தங்களையோ சுபகாரியங்களையோ தவிர்த்து,அன்றைய தினம் இந்த தர்ப்பணத்தையும் பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.





மேலும் கால விதானத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பொழுது, ஒரு முகூர்த்தத்தை ஒட்டி செய்யக்கூடிய நாந்தி ஸ்ராத்தத்திற்க்கோ,





அல்லது #வருடாவருடம்_செய்யக்கூடிய #ஸ்ராத்தத்திற்க்கோ_வஸ்துக்கள் #அதாவது_சாமான்கள்_வாங்க_போகும்





பொழுது, என்றைக்கு அவைகளை வாங்கவேண்டும் என்று சொல்லும்பொழுது,



வைதிருதி என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு சாமான்கள் நாம் வாங்கினோம் ஆனால்,





அது #பித்ருக்களுக்கு_ரொம்ப_திருப்தியை கொடுக்கின்றது என்று காலவிதானம் சொல்கிறது.





ஆகையினாலே சாமான்கள் வஸ்திரங்கள் ஸ்ராத்தத்திற்கு பொருள்களை வைதிருதி என்று வருகிறதோ அன்று வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.



அப்படி பித்ருக்களுக்கு ரொம்ப திருப்தியைக் கொடுக்கக் கூடிய காலமாக இந்த வைதிருதி யோகம் இருக்கிறது.





அன்றைய தினம் அவசியம் நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.





மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.





முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஒரு வருடத்தில் நாம் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை மேலும் தொடர்கிறார்.





அதாவது ஷண்ணவதி தர்ப்பணம் முறையை பார்த்தோம். அதில் நாம் இப்போது பார்க்க கூடியது வ்யதீபாத புண்ணிய காலம் என்ற முக்கியமான ஒன்று.



27 யோகங்களுள் இதுவும் வருகிறது. நாம் தினமுமே திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.



இதனால் நமக்கு ஐந்து விதமான லாபங்கள் கிடைக்கின்றன.





இன்றைக்கு என்ன #திதி_என்று_தெரிந்து கொண்டால் ஐஸ்வர்யம இலாபம் கிடைக்கின்றது.



இன்றைக்கு என்ன #வாரம்_என்று தெரிந்து கொள்வதினால் #ஆயுசு_விருத்தி ஆகின்றது.



இன்றைக்கு என்ன #நட்சத்திரம்_என்று தெரிந்து கொண்டால் பாபம் போகிறது.





இன்றைக்கு என்ன #யோகம்_என்று தெரிந்துகொண்டால் ரோக நிவர்த்தி ஆகிறது.





இன்றைக்கு என்ன #கரணம்_என்று தெரிந்து கொள்வதினால் காரியசித்தி ஏற்படுகிறது.



இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் தினமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.



யோகம் என்பது 27 உள்ளது. இந்த 27க்குள் வ்யதீபாதம் என்பதும் ஒரு யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது தர்ம சாஸ்திரத்தில்.



இந்த வ்யதீபாத யோக நாமம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு நாம் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.



இந்த வ்யதீபாத யோகம் சில நட்சத்திரங்களோடும் சில வாரங்களோடும் சில திதிகளோடும் சேர்ந்து வந்தால், அது பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது.



பொதுவாகவே நாம் யாருக்காவது ஏதாவது ஒரு தானம் செய்யவேண்டும் என்று சங்கல்பித்து கொண்டால், இந்த வ்யதீபாத புண்ணிய







காலத்தில் செய்தால் ரொம்ப புண்ணியத்தை கொடுக்கக் கூடியது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.





#அம்மாவாசை_அன்று_நாம் செய்யக்கூடிய தானமானது, பத்து மடங்கு அதிகமான பலனைக் கொடுக்கக் கூடியது.



அதைவிட அதிகமான பலனை அதாவது #100_மடங்கு கொடுக்கக்கூடியது, மாச பிறப்பு அன்று நாம் செய்யக்கூடியதான தானம்.





#ஆயிரம்_மடங்கு_பலனைக் கொடுக்கக்கூடிய தான தினம், விஷு புண்ணிய காலம். துலா விஷு சைத்திரை விஷு என்று சித்திரை மாதப்பிறப்பு துலா மாச பிறப்பு.



இந்த இரண்டு தினங்களில் நாம் செய்யக்கூடியது ஆன தானங்கள் ஆயிரம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.



#யுகாதி_புண்ணிய_காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், 12000 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.





#தட்சணாயன_உத்தராயண_புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், அதாவது தை மாதப் பிறப்பும் ஆடி மாதப் பிறப்பும் அன்றைய தினத்தில், 12000 X 10 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது



#சந்திர_கிரகணத்தன்று_நாம் செய்யக்கூடிய தான தானம், 12,00,000 லட்சம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.



சூரிய கிரகணத் அன்று நாம் கொடுக்க கூடியதான தானம் #கோடி_மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.



#இந்த_வ்யதீபாதம்_புண்ணிய_காலத்தில் #நாம்_செய்யக்கூடிய_தான_தானம், #அசங்கேயம்_அதாவது_சொல்லி #மாளாது_முடியாது_அளவு_பலனைக் கொடுக்கக் கூடியது.



அந்த அளவுக்கு அதிகமான அகண்ட நிறைய புண்ணியங்களை கொடுக்கக் கூடியது இந்த வ்யதீபாதம்.







ஆகையினாலே அன்றைக்கு செய்யக்கூடிய தானம் மிகவும் உத்தமமான பலனைக் கொடுக்கக் கூடியது.



இந்த மாதிரியான புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியது தானங்கள் ஸ்நானங்கள் ஜபங்கள் எல்லாம் அனைத்து விதமான பாவங்களையும் போக்க வல்லது.





இன்றைய நாட்களில் நமக்குத் தெரியாமல் எவ்வளவு தவறுகள் நடந்து விடுகின்றன, அல்லது நாம் செய்ய வேண்டி வருகிறது.



இப்போது உதாரணத்திற்கு, #தைத்த_துணியை நாம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.



அதாவது தையல் விழுந்த துணியை உடுத்திக் கொண்டு தேவ காரியங்களையும் பிதுர் காரியங்களை செய்யக்கூடாது.



ஆனால் தைத்த துணியை தான் நாம் போட்டுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தையல் விழாத துணியை போட்டுக் கொள்ளவே முடியாது என்கின்ற காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.





அதேபோல, நாம் #தினமும்_வபனம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். ஏதோ ஒரு ரீதியாக அல்லது உத்தியோகத்தை சொல்லி,



முக வபனம் என்று பாதி வபனம் செய்துகொண்டு இருக்க வேண்டிய நிலை, மீசை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை,



#இதையெல்லாம்_ஒரு_குறைபாடாக_நம் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது.





இது எல்லாம் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.



இதை நாம் வேண்டாம் என்று நினைத்தாலும் கூட வைத்துக்கொள்ள வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.





இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்று பார்க்கும்போது இந்த மாதிரியான



வ்யதீபாதம்_புண்ணிய_காலங்களில், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது, அந்த நதிக்கரையில் இருப்பவர்களுக்கு ஏதாவது தானம் கொடுப்பது,

.*



#13

அப்படி செய்வதினால் இந்த மாதிரியான பாபங்கள் எல்லாம் போகிறது. இதற்கெல்லாம் தனியான பரிகாரங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.







நாம் செய்யக்கூடியது ஆன இந்த நாட்களில் தவறுகள் எல்லாம் நடந்து போய் விடுகின்றன, ஆனால் பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் எதுவுமில்லை.



பிராயச்சித்தம் தர்ம சாஸ்திரத்தில் இல்லை என்பதினால் பரவாயில்லை என்று நாம் முடிக்க முடியாது.



#எப்பொழுது_தர்மசாஸ்திரம் #ஒன்றை_செய்யக்கூடாது_என்று #சொல்கிறதோ_கட்டாயம்_அதற்கு #பாவங்கள்_உண்டு.





எதற்கான #பிராயச்சித்தம் நம் தர்ம சாஸ்திரத்தில் #சொல்லப்படவில்லையோ_அவைகளை #கட்டாயம்_நாம்_செய்யக்கூடாது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.



ஆனால் இந்நாட்களில் இந்த மாதிரியான தவறுகள் நடந்து போய் விடுகின்றன.





இதற்கான பிராயச்சித்தமாக இந்த வ்யதீபாதம் புண்ணிய காலங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஒரு உத்தமமான புண்ணிய காலம் இது.





இந்த வ்யதீபாதம் புண்ணிய காலம் விஷயமாக நிறைய தகவல்களை நமக்கு புராணங்கள் காண்பிக்கின்றன.



#முக்கியமாக_வராக_புராணம்_நாரத புராணம் கூறுகிறது இந்த வ்யதீபாத புண்ணிய காலம் என்றால் என்ன? இந்த புண்ணிய காலத்தில் நாம் என்னென்ன எல்லாம் செய்து,



என்னென்ன பலன்களை நாம் அடையலாம் என்பதை இந்த இரண்டு புராணங்களும் விரிவாக காண்பிக்கிறது. அதைப் பற்றிய விவரங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.







முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்பணங்களின் வரிசையை பற்றி மேலும் விவரிக்கிறார்.





அதில் நாம் தற்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான புண்ணியகாலம் வயதீபாதம். முக முக்கியமானதொரு புண்ணியகாலம் தர்மசாஸ்திரம் இதைப் பற்றி சொல்லும்போது ஸ்நானம் தானம் ஜபம் தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.



புராணம் ஒரு சரித்திர மூலமாக இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது. வராக புராணத்தில் இருந்து பார்ப்போம்.





எதிர்பாராத விதமாக நமக்கு ஒரு பெரிய அதிகாரம்/பதவி கிடைக்கிறது, என்றால் அதை நாம் வேண்டாம் என்று சொல்லுவோமா?





அந்தப் பதவி நமக்கு கிடைத்தால் நம் மூலமாக பல குடும்பங்கள் முன்னேறும். நாம் நிறைய பேருக்கு நல்லவைகளை செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு பதவி நமக்கு கிடைத்தால், எப்படி நாம் அதை விடாமல் பயன்படுத்திக் கொள்வோமோ, அதேபோல் இந்த வயதீபாத புண்ணிய காலத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வராக புராணம் காண்பித்து, இந்த வயதீபாத யோகமானது சில நட்சத்திர வார திதிகளோடு சேர்ந்தால் மிகவும் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது.





*மகாபாரதத்தில் இதைப் பற்றி சொல்லும் பொழுது, #அதாவது_வயதீபாத #யோகமானது_ஞாயிற்றுக்கிழமையோடு #சேர்ந்தால்_கோடி_சூரிய_கிரகண #புண்ணிய_காலத்திற்கு_துல்லியமாக #சொல்லப்பட்டிருக்கிறது.





#அதேபோல்_திருவோணம்_அஸ்வினி, #அவிட்டம்_திருவாதிரை_ஆயில்யம், #மிருகசீரிஷம்_இந்த_நட்சத்திரங்களோடுசேர்ந்தால்_மிகவும்_புண்ணிய_காலமாக #சொல்லப்பட்டு_இருக்கிறது.





*திதியில் நாம் எடுத்துக் கொண்டால், அம்மாவாசை யோடு இந்த வயதீபாதம் சேர்ந்தால், அது அர்த்தோதையம் அலப்பிய யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது.*



*இப்படி மகாபாரதம் பல பெருமைகளை இந்த வயதீபாத புண்ணிய காலத்திற்கு காண்பிக்கிறது. வராக புராணமும் அதனுடைய பெருமையை சொல்லி, அதற்கான ஒரு சரித்திரத்தையும் நமக்கு காண்பிக்கிறது.*





*இந்த சரித்திரத்தை சொல்லி, வயதீபாத விரதம் என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விரதம் நாம் எதற்காக செய்து கொள்ள வேண்டும் என்றால், இதை பல பெயர்கள் அனுஷ்டித்து, பல இராஜாக்கள் இந்த விரதத்தை செய்து, நல்ல புத்திரனையும் தீர்க்கமான ஆயுளையும், ஐஸ்வர்யங்களையும், மனநிம்மதியும் அடைந்திருக்கிறார்கள் என்று இந்த புராணம் காண்பிக்கிறது.*





#மேலும்_பஞ்ச_பாண்டவர்கள் #வனவாசத்தில்_வாசம்_செய்யக்கூடிய #காலத்தில்_இந்த_வயதீபாத_விரதத்தை #அனுஷ்டித்ததாக_இந்த_வராக_புராணம் #சொல்கிறது.





*இந்த சரித்திரம் என்ன சொல்கிறது என்றால் முன்னர் ஒரு சமயம், பிரகஸ்பதியினுடைய மனைவியை பார்த்து ஆசைப்பட்டார் சந்திரன். சூரியனும் சந்திரனும் இணைபிரியா நண்பர்கள். இந்த இருவரும்தான் இந்த பூமிக்கு சாட்சியாக இருந்து கொண்டு அனைத்து தேவர்களுக்கும் சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்*





*பிரகஸ்பதியின் மனைவி மிகவும் அலங்காரத்தோடு, ஒரு சமயம் சந்திரன் கண்ணில் பட்டாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு க்ஷணம் மோகித்தான் சந்திரன். அதைப் பார்த்ததும் சூரியனுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. அப்பொழுது சூரியன் சொன்னார் சந்திரா நீ மிகவும் தவறு செய்கிறாய் என்று கண்டித்தார்.*





*மிகவும் கோபமாக சந்திரனை கோபித்துக் கொண்டார் சூரியன். சந்திரனுக்கும் சூரியன் இடத்தில் கோபம் வந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபமாக பார்த்துக் கொண்டனர். இந்த இருவர்கள் உடைய கோபத்தில் இருந்து உருவான ஒரு ஜோதிஸ் ஒரு உக்கிரமான ரூபமாக உருவெடுத்தது.*





*ஒரு புருஷன் உருவானான், எப்படி இருந்தான் என்றால் கண்கள் இரண்டும் சிவக்க சிவக்க கோவைப்பழம் போல் இருந்தது. உதடுகளும் சிவந்திருந்தது. பற்கள் நீளமாக இருந்தன. நீண்ட புருவம் பெரிய உருவம். அக்னி போல் பள பளபளவென்று பிரகாசமாய் ஒரு ராக்ஷஸ ரூபமாய், ஒரு உருவம் அங்கு வந்து நிற்கிறது.*





#கோபத்திலிருந்து_ஆவிர்பவித்தினால் #உக்கிரத்துடன்_கூடிய, அந்த உருவம் எதிர்ப்பட்டது. மேலும் அவ்வளவு பெரிய உருவத்தினால் பசி வந்துவிட்டது. உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அந்த புருஷாத்காரமான உருவம் கிளம்பியது.





*அப்போது சூரியனும் சந்திரனும் அந்த உருவத்தை எங்கேயும் போகாது என்று தடுத்தார்கள். ஏன் எனக்கு பசிக்கின்றது நான் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சத்தம் போட்டு சுற்றி சுற்றி பார்த்தார் அந்த புருஷன்.*





*அப்போது போகக்கூடாது என்று மீண்டும் தடுத்தார் சூரியனும் சந்திரனும். ஏன் நான் இப்போது போகக்கூடாது எனக்கு பசிக்கின்றது. நான் ஏதாவது சாப்பிட்டால் தான் மேற்கொண்டு, உயிர் வாழ முடியும் என்று சொல்லி சத்தம் போட்டது அந்த புருஷாத்காரமான உருவம்.*





*அப்போது சூரியனும் சந்திரனும், நம்முடைய கோபத்தினால் இப்படிப்பட்ட ஒரு உருவம் வந்துவிட்டது என்று நினைத்து அதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்தார்கள். அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*







முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் செய்ய வேண்டியது தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*





*அதில் வராக புராணத்தில் இருந்து ஒரு சரித்திரம் மூலமாக வயதீபாத புண்ணிய காலத்தை பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.*



*வியாசர் அதைப்பற்றி மேலும் தொடரும் போது சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஆவிர்பவித்த அந்த புருஷன் இடம் பேசினார்கள். மிகுந்த பசியுடன் இருக்கிறார் அவர்.*





*எது இப்போது கிடைக்கும் அதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று இருக்கிறார். எங்கள் இருவரின் கோபத்தினால் நீ ஆவிர்பவித்தாய், நீ ஒரு யோகமாக இருக்கவேண்டும் உனக்கு வயதீபாதம் என்று பெயர் இடுகிறோம், ஒரு கால தெய்வமாக நீ இருக்க வேண்டும்.*





*வயதீபாத யோகமாக இருந்து அனைத்து யோகங்களும் நீ இராஜாவாக இருப்பாய் மேலும் உனக்கு என்று வரக்கூடிய ஒரு காலம் இருக்கிறது. அந்த காலத்தில் அனைவரும் செய்யக்கூடியது ஆன, ஸ்நானங்கள் ஜபங்கள் தர்ப்பணங்களை உன் மூலமாக பித்ருக்களுக்கு கிடைக்கட்டும். அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பலன்களும் அவர்களுக்கு கிடைக்கட்டும். தேவதைகளுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி, உன்னுடைய காலமான வயதீபாதம் அன்று எல்லோரும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும், உன்னை மட்டும் அவர்கள் நினைத்துக் கொண்டு அன்றைய தினம் கர்மாக்களை செய்ய வேண்டும்.*





*அதனால் அன்றைய வயதீபாத யோகத்தில் யாரும் முகூர்த்தம் அதாவது கல்யாணம் உபநயனம் செய்ய வேண்டாம், சுப காரியங்களை தவிர்த்து, உன்னையே எல்லோரும் ஜெபித்து அன்றைய தினம் ஹோமங்கள் நடக்கட்டும்.*



*அப்படி சொல்லி ஆரம்பித்து நாம் இருக்கக்கூடிய தான இந்த பூலோகம் மட்டும் இல்லாமல், பதினான்கு லோகங்களிலும் அனைவரும் இந்த வயதீபாத யோகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொண்டனர்.*



*அனைத்து லோகங்களிலும் இந்த வயதீபாத புண்ணிய காலத்தில் அவர் அவர்களால் என்ன செய்ய இயலுமோ, அதை செய்வது என்று ஆரம்பித்தனர். மேலும் சூரிய சந்திரர்கள், இந்த வயதீபாத புண்ணிய காலத்தில், உன்னை மாத்திரம் உத்தேசித்து, தேவ காரியங்களையும் பித்ரு காரியங்களையும், செய்வார்கள். அவர்கள் செய்வதை நீ திருப்தியாக எடுத்துக்கொண்டு, அவர்கள் கேட்கக் கூடிய பலனை கொடு.*





*யார் இந்த வயதீபாத புண்ணிய காலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வில்லையோ, அல்லது தெரிந்தும் செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்களிடத்திலே உன்னுடைய பசியின் மூலமாக வந்த கோபத்தை கொடு, குடும்பத்தில் சச்சரவுகள் தகராறுகள் ஏற்படும், உன்னுடைய கோபம் அவர்களுக்கு வேலை செய்யும். இந்த கோபத்தை அவர்களிடத்திலே கொடுத்துவிடு நீ வைத்துக்கொள்ளக் கூடாது என்று சூரிய சந்திரர்கள் சொல்ல, அப்பொழுது வயதீபாதம் சொன்னார், உங்கள் இருவர் களில் மூலமாகத்தான் நான் இங்கு ஆவிர்பவத்திது இருக்கிறேன் எனக்கு இந்த அளவுக்கு அனுகிரகம் செய்ததற்கு சந்தோஷப்படுகிறேன்.*





*உங்களுடைய, பிரசாதம் அனுக்கிரகம் ஆசீர்வாதம் எப்பொழுதும் வேண்டும், என்று வயதீபாதம் சொல்ல, எங்களுடைய அனுகிரகம் உனக்கு எப்போதும் உண்டு. இந்த வயதீபாத புண்ணிய காலத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் செய்யக்கூடிய ஸ்நானம் தானம் ஜபம், ஹோமம், பித்ரு காரியங்கள், இது அனைத்தும் உன்னையே சாரும். அவர்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதை நீ கொடுக்க வேண்டும்.*





*தர்ப்பணம் செய்கின்றவர்கள் அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஜீவ பிதுருக்கள் அதாவது தாயார் தகப்பனார் இருக்கும் போது அவருடைய குழந்தைகள் ஜெபம் ஹோமம் செய்ய வேண்டும், நான் இதற்காக ஒரு விரதத்தை சொல்கிறேன் என்று சொல்லி, வயதீபாத விரதம் என்ற ஒரு விரதத்தை காண்பித்து #புத்திரன் #வேண்டும்_என்று_ஆசைப்படுகிறவர்கள் #இந்த_விரதத்தை #செய்யவேண்டுமென்று அதற்கான முறையே காண்பிக்கிறார்.*





அதில் இருந்து ஆரம்பித்து இந்த வயதீபாத விரதமானது 26 யோகங்கள் உடன் 27ஆவது யோகமாக சேர்ந்து இருந்தது. அந்த வயதீபாத நாமயோகம் என்றைக்கு வருகின்றதோ, அன்றைக்கு இந்த விரதத்தை நாம் செய்ய வேண்டும்.





#தனுர்_மாசத்திலே_தனுர்_வயதீபாதம் என்று வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய விரதம் அதுதான். அதுதான் ஆரம்பம் வயதீபாத யோகம். ஆவிர்பவித்த தினம் தான் தனுர் வயதீபாதம்.
 
அந்த மார்கழி மாதம் வரக்கூடிய இந்த வயதீபாத விரதத்தை ஆரம்பித்து கொண்டு ஒவ்வொரு மாதமும், காலையிலே ஸ்நானம் செய்து உபவாசகமாக இருந்துகொண்டு, #தாம்பிர_பாத்திரத்தில்_நாட்டு #சர்க்கரையை_நிரப்பவேண்டும், #அதற்குமேல்_ஒரு_பிரதிமையை #வைத்து_வயதீபாததே_நமஹா_என்று #மந்திரத்தைச்_சொல்லி, இதுதான் மந்திரம் வேறு எந்த மந்திரமும் இல்லை, சோடக்ஷ உபசார பூஜைகள் செய்து தித்திப்பு நிவேதனம் செய்து, அதை முதலில் நாம் சாப்பிட வேண்டும்.





*இப்படி ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும் 13 மாதங்கள் இதை செய்ய வேண்டும். வயதீபாத புண்ணிய காலம் 13 வரும் ஒரு வருடத்தில். பதினான்காவதாக திரும்பவும் தனுர் வயதீபாதம் வரும் அன்றைய தினத்தில் அந்த விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.*





#யார்_ஒருவர்_இந்த_விரதத்தைக்_அப்படி #அனுஷ்டிக்கிறார்களோ_மலடியாக #இருந்தாலும்_ஆண்_வாரிசு_பிறக்கும், என்று இந்த வயதீபாத புண்ணிய காலம் பெருமையை வராக புராணம் காண்பித்து, வயதீபாத ஸ்ரார்த்தம் செய்து அதன் மூலம் பித்ருக்களுக்கு பலனை கொடுக்கும், பித்ரு சாபம் தோஷம் இருந்தால் நீங்கும் என்று, சொல்லி இந்த விரதத்தின்/தர்ப்பணத்தின் உடைய பெருமையை காண்பிக்கின்றது வராக புராணம், இதையே தான் நம்முடைய தர்ம சாஸ்திரமும் ஷண்ணவதி தர்ப்பணம் மூலம், இந்த வயதீபாத புண்ணிய காலத்தை காண்பிக்கிறது.*



*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*







முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களின் வரிசைகளை பார்த்துக்கொண்டு என்ற வகையிலே மேலும் தொடர்கிறார்.





அதிலே நாம் அடுத்ததாக பார்க்கக் கூடியதான மிக முக்கியமான புண்ணியகாலம் #அஷ்டகா_ஸ்ராத்தம். #திஸ்ரோஷ்டகா_என்று_பஞ்சாங்கத்தில் #போட்டிருப்பார்கள்.



*முதலில் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தை எப்பொழுது செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இதை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*





*இதற்கான ஒரு சரித்திரத்தையே தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மார்ககஷிச மாசம் புஷ்ய மாசம் மாக மாசம் பால் குண மாசம் இந்த அஷ்டா சிராத்தம் கூட சாந்திரமான படிதான் தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*



*மார்கழி மாதம் மாசி பங்குனி தை இந்த நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச த்தில் வரக்கூடிய, சப்தமி அட்டமி நவமி, இந்த மூன்று நாட்களில் நாம் இந்த புண்ணிய காலத்தை அனுஷ்டிக்க வேண்டும்.*



*இதனுடைய முக்கியத்துவத்தை பார்த்துதான் மகரிஷிகள் நமக்கு சப்த பாக யஞ்கியங்களில் இந்த அஷ்டகாவை தனியாக வைத்திருக்கிறார்கள்.*





*இந்த ஷண்ணவதி 96 தர்ப்பணங்களை நாம் பண்ணுகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடத்தில். இதில் எந்த ஒரு புண்ணிய காலமும் பாக அல்லது ஹவிர் யஞ்கியங்களில் வரவில்லை.*



நாற்பது சம்ஸ்காரங்களிலும் வரவில்லை. #ஆனால்_இந்த_அஷ்டகா #ஸ்ராத்தம்_40_சம்ஸ்காரங்களில் #சொல்லப்பட்டிருக்கிறது.





*சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று தான் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினால் தான் நாற்பது ஸம்ஸ்காரங்களில் இதை வைத்து கொடுத்திருக்கிறார்கள்*





இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இதை விடவே கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி சீ மந்தத்தையும் குழந்தைக்கு ஜாத கர்மாவையும் விடக் கூடாதோ, நாம கர்மாவையும் செய்யாமல் இருக்கக் கூடாதோ, அதேபோல்தான் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.



இதற்கு திஸ்ரோஷ்டகா என்று மூன்று புண்ணிய காலங்கள் வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி.



அதேபோல் தை/மாசி/பங்குனி மாதத்திலும் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி இப்படி 3 நாட்களாக நான்கு மாதங்களும் வரும்.





இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சௌனகர் என்கின்ற மகரிஷி சொல்கின்ற பொழுது, ஹேமந்த ருது சிசிர ருது மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களும், இந்த ருதுக்களில் வரும். இதை செய்யவேண்டுமென்று மகரிஷி நமக்கு காண்பித்திருக்கிறார்



ஸ்ராத்தம் பார்வனமாக செய்ய வேண்டும். பொதுவாக நாம் தர்ப்பணம் செய்யும் போது பிதுர் பிதாமஹ பிரபிதாமஹ மாத்ரு பிதாமஹி பிரபிதாமஹிகள் மாதாமஹ மாது பிதாமஹ மாது பிரபிதாமஹ, மாதாமஹி மாது பிதாமஹி மாது பிரபிதாமஹி இதுதான் வர்க்கத்துவயம் என்று சொல்கிறோம்.





இந்த வர்க்கத்துவயம் எப்படி ஆராதிக்கிறோம் என்றால், ஒவ்வொரு ஸ்ராத்தங்களிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.



தர்ப்பணம் ஆக நாம் செய்யும் பொழுது அதில் எந்த மாற்றமும் தெரியாது ஒரே மாதிரியாக செய்து விடுவோம். ஆனால் இதை சிராத்தம் ஆக செய்யும்பொழுது, அதில் நிறைய விசேஷங்கள் வருகிறது.





இந்த அஷ்டகா சிராத்தத்தில் எப்படி என்றால், தாயார் வர்க்கத்திற்கு தனியாக வரணம் செய்ய வேண்டும். பொதுவாக இந்த ஷண்ணவதி அனைத்து ஸ்ராத்தங்களிலும் தாயாரும் தகப்பனாரும் சேர்ந்துதான் ஒரு வர்க்கம். அதேபோல் மாதாமஹர் மாதா மஹி ஒரு வர்க்கம்.





ஆனால் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வருடாவருடம் நாம் தாயாரை உத்தேசித்து செய்யக்கூடிய சிராத்தத்தில், நாந்தி சிராத்தத்திலும் கயையில் செய்யக்கூடிய ஸ்ராத்தத்திலும், #தாயார்_வர்க்கத்திற்கு #தனியாக_வரணம்_உண்டு.





அதேபோல்தான் இந்த #அஷ்டகா #சிரார்த்தத்திலும்_தாயார்_வர்க்கத்திற்கு தனியாக ஒரு வரணம் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அங்குதான் விசேஷங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.



*அந்த சரித்திரத்தை பார்க்கும்போது அந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் தகப்பனாரையும் தாயாரையும் ஒரு வர்க்கமாக செய்தாலும், எப்படி நாந்தி சிராத்தத்தில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் செய்கின்றோமோ, அதே போல் தான் இந்த அஷ்டகா சிராத்தத்திலும் தயாரித்து தனியாக செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*





*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் 4 மாதத்தில் மூன்று மூன்றாக 12 தர்ப்பணங்கள் வருகின்றன இந்த அஷ்டகா புண்ணியகாலம்.*



*இதை அன்ன சிராத்தம் ஆக காண்பித்திருக்கிறார்கள்* *மேலும் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்றும் காண்பித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் தர்ப்பணமாகவாது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*





*இதை ஏன் அன்ன ரூபமாக செய்யக்கூடாது என்றால் செய்யலாம் ஆனால் நிறைய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டிவரும். நியமங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது முடிந்தால் செய்யலாம். தர்ப்பணமாக செய்வதற்கு தர்ம சாஸ்திரத்தில் விசேஷங்கள் காண்பித்திருக்கிறார்கள்*





*இந்த அஷ்டகா தர்ப்பணத்தை செய்யாவிடில் தோஷங்களும் காண்பிக்கிறார்கள். இதை யார் தெரிந்து கொள்ள வில்லையோ அல்லது தெரிந்து கொண்டும் செய்யவில்லையோ, அவர்கள் தரித்திரம் ஆக போய்விடுகிறார்கள். அதாவது பணம் இல்லாமல் இருப்பவர்கள் தரித்திரர் கள் ஆகவும், அதேசமயம் பணம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களும் தரித்திரர்கள் என்ற ஒரு நிலையானது நமக்கு ஏற்படுகின்றது என்று ஒரு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு.*







*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் பெற்றோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் விவரங்களை மேலும் தொடர்கிறார்.



அதில் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான அஷ்டகா புண்ணியகாலம். மிகவும் முக்கியமானது ஒன்று





நாற்பது சம்ஸ்காரங்களில் இதுவும் ஒன்றாக நமது மகரிஷிகள் காண்பிக்கின்றனர். சப்த பாத யஞ்கியங்களில் ஒன்று. ஹௌபாசனம் செய்கின்றவர்கள், அனைவரும் செய்ய வேண்டியது இந்த அஷ்டகா புண்ணியகாலம்.





இது நித்தியமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது கட்டாயம் செய்ய வேண்டும். (பிரத்தியவாயம்) அதாவது செய்யாமல் விட்டால் வரக்கூடிய தான பாவத்திற்கு இந்தப் பெயர்.



ஆனால் இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு செய்யாமல் விட்டால் தோஷங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. #நரகம்தான்_கிடைக்கும்_இந்த_அஷ்டகா #புண்ணிய_காலத்தை_செய்யாவிடில் #என்று_தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.





இப்படி நிறைய எச்சரிக்கைகள் செய்து அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று காண்பிக்கின்றது. ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் என்றால் புராணங்கள் இதனுடைய பெருமைகளை நிறைய காண்பிக்கின்றது.





*முக்கியமாக பிரம்ம வைவர்த்த/வாயு புராணங்களும் இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது. #ஸ்திரீகளுக்கு_மிகவும்_முக்கியமான #சிராத்தம்_இந்த_அஷ்டகா_ஸ்ராத்தம்.

#14

*முக்கியமாக பிரம்ம வைவர்த்த/வாயு புராணங்களும் இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது. #ஸ்திரீகளுக்கு_மிகவும்_முக்கியமான #சிராத்தம்_இந்த_அஷ்டகா_ஸ்ராத்தம்.



பொதுவாக தர்ப்பணங்களில் தகப்பனார் வர்க்கம் செய்யும் பொழுதே தாயார் வர்க்கமும் சேர்ந்து வந்துவிடும். அதாவது எல்லா இடங்களிலும் பதியோடு சேர்ந்து வந்துவிடும். தகப்பனாருடன் தாயாருக்கும் அதில் பாகம் வந்துவிடும்.





முக்கியமாக சில இடங்களில் தாயாருக்கு தனி வரணம் உண்டு. விருத்தி அதாவது நாந்தி சிராத்தம். இதில் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை உண்டு. வருடாவருடம் தாயாருக்கு செய்யக்கூடிய தான ஸ்ராத்தம். கயாவில் செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தம். (மாத்துரு ஷோடசி), மற்றும் இந்த அஷ்டகா ஸ்ராத்தம்.





இவைகளில் எல்லாம் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று இந்தப் புராணங்கள் சொல்லும் பொழுது, அதாவது நாம் வழக்கமாக தர்ப்பணம் செய்யும் பொழுது, ஸ்திரீகள் யார் யாரெல்லாம் உத்தேசித்து நாம் செய்கின்றோமோ, அவர்கள் அத்தனை பேரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.





#மேலும்_ஸ்திரீகளுக்கு_பொதுவாகவே #நிறைய_எதிர்பார்ப்புகள்_இருக்கும்_அது #நிறைவேறவில்லை_என்றால்_அதற்காக #ஒன்றும்_வருத்தப்பட்டு_கொள்ள #மாட்டார்கள்_ஆனால்_அவர்களால்



#எதிர்பார்த்ததை_நாம்_நிறைவேற்ற #முடியவில்லை_என்பது_ஒரு #தாபம்தான்.





*அந்த மாதிரியான தாபங்களை இந்த அஷ்டகா சிராத்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒரு சின்ன சரித்திரம் மூலம் பிரம்ம வைவர்த்த/வாயு புராணமும் காண்பிக்கிறது.*



#அதாவது_பித்ருக்கள்_மூன்று_விதமான பிரிவுகளாக இருக்கின்றனர். #சோமப் #பிதுர்மான்_பிதரோ_பரிகிஷதஹா, #அக்கினி_ஸ்வாதாஹா என்று மூன்று பிரிவுகள். இங்கு பிரிவு என்பது இவர்களுக்கு உள்ளேயே பிரிவு என்று நினைக்கக்கூடாது. ஸ்தானம் என்று பெயர். இதை தனித்தனியாகப் பிரித்துக் காண்பித்து இருக்கின்றனர்.





#அதிலே_இந்த_அக்னி_ஸ்வதாஹா #என்கின்ற_பிதுருக்கள்_யாகம் #செய்தவர்கள்_அக்னிஹோத்திரம் #செய்து_இந்த_பூமியிலே_யாகம_செய்த #ஸ்தானத்தை_அடைந்தவர்கள்.



ஒரு சமயம், இந்த அக்னி ஸ்வதாஹா என்கின்ற பிதுருக்கள் இடத்திலே ஒரு கன்னிகா இருந்தாள். ஒரு குழந்தை பெண். அவளுக்கு பெயர் அச்சோதா என்று பெயர். ஒருசமயம் அவள் வெளியிலே சஞ்சாரம் செய்து கொண்டு வரும்பொழுது, அமாவசு என்ற ஒரு பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா அவனைப் பார்த்து இவள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.





*கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனிடத்திலே கேட்கிறாள், அமாவசு என்கின்ற அவன், அவளைப் பற்றிய எந்த விவரமும் கேட்காமல் அவள் கேட்ட உடனேயே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் இருவரும் தொப்பென்று இந்த பூலோகத்தில் வந்து விழுந்து விட்டனர்*



ஏனென்றால் அவர்கள் இருவரும் ஞாதிகள் (பந்துக்கள்) பங்காளிகள்.





#ஒரே_கோத்திரத்தில்_ஒருவருக்கொருவர்_திருமணம்_செய்து_கொள்ளக்கூடாது. இவர்களுக்குத் தெரியாமல் அப்படி கேட்டதினால், அவர்களுடைய அந்த பிதுர் பாவமானது போய்விட்டது, உடனேயே இங்கே பூமியில் வந்து விழுந்து விட்டார்கள்.





*எப்படி விழுந்தாள் என்றால் அந்த கன்னிகா அச்சோதா என்கின்ற ஒரு நதியாக ஆவிர்பவித்தாள். இந்த அமாவசு என்கின்ற அவர் ஒரு கல்லாக போய்விட்டார் அந்த நதிக்கரையில். இப்படி இந்த இரண்டு பேரும் பூமியிலே வந்து விழுந்து துக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நாம் இருவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து போய்விட்டது.*





*மிகவும் துக்கப்பட்டு அழுதாள். இதைப் பற்றி தெரிந்த உடன் அக்கினி ஸ்வாதாஹா என்கின்ற பித்ருக்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்து வருத்தப்பட்டார்கள் பிதுருக்கள்.*





*அவர்களுக்கு இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியை சொன்னார்கள். என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*







முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணங்கள் வரிசையை பார்த்துக்கொண்டு என்ற வகையில் அஷ்டகா சிராத்தம் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*



*இந்த அஷ்டகா ஸ்ராத்தம் பெருமைகளை முக்கியமாக ஸ்திரீகளை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணம்.*





*இதற்கான ஒரு சரித்திரத்தை பிரம்ம வர்த்த புராணமும் வாயு புராணமும் காண்பிக்கின்றன. அந்த சரித்திரத்தில் அச்சோதா என்கின்ற கன்னிகை, ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட தோஷத்தினால், இந்த பூமியிலே நதியாக ஆவிர் பவித்து ஓடினாள். அந்த நதிக் கரையினிலே அமாவசு என்கின்ற பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா கல்லாக விழுந்தான்.*





*அவர்கள் இருவரும் துக்கப்பட்டனர். அந்த நதி எப்படி ஓடுகின்றது என்றால் பூமியில் இறங்காமல் ஓடுகிறது. பூமியிலே தண்ணீர் இறங்க வேண்டும் அப்போதுதான் அது சாரவத்தாக இருக்கும். ஆனால் இந்த நதி கருங்கல்லிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கருங்கல் யார் என்றால் இந்த அமாவசு என்கின்ற யுவா.*





*ஆகையினாலே அந்த நதியானது யாருக்கும் பயன்படாமல் பூமியில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை நினைத்துக் கொண்டு மிகவும் வெட்கப்பட்டாள் அந்த கன்னிகை. இப்படி ஒரு தப்பை நாம் செய்துவிட்டோமே நம்முடைய ஞாதி களிலேயே ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு.*





*ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ஞாதிகள் என்று பெயர். இப்படி ஒரு தப்பை நான் செய்து விட்டேனே என்று வருத்தப்பட்டு அழுதாள். அவள் தன்னுடைய தகப்பனார் வர்க்கத்தில் உள்ள பிதுருக்களை நினைத்து பிரார்த்தனை செய்தாள்/அழுதாள்.*





*நான் ஒரு வயதின் கோளாறு காரணமாக இந்த தப்பை செய்துவிட்டேன், என்னை நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள். ஒரு துஷ்டன் இடத்திலே போய் ஒரு ஸ்திரீ மாட்டிக்கொண்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு (சுதந்திரமாக நம் வீட்டிற்கு போய் வாழ வேண்டும் என்று) அழுவாளோ அதேபோல் பித்ருக்களை நினைத்து தபஸ் பூராவும் வீணாக போய் விட்டதே என்று அழுதாள்.*





*அப்படி இருக்கும் பொழுது, அங்கே வந்து சேர்ந்தனர் பித்ருக்கள் அனைவரும். அவள் மிகவும் வருத்தப்பட்டு இப்படி நீ செய்யலாமா நாங்களெல்லாம் இருக்கும் போது எங்களிடம் நீ கேட்க வேண்டாமா, என்று அவளிடம் சமாதானமாக தன்மையாக சொல்லி, வாஞ்சையோடு கூட ஒரு யோசனை சொன்னார்கள்.*



நீ மனதினால், ஒரே கோத்திரத்தில் உள்ளவனை கல்யாணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று நினைத்ததால், அந்த பாவத்தை நீ அனுபவித்து தான் தீர வேண்டும். அதுவரையிலும் இந்த பூமியிலிருந்து நீ வர முடியாது.





இந்த பூமியில் இருந்து தான் அந்த பாவத்தை நீ அனுபவித்து ஆகவேண்டும். அதற்குப்பிறகு எங்களால் உனக்கு நல்லது செய்ய முடியும் என்று சொல்லி, அவர்கள் சொல்லும் பொழுது நீ இந்த பாவத்தை சீக்கிரமாக அனுபவித்து முடித்து, இந்த இருபத்தி எட்டாவது மன் வந்திரமான வைவஸ்த மனு ஆரம்பிப்பதற்கு முன்னால், ஒரு நல்ல குலத்திலே நீ ஆவிர்பவிப்பாய். ஒரு உத்தமமான புத்திரனை நீ அடைவாய். நல்ல இடத்திலே உனக்கு திருமணமாகி, நல்ல புத்திரனே நீ அடைவாய் அவனை எல்லோரும் பாராட்டும் விதமாக, ஸ்திரீகளுக்கு ஜென்மம் எடுத்ததற்கான பயன் எப்பொழுது, ஒரு புத்திரனை அவள் பெற்றெடுத்த உடன் ஜென்மம் பயனுள்ளதாக அமைகிறது.





#புத்திரன்_என்று_ஒருவன்_பிறக்க #வேண்டும்_ஸ்திரீகளுக்கு_அதன்பிறகு #அவர்களுக்கு_உத்தமமான_லோகம் #கிடைக்கும்_காத்துக்கொண்டிருக்கிறது.



இதைத்தான் நாம் இராமாயணத்தில் பார்த்தோமேயானால் இராமன் பிறந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள் என்று சொல்கின்ற இடத்திலே, தசரதர் மற்றும் அந்த ஊர் மக்கள் மிகவும் பேரானந்த பட்டார்கள் என்று சொல்வதற்கு முன்னால், கௌசல்யை மிகவும் சந்தோஷப்பட்டாள் பிரகாசமாக இருந்தாள் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுகிறார் முதலில்.*





*ஏனென்றால் புத்திரன் என்று ஒருவன் பிறந்த விட்டவுடன் நம்முடைய ஜென்மம் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று, இனிய நாம் ஜெபமும் தபசு பூஜைகள் ஹோமங்கள் செய்து அடுத்த ஜென்மம் நன்றாக கிடைக்க வேண்டுமே, இந்தப் பிறவியில் எல்லா சுகங்களையும் அடைய வேண்டுமே என்று, அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை, புத்திரன் என்ற பிறந்து ஆகிவிட்டது, இனி நமக்கு சத்கதி தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, கௌசல்யா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்று வால்மீகி தனியாகவே இராமாயணத்தில் காண்பிக்கின்றார்.*





*காரணம் ஸ்திரீகளுக்கு புத்திரன் என்ற பிறந்தவுடன் பிறவிப்பயன் ஆனது கிடைத்து விடுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பித்ருக்களும் இந்த கன்னிகைக்கு அதையே சொல்கின்றனர்.*





#உனக்கு_நல்ல_இடத்தில்_திருமணம் #ஆகி_ஒரு_நல்ல_புத்திரன்_உனக்கு #கிடைப்பான்_அவன்_பிறந்த #மாத்திரத்திலேயே_உனக்கு_நல்லr_கதி #கிடைத்து_ஒரு_ஸ்தானத்தை_அடைவாய் #என்று_பிதுருக்கள்_அனுகிரகம் #செய்கின்றனர்.





*அந்த உத்தமமான புத்திரனும் அனைவராலும் பாராட்டப் பெறுவார், அவன் லோகத்திற்கு பெரிய உபகாரங்களை செய்யக் கூடியவனாக இருப்பான், அனைவரும் தினமும் நினைத்துப் பார்க்கக்கூடிய புத்திரனாக அவன் இருப்பான்.*





*அப்படி ஒரு புத்திரனை நீ அடைந்த மாத்திரத்திலேயே இந்த பாவமானது சுத்தமாக நீங்கிப் போய்விடும். திரும்பவும் இது போல் கெட்ட எண்ணங்கள் உன்னுடைய மனதிலே உருவாகாது, இப்படியாக பிதுருக்கள் அந்த கன்னி கைக்கு அனுகிரகம் செய்கின்றனர்.*





*உன்னையும் உன்னை மாதிரி பால்லிய வயதில் நினைத்துப் பார்க்கக் கூடாத நினைத்து பார்த்ததினால் வந்த பாவமும், பாவத்தினால் ஏற்பட்ட தோஷங்களினுடைய ஸ்திரீகளும் கல்யாணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் அடைய முடியாமல் காலம் ஆகிவிட்ட ஸ்திரீகளுக்கும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாணம் செய்யாமலேயே காலமான ஸ்திரீகளும், கர்ப்பத்தில் இருக்கின்ற போதே காலமான ஸ்திரீகளுக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் உத்தேசித்து அஷ்டகா என்கின்ற ஒரு சிராத்தத்தை அனைவரும் செய்வார்கள்,



அதன்மூலம் இதுபோல் உள்ள ஸ்திரீகள் அனைவருக்கும் பாகங்கள் கிடைக்கும் அத்தனை ஸ்திரீகளின் உடைய சாபங்களும் பாவங்களும் நிவர்த்தியாகும், அந்த அஷ்டகா சிராத்தத்தை செய்கின்றவர்களுக்கு தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியத்தை பூரணமாக அடைவார்கள் என்று பிதுர்க்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா சிராத்தம் எப்போது நடக்கும் என்றால் உத்தராயணம் பிறந்து இதை அனைவரும் செய்வார்கள் அதன்மூலம் ஸ்திரீகள் அனைவருக்கும் பூரணமான திருப்தி கிடைக்கும் என்று சொல்லி அனுகிரகம் செய்தார்கள்.*











*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*





முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்மங்களின் வரிசைகளை மேலும் விளக்குகிறார்.*



*அதில் அஷ்டகா புண்ணிய காலத்தின் பெருமைகளை ஒரு சரித்திரத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*





*அப்படி பித்ருக்களின் உடைய அனுக்கிரகத்தினால் நதியாக ஓடக்கூடிய அச்சோதா என்கின்ற கன்னிகை, அந்தப் பாவத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்த கன்னிகை தான் சத்திய வதியாக ஆவிர்பவிக்கிறாள் பூலோகத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில். அந்த சத்தியவதிக்கு ஒரு புத்திரன் பிறக்கிறான் அவர்கள்தான் #வியாசர் என்று நாம் சொல்கிறோம்.



*வியாசாச்சார்யாள் விஷ்ணுவினுடைய அவதாரமாகவே பிறந்திருக்கிறார். காரணம் அந்த பிதுருக்களின் சினேகத்தின் மூலம் அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் பிறந்ததன் மூலம் மகாவிஷ்ணுவே வியாசர் ஆக வந்து பிறந்தார் இந்த பூலோகத்தில்.*





ஆகையினாலே தான் #வ்யாஸாய #விஷ்ணு_ரூபாய_வ்யாஸ_ரூபாய #விஷ்ணவே_என்று_சொல்கிறோம். விஷ்ணுவும் வியாசரும் வேறு அல்ல இருவரும் ஒன்றே தான் அவர் தான் பகவான் நாராயணன் ஆக ஆவிர்பவித்தார் என்று பார்க்கிறோம்.





*பித்ருக்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்ய வேண்டிய முறைகளையும் அவர்களே காண்பிக்கின்றனர். இப்படி சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஸ்ராத்தங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. நித்தியமாக/நைமித்தியமாக/காம்மியமாக செய்யக்கூடியது.*





*நித்தியமாக செய்யக்கூடியது நாம் பார்த்து கொண்டு வரக்கூடியது ஆன சண்ணவதி தர்ப்பணங்கள், இவைகள் நித்தியம் என்று பெயர்.*



*நைமித்திகம் என்றால் ஒரு கிரகண புண்ணிய காலத்தில், செய்யக்கூடிய தான தர்ப்பணம். சிராத்தத்தை முடித்த பிறகு ஸ்ராத்தாங்கமாக செய்யக்கூடிய தர்ப்பணம். ஒரு தீட்டு வந்துவிட்டால் அது போகக்கூடியதற்கான தர்ப்பணம். இவைகளெல்லாம் இதில் வரும்.*





*காமியம் என்று ஒன்று இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தாங்க தர்ப்பணம். காம்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்*



*ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்ய வேண்டுமானால் அதற்கான சிராத்தத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பித்துள்ளது.*



*அந்த ஸ்ராத்தத்தை முடித்த பிறகு செய்யக்கூடிய தான தர்ப்பணம் மற்றும் ஒரு சில புண்ணிய காலங்களில் செய்யக்கூடிய தர்ப்பணம். இவைகளுக்கு காமியம் என்று பெயர்.*



*இப்படி மூன்றாகப் பிரித்து அதில் இந்த அட்டகா புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தர்ப்பணம் நித்தியம் என்று சொல்லி, இந்த நான்கு மாதத்தில் செய்யக்கூடியதான இந்த திஸ்ரோஷ்டகா புண்ணிய காலம் நான்கு விதமாக ஸ்திரீகளுக்கு பலனை/திருப்தியை கொடுக்கிறது.*





*முதலில் செய்யக்கூடியது ஐன்திரி மார்கழி மாதம் வரக்கூடியதான புண்ணியகாலத்தின் பெயர். அதாவது தர்ம சாஸ்திரம் இதை நமக்கு இரண்டு விதமாக காண்பிக்கின்றது.*



*மூன்று நாட்கள் செய்யக்கூடியது ஆன சப்தமி அஷ்டமி நவமி. இதிலே சப்தமி அன்று முதலில் செய்யக்கூடியதற்கு, ஐன்திரி, அஷ்டமி அன்று செய்யக்கூடியதற்கு பிராஜாபத்தியம் என்று பெயர். மூன்றாவதாக செய்யக்கூடிய அதற்கு வைஸ்யதேவிகி என்று பெயர்.*





*இப்படி இதைப் பிரித்து இருக்கிறார்கள் இந்த நான்கு மாதத்திலேயே, செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை நான்காகப் பிரித்து இருக்கிறார்கள்.*



அதில் முதலில் செய்யக்கூடியதான தர்ப்பணத்தின் மூலம் நம்முடைய வம்சத்திலே யாகங்கள் செய்து இருந்து வந்த குடும்பத்திலுள்ள ஸ்திரீகள் இறந்தது அவர்களுக்கு ரொம்ப திருப்தியை கொடுக்கின்றது.







இரண்டாவதாக செய்யக்கூடியது பிராஜாபத்தியம் விவாகம் செய்துகொண்டு நிறைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, வசதிகள் இருந்தும் ஆனால் அனுபவிக்க முடியாமல், புத்திரன் மூலமாக சம்ஸ்காரம் செய்யப்படாமல், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் உள்ள ஸ்திரீகளுக்கு திருப்தியை கொடுக்கின்றது.



*மூன்றாவது கர்ப்பத்திலேயே இந்த வம்சத்தில் வந்த பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறக்க முடியாமல், கருக்கலைப்பு ஏற்பட்டதன் மூலம் பிறந்த ஸ்திரீகள், பிறந்து கன்னிகா பருவத்தில், இறந்த ஸ்த்ரீகள், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாண வயது வரை வந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் இறந்த ஸ்திரீகள், இவர்களுக்கு போய் சேருகின்றது.*





*நான்காவதாக செய்யக்கூடியதான இந்த அஷ்டகா சிராத்தத்தில், குறைபட்ட ஸ்திரீகள், சுமங்கலிகளாக இருந்து, குறைபட்டு போன ஸ்திரீகள், நம்மால் பாகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு இறந்த ஸ்திரீகள், அதாவது தாய் மாமா இருக்கின்றார் ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை, அப்போது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம், அதே போல் நம்மை சுற்றியுள்ள பந்துகள், நாம் செய்ய வைக்க வேண்டும் அல்லது செய்யணும், என்று ஆசைப்பட்டு இருந்து செய்ய முடியாமல் போனால், அல்லது அவர்கள் எதிர்பார்த்தும் நடக்க முடியாமல் போன ஸ்திரீகள், இவர்களுக்கு திருப்தியை கொடுக்கின்றது, இந்த அளவுக்கு இந்த புராணம் முக்கியத்துவத்தை காண்பித்து, நித்தியமாக சொல்லி, கட்டாயம் அஷ்டகா புண்ணிய காலத்தில் நாம் செய்ய வேண்டும்.*





இதில் கட்டாயம் இந்த திஸ்ரோஷ்டகா புண்ணிய காலத்தில், #நம்மிடம் #எவ்வளவு_செல்வங்கள்_இருக்கிறதோ அவ்வளவையும் செலவு பண்ணி இதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.





*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை செய்யவில்லை என்றால் இதே போல் நமக்கும் தூக்கங்கள் ஏற்படும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.*



*இதை நாம் செய்வதினால் நமக்கும் நம்மை சுற்றி உள்ள சந்ததியினருக்கும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் சௌக்கியமே கிடைக்கும் . அதனாலே இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.*





*எப்படி ஒரு பசுமாடு, மடி நிறைய பாலை வைத்துக்கொண்டு நீ கறந்து எடுத்துக்கோ என்று நம்மிடத்தில், காத்துக்கொண்டு இருக்குமோ, அதுபோல பித்ருக்கள், இந்த அஷ்டகா புண்ணிய கால தர்ப்பணங்களை எதிர்பார்த்து, நீங்கள் எல்லோரும் செய்து உங்களுடைய துக்கங்களை நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும், நான் போக்குவதற்கு தயாராக இருக்கிறேன், அப்படி பித்ருக்கள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*





*பசுமாட்டை கறக்காமல் விட்டால் நஷ்டம் நமக்குத்தான். அதுபோல நம்முடைய பிதுருக்கள் இந்த திஸ்ரோஷ்டகா புண்ணிய காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆகையால் நாம் அதை எதிர்பார்த்து அவர்களுக்கு செய்ய வேண்டியதான இந்த புண்ணிய காலத்தை செய்து, அவர்களுடைய அனுக்கிரகத்தை நாம் பூரணமாக அடைய வேண்டும் என்று,இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கின்றது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.*



*இந்த திஸ்ரோஷ்டகாக புண்ணிய காலத்தில் அஷ்டகா சிராத்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று விட்டு போகும்.*





*அப்படி விட்டு போனால் நாற்பது சம்ஸ்காரங்கள் இதுவும் ஒன்று, நமக்கு தோஷங்கள் ஏற்படும். நாம் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஸ்திரீகளியினுடைய உடைய சாபங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.*



*மேலும் நமக்கு ஸ்கந்த புராணம் சொல்லும் பொழுது யார் ஒருவன் இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்யவில்லையோ அவன் கயை சென்று எட்டு விதமான ஸ்ராத்தங்களை அவன் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.*





*இப்பொழுது கயா போனால் கூட அங்கு செய்து வைப்பார்கள். அஷ்டகயா சிரார்த்தம் என்று செய்து வைக்கிறார்கள். இந்த எட்டு சிராத்தங்களை செய்தால்தான் அஷ்டகா செய்யாததினால் வந்த தோஷங்கள் போக்கும் இன்று காசிகண்டம் நமக்கு காண்பிக்கிறது.*





*இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த திஸ்ரோஷ்டகா புண்ணிய காலம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணஙகளின் வரிசையை மேலும் தொடர்கிறார்*





*அதிலே அஷ்டகா சிராத்தம் பெருமைகளையும் மேலும் மிகவும் முக்கியமானதொரு புண்ணியகாலம் என்று விரிவாக தெரிந்து கொண்டோம்.*
 
*நாம் இதுவரையில் இந்த ஷண்ணவதி தர்ப்பணத்தை பார்த்தோம் ஒரு வருடத்தில் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து குறைந்தபட்சம் 96 தர்ப்பணங்களை நாம் செய்ய வேண்டும்.*





*அதாவது இந்த 96 என்கின்ற எண்ணிக்கை எப்படி வருகின்றது என்றால், அமாவாஸ்யா 12 வருடத்தில். யுகாதி ஒரு வருடத்தில் 4. மன்வாதி ஒரு வருடத்தில் 14. சங்கரமனம் அதாவது மாசப் பிறப்பு மாதத்தில் 12. வைதிருதி புண்ணிய காலம் வருடத்தில் 13. வயதீபாதம் 13. மஹாலய பக்ஷம் ஒரு வருடத்தில் 16. திஸ்ரோஷ்டாகஹா அதாவது அஷ்டகா புண்ணிய காலம் 12. ஆக இதையெல்லாம் கூட்டினால் 96 வரும். இந்த 96 தான் நாம் நம்முடைய பிதுருக்களை உத்தேசித்து செய்யவேண்டியதான குறைந்தபட்ச தர்ப்பணங்கள்.*





*அதிக மாதம் வந்தால் சில புண்ணிய காலங்கள் அதிகப்படியாக வரும். இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை நாம் அவசியம் செய்ய வேண்டும். இதைத் தவிர வருடத்தில் நாம் செய்யக்கூடிய தாயார் தகப்பனார் சிராத்தம் கிரகண காலங்கள் வந்தால் செய்யக்கூடிய புண்ணிய தர்ப்பணங்கள் இதெல்லாம் அதிகப்படியாக நாம் செய்ய வேண்டி வரும்.*





*இந்த 96 யும் நாம் ஏன் சிராத்தம் ஆக செய்யக்கூடாது இப்பொழுது தர்ப்பணம் ஆக செய்து கொண்டிருக்கிறோம். இதை சிராத்தம் ஆக செய்யலாம் ஆனால் அதில் விசேஷங்கள் நியமங்கள் கட்டுப்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது.*





*அதை நன்றாக தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டும். ஏனென்றால் சில சிராத்தங்களில் முன்னால் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். சில சிராத்தங்களில் பிண்டப் பிரதானம் கிடையாது. சில சிராத்தங்களில் உபவாசம் உண்டு சிலவற்றில் கூடாது. இப்படி சில விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது ஷண்ணவதி ஸ்ராத்தங்களில்.*





*ஆகையினாலே தான் நம்முடைய முன்னோர்கள் இதை தர்ப்பணம் ஆக செய்ய வேண்டும் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதியில் சிலவற்றை நாம் அன்ன ரூபமாக செய்கிறோம் என்றால், சில வருடங்களுக்கு முன்னால் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். அதாவது அமாவாசை நாம் அன்ன ரூபமாக செய்தால், ஸ்ராத்தாங்க தர்ப்பணத்தை முதலில் செய்துவிட்டு பின்பு சிரார்த்தம் செய்ய வேண்டும். அதுபோல் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். சங்கர மன சிராத்தம். வயதீபாதம். கிரகணம். இந்த மாதிரியான புண்ணிய காலங்களை உத்தேசித்து வரக்கூடியது ஆன சிராத்தங்களை முதலில் சிராத்தாங்க தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சிராத்தம் செய்ய வேண்டும்.*





*அதேபோல தட்சணாயன உத்தராயண புண்ணிய காலங்கள், மேலும் துலா மற்றும் சைத்ர விஷு, யுகாதிகள் 4. இவைகளில் எல்லாம் பிண்ட பிரதானம் கிடையாது/கூடாது. அதனாலே நமக்குத் தெரியாமல் அன்ன ரூபமாக செய்கிறோம் என்று செய்து பிண்டப் பிரதானம் செய்து விட்டோம் என்றால் குடும்பம் விருத்தி அடையாமல் போய் விடும். புத்திர சோகம் வந்து விடும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது.*





*மூத்த பையன் காலமாகி விட நேரிடும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு எச்சரிக்கை செய்கிறது. இப்படி நிறைய விஷயங்களை காண்பிக்கிறது. இது எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும். நான் நல்ல காரியம் தானே செய்கிறேன் எனக்கு இப்படி கஷ்டங்கள் எல்லாம் வருகிறதே என்று நிறைய பேர் சொல்வதை* நாம் இன்று கேட்கிறோம்.



*காரணம் அங்கே நாம் செய்யக்கூடிய தான நல்ல காரியம் புண்ணிய காலங்களில் என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன, அதை எந்த முறையிலேயே செய்யவேண்டும், என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு செய்தால், அதற்கு பலன் உண்டு. மாத்தி செய்தால் விபரீதமான பலன்களை தான் நாம் அடைய வேண்டி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான புரிதல்கள் நமக்கு இல்லாததினால் தான் நல்ல காரியம் செய்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள் சென்ற பொதுப்படையாக பேசுவதை நாம் கேட்க நேரிடுகிறது.*





*நல்ல காரியம் செய்பவர்கள் மாற்றி செய்தாலும் கூட முதலில் கஷ்டம் வரும் பிறகு நல்லது நடக்கும். நான் எதுவுமே செய்யவில்லை என்று இருந்தால் அவனுடைய வாழ்க்கையில் சுகம் என்பது அணையப் போகும் விளக்கு. நமக்கு என்ன தோன்றும் எண்ணெயே இல்லாமல் திரி இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று ஆனால் கொஞ்ச நேரத்திலே திரியே கருகிப் போய் விடும்.*



*அதனாலேயே இந்த மாதிரியான புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடிய தான*



*தர்ப்பணமோ சிராத்தமோ அல்லது ஒரு தானமோ அதற்கு என்று ஒரு முறை உள்ளது. முறைப்படி அந்த காரியத்தை நாம் செய்ய வேண்டும்.*





*எந்த காரியத்தை நாம் செய்தாலும் நன்றாக தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். தெரிந்த வரையிலும் செய்கிறேன் என்று காரியங்களை செய்யக்கூடாது. நன்றாகத் தெரிந்து கொண்டு நாம் செய்தால் முழுமையான பலன்களை நாம் அடைய முடியும்.*



*இந்த ஷண்ணவதி புண்ணிய காலங்களில் அடுத்ததாக ஒரே நாளில் 2 / 3 / 4 புண்ணிய காலங்கள் வரும். இந்த சமயங்களில் தர்ப்பணங்களை நாம் எப்படி செய்வது என்கின்ற ஒரு சந்தேகம் வரும்.*





*வரிசையாக நான்கு தர்ப்பணங்களை செய்து விடுவதா, அல்லது சேர்த்து செய்வதா? இந்த விஷயங்களில் புரிதல் நமக்கு மிகவும் தேவை. நம்முடைய சாஸ்திரம் தனித்தனியாகவும் சேர்த்தும் செய்யலாம் என்று எங்கெல்லாம் சொல்லியிருக்கிறதோ, அதற்கு விகல்பஹா என்று பெயர்.*





*விகல்பம் என்பது இரண்டு வழியாக காண்பித்துள்ளது குறிக்கிறது. அப்பொழுது அந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கு அப்படி சொல்லவில்லையோ நாம் அவ்வாறு செய்யக்கூடாது.*





*தர்ப்பண விஷயங்களில் நமக்கு மிகவும் பொறுப்பு வேண்டும். இது என்ன ஒரு சொம்பு ஜலம் கொஞ்சம் எள் இதுதானே செலவாக போகின்றது தனித்தனியாகவே செய்துவிடலாம், என்கின்ற எண்ணம் நமக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் செய்தும் செய்ததாக கணக்கு வந்துவிடும். இது மிகவும் முக்கியம்.*





*இது எல்லாம் சேர்த்து அல்லது தனித்தனியாக செய்ய வேண்டும் என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



#15

முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடியதான தர்ப்பணங்களின் வரிசையை மேலும் விளக்குகிறார்.*



*அவைகளில் சில சமயம் ஒரே நாட்களில் இரண்டு மூன்று அல்லது நான்கு புண்ணிய காலங்கள் வரும். அப்போது எவ்வளவு தர்ப்பணங்களை செய்ய வேண்டும் எதை முதலில் செய்ய வேண்டும்.*





*அல்லது ஒரு தர்ப்பணத்தை செய்தால் போதும் என்றால் எதை செய்ய வேண்டும் என்பதை பற்றிய விஷயங்களில் நமக்கு புரிதல் வேண்டும்.*



*நமக்கு என்ன தோன்றும் ஒரு சொம்பு ஜலம் ஒரு 10 கிராம் எள் 10 நிமிடம் செலவு ஆகப்போகிறது தனித்தனியாகவே நாம் செய்து விடலாம் என்று தோன்றும். ஆனால் நாம் நம்முடைய தர்ம சாஸ்திரத்தை தான் அடிப்படையாக வைத்துக் கொண்டு இதையெல்லாம் பார்க்க வேண்டும்.*





*தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லி இருந்தால் நாம் செய்யலாம் அப்படி காண்பிக்க வில்லை என்றால் செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன ஆகும் அது செய்யாததாகதான் கருதப்படும்.*



*எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது இந்த முறையில் தான் செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரம் நம்முடைய தர்மசாஸ்திரம் தான். ஆகையினால் தர்ம சாஸ்திரத்தில் எப்படி காண்பிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டும்.*





*ஏன் இப்படி சேர்த்து செய்யவேண்டும் என்று சொன்னால், ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. ஒரு புண்ணிய காலம் என்று எடுத்துக்கொண்டால் அது ஆரம்பத்தில் இருந்து முடிகின்ற வரையில் தான் என்று நாம் எடுத்துக் கொள்வோம்.*



*காலையில் எழுந்ததில் இருந்து நாம் தர்ப்பணம் செய்கின்ற வரை புண்ணியகாலம் என்கின்ற ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் அது அப்படி அல்ல. அன்றைய தினம் முழுவதும் ஆகத்தான் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது புண்ணிய காலமாக.*





*ஒரு அமாவாசை என்று எடுத்துக்கொண்டால் கூட முதல் நாள் இரவில் இருந்தே அந்த காலம் ஆரம்பித்து விடுகிறது. முதல் நாள் இரவில் இருந்தே நமக்கு நியமங்கள் ஆரம்பிக்கின்றன. முதல் நாள் இரவில் சாப்பிடக்கூடாது வஸ்துக்களை சாப்பிடக்கூடாது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.*



*எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் முடியவில்லை என்றால் ஆகாரமாக தான் சாப்பிட வேண்டும். மறுநாள் காலை ஆரம்பித்து அன்று முழுவதும் இருந்து மறுநாள் காலையில்தான் அமாவாசை புண்ணிய காலம் பூர்த்தியாகிறது.*



*அன்றைய தினம் முழுவதும் ஆகவே புண்ணிய கால

மாக தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. ஆகையினாலே தர்ப்பணம் முடிந்துவிட்டது என்றால் புண்ணிய காலம் ஆகிவிட்டது என்று கணக்கில் வராது.*





*சிராத்தமே இப்போது நாம் எடுத்துக் கொண்டால் தாயார் தகப்பனாருக்கு உத்தேசித்து செய்யக்கூடயதான சிராத்தம், முதல் நாள் இரவில் இருந்தே ஆரம்பமாகிறது. முதல் நாள் இரவில் இருந்தே நியமமாக இருந்து மறுநாள் சிராத்த தினம் அன்று கட்டுப்பாடுடன் இருந்து, அதற்கு மறுநாள் காலை சிராத்தாங்க தர்ப்பணம் செய்தால் தான், சிராத்தம் முடிகிறது.*





*இன்றைய நாட்களில் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை அன்றே செய்து விடுகிறோம். அது எப்படி வழக்கத்தில் வந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால், எக்காரணத்தைக் கொண்டும் வருடாந்திர சிராத்தம் செய்தால், மறு நாள் காலையில் தான், சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸ்ராத்த தினத்தில் சிராத்த முடிந்தவுடன் அன்றே செய்வது என்ற எந்த பிரமாணமும் தர்ம சாஸ்திரத்தில் காண்பிக்கப்படவில்லை.*





*இன்னும் நாம் உட்புகுந்து பார்த்தோமேயானால் ஸ்ராத்தம் ஆகிவிட்டது ஆனால் சிராத்தாங்க தர்ப்பணம் ஆகவில்லை, பரேஹனி தர்ப்பணம் என்று பெயர். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய தர்ப்பணம் என்று அர்த்தம்.*



*நாம் சிராத்தம் முடிந்து சாப்பிட்ட உடன் நமக்கு ஒரு தீட்டு வந்துவிட்டது என்றால் மறுநாள் காலையில் அந்த சிராத்தாங்க தர்ப்பணம் செய்யும் சமயத்தில் நமக்கு சுத்தி உண்டு தீட்டு கிடையாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*





*தீட்டு வந்து விட்டாலும் கூட மறுநாள் காலையில் தான் அந்த சிராத்தங்க தர்ப்பணம் செய்யவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் சிராத்த தினத்தன்று செய்யவே கூடாது. எங்கே அப்படி செய்ய வேண்டும் என்றால், சில இடங்களில் அதாவது சில ஸ்ராத்தங்களில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது. இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, தர்ஷ ஸ்ராத்தம் அன்ன ரூபமாக செய்கின்ற பக்ஷத்தில் அதாவது அம்மாவாசையன்று சிராத்தத்துக்கு முன்னர் சிராத்தம் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும், பிறகு ஸ்ராத்தம் செய்ய வேண்டும்.*





*தர்ஸம் மட்டுமல்ல அஷ்டகா சிராத்தம், சங்கரமன சிராத்தம் அதாவது மாதப் பிறப்பு, வய்தீபாதம் /‌ கிரகண புண்ணிய கால ஸ்ராத்தங்கள் இவைகள் எல்லாம் நாம் தில தர்ப்பணம் ஆக செய்து கொண்டு வருகிறோம்.*



*இதை அன்ன ரூபமாக செய்யும்பொழுது, முதலில் சிராத்தாங்க தர்ப்பணம் பின்பு சிராத்தம் அப்படி செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் என்று 16 நாட்களுக்கு நாம் செய்கிறோம். இந்த 16 நாட்களும் நாம் அன்ன ரூபமாக செய்யும் பட்சத்தில் தினந்தோறும் சிராத்தம் முடிந்தவுடன் தர்ப்பணம் செய்துவிட வேண்டும்.*







*இந்தப் 16 நாட்களும் நாம் சிராத்தத்தை அன்ன ரூபமாக செய்கின்ற பொழுது, ஸ்ராத்தம் முடிந்தவுடன் அன்றைய தினமே சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதற்கான நியமம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.*



*நாம் நம்முடைய தாயார் தகப்பனாருக்கு செய்யக்கூடிய வருடாந்திர ஸ்ராத்தம் செய்தவுடன் மறுநாள் காலையில்தான் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது.*







*சிராத்த தினத்தன்று நாம் செய்யக் கூடாது அப்படி செய்தாலும் அது செய்ததாக ஆகாது. மறு நாள் காலையில் தான் சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்து ஸ்ராத்தம் பூர்த்திசெய்ய வேண்டும்.*



*தீட்டு வந்தாலும் மற்றும் கர்மாவே செய்யக் கூடிய நிலைமை வந்தாலும், அந்த ஸ்ராத்தாங்க தர்ப்பணத்திற்கு காலம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அதாவது மறுநாள் காலையில்தான் அதை நாம் செய்ய வேண்டும் அப்போது நமக்கு சுத்தி வந்துவிடும்.*





*அதேபோல ஹிரண்ய சிராத்தம் ஆக சில ஸ்ராத்தங்களை நாம் செய்யும் போது, ஸ்ராத்தம் முடிந்தவுடனேயே சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்துவிட வேண்டும்.*



*வருடாந்திர சிராத்தத்தை ஹிரண்ய/ ஆம ரூபமாக செய்யக்கூடாது அன்ன ரூபமாக தான் செய்ய வேண்டும் ஆனால் சிராத்தாங்க தர்ப்பணத்தை மறு நாள் காலையில் தான் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*

#16

ஆனால் இன்று உலகம் பூராவும் அன்றைய தினத்தில் தான் நடக்கிறது என்றால் அதை செய்பவர்கள் இடத்தில் தான் கேட்க வேண்டும், தர்ம சாஸ்திரம் சொல்வதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம், தர்ம சாஸ்திரத்தில் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை மறுநாள் காலையில் தான் செய்ய வேண்டும் என்பதை பார்க்க நேரிடுகிறது. இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தையும் சேர்த்துதான் சேர்த்து செய்வதைப் பற்றி தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான 96 தர்ப்பணங்களின் உடைய வரிசைகளை விரிவாகப் பார்த்த வகையில் ஒரே நாளில் இரண்டு மூன்று புண்ணிய காலங்கள் வந்தால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.*





*இந்த விஷயத்தில் அடிப்படையான சில தர்மசாஸ்திர விசயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 96 தர்ப்பணங்களையும் மூன்று விதமாக பிரித்திருக்கிறார்கள்.*



*அதாவது முதலில் நித்தியம் நைமித்திகம் காமியம் என்ற ஒரு பிரிவு. ஒரு வர்க்கத்தை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்ப்பணம். இரண்டு வர்க்கங்களை உத்தேசித்து செய்யக்கூடியது ஆன தர்ப்பணம். மூன்று வர்க்கமாக பிரித்து செய்ய வேண்டியது தான தர்ப்பணம். நான்கு வர்க்கமாக பிரித்து செய்ய வேண்டியது தான தரப்படும் என்ற ஒரு பிரிவு இருக்கிறது.*







*இந்தப் பிரிவுகளை அடிப்படையாக நன்றாக நாம் தெரிந்து கொண்டால் தான், இந்த புண்ணிய காலத்தில் தர்ப்பணத்தை தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து செய்யலாமா என்பதை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.*





*ஓரளவு புரிந்து கொள்கின்ற வகையில் நாம் பார்ப்போம். இதன் உள் விஷயங்கள் நன்றாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமக்கு செய்து வைக்கக் கூடிய வாத்தியார்கள் இடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தர்ம சாஸ்திரம் படித்தவர்கள் இடம் கேட்டு நாம் தெரிந்து கொள்ளலாம்.*





*அம்மாவாசை அடிப்படையாகக்கொண்டு புண்ணிய காலங்கள் இங்கு வந்தால் எப்படி செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக சில புண்ணிய காலங்கள் சேர்ந்தே வராது. அமாவாசையும் திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் சேர்ந்து வராது.*



*வய்தீயபாதமும் வைதிருதியும் சேர்ந்து வராது. மஹாளயமும் திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் சேர்ந்து வராது.*





*ஆகையினால் இந்த புண்ணிய காலங்கள் பற்றிய நம் சந்தேகம் நமக்கு வராது. வரிசையாக நாம் பார்த்தால் நம் தயார் தகப்பனாருக்கு செய்ய வேண்டியது ஸ்ராத்தமும் அமாவாசை திதியும் சேர்ந்தால், அதாவது அமாவாசை அன்று தாயார் தகப்பனார் களுக்கு சிரார்த்தம் வந்தால், எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்றால் முதலில் வருடாந்திர சிராத்தத்தை செய்து கொள்ள வேண்டும். ஸ்ராத்தம் முடிந்த பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.*





*மறுநாள் காலை சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். இதுதான் வரிசை. ஏனென்றால் வருடாந்திர சிராத்தம் என்பது ஒரே ஒரு வர்க்கத்தை மட்டும் குறித்து செய்ய வேண்டிய சிராத்தம். ஆனால் அமாவாசை தர்ப்பணம் இரண்டு வர்க்கத்தை குறித்து செய்ய வேண்டியது.*





*அமாவாசையும் மாசப் பிறப்பும் சேர்ந்து வந்தால், மாசப் பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டாம். அமாவாசையும் மஹாளயமும் சேர்ந்தால், இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.*



*முதலில் அமாவாஸ்யா புண்ய கால தர்ப்பணம், பிறகு மஹாளய புண்ணிய கால தர்ப்பணம். அப்படி இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.*





*அமாவாசையும் யுகாதி புண்ணிய காலமும் சேர்ந்தால், யுகாதி புண்ணிய காலம் தர்ப்பணத்தை மட்டும் செய்தால் போதும். அமாவாஸ்யா செய்ய வேண்டாம்.*



*அமாவாசையும் மன்வாதி புண்ணிய காலம் சேர்ந்து வந்தால், மன்வாதி புண்ய காலம் மட்டும் செய்தால் போதும் அமாவாஸ்ய தனியாக செய்ய வேண்டாம்.*





*அமாவாசையும் கிரகண புண்ணிய காலமும் ஒரே சமயத்தில் வந்தால், ஒரே சமயம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும், அதாவது காலையில் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பித்து மதியம் 3.30 மணி வரை உள்ள நேரத்தில் சூரிய கிரகண புண்ணிய காலம் வந்தால், அன்றைக்கு கிரகண புண்ணிய கால தர்பணம் மட்டும் செய்தால் போதும், அமாவாஸ்ய தர்ப்பணம் தனியாக வேண்டாம்.*





*அமாவாசையும் வய்தீபாத புண்ணிய காலமும் சேர்ந்து வந்தால், இங்கே இரண்டு விதமாக நம்முடைய தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது. இந்த இரண்டையும் தனித் தனியாகவும் செய்யலாம், அல்லது அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதும் வய்தீயபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டாம்.*





*அமாவாசையும் வைதிருதி புண்ணிய காலமும் சேர்ந்து வந்தால், இரண்டையும் தனித்தனியாக செய்யலாம் அல்லது அமாவாசை புண்ணிய காலம் மட்டும் செய்தால் போதும் வைதிருதி செய்ய வேண்டாம்.*



*இந்த வரிசையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையாக ஓரளவு நாம் புரிந்து கொள்வதற்காக இதை பார்த்துள்ளோம். இன்னும் சில புண்ணிய காலங்கள் எல்லாம் சேர்ந்து வரும் அவ்வப்பொழுது, நமக்கு செய்து வைக்கக்கூடிய வாத்தியார்கள் இடம் கேட்டு அதை தீர்மானம் செய்ய வேண்டும்.*



*இதிலே சில கேள்விகள் நமக்கு வரலாம். உதாரணத்திற்கு அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்தால், மாதப்பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும் என்று பார்த்தோம். நான் ஷண்ணவதி தர்ப்பணம் செய்வது இல்லை அமாவாசை தர்ப்பணம் மட்டும்தான் செய்துகொண்டு வருகிறேன், அப்படி இருக்கிற சமயங்களில் அமாவாசை மட்டும் செய்தால் போதுமா? என்ற ஒரு கேள்வி வரும்.*



*இந்தக் கேள்விக்கு என்ன பதில் என்றால், 96 ஷண்ணவதி தர்ப்பணங்களையும் ஒவ்வொருவரும் செய்துதான் ஆகவேண்டும். அதைச் செய்கிறோம் அல்லது செய்யவில்லை என்பதை நம்முடைய சௌகரியப்படி நாம் வைத்துக் கொண்டு இருக்கின்றோமே தவிர, தர்ம சாஸ்திரப்படி இரண்டு புண்ணிய காலங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.*





*ஆகையினால் அமாவாசை தர்ப்பணம் மட்டும்தான் நான் செய்து கொண்டு வருகிறேன் என்று சொல்கின்ற அவர்கள்கூட, அன்றைக்கு மாதப்பிறப்பு தர்ப்பணம் தான் செய்ய வேண்டும். அமாவாசையை செய்யக்கூடாது. ஏனென்றால் அமாவாசையா என்பது நித்தியம் என்கின்ற ஒரு வரிசையில் வருகின்றது. மாதப் பிறப்பு என்பது நைமித்திகம் என்கின்ற வரிசையில் வருகிறது. நித்தியமும் நைமித்திகம் சேர்ந்தால் நைமித்திகம் மட்டும் செய்தால் போதும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது*





*இவைகளுக்கெல்லாம் ஆதாரம் நமக்கு தர்மசாஸ்திரம் தான். என்ன ஒரு சொம்பு ஜலமும், எள் இவைகள் தானே என்று நாம் அலட்சியமாக நினைக்க கூடாது. எப்பொழுது தர்மசாஸ்திரம் இரண்டு புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் ஒன்று மட்டும் செய்தால் போதும் என்று காண்பிக்கின்றதோ, அந்த ரிஷியின் உடைய வாக்கியம் தான் நமக்கு ஆதாரம். இரண்டும் செய்கிறேன் என்று செய்தால் அது செய்யாததாக கணக்கில் வரும்.*





*அதனால் இரண்டையும் தனித்தனியாக செய்தால் இரண்டுமே செய்யாததாக கணக்கில் வரும். இதை மனதில் வைத்துக்கொண்டு அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்து வந்தால், மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்தால் போதும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*





*இதில் இன்னும் ஒரு கேள்வி நமக்கு வரலாம் அதாவது இரண்டு புண்ணிய காலங்களின் பெயரையும் சொல்லி ஒரே தர்ப்பணத்தை செய்து விட்டால் என்ன? அதற்கு ஸமான தந்திரம் என்று சாஸ்திரங்களில் பெயர். தர்ஸ ஸ்ராத்தம் சங்கர மன சிராத்தஞ்ச ஸமான தந்திரேந கரிஷ்யே என்று சொல்லி விட்டால் என்ன? இரண்டுமே செய்ததாக ஆகி விடுமே என்ற ஒரு எண்ணம் நமக்கு வரும். இந்த விஷயத்தில் முக்கியமாக ஒன்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும் ஸமான தந்திரம் என்றால் என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய 96 ஷண்ணவதி தர்ப்பணங்கள் சில சமயம் ஒரே நாளில் 2 அல்லது 3 புண்ணிய கால தர்ப்பணங்கள் சேர்ந்தாற்போல் வந்தால் அவைகளை தனித்தனியாக செய்வதா அல்லது சேர்த்து செய்வதா என்பதைப்பற்றிய விவரங்களை மேலும் தொடர்கிறார்.*



*ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று தர்ப்பணங்கள் வந்தால் அந்த தருணங்களில் மந்திரங்களை இரண்டுக்கும் சேர்த்து சொல்லி செய்யலாமா என்பதை தர்மசாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை நாம் செய்யக்கூடாது.*





*அப்படி செய்வதற்கு சமான தந்திரம் என்று பெயர். ஒரே நாளில் இரண்டு மூன்று தர்ப்பணங்கள் அல்லது பூஜைகள் அல்லது ஜப ஹோமங்கள் வந்தாலும் சரி அவை அனைத்திற்குமான மந்திரங்களைச் சொல்லி ஒன்றாக செய்தால் அதற்கு சாஸ்திரங்களில் சமான தந்திரம் என்று சொல்லியிருக்கிறார்கள்.*



*இந்த சமான தந்திரம் எங்கு சொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர இந்த தர்ப்பணங்கள் அது சொல்லப்படவே இல்லை. சிராத்தங்களில் சமான தந்திரம் எங்குமே சொல்லப்படவில்லை.*





*இப்போது உதாரணத்திற்கு, தாயார் தகப்பனார் ஸ்ராத்தம் இரண்டும் ஒரே நாளில் வந்தால், இரண்டையும் சேர்த்து ஒரே நாளில் செய்யலாம் என்றால் கூடாது. முதலில் தகப்பனார் உடையது செய்ய வேண்டும் பிறகு தாயாருடைய ஸ்ராத்தம் செய்ய வேண்டும் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்.*



*இந்த சமான தந்திரம் என்பது ஸ்ராத்தங்களிளோ தர்ப்பணங்களிளோ அல்லது அபர காரியங்களிளோ பொருந்தாது.*





*ஆனால் சில இடங்களில் இந்த சமான தந்திரம் சொல்லப்பட்டுள்ளது. எங்கே என்றால், கல்யாணத்திற்கு முதல் நாள் விரதம் என்று ஒன்று நாம் செய்வோம் அதை எல்லோரும் பார்த்திருக்கலாம். அதற்கு விரத க்ஷதுஷ்டையம் என்று பெயர். நான்கு விரதங்களையும் தனித்தனியாக செய்ய வேண்டும். இதை தனித்தனியாக செய்ய முடியாவிட்டால் சேர்த்தும் செய்யலாம் என்று நம்முடைய சாஸ்திரங்களில் காண்பித்திருக்கிறார்கள்*





*இந்த நான்கு விரதங்களையும் சேர்த்து செய்வதற்குப் பெயர்தான் சமான தந்திரம் என்று பெயர். அங்கு சங்கல்பத்திலேயே வாத்தியார் சொல்வதை நாம் கேட்கலாம். சமான தந்திரேன சரிஷ்யே என்று சங்கல்பத்தில் வாத்தியார் சொல்வார்.*





*அங்கும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயம் என்னவென்றால் 4 விரதங்களையும் ஒன்றாக சேர்த்து செய்தாலும் கூட அங்கு பிரதான ஹோமங்கள்/உபஸ்தானங்கள் அவைகள் எல்லாம் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்.*





*அதற்கு அங்கமாக உள்ளது எல்லாம் சேர்த்து செய்யலாம். நாந்தி/புண்ணியாகவாசனம்/சங்கல்பம்/கிரக பிரீத்தி ஒன்று தான். இவர்களெல்லாம் ஒரு தடவை செய்தால் போதும். ஆனால் அந்த ஹோமங்களை பிரதானமாக செய்யும்போது தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும்.*



#17

அதேபோல பெண் குழந்தைகளுக்கு*



*ஜாதகாதி என்று கல்யாணத்திற்கு முதல் நாள் நடக்கும். அதாவது ஜாத கர்மா நாமகரணம் அன்னப்ராசனம் அனைத்தும் கல்யாணத்திற்கு முதல் நாள் இன்றைய காலங்களில் நடக்கின்றது. அந்தந்த காலங்களில் செய்யாவிடில் சேர்த்து செய்யலாம். இதற்கு தான் சமான தந்திரம் என்று பெயர்.*



*அங்கேயும் சங்கல்பம் கிரகப் பிரீதி நாந்தி புண்ணியாகவாசனம் இவைகள் ஒரு தடவை செய்தால் போதுமே தவிர, பிரதானங்களை தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும். ஜாதகர்மா நாமகரணம் அன்னப்ராசனம் இவைகளை தனித்தனியாக செய்ய வேண்டும்.*





*இந்த விஷயங்கள் அங்கெல்லாம் பொருந்துமே தவிர, தர்ப்பணங்களில் அது பொருந்தாது. இப்பொழுது அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்து இருக்கிறது அந்த சமயத்தில் தர்ஸ சிராத்தம் சங்கரமன சிராத்தம் சமான தந்தரேன கரிஷ்யே என்று சொன்னால், இங்கு நாம் எப்படி செய்ய வேண்டும் என்றால் சங்கல்பம் ஒரு தடவை செய்தால் போதும், தர்பை மற்றும் கூர்ச்சம் இதில் ஆவாகனம் ஒரு தடவை செய்தால் போதும், ஆனால் பிரதானமாக, செய்யவேண்டிய தர்ப்பணத்தை இரண்டுமுறை செய்ய வேண்டிவரும். ஒரு தடவை முடித்து திரும்பவும் அதே பித்ருக்களை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.*





*கடைசியிலே யதாஸ்தானம் ஒரு தடவை செய்தால் போதும் என்று பிரயோகம் வரும். ஆனால் அப்படி தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. ஆகையினால், இரண்டு தரர்ப்பணங்களையும் சொல்லி ஒரே புண்ணிய காலமாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் செய்யவில்லை என்ற வழியில் தான் வரும்.*



*ரிஷிகளின் உடைய வாக்கியங்கள் இல்லாமல் நாம் ஒன்று செய்தால், அதற்குத்தான் அன்னியதா கிருதம் என்று பெயர். ரிஷிகள் என்னுடைய வாக்கியங்கள் இல்லாமல் நாம் செய்கிறோம் என்று அர்த்தம்.*





*அப்படி செய்தால் அது செய்யாதது தான் கணக்கு வரும். அதனால் எங்கு தனித்தனியாக செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறதோ அங்கு தனித்தனியாக தான் செய்ய வேண்டும். எங்கே ஒரு தர்ப்பணம் போதும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கு ஒன்றே தான் செய்ய வேண்டும்.*





*இரண்டு புண்ணிய காலங்களை சொல்லிக் கொள்ளலாமே தவிர இரண்டு ஸ்ராத்தங்களை ஒன்றாக சொல்லக்கூடாது. அதாவது இன்று அம்மாவாசை மற்றும் மாதப்பிறப்பு சேர்ந்து இருக்கிறது என்றால் சங்கல்பத்தில் அமாவாசயே புண்ணிய காலே சங்கரமன புண்ணிய காலே சங்கர மன ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேன கரிஷ்யே என்று சங்கல்பத்தில் சொல்லிக்கொள்ளலாம்.*





*அமாவாஸ்யா புண்ணிய காலே தர்ஸ சிராத்தம் சங்கர மன புண்ணிய காலே சங்கரமன சிராத்தஞ்ச ஸமான தந்திரேந கரிஷ்யே என்று சொல்லக்கூடாது.*



*அப்படி சொன்னால் தர்ப்பணத்தை இரண்டு தடவை செய்ய வேண்டிவரும், அப்படி நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. புண்ணிய காலத்தை இரண்டையும் சொல்லிக்கொண்டு, சிராத்தம் என்கின்ற இடத்தில் ஒரே ஒரு சிராத்தத்தை சொல்லி, தர்ப்பணத்தை செய்யவேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம்.*





*இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிய வேண்டுமானால் தர்ம சாஸ்திரம் படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப விஷயங்களை இதிலே நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தால், நமக்கு ரொம்ப குழப்பங்கள் வந்து விடும்.*



*எதைச் சொல்வது எதை விடுவது என்று குழம்பி போய் விடுவோம். ஆகையினாலே சில விஷயங்களை அவ்வப்போது தான் தெரிந்து கொள்ள வேண்டும்.*





*அதனால் செய்து வைக்கக்கூடிய வாத்தியார்கள் இடத்திலோ, தர்மசாஸ்திரம் படித்தவர்கள் இடத்திலேயே புண்ணிய காலங்கள் சேரும்பொழுது, ஒரு மாதம் முன்னரே, அவர்களிடத்தில் கேட்டு நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.*





*ஆனால் இந்த நாட்களில் இவைகள் எல்லாம் சேர்த்து ஒரு லிஸ்ட் ஆகவே போட்டுக் கொடுக்கிறார்கள் நிறைய பேர். அதை நாம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருக்கணிதம் அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி, தனித்தனியாக பரி சிரமப்பட்டு நிறைய பேர் அதை முன்னரே நமக்கு வரிசைப்படுத்திக் கொடுக்கிறார்கள். அதை நாம் வருஷம் பிறந்த உடனேயே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.*





*அதில் எப்படி சொல்ல பட்டு இருக்கின்றதோ அது படி நாம் செய்ய வேண்டும். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டில் இதை மட்டும் செய்கிறோம் என்று நாம் தெரிந்து கொள்வதற்காக இந்த விஷயங்களை பார்க்கிறோமே தவிர, அவ்வப்போது தெரிந்தவர்கள் இடத்திலே கேட்டு கொள்ள வேண்டும்.*







*இந்த விஷயங்களில் எப்படி செய்தால் என்ன என்ற எண்ணங்கள் நமக்கு இருக்க கூடாது வரக்கூடாது. அந்த எண்ணத்தோடு செய்தால் அதற்கான பலன்கள் இல்லாமல் போய்விடும். அதனால் இந்த புண்ணிய காலங்கள் அப்போ போது எப்படி சேர்கிறது என்பதை தெரிந்தவர்களைக் கொண்டு, நாம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*





முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களில் ஒரே நாளில் 2 அல்லது 3 புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் எதை முதலில் செய்வது எப்படி செய்வது என்பதை பற்றி மேலும் தொடர்கிறார்.*





*அதிலே சமான தந்திரம் என்ற விஷயத்தை பார்த்தோம். அதாவது ஒரே நாளில் இரண்டு புண்ணிய காலங்கள் வந்தால் அந்த புண்ணிய காலங்களில் பெயர்களை சொல்லலாமே தவிர சிராத்தங்களை சொல்லக்கூடாது தர்ம சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை என்பதை பார்த்தோம்.*



*மேலும் அம்மாவாசை உடன் புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் எதை எதை செய்ய வேண்டும் என்பதையும் பார்த்தோம்.*



*இப்பொழுது அமாவாசை இல்லாமல் புண்ணிய காலங்களுடன் வேறு என்ன சேர்ந்து வரும் வந்தால் அது எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.*





*முதலில் இரண்டு புண்ணிய காலங்கள் வந்தால் ஒரு தர்ப்பணத்தை செய்தால் போதும் என்பதை பார்ப்போம். இதில் வய்தீபாத புண்ணிய காலமும் மன்வாதி புண்ணிய காலம் சேர்ந்து வரும். இப்பொழுது நாம் பார்க்கக்கூடியது எல்லாம் அனேகமாக சேர்ந்து வரக்கூடியவைகள்.*





*இவைகள் இல்லாமல் எப்பவாவது ஒரு முறை அதிகப்படியான புண்ணிய காலங்கள் சேர்ந்து வரும். அந்தந்த சமயங்களில் நமக்கு செய்து வைக்கக்கூடிய வாத்தியார் இடத்திலோ அல்லது தர்மசாஸ்திரம் படித்து தெரிந்தவர்கள் இடத்திலோ நாம் கேட்டு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.*



*வய்தீயபாதமும் மன்வாதியும் சேர்ந்து வரும். அப்பொழுது வய்தீபாத புண்ணிய காலம் செய்தால் போதும். மன்வாதி புண்ணிய காலம் தனியாக செய்ய வேண்டியதில்லை.*



*வய்தீயபாதமும் அஷ்டகாவும் சேர்ந்து வந்தால், திஸ்ரோஷ்டகாஹா என்று மூன்று நாட்கள் மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரக்கூடிய தான கிருஷ்ண பக்ஷ சப்தமி அஷ்டமி நவமி திதிகளில் வரும். அந்த தினங்களில் வய்தீபாத புண்ணிய காலங்கள் வரலாம். அப்படி இவை இரண்டும் சேர்ந்து வந்தால் அஷ்டகா புண்ணிய கால ஒரு தர்ப்பணம் செய்தால் போதும். வய்தீபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை ஒரு தர்ப்பணம் தான்.*



*வைதிருதியும் மன்வாதியும் சேர்ந்து வரும். அப்படி ஒரு இரண்டும் சேர்ந்து வரும்போது மன்வாதி புண்ய காலம் செய்தால் போதும். ஒரு தர்ப்பணம் தான்.*



*வைதிருதி புண்ணிய காலமும் மாச பிறப்பும் சேர்ந்து வரும். சங்கரமண புண்ணிய காலம். இவை இரண்டும் சேர்ந்து வரும்போது மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்தால் போதும். ஒரு தர்ப்பணம் தான்.*



*இவைகளெல்லாம் ஒரு தர்ப்பணம் செய்யக்கூடிய விஷயங்கள். அதேபோல இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டிய புண்ணிய காலங்கள் என்று வரும்.*





*மஹாலய பக்ஷத்தில் வய்தீபாத புண்ணிய காலம் வரும். இதை பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள் வய்தீபாத மஹாளயம் என்று. இவை இரண்டும் சேர்ந்து வந்தால், முதலில் வய்தீபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்து, பின்பு மஹாளய புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.*





*சங்கரமனமும் மன்வாதியும் சேர்ந்து வரும், இவை இரண்டும் சேர்ந்து வரும் பட்சத்தில் இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும் முதலில், மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்து பின்பு மன்வாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.*





*மஹாளய பக்ஷத்தில் யுகாதி புண்ணியகாலம் சேர்ந்து வரும் இது எல்லாம் அனேகமாக எப்பவாவது ஒரு முறை வரக்கூடிய புண்ணிய காலங்கள். இவை இரண்டும் சேர்ந்து வரும்போது முதலில் யுகாதி புண்ணியகாலம் செய்ய வேண்டும், பின்பு மகாலய பக்ஷ புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களெல்லாம் இரண்டு புண்ணிய காலங்கள் சேர்ந்து வரக்கூடியவைகள்.*



*மூன்று / நான்கு புண்ணிய காலங்கள் கூட சேர்ந்து வரும். இப்பொழுது உதாரணத்திற்கு வைதிருதி சங்கரமனம் மன்வாதி இந்த மூன்று புண்ணிய காலங்களும் சேர்ந்து வரும் ஒரே தினத்தில். இந்த நேரங்களில் இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். முதலில் சங்கரமன புண்ணிய கால தர்ப்பணம். பிறகு மன்வாதி புண்ய கால தர்ப்பணம்.*



*இதோடு கூட கிரகண புண்ணிய காலம் சேரும். அனேகமாக சந்திரகிரகணம் சேர்ந்து வரும். இப்பொழுது அஸ்தமனத்திற்கு பிறகு இராத்தரி சந்திர கிரகணம் வரும். அப்போது இரவு கிரகண புண்ணிய காலம் செய்ய வேண்டும்.*
 
*இப்படி வைதிருதி சங்கரமனம் மன்வாதி இந்த மூன்று புண்ணிய காலங்கள் கூட ஒரே நாளில் சேர்ந்து வரும். இவைகள் அனேகமாக இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வரலாம். அந்த சமயம் இந்த முறையில் அதை செய்ய வேண்டும்.*





*இவைகள் இல்லாமல் விசேஷமாக சில புண்ணிய காலங்கள் வரும். அவைகளை அவ்வப்போது நாம் கேட்டு தீர்மானித்து செய்து கொள்ள வேண்டும். பொதுவாக இது எல்லாம் லிஸ்ட் ஆகவே போட்டு நமக்கு கொடுத்து விடுவார்கள்.*





*அதை நாம் வாங்கி வைத்துக்கொண்டு செய்யவேண்டும் தமிழிலேயே செய்வதைத் திருந்தச் செய் என்று சொல்வது உண்டு. எந்த காரியத்தை செய்தாலும் உருப்படியான முறையில் செய்ய வேண்டும். ஏதோ செய்கிறோம் என்று செய்யக்கூடாது. நன்றாக தெரிந்து கொண்டு அதை புரிந்துகொண்டு நாம் செய்தால் தான், அப்போதுதான் நமக்கு மனதிற்கும் திருப்தியாகவும் அதனுடைய பலன்கள் முழுவதும் ஆகவும் ரிஷிகளின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும்.*







*இப்போது இதுவரை நாம் பார்த்த புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால், இந்த முறையில் தெரிந்து வைத்துக்கொண்டு நாம் அதை செய்ய வேண்டும். ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.*







*ஏனென்றால் இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களில் ஏதாவது 1 அல்லது 2 விட்டுப் போகும் என்றால் அதற்கான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*





*ஏனென்றால் இவர்கள் எல்லாம் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டு இருக்கின்றன. எப்படி நாம் சாப்பிடுவதும் சந்தியாவந்தனம் செய்வதும் நித்தியமோ அதேபோல்தான், தர்ப்பணங்கள் செய்வது.*





*பொதுவாக ஒரு நித்திய கர்மாவை விட்டுவிட்டால் பிரத்தியவாயம் வரும். அதாவது விட்டதினால் வரக்கூடிய பாபங்கள். அதோடு கூட இல்லாமல் இந்த பிதுர் கர்மாக்களை நாம் விட்டுவிட்டால், பிரத்தியவாயம் வருகிறது என்பது ஒரு பக்கம், அது இல்லாமல் சாபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். அந்த சாபங்களில் இருந்து நாம் எப்படி விடுபடுவது என்றால், அதற்கான பரிகாரங்களை தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*





*அதாவது சில மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒவ்வொரு புண்ணிய காலமும் விட்டு போய்விட்டால் அதற்கான மந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த பரிகார மந்திரங்களை நாம் ஜெபம் செய்வதினால், விட்டுப் போனதினால் வரக்கூடிய தோஷங்கள் போக்கும் மேலும் பிதுருக்களுடைய சாபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம்.*







*அம்மாவாசை முதற்கொண்டு ஒவ்வொரு புண்ணிய காலங்களும் காரணங்கள் இல்லாமல் விட்டு போனால், அதற்கான மந்திரங்களை தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது. அவைகள் என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*







முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை எப்படி செய்வது அதை செய்யாவிடில் என்ன விதமான பாவங்கள் நமக்கு வந்து சேரும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*





*இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது அமாவாஸ்ய யுகாதி மன்வாதி சங்கராந்தி வைதிருதி வய்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா இந்த எட்டு புண்ணிய காலங்களை தான் நாம் ஷண்ணவதி என்று சொல்கிறோம். இப்படியாக தர்மசாஸ்திரம் காண்பித்த வழியிலே ஒவ்வொருவரும் இந்த 96 தர்ப்பணங்களை செய்ய வேண்டும்*





*காலப்போக்கில் எப்படியோ நாம் 1 or 2 புண்ணிய காலங்களில் மட்டும் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம். ஆகையினால் இந்த நாட்களில் என்ன ஆகிவிட்டது என்றால் நான் ஷண்ணவதியை ஆரம்பித்து செய்துகொள்கிறேன் என்று சொல்லுவதை கேட்க முடிகிறது.*





*ஷண்ணவதி தர்ப்பண முறை என்று ஒன்று தனியாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் வருடத்திலே 96 தர்ப்பணங்கள் நாம் செய்ய வேண்டியது அதில் சில செய்கிறோம் சில. விட்டுவிடுகிறோம். விட்டுப்போன தர்ப்பணங்களுக்கு பாவங்கள் மிகவும் ஜாஸ்தி. முக்கியமாக பிதுர் கர்மாக்கள் எப்பொழுதும் விட்டு போகவே கூடாது. மற்ற காரியங்களுக்கு கூட கௌன காலங்கள் உண்டு. கௌன காலங்கள் என்றால் சொல்லப்பட்ட காலத்தில் அதை செய்ய முடியவில்லை என்றால் தள்ளி செய்வதற்கான ஒரு காலம் சொல்லப்பட்டிருக்கிறது.



அதற்குத்தான் கௌன காலம் என்ற பெயர்.*



*இதை அனைத்திற்குமே சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது சந்தியாவந்தனம் மே விட்டுப் போயிருந்தால் அவ்வளவு சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும். அனைத்து சந்தியாவந்தனங் களுக்கும் சேர்த்து ஒரே சந்தியாவந்தனம் என்பது கிடையாது. ஒருவருக்கு 10 சந்தியா வந்தனங்கள் விட்டுப் போயிருந்தால் பத்து பத்து காயத்ரியாக செய்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும். பத்து நாட்கள் சந்தியாவந்தனம் விட்டு போய் இருந்தது என்றால் மாத்யானிகம் சேர்த்து 30 சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும்.*





*ஒரு மாதம் விட்டுப் போயிருந்தால் 90 செய்ய வேண்டும் ஒரு வருடமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் சேர்த்து சேர்த்து செய்ய வேண்டும்.*



*ஆனால் இந்த பித்ரு கர்மாக்களில், ஒரு புண்ணிய காலம் விட்டு போனால் அது விட்டு போனது தான். அதை பிறகு, சேர்த்து செய்ய முடியாது. அது அமாவாசை அல்லது மாதப்பிறப்பு அல்லது தாயார் தகப்பனார்களுக்காக செய்யக்கூடியதாக வருடாந்திர ஸ்ராத்தமாக இருந்தாலும் சரி, ஆகையினாலே தான் நம்முடைய தர்மசாஸ்திரம் அதை வலியுறுத்தி காண்பிக்கிறது.*





*அதை விட்டுவிட்டால் பிதுர் கர்மாவை விட்டு விட்ட தோஷம் 1 நித்தியமாக சொல்லப்பட்ட பிர்த்தியவாயம் என்பது 2 வேதம் நமக்கு பிறப்பித்த உத்தரவை மீறுவது என்பது 3. இந்த மூன்று விதமான பாவங்களின் மூலமாகத்தான் நாம் நிறைய வியாதிகளினால் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன.*





*நித்தியம் கட்டாயம் செய்து ஆக வேண்டும், என்று தர்ம சாஸ்திரம் எதை நமக்கு காண்பிக்கின்றதோ, அதை நாம் மீறவே கூடாது. அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*



*யார் அதை விட்டானோ அவன் நித்தியத்தை விட்டுவிட்டான் என்கின்ற தோஷம் 1 வேதத்தை அவமானம் செய்தான் என்கின்ற தோஷம் 2. இவைகளினால் பல்வேறு நோய்களின் மூலமாக நாம் திண்டாட வேண்டி வரும். ஆனால் சில காரணங்களினால் சில புண்ணிய காலங்களில் செய்ய முடியாமல் போனால், அப்போது என்ன செய்யலாம் என்றால், அதற்காக சில மந்திரங்களை நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*





*அதாவது ஒரு புண்ணிய காலம் விட்டுப் போகிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். ஒரு நோய் வந்துவிட்டது அதனால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம், அந்த சமயத்தில் சில புண்ணிய காலங்கள் வந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது ஒன்று. பிறப்பு அல்லது இறப்பு தீட்டு காலங்களில் புண்ணிய காலங்கள் வந்தால், செய்ய முடியாது. அந்த சமயங்களில் வந்த புண்ணிய காலங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது ஒரு முறை.*





*செய்யமுடியும் செய்யக்கூடிய நிலைமையில் நாம் இருக்கிறோம் அப்படியும் நாம் செய்யவில்லை என்றால், மறந்து போய் விட்டது அல்லது தெரிந்தே நாம் விட்டுவிட்டோம், என்பது மூன்றாவது முறை. இப்படி மூன்று பிரிவுகள் இருக்கின்றன.*





*ஒரு தீட்டு வந்து அதனால் சில புண்ணிய காலங்களில் நம்மால் அனுஷ்டிக்க முடியவில்லை என்றால் அது பாவங்கள் கிடையாது, ஏனென்றால் அங்கே ஒரு சூட்சுமம் இருக்கின்றது.*



*ஒரு பத்து நாள் தீட்டிலே நாம் இருக்கிறோம், அப்பொழுது ஒரு அமாவாசையோ அல்லது மாதப்பிறப்பு வந்தால், அந்தப் புண்ணிய கால தர்ப்பணம் செய்யக்கூடாது. அப்பொழுது அதை விட்டு போன பாவம் வராதா என்றால் வராது.*







*ஏனென்றால் ஒரு ஜீவனை உத்தேசித்து நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தீட்டு காப்பது நாளையே இந்த புண்ணியகாலம் செய்ததாக ஆகிவிடுகிறது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*





*நமக்கு நோய்கள் வந்து நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் ஏதாவது புண்ணிய காலங்கள் வந்து அது விட்டுப் போயிருந்தால், அன்றைய தினம் மௌனமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் கூடியவரையில் சாப்பிடாமலும் மௌனமாக இருக்க வேண்டும். மருந்துகள் சாப்பிடலாம் அதற்காக உறுதுணையாக ஏதாவது ஆதாரங்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை சாப்பிடலாம். அதைவிடுத்து பழங்களோ பால் மற்றும் இதர பானங்களோ சாப்பிட கூடாது. அப்படி உபவாசம் இருப்பதினாலேயே அந்த விட்டுப்போன புண்ணிய காலத்தின் மூலமாக ஏற்படக்கூடிய பாவங்கள் போய்விடுகிறது.*





*தெரிந்தோ அல்லது மறந்து ஒரு புண்ணிய காலம் விட்டு போய்விட்டால் அதற்காகத்தான் நமக்கு இந்த மந்திரங்களை காண்பித்து இருக்கின்றனர். ரிக் வேதத்திலும் யஜுர் வேதத்திலும் சில மந்திரங்களை நமக்கு எடுத்து காண்பித்து இருக்கின்றன. அந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி ஜபம் செய்ய வேண்டும். அப்படிக் ஜபம் செய்வதன் மூலம் விட்டுப்போன பாவங்கள் விலகும்.*





*அடுத்தமுறை அந்த புண்ணிய காலம் வரும் பொழுது நாம் விழித்துக்கொண்டு அதை செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் தான் இருக்கின்றது என்று நாம் வழக்கமாக செய்யக்கூடிய அமாவாசை மட்டும் செய்துவிட்டு, மற்ற புண்ணிய காலங்கள் எல்லாம் வரும்போது அந்த மந்திரத்தை நாம் ஜெபம் செய்து கொண்டே இருக்கிறோம் என்று இருக்கக்கூடாது.



ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விட்டுப் போனால் மட்டுமே அந்த மந்திரங்களை சொல்லலாமே தவிர, அந்த மந்திரங்களே தர்ப்பணம் செய்ததாக ஆகாது. பரிகாரங்கள் இதெல்லாம் என்ன விதமான பலன் என்றால் அதிலே வித்தியாசங்கள் இருக்கின்றன.*







*ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு பரிகாரம் என்று நமக்கு காண்பித்திருக்கிறார்கள் அந்த பரிகாரம் என்ன செய்கிறது என்றால் அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

#18

முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் அது செய்யக் கூடிய முறை மேலும் அதற்கான காலங்கள் இவற்றையெல்லாம் நாம் விரிவாக பார்த்து வந்தோம். அந்த தர்ப்பணங்களை நாம் எந்தெந்த பித்ருக்களை உத்தேசித்து செய்கிறோம் என்பதையும், மேலும் அதன் மூலம் வரக்கூடிய பலன்களையும், விரிவாக நாம் தெரிந்து கொண்டோம்.*





*இப்பொழுது சில புண்ணிய கால தர்ப்பணங்கள் சில காரணங்களினால் விட்டுப் போனால், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்க இருக்கிறோம்.*





*இந்த சந்தர்ப்பத்தில் பரிகாரம் என்பதை, நிறைய விதமாக நாம் செய்கிறோம். இந்த பரிகாரங்களுக்காண பலன்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரிகாரம் என்றால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும் ஏனென்றால், எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பரிகாரத்தை செய்திருப்போம்.*





*குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து நன்றாக படிப்பு வரவேண்டும், நல்ல இடத்தில் உத்தியோகம் கிடைக்க வேண்டும், கல்யாணம் ஆக வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்கள், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள், ஐஸ்வர்யம் நிறைய வேண்டும், கடைசியில் பிதுர் தோஷங்கள் போக வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள் வரையில், அனைவரும் பலனை உத்தேசித்து ஏதோ ஒரு ஸ்தலங்களில் நாம் செய்திருப்போம். அதனால் பரிகாரங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.*





*ஆனால் இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி. இரண்டு விதமான பலன்களை பற்றி பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.*



*ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பித்து, இரவு படுத்துக் கொள்ளும் வரையிலும் நாம், செய்யவேண்டிய தான கடமைகள் என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு.*





*அதிலே சிலவற்றை செய்கிறோம் பலவற்றை விட்டுவிடுகிறோம். இந்த பரிகாரங்கள் எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், நாம் செய்ய வேண்டிய காரியத்தை முறை தவறி செய்தால் சில பரிகாரங்கள். சில காரியங்களை செய்யாது விட்டு விட்டால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*





*பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் காண்பித்து இருப்பார்கள். இரண்டு விதமான பலன்களை உடையதாக இந்த பிராயச்சித்தங்கள் இருக்கின்றன. ஒரு சில பிராயசித்தங்கள்*



*நாம் செய்த தவறுகளுக்கு சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தக் கஷ்டங்களை ஒரேசமயத்தில் அனுபவிக்காமல், நிறைந்து அனுபவிக்க செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள்.*





*ஒரு சில பரிகாரங்கள் அடுத்து செய்ய வேண்டியது தான காரியத்திற்கு அதிகாரத்தை கொடுக்கக் கூடியவை. இப்படியாக இரண்டு விதமான பரிகாரங்கள் நமக்கு பலன்களை கொடுக்கின்றன.*





*இதற்கு லௌகீகமான உதாரணங்களை பார்த்தோமேயானால், ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம் அந்தக் கடனை சரியான முறையில் நாம் திருப்பி செலுத்தவில்லை. சில சமயங்களில் கட்டியும் சில சமயம் கட்டாமலும் குறைத்தும் கட்டி இருக்கிறோம். இது எல்லாம் முறைதவறி செய்தது. இதற்கு என்ன பரிகாரம் என்றால் வங்கியிலிருந்து நமக்கு தகவல் தெரிவித்து நம்மை நேரடியாக வரவழைத்து நம்மிடம் ஏன் உன்னால் கட்ட முடியவில்லை என்று கேட்டு, அந்தத் தொகையை நம்மால் கட்ட முடியவில்லை என்றால் அதை நிறந்து கட்டுவதற்கான வழிமுறைகளை காண்பித்து கொடுப்பார்கள்.*



*ஐந்து வருடத்தில் கட்ட முடியவில்லை என்றால் மேலும் இரண்டு மூன்று வருடங்களில் நீட்டித்து தவணை அதிகரித்து தொகையை குறைத்து கொடுப்பார்கள்.*



*இன்னுமொரு வழி கடன் வாங்கியிருக்கிறார் ஆனால் கட்டவே இல்லை. இங்கு அவருக்கு பரிகாரங்கள் வேறு மாதிரி. இந்த சமயத்தில் அவனுடைய சொத்துக்களை முடக்குவது அவனுடைய வங்கி கணக்கை முடக்குவது இதுபோன்று செய்வார்கள். இப்படி இரண்டு விதமான நடவடிக்கைகள் லோகத்தில் இருக்கின்றது நாம் பார்க்கிறோம்.*





*இதை நாம் மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் தான் நம்முடைய கர்மாக்களில் நித்திய கர்மாக்கள் என்று இருக்கின்றன. தினமும் நாம் செய்ய வேண்டியது தான கர்மாக்கள்.*





*இந்த நித்திய கர்மாக்களை முறையாக நாம் செய்யாவிடில் அதற்கான பிராயச்சித்தம். செய்யவே இல்லை என்றால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.*





*பரிகாரங்களுக்கு ஆன பலன்கள் என்று பார்த்தால், நாம் விட்டுவிட்டோம் என்று அது எவ்வாறு வெளிப்படும், மகரிஷிகள் இதைச் சொல்லும் பொழுது ஜென்மாந்திரமாக நாம் செய்த தவறுகள் அதாவது போன போன பிறவிகளில் செய்த தவறுகள், அதாவது செய்யவேண்டிய தான கர்மாக்களை முறையாக செய்யாமலும், நல்லது செய்யவே இல்லை என்றாலோ, விட்டதின்னுடைய பாபங்கள் எல்லாம் நம்மிடத்தில் எவ்வாறு வெளிப்படும் என்றால், வியாதி ரூபமாக வந்து சேரும். ஒரு நோயின் மூலமாக நமக்கு அதை காண்பிக்கும்.*





*நீ செய்ய வேண்டிய கர்மாக்களை சரியாக செய்யவில்லை என்பதை அந்த நோய் மூலம் நமக்கு உணர்த்தும் அதை நாம் பார்த்து விழித்துக்கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் நமக்கு எதனால் வந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான வழியைக் கூட புராணங்கள் மூலமாக மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*





*அதற்கு கர்ம விபாக அத்தியாயம் என்று ஒன்று இருக்கிறது. அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கிறது. இந்த கர்ம விபாகத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லக்கூடிய புராணம் கருட புராணம். இதில் தனியாகவே ஒரு அத்தியாயம் சொல்லப்பட்டு இருக்கிறது மற்ற புராணங்களிலும் ஆங்காங்கே காண்பிக்கப்படுகின்றன.*





*இந்த கர்ம விபாகம் என்றால் என்ன அர்த்தம்? நாம் செய்யவேண்டிய கர்மாக்களை விட்டதினால் அல்லது செய்யாமலேயே இருந்ததினால் அல்லது தவறாக செய்ததினால், வந்த தான பலன்களை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதை காண்பிப்பது தான் கர்ம விபாக அத்தியாயம்.*





*கருட புராணத்தில் ஒருவன், அவன் இருக்கக்கூடிய தான நிலைக்கும், அவர் இருக்கக்கூடிய தான வசதிக்கும் சம்மந்தம் இல்லாமலேயே இருக்கிறது. இதை உலகத்திலே நாம் பார்க்கிறோம். பணம் காசு ஐஸ்வர்யம் எல்லாம் நிறைய இருக்கின்றது ஆனால் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றார். நேர்மாறாக புத்திசாலியாக இருக்கிறான் ஆனால் பணம் காசுகள் ஐஸ்வர்யம் எதுவுமில்லை. பணம் காசு ஐஸ்வர்யம் மனைவி குழந்தைகள் வீடு வாசல் எல்லாம் சௌகரியமாக இருக்கிறது ஆனால் வியாதி படுத்துகிறது. ஒரு வசதியும் இல்லை ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இப்படி எல்லாம் வேறுபாடுகள் வருகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் ஊகிக்க முடியாது.*





*இதை நாம் சரிவர புரிந்து கொள்ளாத அதனால்தான் நாம் செய்யக்கூடிய கர்மாவுக்கும் அதனால் அனுபவிக்கக்கூடிய பலன்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை பார்க்கிறோம். ஆனால் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி தான் இந்த கர்ம விபாகா அத்தியாயம் காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
27 யோகங்களின் குணங்கள், 27ன் நக்ஷத்திரதின் குணங்கள் 15 திதிகளின் குணங்கள்.
 

Attachments

file:///K:/Downloads/Telegram%20Desktop/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf
 

Latest ads

Back
Top